அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, December 30, 2017

உசனை சேர்ந்த மாணவர்கள் சிறந்த பெறுபேறு

அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் உசனைச் சேர்ந்த மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உசன் மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

1. திரு. திருமதி மிகுந்தன் துஷி தம்பதிகளின் புதல்வன் செல்வன் வக்சலன் விஞ்ஞான பிரிவில் யாழ் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 9 ம் இடத்தையும்,

2. திரு. திருமதி நவகுமார் தம்பதிகளின் புதல்வி செல்வி தாரங்கி விஞ்ஞான பிரிவில் 3 A சித்தி பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 8 ம் இடத்தையும்,

3. திரு. திருமதி.இரவீந்திரன் தம்பதிகளின் புதல்வி செல்வி ஜோகினி விஞ்ஞான பிரிவில் 2 A, B சித்தி பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 13 ம் இடத்தையும்,

4. திரு. திருமதி உருத்திரமூர்த்தி நங்கை தம்பதிகளின் புதல்வன் செல்வன் வினுஜன் கணித பிரிவில்  3 A சித்தி பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 37 ம் இடத்தையும்,

5. திரு. திருமதி மனோகரன்  தாரணி தம்பதிகளின் புதல்வி செல்வி லக்சி வர்த்தக பிரிவில் 2 A, C சித்தியையும்,

6. திரு. திருமதி சிவப்பிரகாசம் தம்பதிகளின் புதல்வி செல்வி கார்த்திகா விஞ்ஞான பிரிவில் 2 A, B  சித்தி பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 63 ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு தொடர்ந்து அவர்கள் கல்விப்பயணத்தில் பிரகாசிக்க வாழ்த்துகிறோம்.

உசனைப் பூர்விகமாகக் கொண்ட மாணவர்கள் நல்ல பெறுபேற்றைப் பெற்றிருந்தாலோ அல்லது வேறு துறையில் திறமை பெற்றிருந்தாலோ www.usan.ca இணையத் தளத்தோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும்.

தொடர்புகளுக்கு: உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
https://www.facebook.com/usanpeople
president@usan.ca
aju@usan.ca



Wednesday, December 13, 2017

திரு.இளையதம்பி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

உசனை சேர்ந்தவரும் உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியருமான திருமதி விஜயராணி அவர்களின் அன்பு கணவர்
திரு.இளையதம்பி அவர்கள் , கொழும்பில் காலமானார் ,
அன்னார் திரு.திருமதி ஒப்பிலாமணி அவர்களின் மருமகனாவார் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் .
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும் .

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தினருக்கு கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .

தகவல்
விஜயலட்சுமி கனடா      -905-303-4866
விஜயகுமாரி கனடா -416-845-8795
விஜயகுலன் கனடா - 416-720-5215
விஜய ரூபன் கனடா -416-271-1763




Sunday, December 3, 2017

"உசன் உறவுகள்"


அன்பார்ந்த உசன் மக்களே!

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடாந்தம் வழங்கும் உள்ளரங்க நிகழ்வான  "உசன் உறவுகள்" நிகழ்வு கடந்த காலங்களை விட மேலும் சிறப்பாக இந்தமுறை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.  கனடா வாழ் உசன் மக்களின் தரமான நிகழ்வுகள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த உள்ளன. 

கடந்த வருடம் RA Rhythm இன் "இன்னிசை மழை" மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்தது.  எனவே இந்த முறையும் அந்த நிகழ்வு மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்டுள்து என்ற மகிழ்ச்சியான தகவலைப் பரிமாறிக்கொள்ள விரும்புகிறோம்.  நேரடி இசையோடு பாடி அசத்த விரும்புவோர் December 10, 2017 ஆம் திகதிக்கு முன்பாக செயலாளர் விஜயகுமாரிரோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.  பயிற்சிகளை விரைவாக ஆரம்பிக்கவேண்டியுள்ளதால் காலதாமதம் செய்ய வேண்டாம்.

தவிர, "உசன் உறவுகள்" நிகழ்வில் பலவிதமான நிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்த விரும்புவோரும் செயலாளரோடு விரைவில் தொடர்புகொண்டு விபரங்களை வழங்கவும்.

இந்த நிகழ்வை மேலும் சிறபாக்க உங்கள் ஆலோசனைகளைத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்க விரும்பும் தொழில் அதிபர்கள் மற்றும் தனிப்பட்டோர் செயலாளர் விஜயகுமாரியோடு தொடர்பு கொள்ளவும்.

வெளிநாடு வாழ் உசன் மக்களே கனடாவின் குளிரை அனுபவிப்பதோடு, உங்கள் உறவுகள் அனைவரையும் ஒன்றுசேரச் சந்திப்பதற்கு இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு January மாதம்  20 ஆம் திகதி, சனிக்கிழமை Baba Banquet Hall இல் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.  இந்தத் திகதியை குறித்து வைத்து நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அனைவரையும் அன்போடு அழைக்கிறது.


Monday, November 20, 2017

உசன் அபிவிருத்தி நிதி சேகரிப்பு - இன்றைய நிலைமை

பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் உட்பட உசன் அபிவிருத்திக்காக உசன் சனசமூக நிலையமும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் நிதி சேகரித்து வருவது குறித்து அறிவித்து உசன் மக்களின் பங்களிப்பைக் கேட்டிருந்தோம்.  Rs.50,00,000.00 ஐ இலக்காகக் கொண்டு இந்த நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  உங்கள் பலரின் பங்களிப்புடன் இந்த நிதி சேகரிப்பு அண்ணளவாக அரைவாசி இலக்கை அண்மித்துக்கொண்டிருக்கிறது என்ற தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.  குறித்த இலக்கை அடைய இன்னும் பங்களிப்புத் தேவைப்படுகிறது.  இந்த நேரத்திலே உசன் சனசமூக நிலையம் உங்களின் உதவியை நாடி எழுதிய கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறோம்.  உசன் சனசமூக நிலையத்தோடு தொடர்பு கொண்டு உங்கள் நிதி உதவியை வழங்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

நன்றி.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Please click on the image to enlarge it.


Sunday, November 19, 2017

திருமதி:தவமணி சிதம்பரப்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்தார்

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பண்டாரி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிதம்பரப்பிள்ளை(இளைப்பாறிய பணியாளர் - Royal Razat Farm, ஓமான்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
அன்புக்கரசி, அஜந்தா, அஜந்தன், விஜயகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கந்தையா, பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற கணக்காளர்), பரமேஸ்வரி(பிரான்ஸ்), திருஞானமூர்த்தி(பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபுஸ்பராசா, இளங்கோவன், சுசித்வினி, ஜெனிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினோஜ், ஆதித், அனுசன், யனுசன், அமிர்தன், அகரவன், ஆர்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு  கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

தகவல்
குடும்பத்தினர்
சிதம்பரப்பிள்ளை — இலங்கை
செல்லிடப்பேசி: +94779688080
விஜயகாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447792732460
அன்புக்கரசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33148477014
அஜந்தா — கனடா
செல்லிடப்பேசி: +1647765 0760
அஜந்தன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +6143436189


Sunday, November 12, 2017

அம்பலவாணர் நல்லதங்கம்


உசனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் நல்லதங்கம் அவர்கள் November 12, 2017, ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் பொன்னையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

அமரர் இராமநாதர் அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும்,

பாக்கியதேவி (சுவிஸ்) ,காலஞ்சென்ற மல்லிகாதேவி, ஜெயதேவன் (நோர்வே), நகுலாதேவி (இலங்கை), சத்தியாதேவி (டென்மார்க்), ஜெயதீபா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாதம், ஜெயராஜா, சுலோசனாதேவி, கந்தசாமி, பிறேமானந்தம், ராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்தூரன் - துவாரகா, இந்துஜா- சாரங்கன், செந்தூபியா - அச்சுதன், பிருந்தூபியா - வசந்தறூபன், துவாகரன், டிலக்க்ஷி, சகான், சாரங்கி, கஸ்தூரியா - தனுசன், பிரசீத், கிரிசாந், பிரீர்த்தி, குலேன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லாஸ்யா, ஸதுர்யா, அகரன், லாதுஷா, ஆருக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் November 14, 2017, செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் விடத்தற்பளை இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளிற்காக உசன் ஈச்சங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Saturday, November 11, 2017

திருமதி.நல்லதங்கம் அம்பலவாணர் அவர்கள் இறைவடி சேர்ந்தார்

உசனை சேர்ந்த திருமதி. அம்பலவாணர் நல்லதங்கம் அவர்கள் சற்று முன் இறைவனடி சேர்ந்தார் ,
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் ,
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய உசன் முருகனை பிரார்த்திக்கிறோம் .
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும் .





Thursday, October 26, 2017

திரு. சுந்தரலிங்கம் கனகரட்ணம்



பிறப்பு  08-04-1949   -    இறப்பு 18-10-2017

சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் கனகரட்ணம் October 18ம் திகதி புதன்கிழமை Toronto வில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகரட்னம் - சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகனும்,

காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் வினாசித்தம்பி - சிவாகாமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நிர்மலாதேவியின் அன்புக் கணவரும்,

கௌசிகன், நிரோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கவடிவேல், மகேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,

அற்புதமணி, தியாகராஜா, நித்தியானந்தன், கருணானந்தன், சிவானந்தி, சயின்தாதேவி (இலங்கை) ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் நல்லுடல்,  8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல்  October 28ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணிவரையும், October 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படும்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 10:30 மணிவரை இறுதிக் கிரியைகள் நடைபெற்று, பகல் 10:40 மணிக்கு அன்னாருடைய நல்லுடல் தகனத்துக்காக 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 5G0  என்ற முகவரியில் அமைந்துள்ள Highland Hills Crematorium க்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
கருணானந்தன்: +1 416 894 3353
நிர்மலாதேவி: +1 416 303 7709
மேனகன்: +1 647 291 6362

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் முருகனைப் பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, October 22, 2017

துயர் பகிர்வு


உசனைச் சேர்ந்த சிவதாஸ் குகதாஸ் அவர்களின் மனைவி லோகேஸ்வரி சிவதாஸ் அவர்கள் யாழ்ப்பாணம், இலங்கையில் சிவபதம் அடைந்தார்.  இவர் குகதாஸ் - சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகளும், நிலக்சனின் அன்புத் தாயாரும், கமலதாஸ், ஈஸ்வரதாஸ், விமலதாஸ் (தர்மகர்த்தா - உசன் கந்தசாமி கோவில், காப்பாளர் - உசன் சனசமூக நிலையம்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் புதன்கிழமை, October 26, 2017 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய உசன் முருகனைப் பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Saturday, October 14, 2017

இங்கிலாந்தில் உசன் உறவுகள் ஒன்றுகூடல்


இங்கிலாந்தில் வாழும் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விபயின்ற மாணவர்களும் உசன் வாழ் மக்களும் ஒன்று கூடும் நிகழ்வொன்று நாளை நடைபெறவுள்ளது . உசன் பாடசாலையில் பயின்ற இளையவர்ககளின் நீண்ட  கால உழைப்பில் இந்த ஒன்று கூடல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது .நீண்ட காலத்தின் பின் இங்கிலாந்து வாழ் உசன் உறவுகளை ஒரே இடத்தில் சந்தித்து குதூகலிக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் . இந்த நிகழ்வில் அனைத்து உசன் பாடசாலை மாணவர்கள் மற்றும் உசன் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் .இந்த ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற கனடா உசன் ஐக்கிய மக்கள்  ஒன்றியம் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .

இந்த நல்ல சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து வாழ் உசன் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தது . உறுதியான ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் வருடாந்தம் இங்கிலாந்து உசன் மக்கள் ஒன்றுகூடி உறவுகளை வார்ப்பதுடன்  உசன் கிராம அபிவிருத்திக்கும் , உசன் பாடசாலை வளர்ச்சிக்கும் பங்களிக்க கூடிய திட்ட்ங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம் . 
உங்கள் முயறசிக்கும் அமைப்புக்கும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தை பங்களிப்பு என்றும் இருக்கும் .
இந்த நிகழ்வில் அனைத்து உசன் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் 

ஒன்று கூடல் நடைபெறும் இடம் : 
"Deep Bar and Resturent"
7 Foots Cray High Street
Sidcup
DA145HJ

காலம் :15-அக்டோபர் 2017 , ஞாயிற்றுக்கிழமை 
நேரம் : மாலை 3 மணி 

தொடர்புகளுக்கு 
ராஜ்குமார்    :07757303473
மோகன் :07581266180
முரளி :07860457316
விக்டர் :07738911189


Thursday, October 5, 2017

பிரணவி அரங்கேற்றம் - Live Stream

வருகின்ற சனிக்கிழமை, October 7, 2017 அன்று நடைபெற இருக்கும் செல்வி பிரணவி பிரபானந்தனின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை உலகெங்கும் இருந்து Live Stream மூலம் பார்த்து இரசிக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. Toronto, Canada நேரப்படி மாலை 5 மணி அளவில் Live Stream ஆரம்பிக்க உள்ளது. கீழுள்ள இணைப்புக்குச் செல்வதன் மூலம் இந்த நிகழ்வை நீங்கள் பார்க்கத் தவறாதீர்கள். 
 


Tuesday, October 3, 2017

உசன் அபிவிருத்திக்கான நிதி சேகரிப்பு



அன்பார்ந்த உசன் மக்களே!

ஒரு கிராமத்தின் பெருமை அதன் வளர்ச்சியில் தங்கியுள்ளது.  அந்த வளர்ச்சி கிராமத்தின் கட்டுமாணத்தில் தங்கியுள்ளது.  பாடசாலை, கோவில், கடைகள், வீதிகள்,  போக்குவரத்து போன்றவற்றோடு வாசிகசாலை அல்லது நூலகம் என்பதும் கிராம வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

இதனை அடிப்படையாக வைத்து உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு ஆரம்பிக்கப்பட்ட நூலக வேலைகள் 2014 ஆம் ஆண்டு தை மாதம் "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" என்ற பெயருடன் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.  அமரர் பண்டிதர் சரவணமுத்து அவர்களின் மக்கள் சுசீலாதேவி சுகுணேஸ்வரன் அவர்கள் தனது வீட்டை நூலகத்துக்காக வழங்கியிருந்தார்.  இந்த நூலகத்தைச் சிறப்பாக நடத்துவதற்காகப் பலரும் நூல்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தனர். பின்னர் மின்னிணைப்பு, இணையத் தொடர்பு என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.  நூலகத்தைச் சரிவர நடத்தவும், அது அமைந்துள்ள வீட்டைப் பராமரிக்கவும் என  உசன் சனசமூக நிலையம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் இந்த நூலகம் பதிவு செய்யப்பட்டது.  கூடவே இரு பணியாளர்களும் அமர்த்தப்பட்டனர்.

இவற்றுக்கான செலவு மாதமொன்றுக்கு CDN $300.00 ஆக இருக்கிறது.  இதன் மிகப் பெரும் பகுதியை குறிப்பிட்ட கனடா வாழ் உசன் மக்கள் வருடந்தோறும் வழங்கி வந்தனர்.  தொடர்ந்தும் இந்தச் செலவை அவர்கள் மேல் சுமத்துவது நாகரீகமாகாது என்ற நிலையில் இந்தச் செலவுக்கான வருமானத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.  அதனடிப்படையில் உசன் சனசமூக நிலைய நிர்வாகத்தினரின் ஆலோசனைக்கிணங்க மாதம் CDN $300.00 வட்டியாக வரக்கூடிய பணத்தைச் சேகரித்து நிரந்தர வைப்பிலிடுவது என முடிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில் தனியே நூலகச் செலவுக்காகப் பணத்தைச் சேகரிக்காமல் எதிர்கால உசன் அபிவிருத்திக்குமாகப் பணத்தைச் சேகரிப்பது சிறந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 

இதனடிப்படையில் CDN $50,000.00 ஐ இலக்காகக் கொண்டு நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  பலரும் முன்வந்து தமது பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.  இந்த நிதி சேகரிப்பின் முதற்கட்டமாக Rs. 1,000,000.00 (அண்ணளவாக CDN $10,000.00) சேகரிக்கப்பட்டு உசன் சனசமூக நிலையத்திடம் கடந்த சனிக்கிழமை அன்று  கையளிக்கப்டுள்ளது.  இலக்கை எட்டுவதற்கான மிகுதி பணத்தை அனைத்துலக வாழ் உசன் மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.  கூடிய விரைவில் இந்த இலக்கை எட்டவேண்டிய தேவை உள்ளதால் உங்கள் பங்களிப்பை உடனடியாக எதிர்பார்க்கிறோம்.

இந்த நிதி சேகரிப்புக்குப் பொறுப்பாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பில் பத்மகாந்தன் சரவணமுத்து அவர்கள் நியமிக்கப்பட்டுளார்.  அவரோடு pathman.s1@hotmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +1-647-219-2027 என்ற செல்லிடப்பேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு உங்களின் பங்கைளிப்பை வழங்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு வேண்டி நிற்கிறது.  மேலதிகமாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் பாஸ்கரன் சுப்பிரமணியம் அவர்களோடு president@usan.ca என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +1-647-448-7434 என்ற செல்லிடப்பேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.  இந்த இரண்டு இலக்கங்களிலும் Viber அல்லது WhatsApp மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியும். 

உங்களின் பங்களிப்புக்கு பற்றுச் சீட்டு வழங்கப்படும்.  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா Ontario மாகாணத்தில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் வாழ் அன்பார்ந்த உசன் மக்களே தேவையறிந்து இந்த உதவியைச் செய்ய முன் வருமாறு உசன் சனசமூக நிலையம் மற்றும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஆகியன கேட்டுக்கொள்கின்றன.



Monday, October 2, 2017

பரதநாட்டிய அரங்கேற்றம்

பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி திருமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவிகள்  செல்வி Kashvie Shankar மற்றும் செல்வி Ashmie Shankar ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் October மாதம் 8 ஆம் திகதி, 2017 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று 50 Hallcrown Place, Toronto, Ontario, M2J 1P6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Armenian Youth Centre இல் மாலை 5:00 மணிக்கு இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு திருமதி சியாமா தயாளன் அவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.


இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.


Saturday, September 30, 2017

மிருசுவிலை சேர்ந்த திரு.தட்சணாமூர்த்தி குமாரசுவாமி அவர்களின் மரண அறிவித்தல்.

மிருசுவிலைப் பிறப்பிடமாகவும்,  கனடா ஒட்டாவா மற்றும் மிசிசாகாவை வதிமிடமாகவும் கொண்ட திரு. தட்சணாமூர்த்தி குமாரசுவாமி அவர்ககள் செப்ரெம்பர். 30ம் திகதி சனிக்கிழமை கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னர் காலஞ்சென்ற குமாரசுவாமி மற்றும் காலஞ்சென்ற உமையம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, சதாசிவமூர்த்தி சாகச்சேரி இலங்கை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைத்தியர் பூமகளின் அன்புக் கணவரும், சதீஸ், துஷ்யந்தி, மைதிலி, சங்கீதாவின் அன்புத் தந்தையும், பிரணவன், நாவலன், சாகரி, சாயித்திரி, கவின், கஜானனன் மற்றும் சேஷானின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல், ஓக்டோபர் முதலாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை, இலக்கம் 121 City View Dr Etobicoke, ON M9W 5A8 முகவரியில் அமைந்துள்ளள "லோட்டஸ் Funeral Home "ல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை அதே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதேநாள் காலை 10 மணி முதல் 12 மணிவரை தகனக் கிரியைகள் செய்யப்பட்டடு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அன்னாரின் பிரிவால் துயருறும்  குடும்பத்தாருக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தமது ஆழ்த்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் .
அன்னாரின் ஆத்மா உசன் முருகன் பாதங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் . இந்த தகவலை உசன் மக்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் .

தகவல் :
சங்கீதா மகள், சங்கர் மருமகன்
சதீஸ்மகன், றோகினி மருமகள்
துஷ்யந்தி மகள்,  றவி மருமகன்
மைதிலி மகள்,  கஜன் மருமகன்


Tuesday, September 26, 2017

கனடாவில் செல்வி பிரணவி பிரபானந்தன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் ....

உசனைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி வெற்றிவேலு தம்பதிகளின் பேத்தியும், கனடா வாழ் திரு. திருமதி பிரபானந்தன் இந்திரா தம்பதிகளின் ஏக புதல்வியுமான செல்வி பிரணவி பிரபானந்தன் பரதக்கலையை முறையே பயின்று அரங்கேற்றம் செய்யவுள்ளார்.

செல்வி பிரணவி கனடாவில் பிறந்து பலவருடங்களாகப் பரதக்கலையை முறைப்படி பயின்று வருகிறார். Toronto வில் பிரபலமான, முதன்மை பரதநாட்டிய நிலையமான "சதங்கை நர்த்தனாலயத்தில்"
பரதக்கலை வித்தகர் வாசு சின்னராசா அவர்களைக் குருவாக ஏற்று பரதக் கலையைப் பயின்று வந்துள்ளார்.

பரதநாட்டியக் கலையை முழுமையாகப் பயின்ற பூரிப்பில் தனது நாட்டியத் திறமையைக் குருவுக்கும், பெற்றோருக்கும், கலை இரசிகர்களுக்கும், பெரியோர்களுக்கும் வெளிப்படுத்தும் விதத்தில் தனது குருவின் ஆசியுடன் இசைக் கலைஞர்கள் புடை சூழ அரங்கேற்றம் செய்யவுள்ளார்.

October மாதம் 7 ம்  திகதி 2017 ஆம் ஆண்டு, சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு, Toronto வில் சிறந்த ஒலி, ஒளி அமைப்புமிக்க அரங்கமாக விளங்கும், 10268 Yonge St, Richmond Hill, ON L4C 3B7 என்ற முகவரியில் அமைத்துள்ள,  Richmond Hill Center For The Performing Arts அரங்கத்தில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது. செல்வி பிரணவியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் கனடா வாழ் அனைத்து உசன் மக்களையும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்களையும், பரதக்கலை இரசிகர்களையும் கலந்துகொண்டு செல்வியை ஆசீர்வதிக்குமாறு பெற்றோர்களான திரு. திருமதி பிரபானந்தன் இந்திரா தம்பதிகள் அன்புடன் அழைக்கின்றனர்.

கனடாவில் பரதக்கலை பயின்று அரங்கேற்றம் காணும் இன்னுமொரு உசன் பரத தாரகையை வாழ்த்துவதில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமை கொள்கிறது.

கனடா வாழ் உசன் மக்கள் அனைவரையும் இந்த அரகேற்ற நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

இந்த அரங்கேற்றம் சிறப்பாக நடக்க எமது வாழ்த்துக்களும், உசன் முருகன் அருளும் கிடைக்க வேண்டுகிறோம்.


தொடர்புகளுக்கு :
பிரபா  - +16472217307
இந்திரா - +14168847307





Thursday, August 31, 2017

"லய பரதம்"
"Laya Bharatham"




பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் உன்னதமான நடன நிகழ்ச்சி "லய பரதம்".  பரதத்தைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் பரதகலா வித்தகர் ஸ்ரீமதி சியாமா தயாளனின் நெறியாள்கையில் உங்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வகையில் நடைபெற இருக்கிறது.

35 Fairview Mall Drive, North York, ON, M2J 4S4, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Fairview Library Theater இல் September, 8, 2017, வெள்ளிக்கிழமை அன்று இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.  மாலை 6:30 மணிக்கு மண்டபம் திறக்கப்படும்.  சரியாக மாலை 7 மணிக்கு "லய பரதம்" ஆரம்பமாகும்.  ஸ்ரீமதி சியாமா தயாளனின் நிகழ்வுகள் என்றுமே தாமதமாக ஆரம்பித்ததில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

உங்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறார் ஸ்ரீமதி சியாமா தயாளன்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளக் கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Bharati School of Indian Classical Dance proudly presents "Laya Bharatham" - an evening filled with Bharathanatyam accompanied by live music.

Date: Friday, September 8, 2017
Location: Fairview Library Theatre
Address: 35 Fairview Mall Drive, North York, ON, M2J 4S4, Canada

For more information please contact Smt Shiyama Thayaalan (416 879 7068) or Kavitha Jana (647 408 5077)
 
Please take this as a personal invitation to this blissful event and bless us with your presence.
[Free admission]
 
Thank you.


Friday, August 25, 2017

உசன் சந்தியில் புத்தம் புதிய அழகிய வீடு விற்பனைக்கு

யாழ் -கண்டி வீதி உசன் சந்தியில் புதிதாய் அமைக்கப்படட நவீன வசதிகளுடன் கூடிய 4-5 பரப்பு காணியுடன்
5 படுக்கை அறைகள்  கொண்ட வீடு உடனடியாக விற்பனைக்கு உள்ளது . நியாயமான விலைக்கும் விரைவான முடிவுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் .
தொடர்புகளுக்கு
கோபி ஈசன் (உசன்)
கனடா தொடர்புகளுக்கு - அஜந்  +14164276000












Friday, June 30, 2017

அன்போடு அழைக்கிறோம் / Invitation


நாளை சனிக்கிழமை, July மாதம் 1 ஆம் திகதி Scarborough நகரில் அமைந்திருக்கும் Neilson Park இல் நடைபெற உள்ள உசன் மக்களின் ஒன்றுகூடலுக்கு அனைவரையும் மீண்டும் அன்போடு அழைக்கிறோம். நீங்கள் தனியே வந்துவிடாமல் உங்கள் உறவுகளையும் அழைத்து வாருங்கள். பல்சுவை உணவு வகைகளை உண்டு மகிழ்வதோடு விளையாட்டுப் போட்டியிலும் கலந்து சிறப்பிக்க தவறாது வாருங்கள். ஒன்றியத்தின் பொதுச் சபைக் கூடத்திலும் பங்குபற்றி உங்கள் கருத்துக்களை வழங்கி ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
நாளைய தினம் மழைக்கான அறிகுறி தென்படுவதால் Tent வைத்திருப்பவர்கள் அதனை எடுத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேவேளை கனடாவின் 150 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதத்தில் சிவப்பு மேலங்கி அணிந்து வந்தால் சிறப்பாக இருக்கும்.
நாளை அனைவரையும் சந்திப்போம்.
சுப்பிரமணியம் பாஸ்கரன்
தலைவர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

We invite you all to the Summer Get Together tomorrow, Saturday, July 1. The venue is Neilson Park in Scarborough. Please bring your family and relatives with you. Come and enjoy different varieties of food and participate in the Sports meet. We also remind you that the General Meeting of the association will be held. Please exchange your opinions in the meeting and continue to take the Association in the right direction.
​There is a chance of intermittent rain tomorrow. Those who own a tent, please bring them with you. We will celebrate Canada's 150th. birthday by wearing red colour shirt/blouse.
We can't wait to see you all tomorrow. ​
Baskaran Subramaniam
President


Friday, June 23, 2017

அருட்தந்தை கிறிஸ்ரி செல்வராஜா


யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  கிறிஸ்ரி செல்வராஜா அவர்கள் 21-06-2017 புதன்கிழமை அன்று  காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. ஜெயராஜா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

அன்ரனி சற்குணராஜா, இம்மானுவேல் ஆனந்தராஜா, மேரி ஜெயராணி, ஜேம்ஸ் ஜெயசீலராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 24-06-2017 சனிக்கிழமை அன்று பி.ப 3:30 மணியளவில் யாழ் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்று பின்னர்  நல்லடக்கம் செய்யப்படும்.

அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக 131 Birchmount Road Scarborough, கனடா என்ற முகவரியில் அமைந்திருக்கும் புனித ஆரோக்கிய மாதா ஆலய பங்கில் 24-06-2017 சனிக்கிழமை அன்று மாலை 06:00 மணியளவில்  இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும். இத்திருப்பலியில் பங்குகொண்டு அன்னாரின் இளைப்பாற்றிக்காக மன்றாட அனைவரையும் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு
அன்ரனி சற்குணராஜா: இலங்கை - செல்லிடப்பேசி: +94764276788
ஜேம்ஸ் ஜெயசீலராஜா: நோர்வே - செல்லிடப்பேசி: +4767543492

(நன்றி: www.kallarai.com)


Tuesday, June 13, 2017

துயர் பகிர்வு


மிருசுவிலை வதிவிடமாகக் கொண்டு கனடாவில் வசித்துவந்த ஓய்வு நிலை கிராமசேவகர் திரு. ஜோசப் ராஜா அவர்கள் ஞாயிற்றுக் கிழமை, June 11, 2017 அன்று காலமானார்.  இவர் உசன் கிராம சேவகராகவும் சில காலம் கடமை புரிந்துள்ளார்.  இவர் அகிலசாந்தி, வசந்தி, கருணா ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.

அன்னாரின் பூதவுடல் வெள்ளிக்கிழமை, June 16, 2017 அன்று மாலை St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 என்ற முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.  மறுநாள் சனிக்கிழமை, June 17, 2017 அன்று காலை பூதவுடல் மீண்டும் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் ஆன்மா நித்திய இளைப்பாற்றி அடையப் பிரார்த்திப்பதோடு, பிரிவால் துயருற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Wednesday, June 7, 2017

திரு பொன்னையா பத்மநாதன்
(ஒய்வுபெற்ற நில அளைவையாளர்)



யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும், திருநெல்வேலியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பத்மநாதன் அவர்கள் 07-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, காசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், நல்லதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தி, சுகீதா(சுவீடன்), பத்மவேணி, பத்மராஜினி(ஐக்கிய அமெரிக்கா) பத்மலோஜினி(கனடா), பத்மரமணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராமநாதன், பூபதி, பழனிநாதன், யோகநாதன், சந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன், சுதாகரன், ஜெகசீலன்(உரிமையாளர்- ஜெகன் பாமசி, Green Grass Hotel), உருத்திரன்(பாபு), குகச்சந்திரகுமார், ஈஸ்வரன்(Auto Supplier) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜீவன், நிஷாந்தி, லர்சனன், சுகர்ணன், சிந்தியா, பிரவீன், ஆகாஷ், அபிஷா, அக்சயா, அஞ்சனா, கவீனா, காவியா, கனித்திரா, உபனயா, கரிஷ், கிரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தனுக்‌ஷிகன், தனுக்‌ஷ்கா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
இல. 228/10,
இராமநாதன் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
சுகந்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779004214
சுகீதா(மகள்) — சுவீடன்
தொலைபேசி: +4692088836
பத்மவேணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778693488
பத்மராஜினி(மகள்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +16147951970
பத்மலோஜினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +19059975666
பத்மரமணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778617756

(இந்தத் தகவல் www.kallarai.com இல் இருந்து பிரதி செய்யப்பட்டது.)


Sunday, June 4, 2017

வாழ்த்துகிறோம்!


உசன் சனசமூக நிலையக் காப்பாளரும், உசன் கிராம முனேற்றச் சங்கத்தின் தலைவரும், உசன் கிராம முன்னேற்றத்துக்கு முன்னின்று உழைப்பவருமாகிய வைத்திய கலாநிதி ஐயாத்துரை ஜெபநாமகணேசன் அவர்களும், இந்தச் சமூக சேவைக்குப் பக்கபலமாக நிற்கும் அவரின் மனைவி கனகேஸ்வரி ஜெபநாமகணேசன் அவர்களும் வைத்தியசாலை  நிர்வாக முகாமைத்துவதில் விஞ்ஞான முதுமானி பட்டம் (Master of Science in Management & Administration of Ayurveda Institutions) பெற்றதையிட்டு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் மக்கள் சார்பில் இருவருக்கும்  தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.





கடந்த மூன்று வருட காலக் கடின உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் அவர்களால் இந்த வெற்றியை அடைய முடிந்துள்ளது.  வட பகுதியில் இந்த உயர் கல்வியைத் தொடர வசதி இல்லாத நிலையில் களனி பல்கலைக் கழகத்தில் அவர்கள் இருவரும் இந்த உயர் கல்வியைக் கற்று வந்தனர்.  குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்துகொண்டு, அதே நேரத்தில் தம்மை நாடி வரும் நோயாளர்களையம் கவனித்துக்கொண்டு இந்த மைல்கல்லை அவர்கள் அடைந்துள்ளமை ஏனையோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைத்துள்ளது.  இந்த மூன்று வருட காலமும் தேவையானபோது தனது பிள்ளைகளைப் பொறுப்பெடுத்து நல்வழிப்படுத்தியதோடு, தனது வைத்தியசாலைத் தேவைகளையும் கவனித்துக்கொண்ட தனது தாயாருக்கும் தான் இந்த நேரத்தில் நன்றி தெரிவிப்பதாக வைத்திய கலாநிதி ஐயாத்துரை ஜெபநாமகணேசன் அவர்கள் தெரிவித்தார்.



Sunday, May 21, 2017

கனடா வாழ் உசன் மக்களினதும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்களினதும் கோடை கால ஒன்றுகூடல் - 2017'


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஏற்பாட்டில் நடைபெறும் கனடா வாழ் உசன் மக்களினதும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களினதும்  கோடைகால ஒன்றுகூடல் ஜூலை மாதம் 1 ம் திகதி, சனிக்கிழமை இடம்பெற உள்ளது.  வழமையாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் இந்த நிகழ்வு இந்த வருடம் சனிக்கிழமையில் நடைபெற நேரம் கூடியுள்ளது.  இதுவரை கலந்துகொள்ள முடியாதவர்கள் இந்த வருட நிகழ்வில் கலந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டமும் இந்த ஒன்றுகூடலின் ஆரம்பத்தில் நடைபெறும்.  இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கனடாவின் 150 ஆவது பிறந்ததினத்தில், நடைபெறப்போகும் இந்த ஒன்றுகூடலானது, Scarborough நகரில் Neilson Road மற்றும் Finch Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Neilson Park இல் இடம்பெறும்.
நாள் முழுவதும் சுண்டல் கடலை, கொத்து ரொட்டி, குழைசாதம், BBQ உட்பட்ட பல வகையான உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட உள்ள இந்த நிகழ்வில் அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டியும் இடம்பெறும். விசேட நிகழ்வாக கயிறிழுத்தல் போட்டி இடம்பெற உள்ளது.

இந்த வருடாந்த நிகழ்வு குறித்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் திரு. சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது, "நான் நிர்வாகசபையில் நீண்டகால உறுப்பினராக இருந்தாலும் தலைவர் பொறுப்பில் இருந்து நடத்தும் முதல் கோடை கால ஒன்றுகூடல் இது என்பதால் மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்புக்கு ஏற்றால் போல் நிகழ்வு அசத்தலாக இருக்கும்" என நம்பிக்கை வெளியிட்டார்.  கடந்த குளிர்கால ஒன்றுகூடலில் இருந்தது போல சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் எனவும், அதிகளவு உசன் மக்களை  வரவழைக்கும்  பணியில் நிர்வாகசபை உறுப்பினர்கள் அக்கறையுடன் ஈடுபட்டிருப்பதால், அதிகளவு மக்கள் இம்முறை வருவார்கள்  என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "ஒரு அமைப்பின் வளர்ச்சி அதன் உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றத்திலேயே தங்கியுள்ளது. எனவே பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உற்சாகம் தரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கனடா வாழ் உசன் மக்கள், மற்றும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அயற்கிராம மக்கள் அனைவரையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது.





Monday, April 24, 2017

மிருசுவில் பங்கின் மூத்தகுரு அருட்பணி குணசீலன் அவர்களுக்கு எமது அஞ்சலி


மிருசுவில் பங்கின் மைந்தரும் மூத்த குருவுமாகிய அருட்பணி குணசீலன் அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் தேவனடி  நேர்ந்துவிட்டார் , அன்னாரின் துயரினால் துயருறும் அனைத்து உறவுகளுக்கும் பங்கு மக்களுக்கும் , எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைத்துலக உசன் மக்கள் சார்பில் பிரார்த்திக்கிறோம் ,
கனடா வாழ் மிருசுவில் பங்குமக்களுக்கு , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா 




Sunday, April 23, 2017

தங்க பதக்கம் வென்ற உசன் வீரன் ..செல்வன்.சி.கோகுலன்


கனடா நாட்டில் வருடாந்தம் நடைபெறும் பூப்பந்து சுற்றுப்போட்டியின் 2017 ம் ஆண்டுக்கான போட்டி கடந்த வாரம் டொரோண்டோ நகரில் நடைபெற்றது , பல பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்ட நிறைய வீரர்களுடன் மோதி , இறுதியில் வெற்றி தங்க பதக்கத்தை உசனை சேர்ந்த இளம் வீரன் செல்வன்.சிவகுமார் கோகுலன் தனதாக்கினார் ,
கனடாவிலும் சர்வதேச பூப்பந்து போட்டிகளிலும் கோகுலன் கலந்து வெற்றிகளை பெற்றுள்ளார் ,
உசேனை சேர்ந்த திரு ,திருமதி, நவரத்தினம் உமாமகேஸ்வரி அவர்களின் பேரனும் ,திரு.திருமதி . சிவகுமார் அவர்களின் மகனுமான செல்வன் கோகுலன் , பல்கலைக்கழக கல்வியை பயின்று வருவதுடன் , விளையாட்டுதுறையிலும் பல சாதனைகளை படித்த்துவருகிறார் ,
அதனை விட தனது திறமைகளையும் விளையாட்டு நுட்பங்களையும் கனடா வாழ் இளம் சிறுவர்களுக்கு பயிற்சி  வழங்கி வருகிறார் .தந்தையார்
திரு.சிவகுமார் நவரத்தினம் அவர்கள் கனடாவில் பூப்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்துவதுடன்
கனடிய தமிழர் மத்தியில் பூப்பந்து விளையாட்டு துறையை வளர்ப்பதில் கனடிய தமிழர் பூப்பந்து சங்கத்தில் நிர்வாக அங்கத்தவராக செயல்பட்டு வருகிறார் ,
புலம் பெயர்ந்தாலும் வேற்று நாட்டில் உசன் மண்ணின் மைந்தர்கள் தமது திறமைகளை வெளிக்கொணர்வது எமக்கு பெருமை தருகிறது ,
கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது
எதிர் வரும் ஜூலை மாதம் கனடாவில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் பூப்பந்தாட்ட  போட்டியில் கனடா சார்பில் விளையாட தெரிவாகியுள்ளார் ,
கோகுலனுக்கு உசன் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு , எதிர்கால போட்டியில் இன்னும் பதக்கங்கள் குவிக்க வாழ்த்துகிறோம் .


Saturday, April 15, 2017

உசன் மைந்தன் திரு.குணசீலன் ஆசிரியர் அவர்களுக்கு கனடாவில் உசன் மக்கள் மதிப்பளித்து கௌரவிப்பு


உசன் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும், யாழ். உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனும்,  பிரபல உயிரியல் ஆசிரியரும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி  கலாசாலை விரிவுரையாளருமான சின்னத்தம்பி குணசீலன் அவர்களுக்கு, அவரின் மேலான கல்விச் சேவையைப் பாராட்டி கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் மதிப்பளிப்பும், உசன் மக்களுடனான சந்திப்பும் கனடாவில் நடைபெற்றது.  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின்  தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தனது இளமைக்கால உசன் வாழ்க்கை அனுபவங்கள், உசன் பாடசாலை அனுபவங்கள் மற்றும் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை அவர் உசன் மக்களுடன் பரிமாறினார்.
நீண்ட கால இடைவெளிகளைத் தாண்டி தனது பழையகால உசன் உறவுகளைச் சந்தித்தது தனது தாயை மீண்டும் சந்தித்த உணர்வைத் தருவதாகவும், உசன் மக்களால் வழங்கப்படட இந்த கெளரவம் தனது தாயிடம் இருந்து கிடைத்த அங்கீகாரம் போல  தான் உணர்வதாகத் தெரிவித்து தனது உணர்வுகளை உசன் மக்களுடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.   திரு. குணசீலன் ஆசிரியர் தனது  உறவினர்கள், நன்றிக்குரிய மூத்தவர்களிடம் இருந்து ஆசிபெற்றுக்கொண்டதுடன் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.



உசன் மக்களையும், தனது வகுப்புத் தோழர்களையும் கண்ட மகிழ்ச்சி அளவில்லாதது எனத் தெரிவித்து தற்போதைய ஈழத்து இளைய கல்விச் சமுதாயத்துக்கு என்ன தேவை என்பதை மிகவும் ஆழமாக, அனுபவத் திறனோடு விளங்கப்படுத்தினார்.



அவரைச் சந்திக்க ஆவலோடு வந்திருந்த உசன் மக்களும் தமது இளமைக் கால நினைவுகளை அவரோடு பகிர்ந்துகொண்டனர்.  ஆசிரியருடனான இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது என்று அனைவரும் கருத்துத் தெரிவித்தனர்.

eKuruvi நிறுவனத்தினரின் வருடாந்த மதிப்பளிப்பு நிகழ்வில் அவருக்கு வழங்கப்பட்ட "சமுதாயச் சிற்பி" என்ற விருதைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் கனடா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





.