அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, April 28, 2015

உசன் ஐக்கிய நாணய சங்கம் விடுக்கும் வேண்டுகோள்

உசன் ஐக்கிய நாணய சங்கம் தங்களின் தேவைக்கென ஒரு கட்டிடம் அமைக்கத் தீர்மானித்துள்ளதென்றும், அதற்கான நிதி உதவிக்கான கோரிக்கையை சங்கத்தின் மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகளிடம் விடுவதென்றும், இந்த வேண்டுகோளை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஊடகங்களில் பிரசுரித்து உதவுமாறும் அச் சங்கத்தின் சார்பில் திரு.க.பேரம்பலம் அவர்கள் கேட்டிருக்கிறார். அவரின் வேண்டுகோளை இங்கே பிரசுரிக்கிறோம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா

______________________________________________________________________

இச்சங்கத்தின் நோக்கம்: புகையிலைச் செய்கை, நெற்செய்கை போன்ற தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்தல்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அமரர் மு. சி. சிற்றம்பலம் அவர்களால் 1947 ஆம் ஆண்டு இந்தச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 68 ஆண்டுகளாகியும் சொந்தக் கட்டிடம் இல்லாத குறையை நிவர்த்தி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்துக்குரிய ஒரு பரப்புக் காணியை உசன் கந்தசாமி கோவில் தர்மகர்த்தா திரு கு. விமலதாஸ் அவர்கள் வழங்கியுள்ளார். இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்கு Rs. 12,00,000.00 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை சங்க மூத்த அங்கத்தவர்களின் நினைவாக அவர்தம் பிள்ளைகளின் அன்பளிப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேரன்புடையீர்!
மேற்படி சங்கம் இன்றும் 26 அங்கத்தவர்களுக்குக் குறைந்த வட்டியுடன் தலா Rs. 20,000.00 கடன் கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாது கடந்த காலங்களில் பல சமூக சேவைகளையும் செய்துள்ளது. யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஒரு கல்வி வளர்ச்சி நிதியத்தை ஆரம்பித்து ஆண்டுதோறும் பரீட்சை பெறுபேறுகளில் முதன்மை காட்டும் மாணவர்களுக்கு நிதியத்தின் வட்டி மூலம் நிதி உதவிகளையும் செய்து வருகிறது.

எனவே இந்த நற்பணி செவ்வனே நிறைவு பெற உங்களின் பேருதவியை நாடி நிற்கிறோம். பின்வரும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதன் மூலம் உங்களின் நிதி உதவியைச் செய்ய முடியும்.

வங்கியின் பெயர்: National Savings Bank (NSB), Chavakachcheri
கணக்கிலக்கம்: 100730209406

மேலதிக தொடர்புகளுக்கு:
திரு.க.பேரம்பலம் +94213737079 / +9421222404

நன்றி

உசன் ஐக்கிய நாணய சங்கம் சார்பாக திரு.க.பேரம்பலம்


Monday, April 27, 2015

உசனில் நடைபெறவிருக்கும் பிரமாண்ட விழா


உசன் ஸ்ரீ  முருகன் விளையாட்டுக்கழகத்தின் 55 ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு , கழக உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் துரித திட்டங்களின் ஆரம்பநிகழ்வும் ," முதுசம்" நூல் வெளியீட்டு விழாவும்
எதிர்வரும் 30.04.2015 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு , சிறப்பாக நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது .
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக .வட மாகாண கௌரவ முதல்வர் அவர்களும்.மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்,
இன் நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறும் ,
உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகத்தின் . துரித திட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம் .
இன் நிகழ்வு சிறப்புற நடைபெற கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது .





Wednesday, April 22, 2015

உசன் விளையாட்டு வீரர்களின் அதிரடி ஆட்டம்

வரலாற்றில் முதல் தடவையாக வெளிநாடு ஒன்றில் எமது உசன் மைந்தர்கள் நிகழ்த்திய விளையாட்டு சாதனையாக பதிவு பெற்ற  South Asian Badminton Tournament  2015 போட்டி  .
மிக குறுகிய காலத்தில் சிறந்த வழி காட்டலுடன் பயிற்சி பெற்ற எமது உசன் வீரர்கள் . மிகவும் சவால் மிக்க அணியினரை தக்க மதி நுட்பத்துடனும் தீரத்ததுடனும் எதிர்கொண்டு வெற்றி பெற்றனர் , அதில் சில காட்சி பதிவுகள் 
முதல் பதிவு 


Monday, April 20, 2015

அஜந்தன் வெற்றிவேலு அவர்களுக்குப் பாராட்டு

Tamil Canadian Sports Association ஆல் March 14, 2015 அன்று Markham Pan-Am Center இல் நடாத்தப்பட்ட 3ஆவது ஆண்டு பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் Uan Sports Club இன் சார்பில் பலர் கலந்துகொண்டு வெற்றிக் கேடயங்களைப் பெற்றுக்கொண்டார்கள். இந்த நிகழ்வைச் சிறப்பாக நடாத்தி முடிக்க உதவிய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் உப செயலாளர் அஜந்தன் வெற்றிவேலு அவர்களுக்கு Markham நகர சபையில் ஒரு விளையாட்டு அமைப்பை உருவாக்கி மிக குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி பெற திறம்பட செயல்பட்டமைக்கும்  அவரின் சேவையைப் பாராட்டி Markham நகர பிதாவும், அங்கத்தவர்களும் பாராட்டுப் பத்திரம் வழங்கி மதிப்பளித்தனர்.

அஜந்தன் வெற்றிவேலு அவர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் அதன் உறுப்பினர்கள் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.




Sunday, April 19, 2015

DECA International Career Development Conference

Canadian-Usan students are participating in this year's DECA International Career Development Conference. Shankith Umapathy and Gokulan Sivakumar are preparing for this grand event. More than 10,000 members are expected in this event showcasing their knowledge and skills. Gokulan has recently participated in the Badminton Tournament held in UK organized by World Tamil Badminton Federation and he was the champion in his age category.

DECA Ontario is Canada's largest youth business organization. Their mission is to be the leading, innovative extra-curricular program for secondary school students in Ontario by creating professional partnerships and experiential learning opportunities that allow students to develop confidence, employability skills and demonstrate leadership.

More and more schools are recognizing DECA as a great way for students to get prepared for ‘the real world’. Students are mentored by DECA's strongest leaders and guided by it's most supportive corporate and community sponsors enabling them with the motivation, skills, and education they need to pursue a line of business. DECA dives into a world beyond textbooks through role-plays, community projects, leadership programs, and international networking.

DECA is also an identified component of the Specialist High Skills Major (SHSM) program. Through experiential programming, students are given many reach ahead opportunities that they can apply to their SHSM designation on their OSSD.

DECA has about 100 categories to choose from and develop your skills for your future career. DECA holds Provincial, Regional and International competitions. This year's DECA International Career Development Conference will be held at Orange County Convention Center, Orlando, Florida between April 25 and April 28.

United People Association of Usan in Canada is joining it's members wishing Shankith and Gokulan a successful event and a great career.

For more details about DECA please visit www.deca.ca


Sunday, April 12, 2015

உசன் சந்தியில் பொதுமக்கள் நிழல் குடை திறப்பு


கண்டி வீதி - உசன் சந்தியில் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பயணிகள் பேருந்துக்காகக் காத்திருந்த நிலைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் பயணிகள் நிழல் குடை இல்லாதிருந்த குறையை நிவர்த்தி செய்ய உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகம் முன்வந்தது. அவர்களது செயற்திட்டத்துக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஊடாக அனுசரணை வழங்க முன்நாள் இ.போ .ச நடத்துனர், அமரர் வெற்றிவேலு அவர்களின் குடும்பத்தினர் உறுதி அளித்தனர்.
உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் முயற்சியில் கட்டப்பட்ட பேருந்து தரிப்பிட நிழல் குடை இன்றைய தினம் ஏப்ரல் 12 ம் திகதி, மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கழகத்தின் தலைவர் திரு. ரூபன் தலைமையில் நடைபெற்ற திறப்புவிழாவை திரு.செல்லத்துரை ஜதிகேசன் தொகுத்து வழங்கினார்.
தரிப்பிடத்தை அமைக்க ஆலோசனை வழங்கியதோடு ஆரம்பக் கட்ட நடவைக்ககளை முன்னெடுத்த சமூக சேவையாளர் திரு. மு. க. சிவானந்தம் மற்றும் உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலக நிர்வாகக் சபைத் தலைவர் திருமதி மீரா தேவரஞ்சன் ஆகியோர் மங்கள விளக்கை ஏற்றினர்.
வடமாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி திரு.கேசவன் சயந்தன் அவர்களும், அமரர் வெற்றிவேலு அவர்களின் மாமனார் திரு. கனகசிங்கம் அவர்களும் நிழல் குடையைத் திறந்து வைத்தனர்.
அமரர் வெற்றிவேலு அவர்களின் உருவப்படத்துக்கு கழகத்தின் செயலாளர் திரு. அ. பிரபாகரன் மலர்மாலை அணிவித்து மதிப்பளித்தார்.
உசன் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய வடமாகாண சபை உறுப்பினர் திரு. கேசவன் சயந்தன் அவர்கள் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எல்லா அபிவிருத்திக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தமது கிராமத்தை தாமே அபிவிருத்தி செய்வது வரவேற்கதக்கது எனவும் அதனை உசன் கிராம மக்களும், அமைப்புகளும் சிறப்புடன் செய்து வருவது அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாகவும், இதனை அனைத்து கிராம மக்களும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

தொடர்ந்து நிழல் குடையைச் சிறப்பாக கட்டிமுடித்த நிறுவன அதிபர் திரு. ப. சுகந்தன் அவர்களுக்கு கழகத்தின் தலைவர் நன்றி தெரிவித்து மதிப்பளித்தார். உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகக் காப்பாளர், வைத்தியர் திரு ஐ. ஜெபணாமகணேசன் அவர்கள் இந்த பொதுப்பணி சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார்.














Saturday, April 11, 2015

சுவிசில் நடைபெற்ற "நாட்டியமயில் 2015"

சுவிஸ் நாட்டில் நடாத்தப்பட்டுவரும் பிரமாண்ட நாட்டிய போட்டி நிகழ்வான "நாட்டியமயில் 2015" April 6, 2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. பல நாட்டுக் கலைஞர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்துவர். நடன தாரகைகள் குழுக்களாக இந்தப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். பல நாடுகளிலும் நடனத் துறையில் சிறந்து விளங்கும் நடன ஆசிரியர்கள் நடுவர்களாகப் பணியாற்றுவர்.
இப்படியான ஒரு பிரமாண்ட நிகழ்வில் உசனைச் சேர்ந்த காயத்திரி திஷாந்தன் அவர்களினால் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பட்டுவரும் "பரத தர்சனம்" நடனக் கல்லூரி மாணவிகள் முதன் முறையாகக் கலந்துகொண்டு தமது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். "பரத தர்சனம்" நடனக் கல்லூரி மாணவிகள் நடனத் துறையில் மேலும் முன்னேறி சாதனைகள் பல படைக்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


பொன்னையா சிவசம்பு

உசனைச் சேர்ந்த தயாளினி (சிதம்பரபிள்ளை) உதயகுமார் அவர்களின் அன்பு மாமனார் பொன்னையா சிவசம்பு அவர்கள் 10-04-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் யாழ். கோவிலாக்கண்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார்.

அன்னார், பொன்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், கார்த்திகேசு லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயராணி, ஜெயவீரசிங்கம்(துரை), உதயகுமார்(குமார்), சாந்தகுமார்(சாந்தன்), விமலராணி, செந்தில்ராணி, காலஞ்சென்ற வதனராணி, லலிதாராணி, மயூரதி(மயூ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, கமலாம்பிகை(கனடா), காலஞ்சென்ற கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்பழகன், செல்வமலர், தயாளினி, வசந்தராணி, நடராஜா, சிறிஸ்கந்தராசா, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்னம்மா, தம்பிஐயா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிலாஜினி, சயனன், துஷிகரன், ஜெவின், ஜெவிக்க, ரூபினி, கயனன், கஜித்தா, பாமினி, பானுதரன், சஜீவன், ஸ்வரன், நிருஷா, கிருஸிக ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை 11/04/2015 அன்று பி. ப. 4 மணிமுதல் இரவு 9 மணி வரையும் Aeterna Funeral Complex, 55 Rue Gince street, Saint-Laurent, QC H4N1J7, Canada என்ற முகவரியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும். தகனக் கிரியைகள் ஞாயிற்றுக் கிழமை 12/04/2015 அன்று மு. ப. 9 மணி முதல் பி. ப. 12:45 வரை Aeterna Funeral Complex, 55 Rue Gince street, Saint-Laurent, QC H4N1J7, Canada என்ற முகவரியில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
தயாளி குமார் - +1-647-720-4077


யோகினி ரவீந்திராவுக்குப் பாராட்டுகள்

வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் உசனைச் சேர்ந்த மாணவர்கள் அதி திறமைச் சித்தி அடைந்திருக்கிறார்கள். 9 பாடங்களிலும் A தரம் பெற்று இவர்கள் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், தமக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அந்த வகையில் யோகினி ரவீந்திரா ஆங்கில மொழிமூலப் பரீட்சையில் 9A பெற்று அனைவரினதும் பாராட்டுக்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். இவர் முன்னாள் உசன் கிராமசேவகர் திரு. குமாரசாமி மற்றும் உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியர் திருமதி புவனேஸ்வரி குமாரசாமி ஆகியோரின் பேத்தியும், திரு. ரவீந்திரா (நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலய அதிபர்) மற்றும் திருமதி ரவீந்திரா அவர்களின் மகளும், வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவியுமாவார்.

யோகினி ரவீந்திரா கல்வியில் மேலும் சிறப்படைந்து பல உயர்வான விருதுகளைப் பெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை இந்தப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Friday, April 10, 2015

உசன் சந்தியில் பயணிகள் நிழல் குடை திறப்பு விழா

கண்டி வீதி - உசன் சந்தியில் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பயணிகள் பேருந்துக்காகக் காத்திருந்த நிலைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் பயணிகள் நிழல் குடை இல்லாதிருந்த குறையை நிவர்த்தி செய்ய உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகம் முன்வந்தது. அவர்களது செயற்திட்டத்துக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஊடாக அனுசரணை வழங்க முன்நாள் நடத்துனர், அமரர் வெற்றிவேலு அவர்களின் குடும்பத்தினர் உறுதி அளித்தனர்.

நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிழல் குடை பயணிகளுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. தற்போதைய அரசியல் நிலையில் பல சிரமங்களுக்கு மத்தியில் உரியவர்களிடமிருந்து அனுமதி பெற்று அமைக்கப்படுள்ள இந்தப் பயணிகள் நிழல் குடை 12.04.2015 ஞாயிற்றுகிழமை காலை 9:30 மணிக்கு பயணிகள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட உள்ளது. இந்தத் திறப்பு விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு மக்கள் அனைவரையும் உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகம் அழைத்துள்ளது. இந்த முன்மாதிரியான நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வேண்டுகோள் விடுக்கின்றது.

இந்தப் பயணிகள் நிழல் குடைத் திட்டம் நிறைவுபெற அனுசரணை வழங்கிய அமரர் வெற்றிவேலு குடும்பத்தினருக்கும், திட்டத்தைச் செயற்படுத்தி முடித்துள்ள உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகத்துக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நன்றியைத் தெரிவிக்கிறது.


Wednesday, April 8, 2015

உசன் கோவில் குருக்களுக்கு கனடாவில் மதிப்பளிப்பு

உசன் கந்தசுவாமி கோவிலில் பரம்பரையாக பூசை வழிபாடுகளை நடாத்திவரும் அந்தண குருக்கள் பரம்பரை வழியே வந்து .தற்போதைய பிரதம குருவாக பூசை வழிபாடுகளை நடாத்தி வரும் சிவ ஸ்ரீ இரத்தின கேதீஸ்வர குருக்கள் அவர்கள் கனடாவில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுவரும் வேளையில் , குருக்கள் ஆற்றிவரும் உசன் கிராமத்தின் சமூக,சமய ,கலாச்சார  சேவையை பாராட்டி , கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக  ,கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ,கடந்த ஏப்ரல் 4 ம் திகதி ,கனடா செல்வ சந்நிதி ஆலய மண்டபத்தில் ,மதிப்பளிப்பு நிகழ்வொன்றை நடத்தியிருந்தது ,
சங்கத்தின்  தலைவர் திரு. நகுலன் கனகசபை அவர்களின் தலைமையில் நடிபெற்ற நிகழ்வை செயலாளர் திரு.,சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்கள் தொகுத்து வழங்கினார் , நிகழ்வில் கேதீஸ்வர குருக்களின் சேவை தொடர்பாக ஆசிரியர் ,திரு ,ஸ்ரீகாந்தன் ,மற்றும் திரு ,இராமநாதன் ஆகியோர் உரை நிகழ்த்தினர் ,




குருக்கள் உசன் கிராமத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் ,என்றும் இப்போதைய நிலை எப்படி உள்ளது என்ற நிலையை தெளிவாக கூறியதுடன் உசன் கிராமத்தின் கட்டுப்பாடு எப்போதும் உசன் மக்களின் கைகளை விட்டு தவறி விடக்கூடாது என்ற நிலையை விளக்கி சொன்னார் .


தொடர்ந்து குருக்களுக்கு தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க  திரு ,ஒப்பிலாமணி விஜயகுலன் மாலை அணிவித்து மதிப்பளிக்க , திரு .சின்னதுரை சிவா அவர்கள் பாராட்டு கேடயம் வழங்கி கௌரவித்தார். இன் நிகழ்வில் பல உசன் மக்கள் கலந்து ஐயாவுடன்
கலந்துரையாடினார்கள் ,







மேலதிக படங்கள் எமது Facebook தளத்தில் :usanpeople  


Saturday, April 4, 2015

உசனில் நடைபெற்ற போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி வெற்றி

உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகத்தினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்த இறுதி போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணிஜினரும் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியினரும் மோதி கொண்டனர் விறு விறுப்பாக நடந்த இப் போட்டியிலே ஆவரங்கால் இந்து இளைஞர் அணியினர் 3:2 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர் இவர்களுக்கு உரிய வெற்றி கேடயம் மைதான திறப்பு விழாவன்று வழங்கப்படும்

உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகம்



Friday, April 3, 2015

உசனில் அனுமதியின்றி வேம்பு தறித்தவர் கைது

யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் சட்டவிரோதமாக வேப்பமரமொன்றை தறித்த இருவரை நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க என்.பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடத்துக்கு சென்ற சுற்றுச்சூழல் பொலிஸார் இருவரை கைதுசெய்;து விசாரணை செய்தபோது கிராம சேவையாளரிடம் அனுமதி பெறாமல் தறித்தமை தெரியவந்துள்ளது.


Thursday, April 2, 2015

உசனில் நடைபெறும் இறுதிசுற்று போட்டி

உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் 55 ம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்படுகின்ற கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி 02.04.2015 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு கழக மைதானத்தில் நடைபெறும். இப் போட்டியில் பல களங்களைக் கண்ட ஆவரங்கால் இந்து இளைஞர் விழையாட்டுக்கழக அணியும், உடுப்பிட்டி நவஜீவன் விழையாட்டுக் கழக அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தப் போட்டியைச் சிறந்த முறையில் ஒழுங்கமைத்து வரும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கு எமது வாழ்த்துக்கள்