அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்
Showing posts with label புதுக்குளம் கண்ணகை அம்பாள். Show all posts
Showing posts with label புதுக்குளம் கண்ணகை அம்பாள். Show all posts

Friday, August 9, 2013

புதுக்குளம் கண்ணகை அம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா

புதுக்குளம் கண்ணகை அம்மன் அடியார்களே !
முக்கிராமத்துக்கும் நடுவில்  காவலாய் இருந்து அருள் புரியும் கண்ணகை அம்மன் ஆலய புனருத்தான பணிகள் நடைபெற்றுவருகின்றன . எமது வேண்டுகோளை ஏற்று கனடாவிலும் வெளிநாடுகளிலும் உசனிலும்
ஆலய திருப்பணிக்கு ஒரு சில அன்பர்கள் உவந்தளித்த  நிதியை கொண்டு
ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி நிறைவுற்றநிலையில்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ம் திகதி பாலஷத்தானமும் 24,25 ம் திகதிகளில் மகாயாகமும் ,26 ம் திகதி கும்பாஅபிஷேகம் நடைபெற அம்பிகை திருவருள் கூடியுள்ளது ,
எனவே உசன் ,கரம்பகம் , விடத்தற்பளை அடியார்கள் இந்த திருப்பணிக்கு
உதவி வழங்க விரும்பினால் . வரும் 11 ம் திகதி நடைபெறவுள்ள
உசன் ஒன்றுகூடல் நிகழ்வில் திருமதி. சி.சாந்தி அவர்களிடம் உங்கள் காணிக்கைகளை வழங்க முடியும் .
உங்கள் அம்பிகையின் ஆலயதிருப்பநிக்கு உவந்தளித்து அம்பிகை அருள் பெறவேண்டும்

நன்றி
தொடர்புகளுக்கு
சி.சாந்தி (கனடா)
905 554 2014 


Thursday, May 5, 2011

புதுக்குளம் கண்ணகை அம்பாள் வரலாறு



உசன் கிராம மக்களுக்கு சக்தியாக விளங்கும் கண்ணகை அம்பாள் ஆலயம் உசன்,விடத்தற்பளை,கரம்பகம், ஆகிய முன்று கிராமங்களுக்கும் மத்தியில் அமைந்து எல்லா மக்களுக்கும் அருள் பாலித்துக் கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. புதுக்குளத்து கண்ணகை அம்பாளுக்கு மூன்று கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தவறாது பூசைகள் செய்து வருகிறார்கள். அம்பாள் ஆலயம் செங்கல்லால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டடமாக இருந்தது. ஆலயத்தை புதுப்பிக்க வேண்டிய நிலையைக் கருத்திற்கொண்டு உலகெங்கும் வாழும் உசன் மக்கள் ஒன்று சேர்ந்து நிதி சேகரித்து டாக்டர் மாணிக்கம் ஐயா அவர்களின் மேற்பார்வையில் அம்பாள் ஆலயம் 1999ம் ஆண்டளவில் பொளிகல்லால் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.