அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, April 19, 2020

இடர்கால உதவி - மேலதிக தகவல்


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் இடர்கால உதவி நிதி சேகரிப்பு முன்பே அறிவித்தபடி April 18, 2020 ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்துள்ளது. எதிர்பார்த்த தொகையைவிட அதிகமாகவே நிதி கிடைத்துள்ளது மகிழ்ச்சியைத் தருகின்றது. அதே நேரம் உசனிலும் கணிசமான நிதி சேகரிக்கப்படுள்ளது. ஒன்றியத்தின் வேண்டுதலையேற்று பங்களிப்புச் செய்த அனைவருக்கும் மிகவும் நன்றி.
உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூல்நிலையம், உசனில் இயங்கும் ஏனைய சேவை அமைப்புகளோடு இனணந்து இந்த இடர்கால உதவி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர் ஆகியோர் வழங்கும் பெயர்ப் பட்டியல்களிலிருந்து பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக 3 பேர் கொண்ட குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டதும் கனடாவிலும், உசன் மண்ணிலும் சேகரிக்கப்பட்ட நிதி உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படும்.
மேலதிக விபரங்கள் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளப்படும்.
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா



மரண அறிவித்தல்


யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் அருணாசலம் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற அருணாசலம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை, சிவகலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,

நிசாந்தன், மொனீசா, நிலுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கேசவன், ஜெனீபர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மித்திரா, லியம், மைரா, அட்ரைனா ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
காலஞ்சென்ற ஜெயராசா (ஆசிரியர்), ஜெகசோதி (ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை), ஜெகதீஸ்வரன் (கனடா), ஜெகபாலேந்திரா (இந்தியா), ஜெகபூவறஞ்சிதம் (விடத்தற்பளை), ஜெகசீலன் (பிரான்ஸ்), ஜெகதீசன் (டென்மார்க்), ஜெகயெந்திமாலா (பிரித்தானியா), ஜெகதா (விடத்தற்பளை), ஜெகறட்ஷன் (பிரித்தானியா), ஜெகதாரணி (உசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசகுலேந்திரன் (ஓய்வுபெற்ற நகரசபை உத்தியோகத்தர்- இலங்கை), சறோயா (கனடா), வனஜா (இந்தியா), தங்கராசா (விடத்தற்பளை), வாசுகி (பிரான்ஸ்), சறோயாமலர் (டென்மார்க்), விக்கினேஸ்வரன் (பிரித்தானியா), சிறிஸ்கந்தராசா (விடத்தற்பளை), கிறிஸ்ரினா (பிரித்தானியா), மனோகரன் (உசன்), மகேந்திரா (கண்ணா- கொலண்ட்), கீதாஞ்சலி (சிங்கி- இலங்கை), தமயந்தி (பிரித்தானியா), ஜொய் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாதன் (இலங்கை), சித்திக் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கார்த்திகா, விசாகன் (கனடா), விதுசா (பிரான்ஸ்), நிருசா (பிரான்ஸ்), அருசன் (பிரான்ஸ்), யசிவன் (பிரான்ஸ்), கீர்த்தீகன் (டென்மார்க்), மெகன் (பிரித்தானியா), ஜொனதன் (பிரித்தானியா), கிஷான் (இலங்கை), நிவேதா (இலங்கை), ஆட்டிக்கா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பாமிகா (விடத்தற்பளை), தார்மிகா (விடத்தற்பளை), காயத்திரி (பிரித்தானியா), கஸ்தூரி (பிரித்தானியா), பார்கவி (விடத்தற்பளை), சிற்பரன் (விடத்தற்பளை), தேன்மொழி (விடத்தற்பளை), சர்மி (உசன்), தேனுகா நிமேஸ்வரன் (உசன்), லக்சிகா (உசன்), துளசிகா (உசன்), ஒலின் (கொலண்ட்), டிலூசா (பிரித்தானியா), டியோனா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நேரடி ஒளிபரப்பு
20th Apr 2020 8:00 AM

தகனம்
Monday, 20 Apr 2020 8:00 AM
Magnus Poirier
10300 Pie-IX Blvd, montreal-nord, Quebec, H1H 3Z1

நிசாந்தன் - மகன்
Mobile : +15149756474
மொனீசா - மகள்
Mobile : +15145775352
கேசவன் - மருமகன்
Mobile : +15148136174
ஈஸ்வரன்
Mobile : +14167207973
சித்திக்/தமயந்தி
Mobile : +447814025940
ஜெயம்
Mobile : +33610797096
சோதி
Mobile : +94774385609
பாலன்
Mobile : +919840300283
தீசன்
Mobile : +4526256972
யேந்தி
Phone : +442088641032
Mobile : +447956032386
ஜெகதா
Mobile : +94765937027
றட்ஷன்
Mobile : +447799624221
தாரணி
Mobile : +94779583090
சிங்கி
Mobile : +94770821181

(இவ்வறிவித்தல் www.ripbook.com எனும் இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)


Sunday, April 12, 2020

இடர் கால உதவி


உலகம் முழுவதையும் உலுக்கி வரும் Covid-19 நுண் கிருமி (வைரஸ்) இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இதன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  இதன் காரணமாக நாளாந்தம் வேலை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியானவர்களுக்கு அரசாங்கம் உதவிகளைச் செய்து வந்தாலும் அந்த உதவிகள் அவர்களுக்குப் போதியதாக இல்லை.  சமுர்த்தி உதவி மற்றும் உதவிகள் எதுவும் கிடைக்காத தொழிலாளர்களும் உள்ளனர்.  இவர்களுக்கு உதவும் வகையில் சில தொண்டு நிறுவனங்களும், ஊர் அமைப்புகளும், புலம் பெயர்ந்து வாழும் உறவுகளும் நிதி சேகரித்து உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றன.

அந்த வகையிலே இப்படியான உதவியை வழங்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  அந்த வேண்டுகோளை ஏற்று உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் ஊடாக உதவிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உசன் மற்றும் அயற்கிராம மக்களுக்கு இந்த உதவி சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  இதுவரை உதவிகள் எதுவும் கிடைக்காத பயனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  கிராம சேவகர், பொது சுகாதார உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த செயற்பாட்டை இரவிசங்கர் இரங்கநாதன், சரவணை செல்வராசா மற்றும் வைத்திய கலாநிதி ஜெபநாமகணேசன், ஆகியோர் முன்னின்று நிர்வகிப்பார்கள்.

இந்த இடர் கால உதவிக்கு நிதியுதவி வழங்க விரும்புவோர் ஒன்றியத்தின் தலைவர் பாஸ்கரன், செயலாளர் விஜயகுமாரி மற்றும் பொருளாளர் பத்மகாந்தன் ஆகியோருடன் தொடர்புகொண்டு உங்கள் பங்களிப்பை வழங்குமாறு வேண்டுகிறோம். நிதி உதவியை pathman.s1@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு e-Transfer மூலம் அனுப்பிவைக்கவும். இந்த e-Transfer இற்குரிய password ஐ அதே மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட அனுப்பி வைக்கவும்.  e-Transfer மூலம் நிதி அனுப்ப முடியாதவர்களிடமிருந்து நேரடியாக நிதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்வரும் சனிக்கிழமை, April 18, 2020 அன்றுவரை சேரும் நிதி, உதவிக்காக அனுப்பி வைக்கப்படும்.

நன்றி.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.


Friday, April 10, 2020

அருணாசலம் ஜெகநாதன்


விடத்தற்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டு, மொன்றியால், கனடாவில் வாழ்ந்து வந்த அருணாசலம் ஜெகநாதன் அவர்கள் இறையடி சேர்ந்தார்.
இவர் அருணாசலம் - சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வனாவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதே வேளை அன்னாரின் இழப்பால் துவண்டுபோயிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

மேலதிக தகவல்களுக்கு
ஜெகதீஸ்வரன் (சகோதரன்):  +1-416-754-8474
மஞ்சு (மனைவி): + 1-514-519-3213