அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, September 28, 2010

வரலாற்றில் உசனின் பதிவு

யாழ்ப்பாணத்து வரலாறுகளின் உசன் கிராமம் எப்படி இடம் பிடித்தது என்பதற்கான கட்டுரை ஒன்றின் சிறிய பகுதி (நன்றி வான் தமிழ் இணையம் )

பாண்டிய நாட்டுக்குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.கோம்பிப்பிட்டி வேலணையிலும், சாத்தன்குளம் தங்கோடையிலும், சாத்தனாவத்தை தெல்லிப்பளையிலும், சுழியல் சுழிபுரத்திலும், தம்பன்வயல் மற்றும் நீராவியடி கொக்குவில், திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன.
உடுமலாவத்தை, காராமட்டை, கல்லாரை, கொங்காவோடை, சிங்காவத்தை, தொளசம்பத்தை, மானாவத்தை முதலிய பெயர்களோடு கொங்குநாட்டுக் குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன.

மகமதியர் காலத்தில் தென்மராட்சியில் உசன் பகுதியிலும், மரக்காயன் தோட்டம் நவாலிப் பகுதியிலும், துலுக்கன்புழி அல்லைப்பிட்டியிலும் மகமதியர் குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பிடித்துள்ளன.

களப்பிரர் குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. அதற்கு உதாரணமாக புலோலியில் இருக்கின்ற களப்பிராவத்தையை சொல்லமுடியும்.
கொக்குவில் பகுதியில் உள்ள இயக்குவளை மூலம் யாழ்ப்பாணத்தில் இயக்கர் குடியேற்றம் இருந்ததை உறுதிப்படுத்த முடியும்.
சாவகர்ஓடை சுழிபுரம் பகுதியிலும், சாவன்கோட்டை நாவற்குழி பகுதியிலும் மற்றும் சாவகச்சேரியும் காணப்படுவதன் மூலம் யாவகர் குடியேற்றமும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதை அறியமுடியும்.
இவற்றைவிட ஆந்திரதேசம்,கன்னடதேசம், துலுவதேசம், கலிங்கதேசம், ஒரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் சில குடியேற்றங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன.


Wednesday, September 22, 2010

உசன் வாலிபர் சங்கம் வெளியிட்ட அறிவித்தல்


உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகமும், உசன் மக்களும் இணைந்து முன்னெடுத்த ஈச்சங்காடு மயானபுனரமைப்பு பணியின் ஒரு பகுதி முடிவடைந்த நிலையில்.சங்கத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உசன் மக்கள் உவந்தளித்த நிதியின் வரவு செலவு விபரங்கள் Facebook தளத்தில்                            இணைக்கபட்டுள்ளது.

நிதி அறிக்கையை பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள்.http://www.facebook.com/group.php?gid=186838323098&v=photos&ref=search#!/photo_search.php?oid=186838323098&view=all


Thursday, September 16, 2010

தெய்வானைப்பிள்ளை(வசந்தா)அவர்களின் மரண அறிவித்தல்.

 உசனைச் சேர்ந்த திரு. திருமதி மாணிக்கம் தம்பதிகளின் மகளும், காலம்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் மனைவியுமான திருமதி. தெய்வானைப்பிள்ளை (வசந்தா) அவர்கள் Septemper 15 ம் திகதி உசனில் காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் September 17 ஆம் திகதி உசனில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மசாந்திக்காக உசன் முருகப்பெருமானை வேண்டி நிற்கிறது.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா
தொடர்புகளுக்கு: மகன் கண்ணன் 94 771879793


Sunday, September 12, 2010

விமலராஜா பிரதீகாவின் சங்கீத அரங்கேற்றம்


திரு / திருமதி. விமலராஜா தம்பதிகளின் புதல்வி செல்வி பிரதீகாவின் சங்கீத அரங்கேற்றம் September 11 ஆம் திகதி Mississauga நகரிலுள்ள Meadowvale Theatre ல் இனிதே நடைபெற்றது. செல்வி பிரதீகா சங்கீதத் துறையில் அடைந்துள்ள இந்தச் சாதனைக்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அவரை வாழ்த்துகின்றது. அவர் இந்தத் துறையில் தொடர்ந்தும் முன்னேறி உசன் கிராமத்திற்குப் பெருமை சேர்த்திட எமது நல் வாழ்த்துக்கள்.
Vocal Arangetram of Selvi Piratheeca, daughter of Mr. & Mrs. Vimalarajah, was held in Meadowvale Theatre, Mississauga on Sept. 11. United People Association of Usan in Canada congratulates Piratheeca on her achievement. It also wishes her to become the very best in this field.


Thursday, September 9, 2010

ஈச்சங்காடு மயானம் புனர் நிர்மாணிக்கபட்டு வருகிறது

உசன் மக்கள் ஒன்றியம் -கனடா வின் பூரண ஆதரவோடு உசன் வாலிபர் சங்கம் மற்றும் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகமும் இணைந்து அவசர தேவையாக எமது  ஈச்சங்காடு மயானம் புனர் நிர்மாணிக்கபட்டு வருகிறது.முதல் கட்டமாக தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சில செயல்திட்டங்கள் நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது புலம் பெயர் வாழ் உசன் மக்களே உங்களால் ஆன பங்களிப்பை உசன் கிராமம் வரவேற்கிறது . இந்த முயற்சியை திறம்பட செய்யும் உசன் வாலிபர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா தனது வாழ்த்துக்களையும். ஆதரவையும் தெரிவிக்கிறது.
மயான புனர்நிர்மான பணியின் படங்களை எமது Facebook தளத்தில் பார்க்கலாம்
http://www.facebook.com/home.php?#!/album.php?aid=37507&id=100001219521044
 


Centre Island Summer Trip 2010

உசன் மக்கள் ஒன்றியம் கனடா தனது அங்கத்தவர்களை September 6 ம் திகதி Toronto Centerl Island க்கு அழைத்து சென்றது.அங்கு சிறுவர்களுக்கான விளையாட்டுகளும் கனடிய விமான சாகசநிகழ்வும் நடைபெற்றது.சிறுவர்களும் பெரியோர்களும் இந்த சுற்றுலாவில் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டனர். இன் நிகழ்வின் மேலதிக  புகைப்படமும் வீடியோ காட்சியும் எமது Facebook தளத்தில் பார்வையிடலாம்.
http://www.facebook.com/usanpeople?v=photos#!/album.php?aid=36878&id=100001219521044





Wednesday, September 1, 2010

கந்தையா சுவாமிநாதன்அவர்களின் மரணஅறிவித்தல்


உசன் மிருசுவில்  கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த கந்தையா சுவாமிநாதன் அவர்கள் செப்டம்பர் 1ம் திகதி உசனில் காலமானார் .அன்னார் காலம் சென்ற கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் சற்குணநாதன் (இலங்கை ) குகநாதன் (கனடா) சகுந்தலா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் செப்டம்பர்2 ம் திகதி உசனில் நடைபெற்றது.
பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு. உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவிப்பதோடு. அன்னாரின் ஆத்மசாந்தியடைய உசன் முருகபெருமானை வேண்டுகிறோம்.
தகவல் : சற்குணம் (உசன்) 94775002381
                 குகன் (கனடா)      0014162737035
                 சகுந்தலா (லண்டன்) 442085587402