அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்
Showing posts with label கஜகேணிப் பிள்ளையார் கோவில். Show all posts
Showing posts with label கஜகேணிப் பிள்ளையார் கோவில். Show all posts

Tuesday, March 26, 2024

உசன் கஜகேணி விநாயகர் கோவில் மகா கும்பாபிசேகம் - நேரலை

திருவருள்மிகு ஸ்ரீ கஜகேணி விநாயகர் திருக்கோயில் புனராவர்த்தன பிரதிஸ்டா மஹகும்பாபிஷேக விஞ்ஞாபனம் - நேரலையாக இந்தத் தளத்தில் பார்த்து அருள் பெறலாம்.

https://youtube.com/live/IA4ZbxZN3S4?feature=share

காலம்: புதன்கிழமை, March 27, 2024, காலை 6 மணி IST (இலங்கை); செவ்வாய்க்கிழமை, March 26, 2024 மலை 8:30 மணி EDT (Toronto).


Monday, June 10, 2019

"திருஷ்ய பரதம்"


Sacrborough, Ontario, கனடாவில் 14 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி வழங்கும் நாட்டியத்தின் மூலம் ஒரு பார்வை எனும் கருப்பு பொருளில் "திருஷ்ய பரதம்" .  10 வயது முதல் 13 வயது வரையான இளம் நடனக் கலைஞர்களின் ஒரு சிறப்பு நடனம்.  உங்கள் கலைப் பசிக்கு ஒரு பெரு விருந்து.

காலம்:  வெள்ளிக்கிழமை, June 14, 2019
நேரம்: மாலை 7 மணி
இடம்: J. Clarke Richardson Collegiate
1355 Harwood Avenue North, Ajax, ON, L1T 4G8

நிகழ்வுக்கு பக்கவாத்தியம் வழங்கும் திறமை வாய்ந்த கலைஞர்கள்:
பாட்டு: ஸ்ரீ அருண் கோபிநாத்
மிருதங்கம்: ஸ்ரீ ரதிரூபன் பரம்சோதி
வயலின்: ஸ்ரீ ஜெயதேவன் நாயர்
நட்டுவாங்கம்: ஸ்ரீமதி சியாமா தயாளன்

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நடனத்தைக் கண்டு மகிழ்வதோடு இளம் கலைஞர்களை வாழ்த்துமாறு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர் ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்கள் அன்போடு வேண்டுகிறார்.

"திருஷ்ய பரதம்" சிறப்புற நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.


The disciples and Guru Smt. Shiyama Thayaalan of Bhaarati School of Indian Classical dance are honoured to present DRISHYA BHARATHAM - "Vision through Natyam", On June 14th, 2019.

Young dancers who are 10-13 years of age have put in a tremendous amount of effort to put together this spectacle. The Drishya Bharatham team invites you to enjoy this showcase of dance.

The talented and well known orchestra accompanying this show:
Vocal: Shri. Arun Gopinath
Mirdangam: Shri. Rathiruban Paramsothy
Violin: Shri Jayadevan Nair.
Nattuwangam: Smt. ShiyamaThayaalan.



Monday, January 4, 2016

கஜகேணி பிள்ளையார் கோவிலில் கணபதி ஹோமம்

உசன் கிராமத்தின் முழுமுதல் தெய்வமாக விளங்கி அருள் பாலிக்கும் கஜகேணி பிள்ளையார் ஆலயத்தில்
சிறப்பு கணபதி ஹோமம் மிக சிறப்பாக நடைபெற்றது , சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களின் வழிகாட்டலில் நடைபெற்ற சிறப்பு கணபதி ஹோம வழிபாட்டில் பெருமளவான அடியார்கள் கலந்து அருள் பெற்றனர் .









Sunday, June 19, 2011

உசன் கஜகேணி விநாயகர் ஆலய கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீட்டு விழா

உசன் கஜகேணி விநாயகர் ஆலைய கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீட்டு விழா இன்று அதாவது 19-06-2011 அன்று அவ் ஆலய முற்றலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் அவ் கும்பாபிஷேக சிறப்பு மலரின் முதல் பிரதியினை ஆலையத்தின் தர்மகர்த்தா பெறுக்கொண்டார்.






Sunday, April 17, 2011

கஜகேணி பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக இறுதிநாள்





அருள்மிகு உசன் கஜகேணி பிள்ளையார்  கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் சில படத்தொகுப்பு







 







Friday, March 25, 2011

கஜகேணிப் பிள்ளையார் கோவில் வரலாறு


திருவாக்கும் செய் கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் 
உருவாக்கும் ஆதலால் வானோர்
ஆனைமுகத்தானை காதலால் கூப்புவர் தம்கை.

தென்னஞ் சோலைகளும், முக்கனி மரங்களும் விளை நிலங்களும் நிறைந்து இயற்கை வனப்புடன் காட்சி தரும் உசன் கிராமம் தென்மராட்சியில் அமைந்துள்ளது.  ஆன்மீக நெறியும் தெய்வ வழிபாடும் தழைத்து ஓங்க ஆலயங்களும், அறிவுக் கலையும் அதன் பயன்பாடும் பரந்து பட பணியாற்றும் வித்தியாலயங்களும் அமையப் பெற்றது உசன் கிராமம்.  இவ்வாலயங்களும் வித்தியாலயங்களும் வெவ்வேறு சரித்திரங்களுடனேயே தோன்றின என்பது வரலாறு.



Tuesday, March 22, 2011

கஜகேணி பிள்ளையார் கோவில் நேரடி ஒளிபரப்பு



உசன் ஸ்ரீ கஜகேணி பிள்ளையார் கோவிலில் நடைபெறும் மஹா கும்பாபிஷேக நிகழ்வை நேரடி காட்சியாக ஒளிபரப்பும் எமது முயற்சி ஓரளவு நிறைவடைந்துள்ளது. இலங்கை நேரம் 23 ம் திகதி காலை 10 மணிக்கு ஒளிபரப்பு ஆரம்பமாகும்.
அதேபோன்று மறுநாள் 24 திகதி கும்பாபிஷேக நிகழ்வும் அதேநேரம் ஒளிபரப்ப முயற்சிகள் நடைபெறுகிறது.
மிகவும் குறைந்த அலைவரிசையில் நடைபெறும் இம் முயற்சியில் எதாவது இடையூறுகள் நிகழ்ந்தால் பொறுத்தருள்க.
அனைத்துலக உசன் மக்களுக்கும் பிள்ளையார் தரிசனம் கிடைக்க
இந்த நேரடி ஒளிபரப்புக்கு அனுசரணை வழங்கும் கனடா JBN Auto நிறுவன அதிபர் திரு .கருணி விநாசித்தம்பி அவர்களுக்கு நன்றிகள்
நேரடி ஒளிபரப்பு எமது இணையதளமான http://www.usan.ca/ எனும் தளத்தில் இடம்பெறும் .


Monday, March 21, 2011

ஸ்ரீ கஜகேணி விநாயகப்பெருமான் ஆலய மகோற்சவ நிகழ்வுகள்

யாழ்ப்பாணத்து தென்மராட்சி பிரிவில் உசன் பகுதியில் கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ கஜகேணி விநாயகப்பெருமான் ஆலயமானது சில திருத்த வேலைகள் செய்யப்பட்டு அவ் வேலைகள் முடிவடைந்து தற்பொழுது மஹா கும்பாபிஷேக வைபவம் நடைபெறுகின்றது. விநாயகர் அடியார்களே மகோற்சவ நிகழ்வுகள் வருமாறு:-

21-03-2011 திங்கட்கிழமை பங்குனிமாதம் 7ம் நாள்-கர்மாரம்பம்
22-03-2011 செவ்வாய்க்கிழமை பங்குனிமாதம் 8ம் நாள் காலை 10.00 மணிமுதல் புதன்கிழமை பகல் 11.00 மணிவரை எண்ணெய்க்காப்பு இடம்பெறும்
24-03-2011 வியாழக்கிழமை பங்குனிமாதம் 10ம் நாள் காலை 9.26-11.00 மணிவரை அனுஷ நட்சத்திரமும், இடப லக்கினமும்,சித்த யோகமும் கூடிய சுப முகூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேகமும் இடம்பெறும்.