அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, July 29, 2014

Dr.வே.பரமநாதன் அவர்களுக்கு கனடாவில் மதிப்பளிப்பு

உசனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் புதல்வனும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனுமாகிய வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள்டொரோண்டோ நகருக்கு வருகை தந்த வேளை அவருக்கு , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக நன்றி கூறியும் வாழ்த்துக்கள்  கூறியும் வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்களை கெளரவித்திருந்தது ,
எமது பாடசாலையான உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தின் ,சிறுவர் பாடசாலைகட்டிடம்,600,000.00)RS(ஏறத்தாள)பாடசாலைநூலகம்,11,00,000.00)rs(ஏறத்தாள) மற்றும் விளையாட்டு மைதான அபிவிருத்தி(நடை பெற்று கொண்டிருகிறது)மட்டுமன்றி கிராமத்தின் பல அபிவிருத்தி திட்டங்களை எமது கிராமத்துக்கு வழங்கிய சமூக சேவையாளன் ,
திரு பரமநாதன் அவர்கள் கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக இவரின் எமது கிராமத்தின் அபிவிருத்தி சேவையை பாராட்டியும் இங்கிலாந்தின் Hillingdon பிரதேசத்தின் ”GP of the Year 2010” என்னும் விருதைப் பெற்றதை கௌரவிக்கும் முகமாகவும் , இந்த நிகழ்வு நடைபெற்றது ,
வைத்திய கலாநிதி இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் மங்களவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் ,
இன் நிகழ்வில் பலரின் கருத்துரைகளும் உசன் வரலாறு மற்றும் அபிவிருத்தியில் ஏற்பட்ட அனுபவங்களையும் பலரும் பரிமாறிக்கொண்டனர் 
அதை விட உசன் பாடசாலை மற்றும் நூலக கட்டிடபணிகளை செய்த கட்டிட ஒப்பந்த நிறுவன அதிபரும் தாயகத்தில் இருந்து வந்து  கலந்திருந்தார் ,
அவருக்கும் கெளரவம் வழங்கப்பட்டது , 
















Friday, July 11, 2014

ஒன்டாரியோ அரச சேவை விருது பெற்றார் உசன் பிரதிஷ்னி

 உசனைசேர்ந்த திரு, திருமதி நவரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் பேத்தியும்
திரு திருமதி மதீஸ்வரன் ரஜனி அவர்களின் மகளும்மாகிய  செல்வி பிரதிஷ்னி மதீஷ்வரன் அவர்கள் கனடா ஒன்டாரியோ மாகாண அரசின் வருடாந்த தொண்டர் சேவை விருதினை பெற்றுக்கொண்டார் . 50 க்கு அதிகமான அமைப்புக்களின் 230 தன்னார்வ தொண்டர்களுக்கு இவ் விருது வழங்கப்பட்டது , இதில் எமது உசன் கிராமத்தை சேர்ந்த இளம் தலை முறை 
"பல்துறை வித்தகி" செல்வி . பிரதிஷ்னி மதீஷ்வரன் அவர்களும் இந்த விருதை பெற்றுக்கொண்டது .அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விடையமாகும் ,
இவரின் திறமைக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் "பல்துறை வித்தகி" எனும் 
கெளரவம் வழங்குவதில் மகிழ்வு கொள்கிறது .

தமிழர் தகவல் சஞ்சிகை சார்பில் தெரிவு செய்யப்பட்ட செல்வி .பிரதிஷ்ணி ஒன்டாரியோ அரசின் சின்னம் பொறித்த பதக்கமும், மாகாண முதல்வர் ,மற்றும் குடிவரவு குடியகல்வு அமைச்சர் ஆகியோரின் வாழ்த்துக்களையும் ,சான்றிதழையும் பெற்றுக்கொண்டார் 
செல்வி பிரதிஷ்னி உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் சகல நிகழ்வுகளிலும் தனது கலை பணியை திறம்பட செய்து எமக்கும் தொண்டாற்றிவருபவர் ,அதை விட கனடாவின் 
முக்கிய சேவை நிலையங்களிலும் தனது தன்னார்வ பணியை திறம்பட செய்துவருபவர் ,
தனது சங்கீத அரங்கேற்றத்தை அண்மையில் நிறைவு செய்து பல இசை ரசிகர்களின் பாரட்டையும் பெற்ற செல்வி ,பிரதிஷ்னி மதீஷ்வரன்  டொரோண்டோ நகரில் பல இசை வகுப்புகளை நடாத்தி வருகிறார் ,
இவரின் திறமைக்கு மாகாண அரசு வழங்கிய விருதுக்காய் , இவரின் திறமைக்கும் 
உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
இன்னும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ,

தகவல்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா



Wednesday, July 9, 2014

திருமண வாழ்த்து......



 உசனைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் வைத்தியர் திரு திருமதி வேலுப்பிள்ளை பரமநாதன் ஜெகந்திராதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெதீசன் அவர்களுக்கும், பிரித்தானியா வாழ் திரு திருமதி ஸ்ரீரங்கநாதன் மீரா தம்பதிகளின் செல்வப்புதல்வி, மிலோனி கண்ணம்மா அவர்களுக்கும் உசன் முருகன் திருவருளால் பெரியோர் முன்னிலையில் இன்று  ஜூலை மாதம் 9 ம் திகதி புதன்கிழமை, திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது ,

கனடா Toronto வில் 5321 Finch Avenue East, Scarborough ON M1S 5W2,Canada என்ற முகவரியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய்பாபா மண்டபத்தில், இன் விவாக நிகழ்வு நடைபெற்றது ,
திருமண  வாழ்வியலில் இணைந்து கொண்ட புதுமண தம்பதிகளுக்கு ,
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் ,









Monday, July 7, 2014

கனடா வாழ் உசன் மக்களின் சிறப்பு சந்திப்பு நிகழ்வு



உசனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் புதல்வனும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனுமாகிய வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள்டொரோண்டோ நகருக்கு வருகை தந்துள்ளார் ,
எமது பாடசாலையான உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தின் ,சிறுவர் பாடசாலைகட்டிடம்,பாடசாலை நூலகம் ,மற்றும் விளையாட்டு மைதான அபிவிருத்தி மட்டுமன்றி கிராமத்தின் பல அபிவிருத்தி திட்டங்களை எமது கிராமத்துக்கு வழங்கிய சமூக சேவையாளன் ,
திரு பரமநாதன் அவர்கள் தனது உசன் கிராமத்து மக்களை சந்தித்து மகிழ விரும்புவதுடன் ,கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக இவரின் எமது கிராமத்தின் அபிவிருத்தி சேவையை பாராட்டியும் 
இங்கிலாந்தின் Hillingdon பிரதேசத்தின் ”GP of the Year 2010” என்னும் விருதைப் பெற்றதை கௌரவிக்கும் முகமாகவும் ,
உசன் மக்களுடனான சிறப்பு சந்திப்பு ஒன்று ஒழுங்கு செயப்பட்டுள்ளது ,
இடம்: 80 Altontower Cir , Party hall (Mccowan and Steels) 
காலம் :எதிர்வரும் 13 ம் திகதி Sunday 
நேரம் காலை : 11 மணி 
உசன் மக்களுடன் இணைந்து கலந்துரையாடி மதிய உணவு விருந்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் .

உங்கள் வரவுகளை உருதிபடுத்துமாறு வேண்டுகிறோம் ,
தொடர்புகளுக்கு : 
திரு.இராமநாதர்    -416-670-4031 or 416-299-6763
திரு .கிருஷ்ணபிள்ளை -   416-562-6244

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா 


Sunday, July 6, 2014

விவாக சுபமுகூர்த்த அழைப்பு

(To view the image in full screen click on it)

உசனைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் வைத்தியர் திரு திருமதி வேலுப்பிள்ளை பரமநாதன் ஜெகந்திராதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெதீசன் அவர்களுக்கும், பிரித்தானியா வாழ் திரு திருமதி ஸ்ரீரங்கநாதன் மீரா தம்பதிகளின் செல்வப்புதல்வி, மிலோனி கண்ணம்மா அவர்களுக்கும் உசன் முருகன் திருவருளால் பெரியோர் முன்னிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 9 ம் திகதி புதன்கிழமை, திருமண நிகழ்வு நடைபெற உள்ளது.

கனடா Toronto வில் 5321 Finch Avenue East, Scarborough ON M1S 5W2,Canada என்ற முகவரியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய்பாபா மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை வரும் சுப முகூர்த்த வேளையில் திருமண விழா நடைபெறவுள்ளது. அனைத்து உசன் மக்கள், உறவுகள் மற்றும் நண்பர்களையும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

அழைப்பவர்கள்:
திரு திருமதி வேலுப்பிள்ளை பரமநாதன் ஜெகந்திராதேவி 00447795140685
திரு திருமதி வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை 416-562-6244

தகவல்:
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்-கனடா.


Thursday, July 3, 2014

எழுதுமட்டுவாள் மக்களின் ஒன்றுகூடல்

 எமது அயல் கிராமமான கனடா வாழ் எழுதுமட்டுவாள் மக்களின் ஒன்றுகூடல் ஆடி மாதம் 12 ஆம் திகதி ( 12/7/2014 ) சனிக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் மாலை 7.00 மணி வரை Scarborough நகரில் நடைபெற உள்ளது. 
இடம்:
Colonel Danforth Park -(Highland Creek Dr).  Picnic Area 3  (Kingston Road & Lawson Road).
73, Colonel Danforth Trail, Toronto  M1C 1P8

எழுதுமட்டுவாள் மக்கள் அனைவரையும் அதனைச் சூழவுள்ள ஒட்டுவெளி, விளுவளை, முகமாலை, கிளாலி,கரம்பகம், களிக்கரை ஆகிய ஊர்மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.  உங்களின் வருகையை ஆடிமாதம் 05 ஆம் திகதிக்கு முன்பாக உறுதிப்படுத்துமாறு வேண்டுகிறோம்.
 
தொடர்புகளுக்கு:வீ.நடராஜா - 647 783 2193  / 416 335 0050 , 
                                             குலா சிவராஜா - 416 893 2377     
                                  ராஜம் கார்த்திக்  905 970 1815,       
                                ராணி கைலன் - 416 299 8794,
                                 பரா - 416 701 1758  
இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்  எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .



Tuesday, July 1, 2014

கனடா வாழ் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல்


எமது அயல் கிராமமான விடத்தற்பளை மக்களின் கனடா வாழ் உறவுகள் இவ் வருடம் , கனடாவில் ஒன்றுகூடல் நிகழ்வை நடாத்தி ,தமது ஊர் உறவுகளுடன் கலந்து மகிழ்ந்திருந்தனர் ,
இன்றைய தினம் டொரோண்டோ நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்ற ஒன்றுகூடலில் , கனடா வாழ் விடத்தற்பளை மக்களுக்கென நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது ,சங்கத்தின் தலைவராக திரு.ந.உதயன் அவர்கள் 
தெரிவுசெய்யப்பட்டு ஒன்றுகூடலை வழிநடத்தினார் ,
சுவை உணவுகளும் சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளும் நடைபெற்றது , 
தொடரும் வருடங்களிலும் இன் நிகழ்வு சிறப்புடன் நடைபெற 
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .