அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, November 29, 2016

உசன் பழைய மாணவர்களின் முன்மாதிரியான செயல்

1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து தற்போது தரம் 4 முதல் 13 வரை கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக அவர்களுக்கு பொது உளச்சார்பு மற்றும் பொதுஅறிவு ஆகியவற்றில் பரீட்சை நடாத்தி பரிசளிப்பு நடத்தியுள்ளனர். இந்த முன்மாதிரியான செயலை அவர்கள் கடந்த வருடம் ஆரம்பித்தனர். தொடர்ந்தும் இந்த ஊக்குவிப்புப் பரீட்சைகளை அவர்கள் நடத்த உள்ளனர். இந்தப் பழைய மாணவர்களுக்கும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த நிகழ்வில் பிடிக்கப்பட்ட சில படங்கள். நன்றி FaceBook - Usan RMV OldStudents


Wednesday, November 23, 2016

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
நிர்வாகசபை மறுசீரமைப்பு

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் நிர்வாகசபை கடந்த சனிக்கிழமை, November 19 ஆம் திகதி கூடியது. அப்போது நிர்வாகசபை மறுசீரமைப்புக் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. கடந்த ஆறு வருடங்களாகத் தலைமைப் பதவியில் இருந்து சிறப்பான நிர்வாகத்தை நடத்திய தலைவர் கனகசபை நகுலன் அவர்கள், தான் தொடர்ந்தும் தலைவராக இருப்பது சரியானதல்ல என்றும், புதியவர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் ஒன்றியம் புதிய, உத்வேகத்தோடு வீறுநடை போட முடியும் என்றும் கூறி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாகக் கூறினார். பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் அவரின் இந்த முடிவை நிர்வாகசபை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.

தலைவர்: சுப்பிரமணியம் பாஸ்கரன்
பிரேரித்தவர்: கனகசபை நகுலன்
வழிமொழிந்தவர்: சிதம்பரப்பிள்ளை வரதகுமார்

உபதலைவர்: நவரட்ணம் சிவகுமார்
பிரேரித்தவர்: சுப்பிரமணியம் பாஸ்கரன்
வழிமொழிந்தவர்: கனகசுந்தரம் அச்சுதன்

செயலாளர்:பிரியலதா சற்குணநாதன்
பிரேரித்தவர்: சரவணமுத்து பத்மகாந்தன்
வழிமொழிந்தவர்: சிதம்பரப்பிள்ளை தயாபரன்

உபசெயலாளர்: சாந்தினி சிவானந்தம்
பிரேரித்தவர்: கனகசபை நகுலன்
வழிமொழிந்தவர்: கனகசுந்தரம் அச்சுதன்

பொருளாளர்: கனகசுந்தரம் அச்சுதன்
பிரேரித்தவர்: சின்னத்துரை கருணாகரன் (கண்ணன்)
வழிமொழிந்தவர்: நவரட்ணம் சிவகுமார்

உபபொருளாளர்: கனகசபை நகுலன்
பிரேரித்தவர்: சிதம்பரப்பிள்ளை தயாபரன்
வழிமொழிந்தவர்: சரவணமுத்து பத்மகாந்தன்

பின்வருவோர் நிர்வாகசபை உறுப்பினர்களாகக் கடமையாற்றுவார்கள்:
சின்னத்துரை கருணாகரன்
சிதம்பரப்பிள்ளை வரதகுமார்
ஒப்பிலாமணி விஜயரூபன்
இராஜரட்ணம் உமாபதி
வெற்றிவேலு அஜந்தன்

பத்மகாந்தன் மற்றும் தயாபரன் இருவரும் தங்களின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதி அளித்தனர்.

அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்தப் புதிய நிர்வாகசபை நல்ல முறையில் இயங்க உசன் மக்களின் ஆதரவை ஒன்றியம் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றது.

சுப்பிரமணியம் பாஸ்கரன்
தலைவர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Tuesday, November 22, 2016

உசன் உறவுகள் 2016

அன்பார்ந்த உசன் மக்களே!

நீங்கள் உங்கள் உறவுகளையும், நட்புக்களையும் சந்தித்து மகிழும் நேரம் அண்மித்துக்கொண்டிருக்கிறது. உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உற்சாகம் கொடுக்கும் ஓர் இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆடல், பாடல், அறுசுவை உணவோடு சிரித்திருக்கும் நேரம் அதிக தூரத்தில் இல்லை.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடந்தோறும் உசன் மக்களை ஒன்றுகூட்டி நடாத்தும் "உசன் உறவுகள்" நிகழ்வு 2017 ஆம் ஆண்டு January மாதம் 21 ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம். Middlefield Road மற்றும் McNicoll Avenue சந்திக்கு அருகாமையில் 3300 McNicoll Avenue எனும் முகவரியில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் இந்நிகழ்வு இடம்பெறும்.

நீங்கள் இதுவரை கண்டிராத வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்டு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. அனைத்து வயதினரும் மகிழ்ந்திருக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன. இந்த நிகழ்வில் உங்கள் திறமைகளையும் வெளிப்படுத்த ஒன்றியத்தின் செயலாளரோடு தொடர்பு கொள்ளுங்கள்.

பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் சரியாக மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

எம் மத்தியில் இருக்கும் தொழில் அதிபர்களே, உங்கள் தொழிலை எம் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் அனுசரணை இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கும். உங்கள் பங்களிப்பை வழங்க ஒன்றியத்தின் செயலாளரோடு தொடர்பு கொள்ளுங்கள்.

வெளிநாடு வாழ் உசன் மக்களே கனடாவின் குளிரை அனுபவிப்பதோடு, உங்கள் உறவுகள் அனைவரையும் ஒன்றுசேரச் சந்திப்பதற்கு இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மறந்துவிடாமல் January 21ஆம் திகதியைக் குறித்துவைத்து, தவறாமல் "உசன் உறவுகள் 2016" நிகழ்வில் கலந்து மகிழுமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.


Sunday, November 6, 2016

உங்களின் சேவையில் அஜு.

உங்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான அஜந்தன் வெற்றிவேலு அவர்கள் வீடு விற்பனைத் துறையில் கால் பதித்துள்ளார். Home Life Today Reality Ltd. Brokerage உடன் இணைந்து அவர் இந்தச் சேவையை வழங்க ஆரம்பித்துள்ளார்.

ஏன் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, "இங்குள்ள அனைவரும் வாழ்வதற்கும், முதலீடு செய்வதற்கும் Real Estate சேவைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கப்போகிறார்கள். எனவே இந்தத் துறை எப்போதும் கைகொடுக்கும்" என்றார். ஏற்கனவே எமது சமூகத்தைச் சேர்ந்த பலர் இந்தத் துறையில் ஈடுபட்டடுக்கொண்டிருக்கும்போது உங்களை ஏன் அணுகவேண்டும் என்ற மற்றுமொரு கேள்விக்கு, "என்னை அணுகுவதன் மூலம் தேவையான, சரியான தகவல்களைப் பெற்றுக்கொண்டு முடிவுகளை எடுக்க முடியும். அத்தோடு அதி உயர் சேவையையும் பெற்றுக்கொள்ளமுடியும்" என்றார்.

நீங்களும் உங்கள் வீட்டை விற்கவோ அல்லது இன்னுமொரு வீட்டை வாங்கவோ உங்கள் நம்பிக்கைக்குரிய அஜந்தன் வெற்றிவேலுவை அணுகிப் பயன் பெறலாம். அஜுவோடு 416-427-6000 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

அஜந்தன் வெற்றிவேலு இந்தத் துறையில் கொடி கட்டிப் பறக்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகிறது.