அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, April 10, 2018

"தென்மராட்சி விழா"


இலங்கை, தென்மராட்சிப் பிரதேசத்தில் பின் தங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கான கல்வி முன்னேற்றத்திற்கு ஆதரவு கொடுப்பதை முக்கியமான நோக்கமாகக் கொண்டு கனடாவில் தென்மராட்சி அபிவிருத்தி சங்கம் புதிய நிர்வாக அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

தென்மராட்சி அபிவிருத்தி சங்கத்தைப் பற்றி அறியவும், உங்கள் மகத்தான பங்களிப்புகளைக் கொடுத்து ஆதரவு அளிக்கவும் உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. தென்மராட்சி அபிவிருத்தி சங்கம் வழங்கும் "தென்மராட்சி விழா" வில் கலந்து சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும்  அன்புடன் வேண்டுகின்றனர் சங்கத்தின் நிர்வாகசபையினர்.

2030 Midland Avenue, Toronto, M1S 5G5, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் CICS Community Centerல், சனிக்கிழமை, April 21, 2018 அன்று இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நுழைவுச் சீட்டுகளுக்கும், மேலதிக விபரங்களுக்கும் கீழ்வரும் சங்க நிர்வாக அங்கத்தினர்களை அணுகுங்கள்:

நெல் கேதார நாதன் 416-677-4707
ரமணன் ராமச்சந்திரன் 416-670-6467

"தென்மராட்சி விழா" பெருவெற்றிபெற உசன் மக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வேண்டுமென்று உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு வேண்டி நிற்கிறது.  சிவகுமார் நவரத்தினம், உமாபதி இராசரத்தினம் மற்றும் பாஸ்கரன் சுப்பிரமணியம் ஆகியோரோடு தொடர்பு கொண்டு நுழைவுச் சீட்டுகளை வாங்கிக்கொள்ளவும்.


Saturday, April 7, 2018

வாழ்த்துக்கள் வக்சலன்


உசன் துஷ்யந்தி - மிகுந்தனின் மகனும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனுமான மிகுந்தன் வக்சலன் ஜப்பான் பயணமாகிறார். கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (உ.த.) உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்று மாவட்ட, மாகாண நிலையில் முதலாம் இடத்தினையும், தேசிய ரீதியில் 9ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டவர் வக்சலன் இவர் சதுரங்கம், பூப்பந்து, கர்நாடக சங்கீதம், கணித ஒலிம்பியாட் போன்றவற்றில் திறமை காட்டிய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கல்வி அமைச்சு தெரிவு செய்து இளையோர் விஞ்ஞான நிகழ்ச்சித் திட்ட “சக்குறா விஞ்ஞானம்” என்னும் திட்டத்தினூடாக யப்பான் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனத்தின் அனுசரணையுடன் யப்பான் சென்று அங்குள்ள விஞ்ஞான தொழில்நுட்பவியல் விடயங்கள் பற்றியும் அறிவியல் விடயங்கள் பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை, கலை,கலாச்சார விடயங்கள் பற்றியும் அறிந்து கொள்ள செல்லவுள்ளார். இம்முறை இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், கஜகஸ்தான், மாலைதீவு, இந்தோனேசியா, ஆகிய நாடுகள் பங்குபற்றுவது சிறப்பான விடயமாகும். வடமாகாணத்தில் இருந்து செல்லும் ஒரே ஒரு மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வக்சலனை உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கமும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் வாழ்த்துகின்றன.


Wednesday, April 4, 2018

திருமதி.சரஸ்வதி சரவணமுத்து அவர்கள் காலமானார்

உசனை சேர்ந்த திருமதி.சரஸ்வதி சரவணமுத்து அவர்கள் ஏப்ரல் 4 ம் திகதி உசனில் காலமானார் .
அன்னார் காலம் சென்ற தில்லை சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்
யோகராசா (முரசுமோட்டை ), சிவசாரசா, சிவநிதி முருகேசு (உசன்), செல்வராசா (றட்ணா -லண்டன் ), ஜெயராசா (ரஞ்சன் மாவீரர் ), காலம் சென்ற கருணாநிதி , காலம்சென்ற ஜெயராசா, சிறிஸ்கந்தராஜா (மாவீரர், 2ம் லெப், ஜெரால்ட் ), சுவேந்திரராஜா (சுரேன்) ஆகியோரின் அன்புத்தாயுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று  கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்திக்கிறது.

தகவல் :
செல்வராசா - றட்ணா (மகன், London ): +442083089670
நிதி (மகள், இலங்கை): +94774535346
மாலினி (மருமகள், லண்டன்) : +447938189117




Monday, April 2, 2018

திரு சுவாமிநாதன் மருசலின்
(சவுந்தரம்- ஓய்வு பெற்ற பதிவு வைத்திய அதிகாரி)

உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், நெல்லியடியை வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Raleigh வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் மருசலின் அவர்கள் 29-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மிருசுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை மருசலின் கத்தோலிக்கம் தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் இசபெல்லா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானசௌந்தரி(நெல்லியடி, ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற லியோ அருள்ஞானறாஜ், லியோனி(ஐக்கிய அமெரிக்கா), டெனிசியா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா(மலர்), செபமணி(மணி), ரத்தினம் மற்றும் நீக்கிலஸ்(ராசா- பிரான்ஸ்), அமிர்தநாதன்(ரத்தினம்- மிருசுவில் ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரியதர்ஷன்(ஐக்கிய அமெரிக்கா), ராம்நாத்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சொரூபன், நிரூபன், பபீஷ்ணன், பரித்திவி, சிவதீபிகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
லியோனி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:    +13603501852
செல்லிடப்பேசி:    +19192395910

டெனிசியா — இலங்கை
செல்லிடப்பேசி:    +94772808086

அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருடனும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா இணைந்துகொள்கிறது.

(இவ்வறிவித்தல் www.kallarai.com என்ற இணையத்தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)


திருமதி கனகபூரணி கந்தையா

உசனைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கு, கொழும்பு பம்பலப்பிட்டி தொடர்மாடி, மயூரா பிளேஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகபூரணி கந்தையா அவர்கள் 31-03-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் உசனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அருளம்பலம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

பகீரதன், பகீரதி, தசரதன், ரவீரதன், மனோரதி, ஜெயரதி, ஞானரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற முத்துநாயகம், செல்லமுத்து மற்றும் யோகாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிகலா, கிருஸ்ணகுமார், அனுராதா, புஸ்பகலா, அருட்செல்வன், ரவீந்திரநாத், தேவேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவி, சங்கவி, பிரகாஷ், கணநாதன், சேயோநாதன், சாசினி, திவ்யந்தன், சர்மிளா, கபிலன், மயூரன், மதுரன், ஆரணி, ஆகாஷ், ஆர்திகா, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

கருணாகரன் பெரியதம்பி, மனோகரன் பெரியதம்பி ஆகியோரின் சிறிய தாயாரும்,

தேவகி, துவாரகி, ஜீவகி, ரூபகி ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.63,1/5,
மயூரா பிளேஸ்,
வெள்ளவத்தை,
கொழும்பு- 06.

தகவல்
ரவீரதன்(மகன்- பிரித்தானியா)

தொடர்புகளுக்கு

பகீரதன் கந்தையா — பிரான்ஸ்
தொலைபேசி:    +33139871076

பகீரதி கிருஷ்ணகுமார் — கனடா
தொலைபேசி:    +1416473447872

தசரதன் கந்தையா — கனடா
தொலைபேசி:    +14162997686

ரவீரதன் கந்தையா — பிரித்தானியா
தொலைபேசி:    +442085941240
செல்லிடப்பேசி:    +447709527237

மனோரதி அருட்செல்வன் — கனடா
தொலைபேசி:    +19055545664

ஜெயரதி ரபீந்திரநாத் — ஜெர்மனி
தொலைபேசி:    +4971589816825

ஞானரதி(கிரிஜா)தேவேந்திரன் — இலங்கை
தொலைபேசி:    +94112595613 

அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருடனும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா இணைந்துகொள்கிறது.

(இவ்வறிவித்தல் www.kallarai.com என்ற இணையத்தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)