அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, October 17, 2015

உசனில் சிறப்பு நாடாளுமன்ற அமர்வு


இலங்கை நாடாளுமன்றத்தின் அமர்வுகளின் மாதிரியை ,பாடசாலை மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டுவரும்"மாதிரி நாடாளுமன்ற அமர்வு " உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது , நாடாளுமன்ற அங்கத்தவர் தெரிவு வாக்கெடுப்பு ,வாக்குபதிவு , சத்தியப்பிரமாணம் , கட்சி விவாதம் ,என இலங்கை அரசியல் அமைப்புக்கு  ஏற்ப பல நாடாளுமன்ற செயல்பாடுகளை
இலகுவான முறையில் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்ட நிகழ்வாக அமைந்திருந்தது .
உசன் மாணவர்கள் இந்த நிகழ்வில் உற்சாகமாக கலந்து கொண்டனர் ,
பாடசாலை அதிபர் .திரு.சோதிலிங்கம் அவர்களின் முயற்சியில் இந்த நிகழ்வுக்குரிய அனுமதியை கல்வித்திணைக்களம்  உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்துக்கு வழங்கியிருந்தமை பாராட்டுக்குரியது ,







Dr.திருமதி,துஷியந்தி மிகுந்தன் (Professor/ Dean)அவர்களை வாழ்த்துகிறோம் .


உசனை சேர்ந்த திரு.திருமதி .பேரம்பலம் அவர்களின் புதல்வியும் ,உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவியுமான,Dr.திருமதி ,துஸ்யந்தி மிகுந்தன் அவர்கள், விவசாயபீட பேராசிரியராக (Professor)நியமனம்பெற்றதுடன் ,
யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட "பீடாதிபதியாக"( Dean Of Agriculture faculty) பொறுப்பேற்றுள்ளார்.  
திருமதி ,துஸ்யந்தி அவர்கள் ஏற்கனவே கலாநிதி (DR) பட்டம் பெற்றதுடன் தனது திறமை காரணமாக வெளிநாடுகள் பலவற்றுக்கு சென்று சிறப்பு பயிற்சிகளையும் பெற்றதுடன் , நீண்ட காலமாக பல்கலைகழகத்தில் பணியாற்றி வருகிறார் .
இவரின் பதவி உயர்வு கண்டு நாம் மகிழ்வு கொள்வதுடன் , கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் சார்பாக எமது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
உங்கள் வாழ்த்துக்களை நேரடியாக தெரிவிக்க ...
tmikunthan@yahoo.co.in
0094212222404
..




உசன் மாணவர்களின் "இன்னியம்"மரபு இசை குழு

தமிழரின் பாரம்பரிய மரபு கலையாகிய "இன்னியம்" என்னும் கலை காணாமல்  போகும்  நிலையில் , உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் .இந்த "இன்னியம்" மரபு கலை இசையை மாணவர்கள் மிக கட்சிதமாக வாசிப்பதை காணமுடிகிறது , யாழ் மாவட்டத்தில் ஒரு சில பாடசாலைகளில் மட்டுமே இந்த இசை குழுவை காணமுடிகிறது , எமது பாடசாலையும் மரபு கலை இசை கருவிகளை கையாண்டு தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது மகிழ்ச்சி தருகிறது.
இந்த இன்னியம் இசை குழுவை உருவாக்கிய அதிபர்,ஆசிரியர், வாத்திய கலைஞர்கள்,சீருடை அன்பளிப்பு செய்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
இங்கே "இன்னியம்" இசை குழு வரவேற்பு இசை முழங்குவதை காணமுடியும் .
 


Monday, October 12, 2015

உசன் முருகனின் "இராஜகோபுர " திருப்பணி ஆரம்பம்

உலகெங்கும் வாழும் உசன் கந்தசுவாமி அடியார்களே!
தெய்வீகம் சுரக்கும் யாழ்ப்பாண தென்மராட்சி பிரதேசத்தின் உசன் புண்ணிய பதியில் அருளாட்சி நல்கும் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தேவஸ்தானத்தின் பாலஸ்தாபன நிகழ்வுகள் நடைபெற்று இப்போது ஆலய புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயங்கர யுத்த சூழலிலும் உசன் கிராமத்துக்கும், மக்களுக்கும் பாதிப்புகளின்றிக் காப்பாற்றி, புலம் பெயர் தேசங்களிலும் உங்களைச் செல்வச் செழிப்போடு காத்தருளும் எம் பெருமான் முருகனுக்குத் தனிச் சிறப்பு மிகு இராஜகோபுரம் அமைக்கும் பணி நீண்ட காலமாகத் தடைப்பட்டு இருந்தது நீங்கள் யாவரும் அறிந்ததே. இப்பொழுது உசன் கிராமத்தில் தலை நிமிர்ந்து அருள்பாலிக்க எம்பெருமானின் அனுக்கிரகம் கைகூடி இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன், ஆலய புனருத்தாரண வேலைகளும், புது பொலிவூட்ட வர்ண பூச்சு வேலைகளும் நடைபெற்று வருகிறன. இந்தியாவிலிருந்து வரவளைக்கப்பட்ட தேர்ச்சி மிக்க ஆச்சாரியர்களால் திருப்பணி நடைபெற்று வருகின்றது.
உசன் முகனின் ஆசியுடன் வாழும் உங்களின் பங்களிப்பும் இந்த இராஜகோபுர பணியில் கலந்திட நீங்கள் விருப்பம் கொண்டால் தாராளாமாக இந்த திருப்பணியில் இணைந்து கொள்ள முடியும். உங்களின் கரங்களால் எந்த விதமான காணிக்கை செலுத்தினாலும் அது எம்பெருமானின் புனருத்தாரணப் பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

மிக வேகமாக நடைபெற்று வரும் திருப்பணி பூர்த்தியடைந்து எதிர்வரும் பங்குனி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற ஆசி கூடியுள்ளது. முருகனின் இராஜகோபுரம் உயர்வது போன்று உங்கள் வாழ்க்கையும் உயர எம்பெருமான் ஆசி உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறோம்.

மேலதிக விபரங்கள் தேவைப்படின் ஆலய தர்மகர்த்தாவைத் தொடர்புகொள்ளவும்.
திரு.கு.விமலதாஸ் -0094773474767
Commercial Bank A/C# 8600930636
Chvakachcheri Branch

கனடாவில் இருந்து இத் திருப்பணியில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ள முடியும். சேவைக் கட்டணமின்றி பணம் அனுப்ப ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு:
திருமதி சி.சாந்தினி -905-554-2014


Saturday, October 10, 2015

உசன் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்


எமது உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் சித்தி பெற்றிருப்பது மீண்டும் எமது பாடசாலை பழைய நிலைக்கு திரும்பும் என நம்பிக்கை கொள்ள வைக்கிறது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களான , திரு,திருமதி நடேசலிங்கம் ஷோபனா தம்பதிகளின் புதல்வன் செல்வன். கரிகரன் (170)  ,செல்வி.விநாசித்தம்பி பிருந்துவி(158) ஆகிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ,இவர்களுக்கு பக்க பலமாய் இருந்த வகுப்பாசிரியர் திருமதி,ஷீலா பிரபாகரன் ,பாடசாலை அதிபர் ,பெற்றோர்களுக்கு எமது வாழ்த்துக்கள்,
 பாடசாலைக்கு மாணவர்களும் குறிப்பாக பெற்றோரும் .உறுதுணையாக இருக்கும் பட்சத்தில் . உயர்தர பரீட்சை பெறுபெறுகளிலும் தன்னால் மாற்றத்தை கொண்டுவர முடியும் என பாடசாலை அதிபர் நம்பிக்கைவெளியிட்டார் .