அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, March 30, 2020

திரு.பொன்னையா நல்லதம்பி அவர்கள் கனடாவில் காலமானார்

உசனை பிறப்பிடமாகவும் வாழ்விடமாககொண்டவரும் ,தற்போது  கனடாவில் வாழ்ந்து வந்தவருமான
முன்னாள் கொழும்பு அச்சக பணியாளருமான  திரு.பொன்னையா நல்லதம்பி அவர்கள்.30 /03/2020 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்ற  திரு,திருமதி,பொன்னையா தம்பதிகளின் அன்பு மகனும் பராசக்தி அவர்களின் அன்புக்கணவரும் , காலம் சென்ற நல்லதங்கம் அவர்களின் சகோதரனும் ,
சிற்சபேசன்(நோர்வே ), சிற்சொரூபன் (சுவிஸ்), ஷகிலா (கனடா) முன்னாள் ஆசிரியை உசன் இராமநாதன் மகா வித்தியாலயம் . ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார் .
அன்னாரின் இறுதிச்சடங்குகள் கனடாவில் (தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு ஏற்ற முறையில் )
நடைபெறும் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஊர் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன்  அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம் .

தகவல்

மகள் -ஷகிலா (கனடா ) 905-832-8711
மருமகன் - நகுலன் 416-559-1260



Monday, March 23, 2020

சிவபாதசுந்தரம் சுரேந்திரன்

உசன் மற்றும் வரணியைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் சுரேந்திரன் அவர்கள் காலமானார்.

இவர் அமரர்கள் சிவபாதசுந்தரம் - சரஸ்வதி தம்பதியினரின் ஏக புத்திரராவார்.

இவர் ஒரு வானொலி அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவோடு ஆரம்பகாலத்தில் இணைந்திருந்து சேவைகள் செய்தவர்.  அத்தோடு தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் - கனடாவின் தலைவராகவும் சேவை புரிந்தவர்.  இவரின் தந்தையார் அமரர் சிவபாதசுந்தரம் அவர்கள் ஒன்றியத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும், பின்னர் காப்பாளராகவுமிருந்து ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவியவர்.

அமரர் சுரேந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்திக்கிறது.  அன்னாரின் பிரிவால் துயருறும் அன்னாரின் மனைவிக்கும், உறவினர்களுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, March 1, 2020

தாமோதரம்பிள்ளை தயாபரன்


உசன் வயற்கரையைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை தயாபரன் அவர்கள் இறைபதம் அடைந்தார்.

உசன் மண்ணில் பிறந்து, எந்தச் சூழ்நிலையிலும் அந்த மண்ணைவிட்டுப் பிரிந்து செல்லாத ஒருவராக இவர் வாழ்ந்துள்ளார். உசன் மண்ணில் அவர் கால்தடம் பதியாத பகுதிகளே இல்லை என்றால் அது மிகையாகாது.  உசன் மண்ணின் நலத்தில் அதீத அக்கறை இவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்தது.  உசன் கந்தசாமி கோவில் திருவிழாக்கள், அன்னதான நிகழ்வுகளில் இவரின் பங்களிப்பு அளப்பரியது. இதைவிட உசன் இராமநாதன் மகாவித்தியாலயம், வாசிகசாலை ஆகியவற்றின் வளர்ச்சியிலும் இவர் முக்கிய கவனம் செலுத்தினார்.

இவர் ஒரு சிறந்த சாரதியாகவும் விளங்கினார். உசன் கிராமத்திலும், வயல்வெளியிலும் இவரது உழவு இயந்திரம் செல்லாத இடமே இல்லையெனலாம்.  விழிப்புக்குழுவுக்கு இரவு நேர சாரதியாகவிருந்து இவர் ஆற்றிய கடமை யாவரும் அறிந்ததே.

ஈழ விடுதலைக்காக இவர் ஆற்றிய பணி நன்றியோடு நினைவுகூரப்படவேண்டியது.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் முருகனைப் பிரார்திக்கிறது.  அன்னாரின் இழப்பால் துவண்டுபோயிருக்கும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.