அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, November 20, 2022

துயர் பகிர்வு - திருமதி ஜெகதீஸ்வரி (ஈஸ்வரி) கந்தசாமி



தோற்றம்: 20-07-1952            மறைவு: 20-11-2022

உசனைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடவாகவும் கொண்ட திருமதி ஜெகதீஸ்வரி கந்தசாமி (ஈஸ்வரி) அவர்கள் 20-11-2022 அன்று டென்மார்க்கில் இறை பதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை தவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம் சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலம் சென்ற சிதம்பரப்பிள்ளை கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

துவாரகன், துளசிகா (டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டெனிசா (டென்மார்க்) அவர்களின் அன்பு மாமியாரும்,

கரிசா, தினேஸ் (டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,

இராஜேஸ்வரி (ராணி, பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன் (கனடா), யோகநாதன் (யோகன், ஜெர்மனி), தயாபரன் (தயா, கனடா), உதயகுமரன் (உதயன், லண்டன்), யோகேஸ்வரி (யோகேஸ், பிரான்ஸ்), தயாழினி (தயாழி, கனடா), வரதகுமாரன் (வரதன், கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகரத்தினம் (பிரான்ஸ்), கமலாம்பிகை (கனடா), பீற்றா (ஜெர்மனி), புஷ்பராணி (கனடா), சத்தியா (லண்டன்), தனேந்திரன் (இலங்கை), உதயகுமார் (கனடா), உஷாம்பிகை (கனடா), தெய்வானைப்பிள்ளை (இலங்கை), குமாரசாமி (குமார், இலங்கை), கனகரத்தினம் (துரை, இலங்கை), இராசமலர் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வேலாயுதம் (இலங்கை), யோகேஸ்வரி (இலங்கை), சிவனேஸ்வரி (இலங்கை), ஞானவடிவேல் (இலங்கை) ஆகியோரின் சகலையும்,

யவன் (பிரான்ஸ்), யது (லண்டன்), யசோ (பிரான்ஸ்) ஆகியோரின் சிறியதாயாரும்,

வினுஜா (இலங்கை), ஜெனோசன் (இலங்கை), கிருஷாளினி (பிரான்ஸ்), சுலக்சன் (பிரான்ஸ்), கஜனன் (கனடா), கஜீதா (கனடா), ஸ்டெபனி (கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சிந்துஜன் (கனடா), சிந்துஜா (கனடா), சரணியா (கனடா), யவனா (கனடா), யசிதா (கனடா), யனனன் (கனடா), வர்சா (கனடா), ஆதி (கனடா), ஆர்த்தி (லண்டன்), மயூரா (லண்டன்), ஜான் (ஜெர்மனி), ஜானா (ஜெர்மனி), சுபா (பிரான்ஸ்), டிஷா (பிரான்ஸ்), தட்ஷயினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதிரியா, ஆத்விகா, ஆதிரா, யாட்ஸ் (பிரான்ஸ்), கோபினஷ் (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத் தரப்படும்

மேலதிக தொடர்புகளுக்கு
துவாரகன், துளசிகா (பிள்ளைகள், டென்மார்க்): +4548591717

சகோதரர்கள்:
ராணி (பிரான்ஸ்): +33605656325
குணம் (கனடா): +647-822-6158
தயா (கனடா): +647-889-2944
வரதன் (கனடா): +647-567-7959
உதயன் (லண்டன்): +447591189925

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்குக் கொள்கிறது.



Tuesday, November 1, 2022

பத்மராணி மகேந்திரராஜா (வவி)


உசனைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி பத்மராணி மகேந்திரராஜா (வவி) அவர்கள் 30.10.2022 அன்று இறைவனடி எய்தினார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி (குலசேகரம்), வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

மகேந்திரராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஈஸ்வரராஜ், பதஞ்சலிராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம் (குணம்),  வசந்தராணி (வசந்தா), புஸ்பராணி (பூவா), இராஜகுலசிங்கம் (பபா), மற்றும் இரத்தினசிங்கம் (ராசன், ஓய்வுநிலை தபால் திணைக்கள உத்தியோகத்தர், கொழும்பு), பூபாலசிங்கம் (ஆனந்தன், ஐக்கிய இராச்சியம்), தனபாலசிங்கம் (தனம், கிராமசேவை உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31.10.2022 அன்று மீசாலை, ஐயாகடைச் சந்திக்கு அண்மையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அன்னாரின் பூதவுடல் தகனகிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது.  அன்னாரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Tuesday, October 18, 2022

வல்லிபுரம் தனபாக்கியம்


உசனைச் சேர்ந்த வெற்றிவேலு பிரபானந்தன் அவர்களின் மாமியார் வல்லிபுரம் தனபாக்கியம் அவர்கள் 17-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் யாழ். தண்ணித்தாழ்வு, கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா, Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமணி அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளி்ன் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி வல்லிபுரம் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ராதாகிருஸ்ணன், இந்திராணி, இந்துமதி, ரவிச்சந்திரன், லிங்கதாசன் (தாஸ்), கிரிதரன், கமலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுமதி, பிரபானந்தன், ஞானசீலன், சுகந்தினி, செந்தாமரை, தேவகி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ராகுலன், சுனில், யுவீற்றன், ரவீற்றா, ஓவியா, கீர்த்திகன், கீர்த்திகா, லக்கீற்ரா, ஆர்யா, ஆதவன், அபிராமி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

சிந்தியா, பிரணவி, சப்றீனா, பிரவீன், பிரசான், அலீசா, அதீரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கணேஸ், கமலாம்பிகை, பொன்னுத்துரை மற்றும் மகேஸ்வரி, பாலாம்பிகை, தங்கரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இலட்சுமி, செல்லம்மா மற்றும் அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Thanapackiyam Vallipuram from Kadduvan Jaffna passed away peacefully surrounded by loved ones at her home in Markham, Ontario, Canada on October 17th. 2022.

She was a beloved wife of late Vallipuram Elaiyathamby (Retired Teacher).

Loving mother of Ratha, Indra, Inthu, Ravi, Thas, Kiri and Kamal and mother-in-law of Sumathy, Prabananthan, Gnanaseelan, Suganthy, Senthamarai and Thevaki.

She was a loving grandmother of Raahulan, Cynthiya, Pranavii, Sunil, Chabrina, Piraveen, Ravetta, Uvitan, Prashan, Gerthikan, Krithiga, Ovia, Luckytaa, Arya, Athyra, Alysha, Aathavan and Abirami.

Loving sister of late Ganes, late Kamalabikai, late Ponnuthurai and Makeshwari, Balambikai, Thankaratnam, Saraswathy.

Sister-in-law of late Thankamma, late Luxumi, late Sellammah and Annammah.This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, Oct. 24, 2022 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Tuesday, Oct. 25, 2022 11:30 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Tuesday, Oct. 25, 2022 1:00 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Tuesday, Oct. 25, 2022 3:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பிரபா - மருமகன்
Mobile : +16472217307

ராதா - மகன்
Mobile : +16136148163

இந்திரா - மகள்
Mobile : +14168847307

ஞானசீலன் - மருமகன்
Mobile : +14164519956

இந்து - மகள்
Mobile : +16472807912

ரவி - மகன்
Mobile : +14164536337

தாஸ் - மகன்
Mobile : +16478319181

கிரி - மகன்
Mobile : +16478830081

கமல் - மகன்
Mobile : +14168869075

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது.  அதேநேரம் அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் தனது அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.


Sunday, October 9, 2022

பொன்னம்மா நடராசா

யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா குடியிருப்பு, உசன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா பொன்னம்மா அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

யோகேந்திரன் (ஜேர்மனி), புகழ்வதி (இலங்கை), ரவீந்திரன் (நோர்வே), பாலேந்திரன் (பிரித்தானியா), புவனேந்திரன் (பிரான்ஸ்), எழிலரசி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராசா (இலங்கை), வாசுகி (நோர்வே), சோபனா (பிரித்தானியா), ரூபரஞ்சிதம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பார்த்தீபன், பாரதி, சஞ்ஜயன், சஞ்சிகா, சஞ்சுதா, அனிசியா, லீத்தா, சாருகன், சகானா, ஜெனிபன், அபிசாயினி, நிருசன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,

டிஷாந், றயன், கைரா, அஷ்வின், அஷ்விதா, சாருணி, தஷ்வின், தஷ்மிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று உசன், மிருசுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 12 மணியளவில் உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகேந்திரன் - மகன்
Mobile : +4915902638891
புகழ்வதி - மகள்
Mobile : +94762512536
ரவீந்திரன் - மகன்
Mobile : +4791545152
பாலேந்திரன் - மகன்
Mobile : +447454756460
புவனேந்திரன் - மகன்
Mobile : +33767795660
எழிலரசி - மகள்
Mobile : +94763797590
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.


Saturday, October 8, 2022

திருமதி குணமணி இளையதம்பி


சரசாலையைப் பிறப்பிடமாகவும், உசனை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி குணமணி இளையதம்பி அவர்கள் October 7, 2022, வெள்ளிக்கிழமையன்று உசனில் இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, குணரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோகரன் (சுவிஸ்), இராஜேஸ்வரன் (பிரான்ஸ்), திலகேஸ்வரன் (ஓய்வுபெற்ற வைத்தியசாலை ambulance சாரதி), கிருபாகரன் (பிரான்ஸ்), நகுலேஸ்வரன் (கனடா), கேதீஸ்வரன் (பிரான்ஸ்), கோமதி (ஆசிரியர், யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வறஞ்சினி (சுவிஸ்), ரஜனி (பிரான்ஸ்), நவநீதவல்லி (ஓய்வுபெற்ற வைத்தியசாலை மேற்பார்வையாளர்), நந்தினி (பிரான்ஸ்), சகிலா (கனடா), சசிகலா (பிரான்ஸ்), மதுராகரன் (ஆசிரியர், கிளி/ கிளாலி றோ. க. த. க. பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நடராசா (ஓய்வுபெற்ற ஆசிரியர்), சின்னம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரவணன், சாரங்கன், சாருதீபன் (சுவிஸ்), சங்கரன், கார்த்திகன், ஜனனி (பிரான்ஸ்), நிகிலா-மதியழகன் (இத்தாலி), ஆதித்தன்-சாருஜா (சுவிஸ்), ஆதவன், கதிரவன் (பிரான்ஸ்), விதுஷன், வர்சன், அபிஷன் (கனடா), கரிகரன், கஜகரன் (பிரான்ஸ்), திருவரங்கன், நர்த்தனன், கவிமாறன் (உசன்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவர்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் October 10, 2022, திங்கட்கிழமை அன்று மு. ப. 10 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று, தகனக்கிரியைக்காக பூதவுடல் ஈச்சங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
மகன் திலகேஸ்வரன் - +94 77 794 9075
மருமகன் மதுராகரன் - +94 77 536 3780
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.


"நாட்டிய தீக்க்ஷ"நடன நிகழ்வு


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "நாட்டிய தீக்க்ஷ" நிகழ்வு October 9, 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது.  35 Fairview Mall Dr., North York, ON, M2J 4S4, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Fairview Library Theatre இல் சரியாக மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். சிற்றுண்டிகள் மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரை வழங்கப்படும். 

இந்த நிகழ்வு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா, திருமதி சியாமா தயாளன் அவர்களின் தயாரிப்பு, நெறியாள்கையில் இடம்பெற உள்ளது.  

இளம் நாட்டியக்கலைஞர்களின் அதீத முயற்சியால் ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இது அமைகின்றது.

பிரபலமான பக்கவாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பு நிகழ்வை மேலும் சிறப்பிக்கும்.
பாட்டு: ஸ்ரீ மயூரன் தனஞ்செயன் 
மிருதங்கம்: ஸ்ரீ அஸ்வின் பாலச்சந்திரன்
வயலின்: ஸ்ரீ ராம்பிரகாஷ் சரவணபவன்
இவர்களுடன் நட்டுவாங்கம் ஸ்ரீமதி சியாமா தயாளன் 

ரஜனி மதீஸ்வரன் தம்பதிகளின் மருமகனும், பிரதிஷ்னியின் கணவருமான மயூரன் இந்த நிகழ்வுக்கான பாடல்களைப் பாடுவது உசன் மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  நாட்டிய தீக்க்ஷ குழு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகின்றது.



Bhaarati School of Indian Classical Dance proudly presents
NATYA DEEKSHA, on October 9th. 2022.Our little dancers have put in a tremendous amount of effort to present this event. The Natya Deeksha team invites you to enjoy this showcase of dance. Please come out and support our budding dancers. 
Date and Venue:
Sunday, October 9th,2022 at 5pm
(Refreshments are from 4pm to 5pm)
At Fairview Library Theatre, 35 Fairview Mall Dr., North York, ON, M2J 4S4
The talented orchestra accompanying this show:
Vocal: Shri. Myuran Thananjeyan
Mrudangam: Shri. Ashwinn Balachandran 
Violin: Shri Ramprakash Saravanabhavan 
Nattuwangam: Smt. ShiyamaThayaalan

United People Association of Usan in Canada wishes the young dancers the very best!  Also congratulates Shiyama for her continued effort promoting our culture.


Saturday, September 24, 2022

சரவணை செல்லத்துரை


சரவணை செல்லத்துரை
முன்னாள் மேற்பார்வையாளர், சீமெந்துக் கூட்டுத்தாபனம் (புத்தளம், காங்கேசன்துறை)

பிறப்பு: 23-09-1946 இறப்பு: 23-09-2022
யாழ், மிருசுவில், உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை செல்லத்துரை அவர்கள் 23-09-2022, வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணை முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
சாந்தலக்குமியின் அன்புமிகு கணவரும்,
ஜசிதலா (அவுஸ்திரேலியா), ஜதிகேசன் (இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜாராம் (பொறியாளர், அவுஸ்திரேலியா), சரண்ஜா (இலங்கை வங்கி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுமிதா (அவுஸ்திரேலியா), ஹரிஸ்ராம் (அவுஸ்திரேலியா), லிசாஜினன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, பராசக்தி (கனடா), பத்மாவதி, செல்வராசா, பூபதி, ஜெயராசா (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, காலஞ்சென்ற நல்லதம்பி, சின்னராசா, புகழ்வதி, அருட்பிரகாசம், காலஞ்சென்ற மல்லிகாதேவி, சிறீகாந்தன் (இத்தாலி), நந்தலக்குமி, தனலக்குமி, பத்மகாந்தன் (கனடா), ஜீவகாந்தன், முருகானந்தன் (பொறியாளர், அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-09-2022, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகனத்துக்காக ஈச்சங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்.
உசன், மிருசுவில்
தொடர்புகளுக்கு
சாந்தலக்குமி (மனைவி), ஜதிகேசன் (மகன்), ஜசீதலா (மகள்) - +94 77 610 8420
பராசக்தி (கனடா) - +1 647 980 3484
பத்மாவதி - +94 77 600 6416
செல்வராசா - +94 76 801 8399
பூபதி - +94 76 613 7104
ஜெயராசா (டென்மார்க்) - +45 52 50 31 47
ஜீவகாந்தன் - +94 76 523 7627
நந்தலக்குமி - +94 76 258 8155
தனலக்குமி - +94 77 978 9527
சிறீகாந்தன் (இத்தாலி) - +393341588780
பத்மகாந்தன் (கனடா) - +1 647 219 2027
முருகானந்தன் (அவுஸ்திரேலியா) - +61 434 904 127

ராஜாராம் (மருமகன்) - +61 412 350 201

சரவணை செல்லத்துரை அவர்களின் இறுதி நிகழ்வுகளை 09-25-2022, ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கை நேரப்படி காலை 7:30 மணி முதல் https://www.youtube.com/watch?v=wu2LOjYh1YQ என்ற இணைப்பில் நேரலையாகப் பார்க்கலாம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Monday, September 12, 2022

புதிய நிர்வாக சபை



அனைவருக்கும் வணக்கம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் கோடைகால ஒன்று கூடலும், புதிய நிர்வாக சபைத் தெரிவும் July 10, 2022, ஞாயிறுக்கிழமை அன்று Neilson Park இல் இடம்பெற்றது.

நிர்வாக சபை உறுப்பினர்களுக்கான பட்டியல் ஒன்று கோரப்பட்டதனடிப்படையில் ஒரு பட்டியல் சமர்பிக்கப்பட்டது. அதில் உள்ளடக்கப்பட்டிருந்த பெயர்கள்:
1  திரு. பாஸ்கரன் சுப்பிரமணியம்
2. திரு. உமாபதி இராஜரட்ணம்
3. திரு. பத்மகாந்தன் சரவணமுத்து
4. திரு. சிவகுமார் நவரட்ணம்
5. திரு. நகுலன் கனகசபை
6. திரு. அச்சுதன் கனகசுந்தரம்
7. திரு. கருணாகரன் சின்னத்துரை
8. திரு. தயாபரன் சிதம்பரப்பிள்ளை
9. திருமதி சாந்தினி சிவானந்தன் 
10. திருமதி செந்தில்மதி சனார்தனா.
11. திருமதி ஷெமிலா பிரகலாதன்

புதிய நிர்வாக சபையின் பதவிவழி உறுப்பினர்களின் தெரிவு 07.17.2022 அன்று நடைபெற்ற முதலாவது நிர்வாகசபைக் கூட்டத்தில் இடம்பெற்றது. அதன்படி பதவிவழி உறுப்பினர்களாகப் பின்வருவோர் ஏகமானதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்: 
தலைவர்
திரு. பத்மகாந்தன் சரவணமுத்து
உப தலைவர்
திரு. தயாபரன் சிதம்பரப்பிள்ளை
செயலாளர்
திருமதி ஷெமிலா பிரகலாதன்
உப செயலாளர் 
திரு. பாஸ்கரன் சுப்பிரமணியம்
பொருளாளர்
திருமதி செந்தில்மதி சனார்தனா

நிர்வாகசபை உறுப்பினர்கள்
திருமதி சாந்தினி சிவானந்தன்
திரு. சிவகுமார் நவரட்ணம்
திரு. நகுலன் கனகசபை
திரு. அச்சுதன் கனகசுந்தரம்
திரு. கருணாகரன் சின்னத்துரை

திரு. உமாபதி பொதுக்கூட்டத்துக்குச் சமூகமளிக்காதபோதும் அவரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தது.  திரு. உமாபதி இராஜரட்ணம் அவர்கள் தனது சுய விருப்பம் காரணமாக நிர்வாகசபையில் இணைய விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

எனவே அவரின் இடத்துக்கு திருமதி பிரகாசினி ஞானவாசகன் அவர்களை ஒன்றியத்தின் புதிய நிர்வாகசபை உறுப்பினராக இணைத்துக்கொள்ள வழமையான நடைமுறையின் பிரகாரம் பொதுச் சபையால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகக் சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஏகமானதாகத் தீர்மானித்துள்ளனர். இதன்படி திருமதி பிரகாசினி ஞானவாசகன் அவர்கள் நிர்வாகசபை உறுப்பினராக மனப்பூர்வமாக இணைந்துகொள்கிறார்.

பொதுச் சபை உறுப்பினர்களதும் மற்றும் உசன் மக்களதும் ஒத்துழைப்புடன் புதிய நிர்வாகசபை உத்வேகத்துடன் சேவையாற்ற முனைகின்றது.

மேற்படி விபரங்கள் குறித்து உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி.

நிர்வாக சபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Saturday, July 30, 2022

அன்பார்ந்த உறவுகளே!


கடந்த 2022.07.10 அன்று Neilson park இல் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடாவின் கோடை கால ஒன்றுகூடலும், நிர்வாகசபைத் தெரிவும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 

அன்றைய தினம் வழமை போல் Roast பாண், சம்பல், வடை, தேநீர் போன்ற காலை உணவுடன் ஒன்றுகூடல் சிறப்பாக ஆரம்பமானது.

காலையிலேயே நிர்வாக சபை உறுப்பினர்கள் வந்திருந்து தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். முற்பகல் 11 மணியளவில் உசன் மக்கள் வந்து சேர ஆரம்பித்தார்கள்.  பிற்பகல் 1 மணியளவிலேயே பொதுக்கூட்டத்தை ஆரம்பிக்குமளவுக்கு மக்கள் வந்துசேர்ந்தார்கள்.

பொதுக்கூட்டம் பகல் 1 மணியளவில் ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக Norway ல் இருந்து வந்திருந்த திரு. திருமதி சபேசன் நல்லதம்பி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.  சிறப்பு விருந்தினராக இந்த வருட நிகழ்வின் பிரதம அனுசரணையாளரான Real Estate Agent & Mortgage Agent, திரு. திருமதி கேதீஸ்வரன் அவர்கள் கலந்து மகிழ்வித்தார்கள்.  இவர்கள் மங்கல விளக்கையேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

வரவேற்புரை மற்றும் தலைமையுரையைத் தொடர்ந்து, சென்ற ஆண்டு கூட்ட அறிக்கை மற்றும் கணக்கறிக்கை ஆகியன சமர்ப்பிக்கப்பட்டு சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மிகவும் குறைவான மக்களே ஒன்றியத்தில் அங்கத்தவர்களாக இருப்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டிய தலைவர் மேலும் அங்கத்தவர்களைச் சேர்த்துத் தருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.  அத்தோடு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கடந்த 6 வருடங்களில் கிட்டத்தட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான சேவைகளைச் செய்து முடித்துள்ளதாக விபரங்களைத் தெரிவித்தார்.  அத்தோடு உசன் அபிவிருத்திக்காக உலகளாவிய உசன் கட்டமைப்புக்கு இதுவரை சேர்க்கப்பட்ட 30 இலட்சம் ரூபாவின் பெரும்பகுதி உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவாலேயே சேர்க்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து தற்போதைய நிர்வாகசபையின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதால் புதிய நிர்வாகசபைத் தெரிவு இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து மதிய உணவாக Barbecue, குழைசாதம், pasta வுடன் இம்முறை விசேடமாக கீரைப்பிட்டும், அப்பமும் பரிமாறப்பட்டது. அனைத்து உணவு வகைகளையும் அனைவரும் இரசித்து உண்டார்கள் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து விளையாட்டுப் போட்டியும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

மாலையில் கோப்பியும் cake ம் பரிமாறப்பட்டது. இறுதியில் எமது விசேட இரவு உணவான கொத்துரொட்டி அனவருக்கும் வழங்கப்பட்டது. 

இவ்வருடம் இதுவரை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவில் புதிதாக 5 உறுப்பினர்கள் மாதாந்த அங்கத்துவம் மூலம் இணைந்துள்ளார்கள். மேலும் மூவர் வருடாந்த சந்தாவான $120 ஐ செலுத்தித் தங்கள் அங்கத்துவத்தைப் புதுப்பித்துள்ளார்கள். புதிய அங்கத்தவர்களை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா இன்முகத்தோடு வரவேற்கிறது.

கணிசமான அளவு இளையவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது நிகழ்வுக்கு மேலும் சிறப்பூட்டியது.  அத்தோடு விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடாவின் பிரதிநிகளும் கலந்துகொண்டு மதிப்பளித்தார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பலர் அனுசரணையும், அன்பளிப்பும் வழங்கியிருந்தார்கள்.
திரு. கேதீஸ்வரன் இராசையா (Trophies)
திருமதி சாந்தினி சிவானந்தன் (Lottery prize)
திருமதி ரஜனி மதீஸ்வரன் (Lottery prize) 
திரு. அந்தனி பொன்ராஜா (Mortgage Agent)
திரு. உதயகுமார் நடராஜா (தலைவர், விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா)
திரு. பிரதீபன் சண்முகநாதன் (பொருளாளர், விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா)
திரு. ஜெயக்குமார் சோமசுந்தரம் (உப செயலாளர், விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா) 
திரு. ஜீவராஜா பொன்னம்பலம் (ஜீவன், Niru Brand)
திரு. கருணானந்தன் வினாசித்தம்பி (JBN Auto) 
திரு. திருகரன் சின்னத்துரை

ஆதரவு நல்கிய அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஒளிப்படங்களைப் பார்ப்பதற்கு usanpeople என்ற FaceBook தளத்திற்குச் செல்லவும்.


Thursday, July 14, 2022

அரங்கேற்றம்!



பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரதகலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி துர்க்கா சிவகுமார் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் ஞாயிற்றுக்கிழமை, July 17, 2022 அன்று 10268 Yonge Street, Richmond Hill, L4C 3B7, ON, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Richmond Hill Center for the Performing Arts மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

மாலை 4 மணிக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படும்.  அரங்கேற்றம் சரியாக மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும்.  

பெருந்தொற்றுக்குப் பின்னதான முதலாவது அரங்க நிகழ்வாக இது அமையவிருக்கிறது.  இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சியாமா தயாளன் அவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.

துர்கா சிவகுமாருக்கு வாழ்த்துகள் கூறும் அதேவேளை இந்த அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்தி நிற்கிறது.





Thursday, July 7, 2022

துயர் பகிர்வு – அமரர் தங்கம்மா நடராஜபிள்ளை


யாழ் உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா நடராஜபிள்ளை அவர்கள் 2022.07.05 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அருளம்பலம் நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நடராஜபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சின்னத்துரை, காலஞ்சென்ற சதாசிவம், சோதீஸ்வரி, சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜனார்த்தனன் (ANJ BROS PVT LTD), ஜதுர்ஸன் (உள்ளுராட்சி திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவதீபாவின் (பதிவாளர் நாயகம் திணைக்களம்) அன்பு மாமியாரும், 

ஆகில்யனின் அப்பம்மாவும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கடமைகள் 2022.07.05 உசனில் நடைபெற்று மதியம் 12.30 மணியளவில் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் - குடும்பத்தினர். 

அன்னாரின் பிரிவால் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கவலைகொள்வதுடன், அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்துக்கொள்வதுடன், பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.


Saturday, June 18, 2022

துயர் பகிர்வு - திருமதி யோகாம்பாள் கணேஷன்


யாழ். உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பம்பலப்பிட்டி தொடர்மாடி, Scarborough கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பாள் கணேஷன் அவர்கள் 16-06-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கணேஷன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான முத்து நாயகம் காசிப்பிள்ளை, செல்லமுத்து பெரியதம்பி, கனகபூரணி கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவகி (Perth, அவுஸ்திரேலியா), துவாரகி (Devon, பிரித்தானியா), ஜீவகி (Scarborough, Canada), றூபகி (Markham, Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சூரியகுமாரன், ராஜகுமார், ரட்ணகுமார், விக்னராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கருணாகரன், மனோகரன், பகீரதன், பகீரதி, தசரதன், ரவிரதன், மனோரதி, ஜெயரதி, ஞானரதி, தயானந்தன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

கணேஷ்குமார், ஹம்ஷா, ரோசாந்தி, தரன், ரமண், மதுரா, ஐங்கரன், ரிஷிகரன், நிவேதா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

Ezra James, Marie Rosa, Genevieve Zara ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, June 20, 2022 5:30 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Tuesday, June 21, 2022 1:00 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Tuesday, June 21, 2022 4:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
தேவகி - மகள்
Mobile : +61438980271
துவாரகி - மகள்
Mobile : +447396523628
ஜீவகி - மகள்
Mobile : +16472367334
றூபகி - மகள்
Mobile : +14372413005

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்திக்கிறது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுதாபங்களைத் தெரிவிக்கிறது.


Friday, June 10, 2022

ஊரோடு ஒன்றிணைவோம்!

அன்பான உசன் மக்களே!

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடாவின் தற்போதைய நிர்வாகசபையின் ஆயுட்காலம் முடிவுக்கு வருகிறது. அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கான புதிய நிர்வாகசபையைத் தெரிவுசெய்யும் நேரம் வந்துள்ளது. July மாதம் 10 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை, 1575 Neilson Rd, Scarborough ON கனடா என்ற முகவரியில் அமைந்துள்ள Neilson Park ல் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இந்தப் புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்படவுள்ளது.

கனடாவாழ் உசன் மக்களின் மகிழ்ச்சிக்கும், உசன் மண்ணின் வளர்ச்சிக்கும் உழைக்கக்கூடிய, சமூக சேவையில் ஆர்வமுள்ள அனைவரையும் புதிய நிர்வாகசபையில் சேர்ந்து நிர்வாகசபைக்குப் புத்துணர்ச்சி அளிக்க வருமாறு தற்போதைய நிர்வாகசபை அன்போடு வேண்டிநிற்கிறது.

நிர்வாகசபைக்கு 11 உறுப்பினர்கள் வேண்டும்.  எனவே 11 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகப் பெயர்ப் பட்டியலைத் தயார்செய்து பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம்.  ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களின் பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டால் உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிக வாக்குகள் பெறும் குழு தெரிவு செய்யப்படும்.

நிர்வாகசபையில் உள்வாங்கப்படுவதற்கும், வாக்களிப்பதற்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவில் அங்கத்தவராக இருக்கவேண்டும்.  38 அங்கத்தவர்களே தற்போது உள்ளனர். எனவே அங்கத்தவரல்லாதோர் மாதம் $10.00 செலுத்தும் அங்கத்துவ படிவத்தை உடனடியாகப் பூர்த்திசெய்து உங்கள் வங்கிக் கணக்கின் Void Cheque ஓடு சமர்ப்பிக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.  மாதாந்தம் $10.00 உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும்.  அங்கத்துவ படிவம் தேவைப்படுவோர் செயலாளர் செமிலா பிரகலாதனுடன் 647-289-5998 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்.

பொதுக்கூட்டம் பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகும்.

பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் இடம்பெறும்.  உறவுகளோடும், நண்பர்களோடும், ஊரோடும் ஒன்றாகக் கூடி மகிழ்ந்து வருடங்கள் இரண்டு ஓடிவிட்டன. இந்தப் பிரிவை முடிவுக்குக் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது. ஒன்று சேர்ந்து மகிழ்ந்திருக்க காலம் கைகூடி வந்துள்ளது. வாருங்கள் கூடி மகிழ்ந்திருந்து குதூகலிப்போம்!  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடாவின் கோடைகால ஒன்றுகூடலில் சங்கமிப்போம்!

அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டி இடம்பெறவுள்ளது.  விளையாட்டுப்போட்டியில் பங்கெடுத்து உங்கள் திறமையை வெளிப்படுத்துவதோடு பரிசுகளையும் வெல்லுங்கள்.

ஆண்கள், பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் கலந்துகொண்டு மகிழ்ந்திருங்கள்.

குழைசாதம், கொத்துரொட்டி, BBQ, hamburger, hotdog என்று பலவகை உணவுகளையும் உண்டு மகிழ உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.  காலை 10 மணிக்கு வருவோருக்கு விசேட உணவும், தேநீரும் வழங்கப்படும்.

அங்கத்தவர்கள் அனைவரும் மேலதிக கட்டணமில்லாமல் இந்நிகழ்வில் கலந்துகொள்ளமுடியும்.  அங்கத்தவரல்லாதோர் 4 பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு குறைந்தது $60.00 செலுத்தி மகிழ்ந்திருக்க முடியும்.  பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால் விரும்பியோர் மேலதிக அன்பளிப்பு செய்யமுடியும் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்புவோர் தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரனுடன் 647-448-7434 என்ற தொலைபேசி இலக்கத்தில்தொடர்புகொள்ளவும்.

வாருங்கள், அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று மீண்டும் பறைசாற்றுவோம்!

நன்றி.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா 


Sunday, May 15, 2022

பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகசபைத் தெரிவும், கோடை கால ஒன்றுகூடலும்


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தப் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகசபைத் தெரிவும், கோடை கால ஒன்றுகூடலும் இந்த வருடம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
திகதி: ஞாயிற்றுக்கிழமை, July 10, 2022
நேரம்: காலை 10 மணி முதல்
இடம்: Neilson Park, Scarborough, ON, Canada.
அண்மைய சந்தி: Neilson Road and Finch Avenue
இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு புதிய நிர்வாகசபை ஒன்றைத் தெரிவு செய்யும் உங்கள் கடமையைச் செய்யுமாறு அன்போடு அழைக்கிறோம். பிற்பகல் ஒரு மணியளவில் பொதுக் கூட்டம் ஆரம்பமாகும். பொதுக் கூட்டத்தின் ஒரு பகுதியாகப் புதிய நிர்வாகசபைத் தெரிவு இடம்பெறும்.
அத்தோடு அன்றைய தினம் நடைபெறும் கோடைகால ஒன்றுகூடலிலும் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறும் வேண்டுகிறோம். ஒன்றுகூடல் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Monday, April 4, 2022

உலகளாவிய உசன் கட்டமைப்பு
நிதி சேகரிப்பு


அன்பான உசன் மக்களே!

உலகளாவிய உசன் கட்டமைப்பின் (Usan Global Forum) இணையவழி கலந்துரையாடல் April 3, 2022 அன்று உசன் உறவுகளுடன் இடம்பெற்றது.  

உலகளாவிய உசன் கட்டமைப்பு உருவானதன் நோக்கம், அதன் செயற்பாடு எப்படி அமையும் என்பதை மீள தெளிவுபடுத்துவது, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி உசன் கட்டுவரம்பு வீதி புனரமைப்புக்கான நிதி சேர்க்கையுமே இன்றய கலந்துரையாடலின் பிரதான கருப்பொருளாக இருந்தன.

இதுதொடர்பாக கடந்தகாலங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் "உசனுக்கு ஒரு இலட்சம்" எனும் கருப்பொருளில் புலம்பெயர் வாழ் உசன் மக்கள் ஒவ்வொருவரிடமும் பொதுத் தேவைகளுக்காக நிதி சேகரிப்பது குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இன்றைய கலந்துரையாடலில் பொது நிதி சேகரிப்பதோடு, கட்டுவரம்பு புனரமைப்புக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான நிதியைச் சேகரிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.  

அதனடிப்படையில் கட்டுவரம்பு புனரமைப்புக்கு எதிர்பார்க்கப்படும் உத்தேசத் தொகையான 4 மில்லியன் ரூபாவை உடனடியாக உசன் மக்களிடம் கோருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வாழ்வாதார உதவியாக மூன்று குடும்பங்களுக்கு மலசலகூட வசதி செய்து தரும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுவரம்பு வீதி புனரமைப்பு முடிந்தகையோடு அடுத்ததாக இதைச் செயல்படுத்த முனைப்புக் காட்டுவோம்.  அதுவரையில் அதற்கான முழுமையான தரவுகளையும், தகவல்களையும் சேகரித்து அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்போம்.

உலகளாவிய உசன் கட்டமைப்பின் நிதி உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவினால் கையாளப்படவேண்டுமென்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.  விரைவில் இதற்கான வங்கிக் கணக்கு விபரம் பொதுத் தளங்களில் வெளியிடப்படும். அந்த நேரத்தில் உங்கள பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

மனங்களாலும், வளங்களாலும் புலமும், நிலமும் ஒருமித்து வெற்றிகொள்வோம்!

நன்றி.
ஜெயதேவன் அம்பலவாணர்
பேச்சாளர்
உலகளாவிய உசன் கட்டமைப்பு


Wednesday, March 23, 2022

சுப்பிரமணியம் சுபானந்


உசனைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுபானந் அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகள், பொன்னம்பலம் (ஓவசியர்), புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சுப்பிரமணியம் - நந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

தக்‌ஷாயினி, தக்‌ஷானந், சுபாஷினி, கஜானந் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தயாநிதி - காலஞ்சென்ற பாலகுமாரன், செந்தா - சனா, சிவபாதம் - பூங்கோதை, காலஞ்சென்ற செல்வேந்திரன் - சரோஜினிதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

தேவயோகினி, காலஞ்சென்ற சிவலோகநாயகி, பரிமளாகாந்தி, சுகிதா ஆகியோரின் அன்பு மருமகனும்,

அக்சியா, அனன்யா, அம்ரிதா, பிரனிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Dr.பாலினி, தயன், ஷாமினி, நிக்ஷன், நிஷானி, சுஜன், அரவிந், கௌதமி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

T.ஜெகன், Dr.நிர்மலன், தன்யா, பகீரதன், ஜீவகன், அகிலா, P. ஜெகன், ஆர்த்திகா, கௌரீசன், பிரதீசன் , கோகுலன், ஆரணி, ஜஸ்மின் (Jasmine), வயற் (Wyatt), ரியானா (Tiarna) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 27 Mar 2022 2:00 PM - 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Monday, 28 Mar 2022 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Monday, 28 Mar 2022 12:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

தக்‌ஷன் - சகோதரன்
Mobile : +16475725523
சுபாஷி - சகோதரி
Mobile : +16477799192
தக்‌ஷா - சகோதரி
Mobile : +16478323481
செந்தா - சித்தி
Mobile : +16478542191
Phone : +14164213326
Dr.பாலினி - உடன்பிறவாச் சகோதரி
Mobile : +94773821563
தயன் - உடன் பிறவாச் சகோதரர்
Mobile : +447958294185

(இவறிவித்தல் ripbook.com என்னும் இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)


Tuesday, March 22, 2022

துயர் பகிர்வு
சுப்பிரமணியம் சுபானந்த் (சுபன்)



சுப்பிரமணியம் - நந்தினி தம்பதிகளின் புதல்வன் சுபானந்த் இயற்கையெய்திய துயரச் செய்தியை உசன் மக்களோடும், ஏனையவர்களோடும் பகிர்ந்துகொள்கிறோம்.  வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடரவேண்டிய இளம் வயதில் இவர் எம்மிடமிருந்து பிரிக்கக்கப்பட்டமை அதிக துயரமளிக்கும் ஒரு நிகழ்வாகும்.

இவர் தக்சாயினி, தக்சானந்த், சுபாஷினி, கஜானந்த் ஆகியோரின் அன்னபுச் சகோதரரும், தயாநிதி, செந்தில்மதி ஆகியோரின் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான ஓவசியர் பொன்னம்பலம் புனிதவதி தம்பதிகளின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஆன்மா இறைவன் திருப் பாதங்களைச் சென்றடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் கந்தனை வேண்டிநிற்கிறது.

எவருமே எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்ற இவரின் மறைவால் தாங்கொணாத் துயரம் கொண்டிருக்கும் இவரின் பெற்றோர், சகோதர்கள், மற்றும் குடும்ப உறவினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஓம் சாந்தி!


Monday, March 14, 2022

உலகளாவிய உசன் கட்டமைப்பு
Usan Global Forum
கருத்துப் பரிமாற்றம்

அன்பார்ந்த உசன் மக்களே!

உலகளாவிய உசன் கட்டமைப்பு தொடர்பில் 2021.11.06 இடம்பெற்ற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் இணையவிழாவில் கருத்துருவாக்கம் தோற்றம்பெற்றது. அதற்கு அமைவாக கட்டமைப்புத் தொடர்பான சில பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பெற்று உலகளாவிய உசன் கட்டமைப்புத் தொடர்பில் உருவாக்கப்பெற்ற யாப்பு மற்றும் அமைப்பின் செயற்பாட்டு வழிகாட்டி ஆவணங்களுக்கு அமைய அனைத்து அமைப்புகளினதும் ஏகோபித்த ஆதரவுடன் 2022.01.30 அன்று வரலாற்று நிகழ்வாக உலகளாவிய உசன் கட்டமைப்பு - Usan Global Forum - உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

அமைப்பின் செயற்திட்டங்கள் தொடர்பில் 2022.02.26 இடம்பெற்ற முதலாவது மாதாந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அமைவாக உசன் கிராமத்தின் நுழைவுப் பிரதேசம் வனப்பாக்குதல் செயற்திட்டம் அனைவராலும் முன்னிலைப்படுத்தப்பெற்று அமுலாக்கலுக்காகத் தெரிவுசெய்யப்பெற்று சில அடிகள் முன்னோக்கி நகர்ந்துள்ளது.

அதற்கு அமைவாகச் செயற்திட்டம் தொடர்பில் அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக வரைபடம், முப்பரிமாண படங்கள், உள்ளீட்டு பொருட்களின் தொழில்நுட்ப விபரணக்குறிப்பு நுணுக்கங்கள், மற்றும் உத்தேச மதிப்பீடு என்பன தயாரிக்கப்பெற்றது. இச் செயற்திட்டம் தொடர்பில் உரிய திணைக்களங்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டிய நடைமுறைகளுக்கு அமைவாக வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கும், அத் திணைக்களத்தின் மேல் அலுவலகமாகிய உள்ளுராட்சி அமைச்சிற்கும் உரிய வேண்டுதல் கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

எமது இந்த விண்ணப்பம் தொடர்பில் உரிய கரிசனை எடுத்த உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர்  2022.03.02 அன்று எமது விண்ணப்பத்தை ஏற்று வேலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தார்.

இம் முன்னேற்றங்கள் தொடர்பில் உலகளாவிய உசன் கட்டமைப்பின் கடந்த மாதாந்தக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பெற்று நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இச் செயற்திட்டத்தின் அமுலாக்கல் மற்றும் முடிவுறுத்துதல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக வெளிப்படைத் தன்மையைக் கருத்தில் கொண்டு உலகளாவிய உசன் கட்டமைப்பு - Usan Global Forum - உசன் மக்களுடன் கருத்துப் பரிமாற்றம் ஒன்றை நிகழ்த்த விரும்புகின்றது. Zoom செயலி வழியாக நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தலைப்பு: உலகளாவிய உசன் கட்டமைப்பு (Usan Global Forum) - கருத்துப் பரிமாற்றம்
தேதி: சனிக்கிழமை, March 26, 2022
நேரம்:
08:00 a.m. - Canada & USA (East coast)
12 noon UK
01:00 p.m. Europe, Scandinavia
05:30 p.m. Sri Lanka
11:00 p.m. Sydney, Australia

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81424359897?pwd=Rk9nTzgwcFhFODR6ZW9GWWkrMTZRdz09

Meeting ID: 814 2435 9897
Passcode: 123456

மனங்களாலும், வளங்களாலும் புலமும், நிலமும் ஒருமித்து வெற்றிகொள்வோம்!

நன்றி.

ஜெயதேவன் அம்பலவாணர்
பேச்சாளர்
உலகளாவிய உசன் கட்டமைப்பு


Monday, February 14, 2022

திருக்குறள் ஆய்வரங்கம்- 2022


வள்ளுவன் வழி உலக இணையப்பள்ளி- கனடா
வழங்கும் விசேட திருக்குறள் ஆய்வரங்கம்- 2022.!!!
இந்த இணைய நிகழ்ச்சியில் பிரபல பேச்சாளர்கள் மிக அற்புதமான தலைப்புகளில் திருக்குறள் ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளார்கள்.!!!
அன்பான அன்னைத்தமிழ் உறவுகளே..! தெய்வப்புலவர் திருவள்ளுவரின் அறநெறிச் சிந்தனைகளைக் கேட்டு மகிழ்ந்து பயன்பெற வள்ளுவன் வழி உலக இணையப்பள்ளி உங்களை அழைக்கிறது..!!!
பெரியவர்கள் இணைந்துகொள்ளும் அதே நேரம் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்துகொண்டு பேச்சாளர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். எந்த நாட்டிலிருந்தும் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.
இப்பதிவினை உங்கள் நண்பர்கள், உறவினர்களோடும் பகிர்ந்துகொண்டால் எல்லோருமே பயன்பெற்று மகிழலாம்.!
நீங்களும் எந்தக் கட்டணமுமின்றி உங்கள் குழந்தைகளைத் திருக்குறள் கற்பதற்கு வள்ளுவன் வழி உலக இணையப்பள்ளியில் இணைத்துக்கொள்ளலாம்.
மிக்க நன்றி.!
வாழ்க தமிழ்.!!
அன்புடன்,
திருமதி. ஜோதி ஜெயக்குமார்.
வள்ளுவன் வழி உலக இணையப்பள்ளி
647-781-7904
வள்ளுவன் வழி உலக இணையப்பள்ளி வழங்கும் திருக்குறள் ஆய்வரங்கம் - 2022 சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல்வாழ்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த நிகழ்வில் கலந்து பயன்பெற அனைவரையும் அன்போடு அழைக்கிறது.