அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்
Showing posts with label நினைவஞ்சலி. Show all posts
Showing posts with label நினைவஞ்சலி. Show all posts

Thursday, August 29, 2019

அஞ்சலி

உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் கணித ஆசிரியர் ஆறுமுகம் சோதிலிங்கம் அவர்கள் காலமானார் என்ற தகவலை ஆழ்ந்த துயரத்தோடு பகிர்ந்து கொள்கிறோம். 1976 - 1982 காலப் பகுதியில் இவர் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விப் பணி புரிந்தார்.

இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் தனது கல்விச் சேவையை வழங்கியிருந்தார்.

அன்னாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.


Thursday, December 22, 2016

"நினைவுகளைக் கையளித்தல்"

அமரர் "சிற்பி" அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப் பகிர்வு நிகழ்வு

உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் சி. சிவசரவணபவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப் பகிர்வு சனிக்கிழமை, 24/12/2016 அன்று நடைபெறவுள்ளது.  நீராவியாடியில் அமைந்திருக்கும் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். 

"நுணுக்கரிய நுண்ணுணர்வே" மற்றும் "கலைச் செல்விக் காலம்" ஆகிய இரு நூல்கள் இந்த நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட இருக்கின்றன.

அன்னாரின் குடும்பத்தினர் உங்கள் அனைவரதும் வருகையை அன்புடன் எதிர்பார்க்கின்றனர்.
 
 





Thursday, January 1, 2015

அமரர் துரைசிங்கம் நடராசலிங்கம்

உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணி புரிந்த துரைசிங்கம் நடராசலிங்கம் அவர்கள் 21/11/2014 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டார். இவர் எழுதுமட்டுவாளைச் சேர்ந்த அமரர் துரைசிங்கம் தம்பதியினரின் மூத்த மகனாவார்.

மாணவனாக இருந்த காலத்திலேயே இவர் கல்வித் துறையில் சிறந்து விளங்கினார். சாதாரணமாக அமைதியாகக் காணப்படும் இவர் சக மாணவர்களுக்கு உதவுவதில் அக்கறை காட்டினார். குடும்பத்தில் மூத்தவரான இவர் தனது சகோதரர்களையும், சகோதரிகளையும் நல்ல முறையிலே நெறிப்படுத்தினார்.

ஒரு ஆளுமை மிக்க, திறமையான ஆசிரியராக இவர் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றியதை சக ஆசிரியர்களும், மாணவர்களும் நன்கு அறிவர். கண்டிப்பான ஓர் ஆசிரியராக இருந்தாலும் மாணவர்களோடு அன்போடு பழகுவார். தமிழ் மொழியில் மட்டுமல்ல ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார்.

அமரர் துரைசிங்கம் நடராசலிங்கம் அவர்களுக்கு எமது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து நிற்கிறோம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Monday, February 25, 2013

தங்கம்மா டீச்சரின் மலரஞ்சலி நிகழ்வு

உசன் இராமநாதன் மஹா வித்தியாலய ஆசிரியை திருமதி : பேரம்பலம்  தங்கம்மா டீச்சரின் மறவு குறித்து கனடா வாழ் உசன் மக்களும் பழைய மாணவர்களும் கலந்திருந்த மலரஞ்சலி நிகழ்வு நடை பெற்றது
இந்த நிகழ்வின் சில பதிவுகள் இங்கே




Sunday, May 8, 2011

2 ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி: ஆறுமுகம் செல்லாச்சி அவர்களின் 2 ம்ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு :06 -01 -1922                                                மறைவு :10 -05 -2009

உசனை சேர்ந்த திருமதி ஆறுமுகம் செல்லாச்சி அவர்களின் 2 ம் ஆண்டு
நினவு நாளில் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் .

"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ மாநிலத்தே ............. "
குடும்பத்தினர்


Tuesday, April 12, 2011

20 ம் ஆண்டு நினைவஞ்சலி

    

 
 
 
 
 
 
 
 
 
 
 
 


தோற்றம் : 03 .06 .1947    மறைவு : 13 .04 .1991

உசனை சேர்ந்த அமரர்.திரு.க.வெற்றிவேலு(CTB )
அவர்களின் 20 ம் ஆண்டு நினைவு நாள்

"இருபது ஆண்டு உருண்டோடி போனாலும்
மனதில் உங்கள் நினைவோடு வாழ்வோம்"

 உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

குடும்பத்தினர்