அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, April 4, 2022

உலகளாவிய உசன் கட்டமைப்பு
நிதி சேகரிப்பு


அன்பான உசன் மக்களே!

உலகளாவிய உசன் கட்டமைப்பின் (Usan Global Forum) இணையவழி கலந்துரையாடல் April 3, 2022 அன்று உசன் உறவுகளுடன் இடம்பெற்றது.  

உலகளாவிய உசன் கட்டமைப்பு உருவானதன் நோக்கம், அதன் செயற்பாடு எப்படி அமையும் என்பதை மீள தெளிவுபடுத்துவது, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி உசன் கட்டுவரம்பு வீதி புனரமைப்புக்கான நிதி சேர்க்கையுமே இன்றய கலந்துரையாடலின் பிரதான கருப்பொருளாக இருந்தன.

இதுதொடர்பாக கடந்தகாலங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் "உசனுக்கு ஒரு இலட்சம்" எனும் கருப்பொருளில் புலம்பெயர் வாழ் உசன் மக்கள் ஒவ்வொருவரிடமும் பொதுத் தேவைகளுக்காக நிதி சேகரிப்பது குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இன்றைய கலந்துரையாடலில் பொது நிதி சேகரிப்பதோடு, கட்டுவரம்பு புனரமைப்புக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான நிதியைச் சேகரிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.  

அதனடிப்படையில் கட்டுவரம்பு புனரமைப்புக்கு எதிர்பார்க்கப்படும் உத்தேசத் தொகையான 4 மில்லியன் ரூபாவை உடனடியாக உசன் மக்களிடம் கோருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வாழ்வாதார உதவியாக மூன்று குடும்பங்களுக்கு மலசலகூட வசதி செய்து தரும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுவரம்பு வீதி புனரமைப்பு முடிந்தகையோடு அடுத்ததாக இதைச் செயல்படுத்த முனைப்புக் காட்டுவோம்.  அதுவரையில் அதற்கான முழுமையான தரவுகளையும், தகவல்களையும் சேகரித்து அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்போம்.

உலகளாவிய உசன் கட்டமைப்பின் நிதி உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவினால் கையாளப்படவேண்டுமென்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.  விரைவில் இதற்கான வங்கிக் கணக்கு விபரம் பொதுத் தளங்களில் வெளியிடப்படும். அந்த நேரத்தில் உங்கள பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

மனங்களாலும், வளங்களாலும் புலமும், நிலமும் ஒருமித்து வெற்றிகொள்வோம்!

நன்றி.
ஜெயதேவன் அம்பலவாணர்
பேச்சாளர்
உலகளாவிய உசன் கட்டமைப்பு