அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, August 21, 2013

கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வு -கனடா 2013

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வருடாந்தம்  நடாத்தும் கனடா வாழ் உசன் மக்களுக்கான  கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டு போட்டியும்
மிக சிறப்பாக நடைபெற்றது , இன் நிகழ்வில் கனடா வாழ் உசன் மக்களூம் , சிறப்பாக லண்டன் வாழ் உசன் உறவுகளும் இணைந்து உசன் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் .. இன் நிகழ்வின் சில பதிவுகள்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Summary of the post


Tuesday, August 20, 2013

"உசன் பொது நூலகத்துக்கு நிதியுதவி தேவை ........."


அன்பான அனைத்துலக உசன் வாழ் மக்களே !!!!!

1994 ல்எமது உசன் இளையவர்களால்  உருவாக்கப்பட்ட உசன் பொது நூலகம் யுத்தகாலத்தின் பின் மிருசுவில் பகுதிக்கு சென்றது (உசன் மக்களின் உழைப்பில் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் உட்பட )
இது மிருசுவில் மக்களின் ஒற்றுமை மிக்க முயற்சியும் சாவகச்சேரி நகரசபையின் முடிவும் .
யுத்தம் முடிந்த பின் கனடா ஐக்கிய மகள் ஒன்றியம் உசன் மக்களுடன்
இணைந்து உசன் கிராம அபிவிருத்திக்காய் செயல்பட தொடங்கி
இன்று "உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் "
அடிப்படை வசதியோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இதனை உசன் மக்கள்மற்றும்  மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்துகின்றனர் ,
எனவே இந்த நூலகத்தை விஸ்தரிக்குமாறு உசன் மக்கள் சார்பாக
கனடா மக்கள் ஒன்றியத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில் ,
இதனை நடைமுறைப்படுத்த எமக்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது .
ஆரம்ப தேவையாக ..
நிரந்தர பணியாளர் சம்பளம்                                        
பாதுகாவல் /நிலைய மேற்பார்வையாளர் சம்பளம்
தகவல் சேமிப்பு கருவி (data system)
நிர்வாக செலவு
தளபாடம்
கணணி கருவிகள்
புத்தககங்கள்
மின்னிணைப்பு திருத்த வேலை
கூரை சிறு திருத்த வேலை
ஆகிய தேவைகள்  நிறைவு செய்ய வேண்டியுள்ளதால்

.அனைத்துலக உசன் மக்களிடம் இருந்து உரிமையுடன் உதவி கேட்டு நிக்கிறோம் .
பணமாகவோ பொருளாகவோ தந்துதவுமாறு வேண்டுகிறோம்.
சில உறவுகள் உசன் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர் அவர்களுடன் நீங்களும் இணைத்து .உசன் எதிர்கால சந்ததியின் அறிவு வளர்ச்சிக்கு
உதவுமாறு வேண்டுகிறோம். இதுவரை அனைத்துலகிலும் இருந்து எமக்கு பங்களிப்பு வழங்க முன்வந்தவர்களின் /குடும்பங்களின் விபரம் விரைவில் வெளியிடுவோம் .எனவே வெளிநாடுகளில் இருந்து உசனுக்கு செல்பவர்கள் இவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பை நேரடியாக வழங்கமுடியும் .
அது மட்டுமன்றி இந்த நூலக பணி தொடர்பாக உங்கள் கருத்துகள், கேள்விகள்,எதுவாக இருந்தாலும்  தயவு செய்து தொடர்பு கொண்டு பரிமாறுங்கள் . மிக விரைவில் உசனில் பிரமாண்டமான நூலகம் அமைய உள்ளது மட்டும் உறுதி .........................
தொடர்புகளுக்கு :' பண்டிதர் சரவணமுத்து " பொது நூலகம் -உசன்

 தலைவர் : திருமதி .மீரா தேவரஞ்சன்-              'உசன் -94212050103
கண்காணிப்பாளர் :திரு :சிவானந்தன்                -உசன் -94772877799
செயலாளர் : யதி செல்லத்துரை                           -உசன்-94776108420
பொருளாளர் : காஞ்சி பாலசிங்கம்                        -உசன்-94777555558

  அஜந்தன் வெற்றிவேலு -canada      0014168332120
ஊடக நிர்வாகம்  /உசன் அபிவிருத்தி கட்டமைப்பு நிர்வாகம் 
அனைத்துலக உசன் மக்கள் ஒருங்கிணைப்பு நிர்வாகம் 
"கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் '


Tuesday, August 13, 2013

தெரிவாகியது ..புதிய நிர்வாகசபை ....

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் ஒன்றியத்துக்கான நடைமுறை நிர்வாகசபை கலைக்கப்பட்டு புதிய நிர்வாகசபையைத் தெரிவு செயும் பொறுப்பு கனடா வாழ் உசன் மக்களிடம் வழங்கப்பட்டது.
நடைமுறை உறுப்பினர்களில் சிலர் வெளியேற உற்சாகமிக்க இளைய சமுதாயத்தினர் சிலர் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நிர்வாகசபையில் இணைக்கப்பட்டனர். இது சங்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் உற்சாகமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய நிர்வாகசபை தெரிவானது எந்தவித எதிர்க் கருத்தோ போட்டியோ இன்றித் தெரிவாகியது கனடா வாழ் உசன் மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டி காட்டி நிற்கிறது.

மக்களால் தெரிவுசெய்யப்பட்டு இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் கனடாவிலும், உசனிலும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அனைவராலும் கருதப்படுகிறது. இது இதுவரை காலமும் இல்லாத பெரும் மாற்றமாக இருப்பதாக சங்கத்தின் தலைவர் திரு. கனகசபை நகுலன் தெரிவித்தார். தொடர்ந்தும் இந்த நிர்வாகக் கட்டமைப்பை வழிநடத்தும் பொறுப்பைத் தான் திறம்பட செயல்படுத்தப் போவதாகவும், எந்த விதமான சவால்களையும் எதிர் கொண்டு கனடாவிலும், உசனிலும் சங்கத்தின் பணியைத் திறம்பட செயற்படுத்தத் தன்னாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு அனைத்துலக உசன் மக்களிடம் இருந்தும் தனக்கு ஆதரவு வேண்டுமென பகிரங்க அழைப்பு விடுக்க, கனடா, லண்டன், சுவிஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து உடனடியாகவே உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்துக்கு நிதி உதவி வழங்க மக்கள் முன்வந்தனர். இது வெற்றியின் முதல் படி என அவர் மேலும் தெரிவித்தார்

புதிய நிர்வாகசபையில் இணைத்துக்கொள்ளப்பட்ட இளைய உறுப்பினர்களான
திரு.ஒப்பிலாமணி விஜயரூபன்
திரு. கனகசுந்தரம் அச்சுதன்
திருமதி. பிரியலதா கேதீஸ்வரன்
ஆகியோருடன் முன்னைய உறுப்பினர்களான
கனகசபை நகுலன்
சுப்ரமணியம் பாஸ்கரன்
 
வெற்றிவேலு அஜந்தன்
இராஜரத்தினம் உமாபதி
சரவணமுத்து பத்மகாந்தன்
சிதம்பரப்பிள்ளை தயாபரன்
நவரத்தினம் சிவகுமார்
சாந்தினி சிவானந்தன்

ஆகியோரும் நிர்வாக சபையில் இடம்பெறுகின்றனர்.

இந்த நிர்வாகசபைக்கு அனைத்து மக்களும் உதவி புரியுமிடத்தில் மற்றைய சிறிய கிராமங்களை விட எமது உசனை அபிவிருத்தி செய்ய முடியுமென உறுதியாகக் கூறலாம்.


Friday, August 9, 2013

கூடிக் குதூகலிக்க கோடையில் ஒரு நாள்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தக் கோடைகால ஒன்றுகூடல் ஞாயிற்றுக் கிழமை, August 11, 2013 அன்று Scarborough, கனடாவில் Neilson Road and Finch Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Neilson Park இல் இடம்பெற இருக்கின்றது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

விளையாட்டுப் போட்டிகளோடு பல்வகை உணவும் பரிமாறப்படும். உங்கள் உறவுகளையும், நட்புக்களையும் சந்தித்து கூடி மகிழ இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

நடப்பு நிர்வாகசபையின் ஆயுட்காலம் நிறைவுக்கு வருவதால் புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம் பெறும். புதிய நிர்வாகசபைக்கு பொதுச் சேவையை நோக்கமாகக் கொண்டவர்களைத் தெரிவு செய்து இந்த ஒன்றியத்தை மேலும் வலுப்படுத்தி உசனின் வளர்ச்சிக்கு உரமூட்ட வேண்டுமென்று தற்போதைய நிர்வாகசபை வேண்டுகோள் விடுக்கிறது. காலத்தோடு ஒட்டிய புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்தக்கூடிய உறுப்பினர்களைத் தெரிவு செய்து உசனின் வளர்ச்சிக்கு உதவுவோம்.

நிதி சேகரிப்பு நடவடிக்கையாக பொருட்களை ஏலத்தில் விட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்களிடமிருக்கும் புதிய மற்றும் ஓரளவு பாவித்த, நல்ல நிலையில் உள்ள பொருட்களை ஏலத்தில் விடுவதற்கு தந்துதவவும். பொருட்களை நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு எடுத்து வரவும்.

அதிர்ஷ்ட லாபச் சீட்டு விற்பனையும் இடம் பெறும். இதற்குரிய பரிசுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்க விரும்புபவர்கள் செயலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனோடு தொடர்பு கொள்ளவும்.

வாருங்கள் மகிழ்ந்திருப்போம்!

-உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


கலைத்துறையில் உசன் மாணவன் முன்னிலையில்

பாடசாலை மாணவர்களுக்கு இடையேயான நடன போட்டியில் மாகாண மட்டத்துக்கு தெரிவாகி அங்கு முதலிடம் பெற்று தேசிய மட்டத்துக்குள் நுழைந்து பாடசாலைக்கும் மண்ணுக்கும் பெருமை சேர்த்த உசன் இராமநாதன் மகா வித்தியாலய மாணவன் ஜெயராசா நிலட்சன் அவர்களின் திறமைக்கு சிரம் தாழ்த்தி அவர் மேலும் பல வெற்றிகளை எட்டி வளர உளமார வாழ்த்துவதோடு இவர் இந்நிலைக்கு உயர ஆக்கமும் ஊக்கமும் அளித்த நடன ஆசிரியர் திருமதி.சங்கீதா மதுரன் அவர்களுக்கும் நன்றி.

மாணவனின் திறமைக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறது. இவ்வாறான மாணவர்களின் திறமைக்கு உற்சாகமளித்து அவர்களின் திறமையை வளர்க்க அனைத்துலக உசன் மக்களும் முன்வர வேண்டுமென வேண்டுகிறோம்.


புதுக்குளம் கண்ணகை அம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா

புதுக்குளம் கண்ணகை அம்மன் அடியார்களே !
முக்கிராமத்துக்கும் நடுவில்  காவலாய் இருந்து அருள் புரியும் கண்ணகை அம்மன் ஆலய புனருத்தான பணிகள் நடைபெற்றுவருகின்றன . எமது வேண்டுகோளை ஏற்று கனடாவிலும் வெளிநாடுகளிலும் உசனிலும்
ஆலய திருப்பணிக்கு ஒரு சில அன்பர்கள் உவந்தளித்த  நிதியை கொண்டு
ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி நிறைவுற்றநிலையில்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ம் திகதி பாலஷத்தானமும் 24,25 ம் திகதிகளில் மகாயாகமும் ,26 ம் திகதி கும்பாஅபிஷேகம் நடைபெற அம்பிகை திருவருள் கூடியுள்ளது ,
எனவே உசன் ,கரம்பகம் , விடத்தற்பளை அடியார்கள் இந்த திருப்பணிக்கு
உதவி வழங்க விரும்பினால் . வரும் 11 ம் திகதி நடைபெறவுள்ள
உசன் ஒன்றுகூடல் நிகழ்வில் திருமதி. சி.சாந்தி அவர்களிடம் உங்கள் காணிக்கைகளை வழங்க முடியும் .
உங்கள் அம்பிகையின் ஆலயதிருப்பநிக்கு உவந்தளித்து அம்பிகை அருள் பெறவேண்டும்

நன்றி
தொடர்புகளுக்கு
சி.சாந்தி (கனடா)
905 554 2014