அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, December 30, 2014

திரு. கந்தையா தங்கவேலாயுதம்

உசனைச் சேர்ந்த ரோஹிணி (வெற்றிவேலு) இளங்கீரன் அவர்களின் மாமனாரான யாழ் அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தங்கவேலாயுதம் அவர்கள் 30-12-2014 அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்ற கந்தையா சின்னம்மா அவர்களின் அன்பு மகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

குகனேஸ்வரி, சிவனேஸ்வரி, ஐங்கரன், பிரபாகரன், கிருபாகரன், இளங்கீரன் (Debt Free Credit Solution) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சங்கீதா, கேதுராணி, ரோகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவநீதன், ஜெனனி, மேனன், ரம்பா, நிலானி, அபிநயா, அஸ்வினி, அஸ்வின், ஆரூஷன், மதுஷனா , தியானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

திபிஷனின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளுகிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்
ஐங்கரன் (மகன்) - + 94 77340 5974
பிரபாகரன் (மகன்) - + 44 750748 2799
இளங்கீரன் (மகன்) - + 416-834-7227


Monday, December 22, 2014

உசன் உறவுகள் 2014

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வழங்கும் வருடாந்த நிகழ்வான "உசன் உறவுகள் 2014" January 17, 2015, சனிக்கிழமை அன்று இடம்பெற இருக்கிறது என்ற தகவலை மகிழ்வோடு அறியத் தருகிறோம். கனடா,Scarborough நகரில் Middlefield Road மற்றும் McNicol Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் இந்த நிகழ்வு இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்போடு அழைக்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.

இம்முறை இந்த நிகழ்வை இளையவர்களை முன்னிறுத்தி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய முகங்கள் நிகழ்வுக்கு புது மெருகேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழமையை விட்டு வெளியே வந்து மாற்றங்களோடு இந்த நிகழ்வை நடத்த இளையவர்களின் ஆலோசனைகளோடு அவர்களின் உற்சாகமான பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. உங்களின் வளத்தை இந்த நிகழ்வுக்கு வழங்க ஒன்றியத்தின் செயலாளரோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

"உசன் உறவுகள் 2014" நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்பும் நிறுவனங்களும், தனி நபர்களும் கூட ஒன்றியத்தின் செயலாளரோடு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். இந்த நிகழ்வில் இடம்பெற இருக்கும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளைப் பொறுப்பெடுக்க முன்வருமாறு அங்கத்தவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

உழைத்துக் களைத்த உடலுக்கும், உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் இந்த நிகழ்வைச் சிறப்பாக்க வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா



"Usan Uravukal 2014"

The annual event hosted by United People Association of Usan in Canada, "Usan Uravukal 2014", will be held on Saturday, January 17, 2015. This event will be held at Baba Banquet Hall closer to Middlefield Road and McNicol Avenue intersection in Scarborough, Canada.

All are cordially invited to attend this event and have lot of fun.

This year we are encouraging our younger generation to be part of this event. Please provide your ideas and suggestions to the Secretary of the Association. We are seeking your leadership and other talents which definitely make this event a huge success for all ages.

We are looking for Sponsors as well. Organizations, Business owners and individuals who wish to sponsor this event please contact the Secretary of United People Association of Usan in Canada via secretary@usan.ca.

Once again we invite you all to attend "Usan Uravukal 2014" and meet with your fellow citizens.

Thank you.

United People Association of Usan in Canada.


Monday, December 15, 2014

உசன் சந்தியில் பேருந்து தரிப்பிடம்

நீண்ட காலமாக கண்டி வீதி உசன் சந்தியில் பேருந்து தரிப்பிடம் இல்லாத நிலையில் கொட்டும் மழையிலும், வெய்யிலிலும் மக்கள் படும் அசௌகரியங்களைக் கண்டு, உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் உசன் சந்தியில் பேருந்து தரிப்பிடம் அமைக்கும் திட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இந்தச் செயற்திட்டத்தை உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் இ.போ.ச. நடாத்துனருமான அமரர் திரு.க.வெற்றிவேலு அவர்களின் நினைவாக நிறைவேற்ற அன்னாரின் குடும்பத்தினர் முன்வந்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவை அணுகி இந்த செயற்திட்டத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா, உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தினரோடு தொடர்புகொண்டு தமது ஒத்துழைப்பைத் தெரிவித்தனர்.

இந்தப் பேருந்து தரிப்பிடத்தை அமைப்பதற்கான சட்டரீதியான அனுமதி உரிய திணைக்களங்களில் இருந்து கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அதற்கான ஆரம்ப கட்டுமாணப் பணி 15/12/20104 அன்று உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகத் தலைவர் திரு. ரூபன் தலைமையில் சுப நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சமய ரீதியான சடங்கைத் தொடர்ந்து அமரின் சகோதரான திரு.க. கனகரத்தினம் அவர்கள் அடிக்கல்லை நாட்டிவைத்தார். தொடர்ந்து கழகத் தலைவர் திரு. ரூபன் மற்றும் உறுப்பினர் திரு. பகீரதன் ஆகியோரும் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இந்த நல்ல செயற்திட்டத்தை நிறைவேற்ற முன் வந்த அமரர் திரு. க. வெற்றிவேலு குடும்பத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றிகளைத் தெரிவித்து நிற்கிறது. இந்தச் செயற்திட்டத்தை முன்னெடுக்கும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்துக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது.


Friday, December 5, 2014

திருமதி றோஸ் அரியமலர் தனபாலசிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்


யாழ்,உசன் மிருசுவிலை பிறப்பிடமாகவும் ,வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் ,கனடாவில் வசித்து வந்தவருமான
திருமதி ,றோஸ் அரியமலர் தனபாலசிங்கம் அவர்கள் 29-11-2014
சனிக்கிழமை வ்கானடாவில் காலமானார் .
அன்னார் காலம் சென்ற கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
காலம் சென்ற டேவிட் தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்
ஜெயந்தினி,காலம்  சென்ற அரியபாலன்,டெனிஸ்,ஜேம்ஸ் ,பெற்றி,
ஆகியோரின் அன்புத்தாயாரும்
ஜோன் செல்வராசா (மாஸ்டர் உசன் ) காலம் சென்ற லில்லி நேசமலர் ஆகியோரின் சகோதரியும் ஆவர் ,
அன்னாரின் திருவுடல் கனடாவில்  5-12-2014 வெள்ளிகிழமை மாலை 5 மணிமுதல் 9 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada  பார்வைக்கு வைக்கப்பட்டு ,
பின்னர் அன்னாரின் சொந்த ஊரான உசனுக்கு எடுத்து செல்லப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர்
வட்டுக்கோட்டையில் நல்லடக்கம் செய்யப்படும் ,
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம் .
தகவல்
டெனிஸ் — கனடா
செல்லிடப்பேசி:+19059151043
ஜேம்ஸ் — கனடா
தொலைபேசி:+14163994802
பெற்றி — கனடா
தொலைபேசி:+14166637417