அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, December 20, 2010

கனடா மக்கள் ஒன்றிய தொடர்பாடல் நிலையம்

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் மற்றும் உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகத்தினரின் ஒன்றுபட்ட பெரும் முயற்சியால் வெளிநாட்டு வாழ் உறவுகளை இணைக்கும் முகமாக உசனில் ஒரு தொடர்பாடல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது அதற்கு உசன் கனடா வாழ் மக்களால் கனடாவில் இருந்து சில பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது அப்பொருட்களை கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு எமது கழக உறுப்பினர்கள் அத் தொடர்பாடல் நிலையத்தில் இறக்குவதை படத்தில் காணலாம்.
படங்கள் http://www.facebook.com/album.php?aid=16452&id=100001757805974


Friday, December 17, 2010

உசனுக்கு தொலைபேசி சேவை

Sri Lanka Telecom நிறுவனத்துடன் இணைந்து உசனில் அமைந்துள்ள வீடுகளுக்கான நேரடியான தொலைபேசி இணைப்புக்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை, உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் & உசன் ஐக்கிய வாலிபர் சங்கம் செய்துள்ளனர். இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு உசனில் இயங்கிவரும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் & உசன் ஐக்கிய வாலிபர் சங்கத்துடனோ அல்லது கனடாவில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடவுடனோ தொடர்பு கொள்ளுங்கள். எமது கிராமத்தின் மற்றுமோர் வளர்ச்சி கண்டு மகிழ்வு கொள்வோம். இந்த மகிழ்ச்சியான செய்தியை உலகெங்கும் பரப்புங்கள்.


Friday, December 10, 2010

மரண அறிவித்தல்

உசன் மிருசுவிலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் நாகலிங்கம் அவர்கள் 08-12-2010 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வைரவன் பாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,நாகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும், ஜெகதாஸ்(லண்டன்), குமுதா(சுதா), உதயதர்சினி(உதயா), பாலதாஸ், மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துஷி(லண்டன்), ராஜகுமார்(பிரான்ஸ்), கந்தசாமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,நவரட்ணம், அன்னலட்சுமி, சிவசுப்பிரமணியம், குணபாலசிங்கம்(ஜோ்மனி), புஸ்பராணி(லண்டன்), சத்தியபாமா, ரகுவரன்(ஜோ்மனி), அமர்தராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,ஆவார். அன்னாரின் இறுதிசடங்கு 09-12-2010 வியாழக்கிழமை அன்று உசன் மிருசுவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, 2.00 மணியளவில் உசன் தெற்கு இந்துமயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக புதவுடல் எடுத்துச்செல்லப்படும். அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு உசன்மக்கள்  ஒன்றியம்கனடாதனதுஆழ்ந்தஅனுதாபங்களைதெரிவிப்பதுடன் .அன்னாரின் ஆத்மசாந்திக்காக வேண்டுகிறோம். தகவல் மகன் -
ஜெகதாஸ் UK தொலைபேசி: +442082048552 செல்லிடப்பேசி: +447944446028


Monday, December 6, 2010

மரண அறிவித்தல்

தும்பளையைப் பிறப்பிடமாகவும் கெற்பேலியை நிரந்தர வசிப்பிடமாகவும் விடத்தற்பளையை தற்காலிக வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி இலட்சுமிப் பிள்ளை சோமசுந்தரம் நேற்று (06.12.2010) திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதியினரின்அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் சோமசுந்தரத்தின் (முன்னாள் முகாமையாளர், தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூ. சங்கம்) அன்புமனைவியும் சிவகுமார் (கனடா), ஜெயக்குமார் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் சுதர்சினி (கனடா), சிவசோதி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் சதுஷ், லதுஷா, நிதுஷ், ஜெனுஸ், ஜெசோ ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் தம் பிப்பிள்ளை இராசேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனக சிங்கம் சிவயோகம், தம்பிப்பிள்ளை பத்மநாதன், தம்பிப் பிள்ளை பரஞ்சோதி ஆகியோரின் சகோதரியும் சிவநேசன் (டென்மார்க்), சிவனேஸ்வரி (ஆசிரியை, யா/மிருசுவில் அ.த.க. பாடசாலை), ஞானேஸ்வரன் (கனடா), கேதீஸ்வரன் (அமெரிக்கா) ஆகியோரின் பெரியம்மாவும் பாமினி (லண் டன்), நிருஜா (ஆசிரியை, யா/வடமராட்சி மத்திய மகளிர் கல் லூரி), தர்சன் (ஜேர்மனி), கீர்த்தனா (ஜேர்மனி) ஆகியோ ரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.
தகவல்
மகன் ஜெயக்குமார் தொடர்பு இல. 0779753318, 0776264272


Wednesday, December 1, 2010

பாலேந்திரன் காண்டீபனுக்கு வாழ்த்துக்கள்


உசனைசேர்ந்த பாலேந்திரன் புஸ்பராணி (அட்லஸ் பாலா ) தம்பதிகளின் புதல்வன் காண்டீபன் Australia Victoriya University யில் சர்வதேச வர்த்தகத்துறையில் முதுமாணி பட்டபடிப்பை நிறைவுசெய்துள்ளார்.இவர் தனது கல்வியைஇலங்கை ,இந்திய,மலேசிய ஆகிய நாடுகளில் கடும் இடையூறுகளுக்கு மத்தியிலும் மேற்கொண்டார் .காண்டீபன் கல்வியில் மட்டுமன்றி கலைத்துறையிலும்விளையாட்டிலும் மிகவும் திறமையானவர் . இலங்கையில் இளைய சூரியன் எனும் பெயரில் சூரியன் FM வானொலியிலும் , இந்தியாவின் ஆஹா FM வானொலியிலும் , இலங்கை சக்தி FM ஆகிய வானொலிகளில் சிறப்பாக பணியாற்றியவர் . பல இன்னல்களுக்கு மத்தியிலும் முன்னேறிய காண்டீபன் தற்போது ஆஸ்திரேலியா சென்று தனது பட்டத்தை பெற்றிருப்பது . எமக்கு மகிழ்ச்சிதருகிறது .உசன் மண்ணில் வாழ்ந்த , உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவன் காண்டீபனுக்கு உசன் மக்கள் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.அத்துடன் உசன் மக்கள் ஒன்றியம் கனடா தனது அன்பு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.



Saturday, November 27, 2010

மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தின் திருவிழா

மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தின் 2010 ம் ஆண்டின் வருடாந்த திருவிழா நவம்பர்  27 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது . நீண்ட கால  இடைவெளிக்கு பின்னர் மிருசுவில் மக்கள் மிகவும் உற்சாகமாக திருவிழாவில்


 பங்குபற்றி  வருகின்றனர் . இத் திருவிழா  மிகவும் சிறப்பாக நடைபெற உசன் மக்கள் சார்பாக கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் ஆண்டவனை பிரார்த்திக்கிறது .மிருசுவில் அனைத்து கிறிஸ்தவ அன்பர்களுக்கும் எமது சிறப்பு வாழ்த்துக்கள்





Monday, November 15, 2010

உசனுக்கு உவந்தளிக்கும் திரு.கு.விமலதாஸ்


உசனில் மிகவும் அத்தியாவசிய தேவையான -ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்துக்கு என ஒரு கட்டிடம் அமைப்பத்தற்கு உசன் கனடா வாழ் மக்கள் ஒன்றியம் முன் வந்த போதிலும் அவ் நிலையத்துக்கு என பதிவு செய்யப்பட்ட நிலம் இல்லாமையினால் அவ் வேலைத்திட்டம் ஆனது செய்ய முடியாத நிலை இருந்தது இப்பொழுது உசனில் வசிக்கும் உசன் கந்தசாமி கோவிலின் தர்மகத்தாவான திரு.கு.விமலதாஸ் அவர்கள் தாமாக முன் வந்து சுமார் ஒரு பரப்பு காணியை வழங்கி உள்ளார் அவர்களுக்கு எமது விளையாட்டு கழகத்தின் சார்பாகவும் உசன் ஊர் வாழ் மக்கள் சார்பாகவும் கோடான கோடி நன்றிகளை தெரிவிக்கிறோம் அத்துடன் அக்காணியை எமது ஸ்ரீ முருகன் விளையாட்டு கழக செயலளரான அ.பிரபகரனிடம் கையளிப்பதையும் அத்துடன் எமது கழக உறுப்பினர்களும் நிற்பதை படத்தில் காணலாம் தற்பொழுது சனச்மூக நிலைய கட்டிடம் அமைப்பதற்கு வசதி ஏற்பட்டுள்ளதால் உசன் கன்டா வாழ் மக்களாகிய உங்களிடம் எமது கழகம் சார்பாக இவ் உதவியை நாடி நிற்கிறோம் ...
கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக திரு விமலதாஸ் அவர்களுக்கு எமது நன்றிகள்


Sunday, November 14, 2010

கனடா வாழ் உசன் மக்களின் சந்திப்பு (Mississauga / Brampton )


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் Mississauga /Brampton பகுதி உறுப்பினர்களுக்கான
சந்திப்பு நவம்பர் 14 ம் திகதி நடைபெற்றது. இதில் உசன் அபிவிருத்திகுறித்தும்.
கனடா ஒன்றியத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.மிகவும் உற்சாகமாக நடைபெற்ற சந்திப்பில் அனைவரும் தமது ஒத்துளைப்பை வழங்கினார்கள்.

மேலதிக  படங்கள் http://www.facebook.com/usanpeople#!/album.php?aid=47585&id=100001219521044


கனடா வாழ் உசன் மக்களின் சந்திப்பு


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் Maple /Woodbridge பகுதி உறுப்பினர்களுக்கான சந்திப்பு நவம்பர் 14 ம் திகதி நடைபெற்றது. இதில் உசன் அபிவிருத்திகுறித்தும்.கனடா ஒன்றியத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.மிகவும் உற்சாகமாக நடைபெற்ற சந்திப்பில் அனைவரும் தமது ஒத்துளைப்பை வழங்கினார்கள்.

மேலதிக  படங்கள் http://www.facebook.com/usanpeople#!/album.php?aid=47584&id=100001219521044


Saturday, November 13, 2010

கனடா வாழ் உசன் மக்களின் சந்திப்பு

உசனில் இன்றைய நிலை தொடர்பாகவும் கனடா மக்கள் ஒன்றியத்தின். எதிர்கால செயல்பாடுகள் மற்றும் உசனில் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாக .உசன் மக்கள் ஒன்றியம் தனது அங்கத்தவர்களை , பிரதேசரீதியாக கனடாவில் சந்தித்து கருத்துகளை பரிமாறிவருகிறது. மிகுந்த உற்சாகத்துடன் மக்கள் இதில் பங்கேற்று வருகின்றனர் . அந்த வகையில் நவம்பர் 14 ம் திகதி  Mississauga /Brampton நகர மக்களை சந்திப்பதற்காக Dunddas & HW 10 சந்திப்பில் இல 2584 Rugby Rd இல் அமைந்துள்ள yarl co -cop மண்டபத்திலும் அத்துடன் அதேதினம் Maple Woodbridge மக்களை சந்திப்பதற்காக Jane & Majermac சந்திப்பில்இல 46 Madeira Ave வில் மாலை 6 மணிக்கும் கூட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது .எனவே உசன் மீது அன்பு கொண்ட உள்ளங்கள் தாமாக முன்வந்து இந்த சந்திப்பில் கலந்து உங்கள் கருத்துகளையும் பங்களிப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் .
மேலதிக தொடர்புகளுக்கு : பத்மன் சரவணமுத்து
905 803 0204 647 219 2027
அயு வெற்றிவேலு
4168332120


Thursday, November 11, 2010

திருமதி செல்வபாக்கியம் அவர்களின் மரணஅறிவித்தல்.

  உசனைசேர்ந்த கந்தையா செல்வரத்தினம்(நெசவாலை வல்வை/Srilankan Redcross)) அவர்களின் அன்பு மனைவி திருமதி செல்வபாக்கியம்.அவர்கள்11 நவம்பர் 2010 அன்று லண்டன் UK யில் காலமானார்.
அன்னார் அச்சுவேலியை சேர்ந்தவரும் முன்னால் யாழ் வைத்தியசாலையின் முதுநிலை தாதியும், உசனை சேர்ந்த குணரத்தினம் (வட்டக்கச்சி), நவரத்தினம் (இறைவரி திணைக்களம்) மற்றும் அரியரத்தினம் (RDA) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவர் .
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு உசன் மக்கள் ஒன்றியம் - கனடா
தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.
தொடர்புகளுக்கு :
பகி, ஜீவா , பாபு - மகன்மார் - 44 208 9048638
யசோ - பெறாமகன் - 416 493 7084


Saturday, November 6, 2010

உசன் கந்தசுவாமிகோவில் ஸ்கந்தசஷ்டி உற்சவம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் சரித்திரப் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களான நல்லூர் கந்தசுவாமி கோவில், செல்லச்சந்நிதி முருகன் கோவில், உசன் கந்தசுவாமிகோவில் கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயம், இனுவில் கந்தசுவாமி கோவில், யாழ்நகர் கதிரேசன் கோவில் உட்பட பல ஆலயங்களில் இன்று (6ம் திகதி) ஸ்கந்தசஷ்டி உற்சவம் ஆரம்பமாகி ஆறு தினங் கள் உற்சவம் நடைபெறவுள்ளது.
இவ்வாலயங்களில் நான்கு சாம பூஜை, விசேட அபிஷேகம், தீப ஆராதனை, மூத்த புராணப்படிப்பு, ஆன்மீக சொற்பொழிவுகள், சுவாமி உள்வீதிவருதல் என்பன தினமும் நடைபெறவுள்ளன. இறுதிநாள் சூரன்போர் உற்சவ மும் சுவாமி வெளிவீதி எழுந்தரு ளலும் இடம்பெறும்


Monday, November 1, 2010

வைத்தியகலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்களை வாழ்த்துகிறோம்

உசனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் புதல்வனும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனுமாகிய வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள் இங்கிலாந்தின் Hillingdon பிரதேசத்தின்
”GP of the Year 2010” என்னும் விருதைப் பெற்றுள்ளார்.

அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சினால் சிறந்த சேவை, சிறந்த வைத்தியம் ஆகியவற்றைப் பாராட்டி 2010 ம்ஆண்டின் சிறந்த குடும்பவைத்தியராகத் தெரிவுசெய்யபட்டு அரசினால் பாராட்டுசான்றிதழும் வழங்கி கெளரவிக்கபட்டுள்ளார்.
உசன் பெற்றெடுத்த ஒரு மைந்தன் இன்று உலகப் புகழ் பெற்றதையிட்டு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா பெருமை கொள்வதுடன், எமது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது. வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்களை வாழ்த்த விரும்புபவர்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பாவிக்கலாம். mailto:drpara4@yahoo.co.uk


Friday, October 22, 2010

கனடாவிலிருந்து உசனுக்கு

 உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினால் கனடாவில் இருந்து உசன் மக்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் பாதுகாப்பாகப் பொதி செய்யப்பட்டு, BRISK INTERNATIONAL CARGO நிறுவன அதிபர் திரு. R. நாதன் அவர்களிடம் கையளிக்கபட்டது.
அனுப்பப்படும் இந்த பொதியில் உசன் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யகூடிய சிலபொருட்கள் உடனடியாக அனுப்பபட்டுள்ளன .இவை  நவம்பர் மாத இறுதியில் உசனை சென்றடையும் என எதிபர்க்கபடுகிறது.


Wednesday, October 20, 2010

உசனில் புதிய புரட்சி


கனடா - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் உசனில் அமைக்கப்படும் கணனி  / தொடர்பாடல் நிலையத்தின் சில பணிகளை உசன் வாலிபர்கள் இரவு பகலாகச் செய்து வருகிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து மிகவும் உற்சாகமாக இதில் ஈடுபட்டுவருகின்றனர். பிரபாவின் வழிநடத்தலும், ஜதிகேசனின் திட்டமிடலும், கனடா - உசன் மக்கள் ஒன்றியத்தின் ஒத்துழைப்பும் உசன் மக்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. உசன் வாலிபர்களின் ஒத்துழைப்புக்கு எமது நன்றிகள். உசனில் அமைக்கப்படும்  கணனி  / தொடர்பாடல் நிலையத்தின் சில காட்சிகளை இங்கே காணலாம். படங்கள் : சஞ்சயன். S.

IT Center that is being built in Usan, Mirusuvil, Sri Lanka. United People Association of Usan in Canada is spearheading this project with the active participation of Usan Youth Organization - Sri Mirugan Sports Club.
Photographs: Sanjayan. ச
மேலதிக படங்களை பார்க்க இந்த தொடர்பை அழுத்துங்கள் :
http://www.facebook.com/home.php?#!/album.php?aid=46165&id=100001219521044&fbid=137550712962245


Saturday, October 16, 2010

உசன் மக்களுக்கு உபகரணங்கள் உவந்தளிக்கும் திரு.இந்திரன் ஆசீர்வாதம் அவர்கள்

கனடா -உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினால் உசன் வாழ் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவும் முகமாக உசன் கிராமத்தில் அமைக்கபட்டுவரும் கணணி பயிற்சி நிலையம் மற்றும்- Internet தொடர்பாடல் நிலையம் அமைக்கும் முயற்சி உசன் வாலிபர் சங்கம் மற்றும் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழக உறுப்பினர்களின் அயராத முயற்சியால் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இம் முயற்சிக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் சில கனடா வாழ் அன்பர்கள் மனமுவந்து தாமாக முன்வந்து தங்கள் பங்களிப்பையும் ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.அந்த வகையில் உசன் கிராம அபிவிருத்தியில் ஆர்வம் கொண்ட வைத்திய கலாநிதி திரு .இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் எமது முயற்சியை பாராட்டியதுடன் தனது பங்களிப்பாக உசன் மக்களுக்காக புதிய கணணிகள் உடனடியாக கொள்வனவு செய்வதற்காக $900 பணமும் , மற்றும் இன் நிலையத்திற்கு தேவையான Laminating , Bindinng System ,Laser Trimmer ஆகியவற்றை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய பொருளாளர் அஜந்தன் வெற்றிவேலு விடம் Toronto வில்வைத்து  கையளித்தார். திரு .இந்திரன் ஆசிர்வாதம் அவர்களுக்கு
உசன் வாழ் மக்கள்சார்பாகவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் எமது நன்றிகள்.


திரு. கணபதிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களின் மரணஅறிவித்தல்

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஓய்வு பெற்ற உப அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் October 16, 2010 அன்று அன்னாரின் மகளின் இல்லத்தில் இறைவனடி எய்தினார். அன்னார் சரசாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், காலஞ்சென்ற யோகாம்பாள் (சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அருமைக் கணவரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - அன்னலட்சுமி தம்பதியினரின் ஏக புதல்வனும், காலஞ்சென்ற "Hidu Board" R. இராஜரத்தினம் - செல்லம்மா தம்பதியினரின் அருமை மருமகனும், காலஞ்சென்ற ஞானசௌந்தரி, ஞானப்பூங்கோதை (சரசாலை), ஆகியோரின் அருமைச் சகோதரனும், யசோதா (கொழும்பு), தயாவதி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமைத் தந்தையும், கிருஷ்ணமூர்த்தி (Retired Electrical Engineer, Colombo) நவக்குமாரன் (Junior Executive Assistant, Commercial Bank, Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும், உபேந்திரன் (Computre Engineer, Colombo), மாதங்கி (வேம்படி மகளிர் கல்லூரி), கிருத்திகன் (St. John's College), தாரங்கி (வேம்படி மகளிர் கல்லூரி), தனுரங்கி (St. John Bosco) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் சரசாலை தெற்கு "அயோத்தியா" இல்லத்தில் திங்கட்கிழமை, October 18, 2010 காலை நடைபெற்று வேம்பிராய் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு:
கிருஷ்ணமூர்த்தி (கொழும்பு, மகன்) - 011-94-11-494-6158
நவக்குமாரன் (யாழ்ப்பாணம், மருமகன்) - 011-94-21-222-2793
சத்தியவதி (சரசாலை, மருமகள்) - 011-94-77-305-3027
சரோஜா (கனடா, மருமகள்) - 416-754-8474
சறோ (கனடா) - 416-335-5601
சாந்தினி (கனடா) - 905-554-0349


Thursday, October 14, 2010

உசன் வளர்ச்சிக்கு ஆதரவு தந்த அன்பர்கள்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசனில் உருவாக்கிவரும் IT (கணினி / தொடர்பாடல் ) நிலையத்திற்கு கனடாவிலிருந்து இதுவரை தாமாக முன்வந்து தமது பங்களிப்பையும், ஆலோசனையையும் வழங்கிய உறவுகளுக்கு எமது நன்றிகள்.உசனுக்காக இதுவரை எம்முடன் தாமாக முன்வந்து உதவியவர்கள்.


வைத்திய கலாநிதி இந்திரன் ஆசிர்வாதம்,
திரு.உமாபதி ராஜரத்தினம் (சின்னத்தம்பி விதானையார்),
திரு. மகாலிங்கம் (விடத்தற்பளை)
திரு. குகன் சுவாமிநாதன்,
திரு. கருணானந்தன் விநாசித்தம்பி,
திருமதி. சுகந்தி சிவகுமார் (சின்னத்தம்பி விதானையார்),
திரு. நகுலன் இளையதம்பி
திரு. தினேஷ் நிதியானந்தசோதி.
உங்கள் முயற்சியால் ஒரு பகுதி பொருட்கள் உசனுக்கு அனுப்பபட்டுள்ளன. தொடர்ந்தும் எமக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் உசனில் இன்னும் புதிய திருப்பங்கள் செய்வோம்.


Monday, October 11, 2010

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகசபை கூடியது

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கடந்த October 10 ஆம் திகதி உசன் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், அது குறித்து கனடா வாழ் உசன் மக்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாகசபையைக் கூடி ஆலோசித்தது. Toronro நகரில் உள்ள Krisco நிறுவனத்தில் மாலை 6 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் நகுலன் கனகசபை அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உசனில் அவசர அபிவிருத்தி பணி தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தபட்டது .




அதன் முதல் கட்டமாக உசன் மக்களுடனான தொடர்பாடலை அதிகரிக்கும் வகையிலும், உசன் மக்களுக்கு கணணி  (IT ) தொடர்பான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் ஒரு செயல் திட்டம் உருவக்குவாதாக முடிவு எடுக்கபட்டது.


Sunday, October 10, 2010

உசனில் ஒரு புதியதிருப்பம்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா -உசன் மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக உசன் கிராமத்தில் ஒரு Internet தொடர்பாடல் நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.அங்கு கணணி பயிற்சி வகுப்புகளும். PhotoCopy , Internet ,Fax ,Scaning போன்ற சேவைகளையும் உசன் மக்களுக்கு கிடைக்ககூடிய முறையில். இந்த நிலையம் அமைக்க பட்டு வருகிறது. உசன் வாலிபர் சங்கத்தின் முயற்சிலும் , கனடா மக்கள் ஒன்றியத்தின் வழிகாட்டலிலும் இந்த நிலையம் மிக விரைவில் இயங்க இருக்கிறது என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றோம் இந்த முயற்சிக்கு உங்களின் பூரண ஆதரவையும் .கருத்துகளையும் வரவேற்கிறோம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா
உசன் ஐக்கிய வாலிபர் சங்கம்
 


Wednesday, October 6, 2010

கனடா மக்கள் ஒன்றியத்தின் நிதி உசன் வாலிபர் சங்கத்திடம் கையளிப்பு:

உசன் வாலிபர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உசனுக்கான புனரமைப்பு பணியின் முதல் கட்டமாக ஈச்சங்காடு மயானத்தின் தகனமேடை அமைக்கும் பணி நிறைவடைந்தது யாவரும் அறிந்ததே.தொடர்ந்து மேலும் பல அபிவிருத்தி பணிகள் உசனில் அவசரமாக நிறைவேற்ற வேண்டிஉள்ளதால்.
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் முதல் கட்டமாக அவசர நிதியாக ரூபா 1 லட்சம் நிர்வாகசபை அங்கத்தவர்கள் மூலம் சேகரித்து. உசன் வலிபர்சங்கதிற்கு அனுப்பிவைக்கபட்டது. அந்த பணம் முறைப்படி உசன் கந்தசாமி கோவில் தர்மகர்த்தாவும் சமூகஆர்வலருமாகிய திரு.கு.விமலதாஸ் அவர்களால் உசன் வலிபர்சங்கத்தின் தலைவர் ரூபன் செயலாளர் அ.பிரபாகரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
இதன் மூலம் நிதி பற்றாக்குறை காரணமாக இடை நிறுத்தப்பட்ட மயான புனரமைப்பு தொடர இருக்கிறது.இந்த அவசர நிதி சேகரிப்பில் முழுமனதோடு பங்களிப்பு செய்த நிர்வாகசபை அங்கத்தவர்களுக்கு.மனமார்ந்த நன்றிகள்.தொடர்ந்தும் பல செயல்பாடுகளை கனடா மக்கள் ஒன்றியமும் உசன் வாலிபர் சங்கமும் இணைந்து செய்யவுள்ளது .எனவே உங்கள் அரிய பங்களிப்பை மனமுவந்து செய்யுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறோம் .
 படத்தில்.
திரு கு விமலதாஸ் அவர்களிடம் இருந்து றுபன் மற்றும் பிரபா பணம் பெறுவதையும் அருகில்  துரைசிங்கம் துவாரகன், மகிந்தன் குணபாலசிங்கம் ஆகியோர் நிற்பதையும் காணலாம் .
(செய்தி தொடர்பு : சஞ்சயன்-உசன் )


Saturday, October 2, 2010

விளையாட்டில் சாதனை படைக்கும் யாழ்ப்பாணம்


தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் வட மாகாண பாடசாலை வீரர்களுக்கு மேலும் இரண்டு தங்கம், ஒரு வெண்கலம் மற்றும் 2 வர்ண விருதுகள் நேற்றுக் கிடைத்துள்ளது. தேசிய பாடசாலைகளுக்கிடையிலான தட களப் போட்டிகள் கடந்த புதன்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்ப மானது.
இதில் நேற்று நடைபெற்ற 17 வயது ஆண்கள் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி வீரர் ஏ.யஹானி றொசான் 3.35 மீற்றர் உயரம் பாய்ந்து முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார்.இதன் மூலம் அளவெட்டி அருணோதயா கல்லூரி தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் இவ் வருடம் மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றது.

அத்துடன் வெள்ளிப் பதக்கம் ஒன்றும் பெற்றுள்ளது. இதேவேளை நேற்று நடை பெற்ற தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி வீரர் வி.ஹரிகரன் 36.90 மீற்றர் தூரம் எறிந்து முதலாம் இடத்தைப் பிடித்துத் தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் இவரின் சிறந்த வெளிப்படுத்தலுக்கு வர்ண விருதும் வழங்கப்பட்டது. இதனை விட நேற்று நடைபெற்ற 17 வயதுப் பெண்கள் பிரிவு குண்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய வீராங்கனை ஆர்.தர்´கா 9.37 மீற்றர் தூரம் எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கல விருதை வென்றார்.
அத்துடன் 19 வயது ஆண்கள் பிரிவு 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரி வீரர் ஜோ.எரிக் பிரதாப் வர்ண விருது பெற்றார்.இதன் மூலம் தேசிய மட்ட தடகளப் போட் டிகளில் வட மாகாண வீர வீராங்கனைகள் நேற்று வரை 5 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் மற்றும் 2 வர்ண விருதுகளை வென்றுள்ளனர்.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமான அமைப்பாகியது

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரதமமந்திரி தெரிவுசெய்யப்பட்டதுடன் அமைச்சரவையினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் 2010 செப்ரம்பர் 29ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 1ம்நாள்வரையான மூன்றுதினங்கள் கூடி அவ்அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரியினையும் தெரிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன.

நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள்சபைக்கு அருகாமையிலுள்ள பிளாசா ஹோட்டலில் ஒன்றுகூடியுள்ள பிரதிநிதிகளுடன் பரீஸ், இலண்டன் மாநகரங்களில் உள்ள பிரதிநிதிகளும் தொலைக்காட்சி தொடர்பாடல் தொழிநுட்பத்தினூடான இணைந்தனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உரமாகிப்போன உயிர்களுக்கு மௌனாஞ்சலி செலுத்துவதுடன் அமர்வுகள் ஆரம்பமாகியது. ஐக்கிய அமெரிக்க நாட்டு முன்னைநாள் சட்டமா அதிபர் திரு.றாம்ஸி கிளார்க், மலேசிய பினாங் மாநில பிரதி முதலமைச்சர் பேராசிரியர். இராமசாமி, மனித உரிமைகள் மற்றும் முரண்பாடுகள் தீர்வு ஆகியவற்றிற்கான சர்வதேச விற்பன்னரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கான ஆலோசகரும் கொலம்பியா பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான கற்கை மையத்தின் வருகைதரும் கல்விமானுமான பேராசிரியர் எல்.பிலிப், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் வாசிங்டன் சட்டக்கல்லூரி UNROW மனித உரிமைகள் சார்ந்த சட்டமுறை நிவாரண நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.அலி பெய்டவுன் ஆகியோரின் உரைகளுடன் அமர்வு ஆரம்பமாகியது.
இவ் UNROW மனித உரிமைகள் சார்ந்த சட்டமுறை நிவாரண அமைப்பு சிறீலங்காவில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையிடம் அண்மையில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப அமர்வினைத் தொடர்ந்து முன்மொழியப்பட்ட மாதிரி அரசியல் யாப்பினை அங்கீகரிப்பதற்கு முன்னான விவாதம் என்ற சவால்மிக்க செயற்பாடு ஆரம்பமாகியது. இவ்விவாதத்தினைத் தொடர்ந்து மரபுசார்ந்த பாராளுமன்றக் கட்டமைப்பு இவ்அரசுக்கு உகந்ததெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவராக பிரதமமந்திரி செயற்படுவார் எனவும் பாராளுமன்றம் தீர்மானித்தது. அவருக்கு உதவியாக மூன்று பிரதிப் பிரதம மந்திரிப் பதவிகளும் வேறு ஏழு அமைச்சர் பதவிகளும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றம் இரண்டு அவைகளினைக் கொண்டதாக இருக்கும். இது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்ட பாராளுமன்றத்தினையும், செனற் எனப்படும் நியமன அங்கத்தவர்களினைக் கொண்ட ஆலோசனைச் சபையினையும் கொண்டிருக்கும். அவசியமான வேளைகளில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களினை மீள் அழைப்பதற்கான பொறிமுறையினை பாராளுமன்றம் கோவைப்படுத்தும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கனடாவினைச் சேர்ந்த திரு.பொன் பால்றாஜன் அவர்களினை பாராளுமன்ற சபாநாயகராகவும் சுவிற்சலாந்து நாட்டினைச் சேர்ந்த செல்வி. சுகன்யா புத்திரசிகாமணி அவர்களை பிரதி சபாநாயகராகவும் ஏகமனதாக தெரிவு செய்தது.
திரு.விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம மந்திரியாக பாராளுமன்றத்தினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.





Tuesday, September 28, 2010

வரலாற்றில் உசனின் பதிவு

யாழ்ப்பாணத்து வரலாறுகளின் உசன் கிராமம் எப்படி இடம் பிடித்தது என்பதற்கான கட்டுரை ஒன்றின் சிறிய பகுதி (நன்றி வான் தமிழ் இணையம் )

பாண்டிய நாட்டுக்குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.கோம்பிப்பிட்டி வேலணையிலும், சாத்தன்குளம் தங்கோடையிலும், சாத்தனாவத்தை தெல்லிப்பளையிலும், சுழியல் சுழிபுரத்திலும், தம்பன்வயல் மற்றும் நீராவியடி கொக்குவில், திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன.
உடுமலாவத்தை, காராமட்டை, கல்லாரை, கொங்காவோடை, சிங்காவத்தை, தொளசம்பத்தை, மானாவத்தை முதலிய பெயர்களோடு கொங்குநாட்டுக் குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன.

மகமதியர் காலத்தில் தென்மராட்சியில் உசன் பகுதியிலும், மரக்காயன் தோட்டம் நவாலிப் பகுதியிலும், துலுக்கன்புழி அல்லைப்பிட்டியிலும் மகமதியர் குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பிடித்துள்ளன.

களப்பிரர் குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. அதற்கு உதாரணமாக புலோலியில் இருக்கின்ற களப்பிராவத்தையை சொல்லமுடியும்.
கொக்குவில் பகுதியில் உள்ள இயக்குவளை மூலம் யாழ்ப்பாணத்தில் இயக்கர் குடியேற்றம் இருந்ததை உறுதிப்படுத்த முடியும்.
சாவகர்ஓடை சுழிபுரம் பகுதியிலும், சாவன்கோட்டை நாவற்குழி பகுதியிலும் மற்றும் சாவகச்சேரியும் காணப்படுவதன் மூலம் யாவகர் குடியேற்றமும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதை அறியமுடியும்.
இவற்றைவிட ஆந்திரதேசம்,கன்னடதேசம், துலுவதேசம், கலிங்கதேசம், ஒரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் சில குடியேற்றங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன.


Wednesday, September 22, 2010

உசன் வாலிபர் சங்கம் வெளியிட்ட அறிவித்தல்


உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகமும், உசன் மக்களும் இணைந்து முன்னெடுத்த ஈச்சங்காடு மயானபுனரமைப்பு பணியின் ஒரு பகுதி முடிவடைந்த நிலையில்.சங்கத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உசன் மக்கள் உவந்தளித்த நிதியின் வரவு செலவு விபரங்கள் Facebook தளத்தில்                            இணைக்கபட்டுள்ளது.

நிதி அறிக்கையை பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள்.http://www.facebook.com/group.php?gid=186838323098&v=photos&ref=search#!/photo_search.php?oid=186838323098&view=all


Thursday, September 16, 2010

தெய்வானைப்பிள்ளை(வசந்தா)அவர்களின் மரண அறிவித்தல்.

 உசனைச் சேர்ந்த திரு. திருமதி மாணிக்கம் தம்பதிகளின் மகளும், காலம்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் மனைவியுமான திருமதி. தெய்வானைப்பிள்ளை (வசந்தா) அவர்கள் Septemper 15 ம் திகதி உசனில் காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் September 17 ஆம் திகதி உசனில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மசாந்திக்காக உசன் முருகப்பெருமானை வேண்டி நிற்கிறது.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா
தொடர்புகளுக்கு: மகன் கண்ணன் 94 771879793


Sunday, September 12, 2010

விமலராஜா பிரதீகாவின் சங்கீத அரங்கேற்றம்


திரு / திருமதி. விமலராஜா தம்பதிகளின் புதல்வி செல்வி பிரதீகாவின் சங்கீத அரங்கேற்றம் September 11 ஆம் திகதி Mississauga நகரிலுள்ள Meadowvale Theatre ல் இனிதே நடைபெற்றது. செல்வி பிரதீகா சங்கீதத் துறையில் அடைந்துள்ள இந்தச் சாதனைக்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அவரை வாழ்த்துகின்றது. அவர் இந்தத் துறையில் தொடர்ந்தும் முன்னேறி உசன் கிராமத்திற்குப் பெருமை சேர்த்திட எமது நல் வாழ்த்துக்கள்.
Vocal Arangetram of Selvi Piratheeca, daughter of Mr. & Mrs. Vimalarajah, was held in Meadowvale Theatre, Mississauga on Sept. 11. United People Association of Usan in Canada congratulates Piratheeca on her achievement. It also wishes her to become the very best in this field.


Thursday, September 9, 2010

ஈச்சங்காடு மயானம் புனர் நிர்மாணிக்கபட்டு வருகிறது

உசன் மக்கள் ஒன்றியம் -கனடா வின் பூரண ஆதரவோடு உசன் வாலிபர் சங்கம் மற்றும் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகமும் இணைந்து அவசர தேவையாக எமது  ஈச்சங்காடு மயானம் புனர் நிர்மாணிக்கபட்டு வருகிறது.முதல் கட்டமாக தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சில செயல்திட்டங்கள் நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது புலம் பெயர் வாழ் உசன் மக்களே உங்களால் ஆன பங்களிப்பை உசன் கிராமம் வரவேற்கிறது . இந்த முயற்சியை திறம்பட செய்யும் உசன் வாலிபர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா தனது வாழ்த்துக்களையும். ஆதரவையும் தெரிவிக்கிறது.
மயான புனர்நிர்மான பணியின் படங்களை எமது Facebook தளத்தில் பார்க்கலாம்
http://www.facebook.com/home.php?#!/album.php?aid=37507&id=100001219521044