அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Friday, July 24, 2026

Tisya SaiSri Elankeeran - Official Guinness World Records Holder!

United People Association of Usan in Canada is incredibly proud to announce that Tisya SaiSri Elankeeran has officially become a Guinness World Records holder!

9 years young Tisya SaiSri Elankeeran, a Grade 4 student at Wendat Public School in Stouffville, Ontario, Canada, has proudly become one of the youngest participants to earn a Guinness World Record after taking part in a remarkable international blindfolded Rubik's Cube challenge. On July 11, 2026, Tisya joined fellow participants in Brampton, Ontario, alongside a larger team in Hong Kong connected through a live video link, to successfully set a new Guinness World Record for the most people simultaneously solving rotating tactile puzzle cubes at multiple venues while blindfolded. Among the participants in Brampton, Tisya distinguished herself as the youngest girl in the group. Demonstrating exceptional memory, focus, and determination, she became the second participant to successfully solve the Rubik's Cube while blindfolded during the record-setting event. The achievement marks the team's second Guinness World Record. In 2024, the group established its first world record with 398 participants completing the blindfolded challenge. Building on that success, organizers increased this year's target to 449 participants — 111 in Brampton and 338 in Hong Kong — successfully earning another place in the Guinness World Records. Tisya's accomplishment serves as an inspiration to young people everywhere, demonstrating that age is no barrier to achieving extraordinary goals through commitment, perseverance, and hard work. Her success reflects not only her individual dedication but also the encouragement and support of her family, coaches, educators, and the broader community. This international achievement brings pride to Stouffville, Brampton, and the Canadian Tamil community, specially Usan community, while showcasing the incredible potential of young minds on the global stage. Congratulations to Tisya SaiSri Elankeeran and all the participants, organizers, volunteers, and supporters who contributed to this historic Guinness World Record achievement.

Congratulations also goes to her proud parents Ilankeeran & Rohini for their guidance and support.

Way to go, Tisya. We are so proud of your achievement!



Sunday, August 18, 2024

பரத நாட்டிய அரங்கேற்றம் - மாதுமை பற்குணரஞ்ஜன்


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், நாட்டிய பூரணா, பரதகலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி மாதுமை பற்குணரஞ்ஜன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் சனிக்கிழமை, September 7, 2024 அன்று 5183 Sheppard Ave E, Scarborough, ON M1B 5Z5, ON, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Chinese Cultural Centre of Greater Toronto மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

மாலை 4:30 மணிக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படும்.  அரங்கேற்றம் சரியாக மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும்.  

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சியாமா தயாளன் அவர்கள் உசன் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.

மாதுமைக்கு  வாழ்த்து கூறும் அதேவேளை இந்த அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறி மாதுமை நடன உலகில் பிரகாசிக்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்தி நிற்கிறது.  மாதுமையின் குரு சியாமா தயாளன் அவர்களின் கலைச் சேவையையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பாராட்டுகிறது.

The Bhaarati School of Indian Classical Dance personally invites you to grace your presence at the arangetram of Mathumai Patkunaranjan on September 7th, 2024 at the Chinese Cultural Centre. Mathumai has put a tremendous amount of effort for this performance and is excited to share the next step of her dance journey with you. It would be an honour to have the blessings of your presence on this auspicious day. 

Date and Venue:
Saturday, September 7th, 2024 at 5:30 pm
(Refreshments are served from 4:30 pm to 5:30 pm).
Chinese Cultural Centre of Greater Toronto 
5183 Sheppard Ave E, 
Scarborough, ON M1B 5Z5

United People Association of Usan in Canada wishes Mathumai for a blissful event and her continued success in the future! We also wishes her Guru Shiyama Thayaalan for her methodical teaching producing talented dancers.


Saturday, November 4, 2023

"நாட்டிய தீக்க்ஷ" நடன நிகழ்வு


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "நாட்டிய தீக்க்ஷ" நடன நிகழ்வு November 19, 2023, ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது. 1785 Finch Ave W, Toronto, ON M3N 1M6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் York Woods Library Theater இல் சரியாக மாலை 5:30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். சிற்றுண்டிகள் மாலை 5 மணியிலிருந்து 5:30 மணி வரை வழங்கப்படும்.

இந்த நிகழ்வு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா, திருமதி சியாமா தயாளன் அவர்களின் தயாரிப்பு, நெறியாள்கையில் இடம்பெற உள்ளது.

இளம் நாட்டியக்கலைஞர்களின் அதீத முயற்சியால் ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இது அமைகின்றது.

பிரபலமான பக்கவாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பு நிகழ்வை மேலும் சிறப்பிக்கும்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு திருமதி சியாமா தயாளன் அவர்களும் நாட்டிய தீக்க்ஷ குழுவும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

இந்த நடன விருந்தில் கலந்து மகிழுமாறு உசன் மக்களை வேண்டிநிற்கும் அதே வேளை
"நாட்டிய தீக்க்ஷ" சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகின்றது.

Vanakkam 🙏
Bhaarati School of Indian Classical Dance proudly presents,
NATYA DEEKSHA, on November 19th. 2023. The Natya Deeksha team humbly invites you to enjoy this showcase of dance.
Our dancers have put in a tremendous amount of effort to present this event. Your esteemed presence is greatly appreciated and valued.
Date and Venue:
Sunday, November 19th. 2023 at 5.30pm
(Refreshments are served from 5:00 pm to 5:30)
York Woods Library Theater
1785 Finch Ave W, Toronto, ON M3N 1M6
Photo credit: Sirosh Antony

United People Association of Usan in Canada extends it's wishes to the young, talented artists and their guru Srimathi Shiyama Thayaalan and invites all Usan people to enjoy this showcase of dance.


Saturday, October 8, 2022

"நாட்டிய தீக்க்ஷ"நடன நிகழ்வு


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "நாட்டிய தீக்க்ஷ" நிகழ்வு October 9, 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது.  35 Fairview Mall Dr., North York, ON, M2J 4S4, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Fairview Library Theatre இல் சரியாக மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். சிற்றுண்டிகள் மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரை வழங்கப்படும். 

இந்த நிகழ்வு பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய பூரணா, திருமதி சியாமா தயாளன் அவர்களின் தயாரிப்பு, நெறியாள்கையில் இடம்பெற உள்ளது.  

இளம் நாட்டியக்கலைஞர்களின் அதீத முயற்சியால் ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இது அமைகின்றது.

பிரபலமான பக்கவாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பு நிகழ்வை மேலும் சிறப்பிக்கும்.
பாட்டு: ஸ்ரீ மயூரன் தனஞ்செயன் 
மிருதங்கம்: ஸ்ரீ அஸ்வின் பாலச்சந்திரன்
வயலின்: ஸ்ரீ ராம்பிரகாஷ் சரவணபவன்
இவர்களுடன் நட்டுவாங்கம் ஸ்ரீமதி சியாமா தயாளன் 

ரஜனி மதீஸ்வரன் தம்பதிகளின் மருமகனும், பிரதிஷ்னியின் கணவருமான மயூரன் இந்த நிகழ்வுக்கான பாடல்களைப் பாடுவது உசன் மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  நாட்டிய தீக்க்ஷ குழு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகின்றது.



Bhaarati School of Indian Classical Dance proudly presents
NATYA DEEKSHA, on October 9th. 2022.Our little dancers have put in a tremendous amount of effort to present this event. The Natya Deeksha team invites you to enjoy this showcase of dance. Please come out and support our budding dancers. 
Date and Venue:
Sunday, October 9th,2022 at 5pm
(Refreshments are from 4pm to 5pm)
At Fairview Library Theatre, 35 Fairview Mall Dr., North York, ON, M2J 4S4
The talented orchestra accompanying this show:
Vocal: Shri. Myuran Thananjeyan
Mrudangam: Shri. Ashwinn Balachandran 
Violin: Shri Ramprakash Saravanabhavan 
Nattuwangam: Smt. ShiyamaThayaalan

United People Association of Usan in Canada wishes the young dancers the very best!  Also congratulates Shiyama for her continued effort promoting our culture.


Thursday, July 14, 2022

அரங்கேற்றம்!



பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரதகலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி துர்க்கா சிவகுமார் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் ஞாயிற்றுக்கிழமை, July 17, 2022 அன்று 10268 Yonge Street, Richmond Hill, L4C 3B7, ON, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Richmond Hill Center for the Performing Arts மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

மாலை 4 மணிக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படும்.  அரங்கேற்றம் சரியாக மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும்.  

பெருந்தொற்றுக்குப் பின்னதான முதலாவது அரங்க நிகழ்வாக இது அமையவிருக்கிறது.  இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சியாமா தயாளன் அவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.

துர்கா சிவகுமாருக்கு வாழ்த்துகள் கூறும் அதேவேளை இந்த அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்தி நிற்கிறது.





Sunday, December 5, 2021

மதிப்பளிப்பு நிகழ்வு

உசன் கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து உசன் கிராம அலுவலர் அகல்யா வருண்ராஜ் அவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்ச்சியினை 21.11.2021 அன்று
யா/உசன் இராமநாதன் மகாவித்தியால மண்டபத்தில் மாலை 4 மணிக்கு திரு அ.கஜீவன் தலைமையில் நடாத்தியுள்ளனர்.
தென்மராட்சி மட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டி 2020 இல் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டதற்காகவும், உசன் கிராமத்துக்கு அவர் வழங்கி வரும் சிறப்பான சேவைக்காகவும் இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நிர்வாக கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலகம் தென்மராட்சி த.அருந்தமிழ்ச்செல்வன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மழலைகளால் தேவாரம் இசைக்கப்பட்டதையடுத்து உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குரு சொல்வாக்குச் சித்தர் கேதீஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசியுரை இடம்பெற்றது. செல்வன் மு. ஜதுர்ஸன் அவர்களால் உசன் கீதம் இசைக்கப்பட்டது.
வரவேற்புரையை செ. ஜதிகேசன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமையுரை விழாத் தலைவர் அ.கஜீவன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து திரு.கு. கமலதாஸ், திரு.சு. சற்குணநாதன், திரு.இ. முருகதாஸ் மற்றும் வித்தியாலய முதல்வர் திரு சண்முகதாசன் ஆகியோரால் சிறப்புரைகள் வழங்கப்பட்டன.
தொடர்நது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வின் வாழ்த்துச் செய்தி அ. கஜானன் அவர்களால் சபையில் வாசிக்கப்பட்டது.
பிரதம விருந்தினர் அவர்களின் உரையைத் தொடர்ந்து மதிப்பளிப்பு இடம்பெற்றது. முன்னைநாள் கிராம உத்தியோகத்தரும், எமது கிராமத்தவருமாகிய சுசீலாவதி செல்வநாயகம் அவர்கள் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்க, திருமதி சி. பிரபாகரன் மற்றும் திருமதி த.சிவகுமாரன் ஆகியோரால் மாலை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது.
நினைவுச் சின்னம் பிரதம விருந்தினரால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து கிராம அலுவலர் அகல்யா வருண்ராஜ் அவர்களால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது.
ந. ஜதுர்ஸன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டதையடுத்து கிராம மக்கள் பலரும் கிராம அலுவலரை வாழ்த்தி கலந்துரையாடினர்.
வாழும்போதே வாழ்த்துவோம் என்ற கருப்பொருளுக்கமைய இந்த நிகழ்வு இடம்பெற்றது. உசன் கிராமமட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து இந்நிகழ்வை முன்னெடுத்தது ஒரு முன்மாதிரியாக அமைந்தது.































Friday, November 5, 2021

இன்னும் சில மணி நேரத்தில்...............

இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பமாக இருக்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மகிழ்வுடன் வழங்கும் சர்வதேச இணைய விழா "உசன் ஒருங்கிணையம்". இங்கே தரப்பட்டுள்ள இணைப்பினூடாக இணைந்து கொள்ளுங்கள். Join Zoom Meeting https://us02web.zoom.us/j/85638999908?pwd=dDVjK01UWC9haVZwcTBBSkR1ditTUT09 Meeting ID: 856 3899 9908 Passcode: usanpeople ஆரம்பிக்க இருக்கும் நேரம்: 8 a.m. EDT; 12 noon UK; 1 p.m. Europe; 5:30 p.m. Sri Lanka; 11 p.m. Sydney, Australia (இலண்டன், ஐரோப்பா, மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளின் நேர மாற்றத்தைக் கருத்தில் கொண்டே மேற்படி நேரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.) இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! நன்றி. நிர்வாகசபை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Saturday, October 16, 2021

இளம் பாடகர்களை வாழ்த்துகிறோம்!


உசன் மண்ணைச் சேர்ந்த இன்னுமொரு சிறுமியின் இசைப் பிரவாகம் மனதைத் தொட்டுச் செல்கிறது. இளங்கீரன் - ரோகினி தம்பதியினரின் மகள் தியானா இளங்கீரன் தனது உடன் பிறவாச் சகோதரிகள் திருத்திகா சுகர்ணன் (UK) மற்றும் மதுஷிகா சுகர்ணன் (UK) ஆகியோருடன் இணைந்து வெளியிட்டுள்ள முதலாவது இசைக் காணொளி "கோடி தரம் பாடும் வரம்" விஜயதசமி தினமான October 14 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இசைக் குடும்பத்தின் வாரிசான தியானா தன் இசைத் திறமையை மென்மேலும் வளர்த்து திருத்திகா மற்றும் மதுஷிகா ஆகியோருடன் உச்சத்தைத் தொட உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகிறது.

நல்ல பாடல் வரிகள், நயமான இசையமைப்பு, அழகிய படப்பிடிப்பு, நேர்த்தியான ஒளிப்படத் தொகுப்பு, இனிமையான குரல் வளம் நிறைந்த இந்த இசைக் காணொளியை நீங்களும் பார்த்துப் பரவசமடைவதோடு இந்த இளம் கலைஞர்களுக்கு உங்கள் மனம் நிறைந்த வாழ்த்தைத் தெரிவியுங்கள்.


இவரின் பெற்றோர் கீரன், ரோகா மற்றும் தாய் வழிப் பெயர்த்தியார் ரஞ்சி வெற்றிவேலு மூவரும் இசைக் கலைஞர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Saturday, April 3, 2021


உசன் மண்ணில் இருந்து முதலாவதாக இலங்கை நிர்வாகசேவையில் உயர் பதவி ஒன்றை அலங்கரித்த பெருமையை இன்று திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர உத்தியோகத்தரான ஜே.எஸ்.அருள்ராஜ் தமது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்று பெற்றுகொண்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர் 2003 ம்ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

கிண்ணியா, சேருவல பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், முன்னர் இருந்த வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையை பதவியேற்க முன்னர் இவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் அரச அலுவலர்கள் கலந்து சிறப்பித்தார்கள். 

இவர் தொடர்ந்தும் பல பதவி உயர்வுகளை பெற்று மேலும் உயர்ந்து மண்ணுக்குபெருமை சேர்க்க எமது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.

(இது ரூபன் அவர்களின் பதிவாகும்.)

இவர் உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் ஜோன்பிள்ளை அவர்கள் மற்றும் பொன்னம்மா ஆசிரியை ஆகியோரின் மகனாவார்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.


Tuesday, October 20, 2020

"பாவிசை" சிறுவர் பாடல் தொகுதி


உசனைச் சேர்ந்த ஆசிரியர், கவிஞர் நந்தினி ஜென்சன் றொனால்ட் அவர்களின் படைப்பாக வெளிவருகிறது "பாவிசை" சிறுவர் பாடல் தொகுதி.  தரம் ஒன்று முதல் தரம் 5 வரை கல்வி பயிலும் மாணவர்களை மனதில் நிறுத்தி இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடலூடான கல்வி என்னும் முறையில் இளவயது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்நூலிலே சிறுவர் பாடல்கள் இருபத்தியிரண்டுடன், சுற்றாடல் பாடத்திட்டத்தின் 16 அலகுகளுக்கும் அலகுக்கு ஒரு பாடல் என்ற அடிப்படையில் 16 பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறுவர் பாடல் தொகுதிக்கு தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த. கிருபாகரன் அவர்கள் ஆசியுரை வழங்கியுள்ளார்.


இந்தப் புத்தகத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அதன் ஆசிரியர் திருமதி நந்தினி உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்தினூடாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் அனுசரணையை வேண்டி நிற்கிறார். இந்த நூலைப் பணம் கொடுத்து வாங்க முடியாத மாணவர்களுக்கு அனுசரணை மூலம் இந்த நூலை வழங்கி அந்த மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதே ஆசிரியரின் நோக்கமாக உள்ளது.

இந்த நல்ல நோக்கத்திற்கு உதவ விரும்பும் புலம் பெயர் நலன் விரும்பிகள் ஒன்றியத்தின் செயலாளர் விஜயகுமாரி புஷ்பராஜாவையோ அன்றி தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரனையோ தொடர்புகொண்டு தமது பங்களிப்பை வழங்க முடியும். உசனில் தமது பங்களிப்பை வழங்க விரும்புவோர் உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலக இணைப்பாளர் சரவணை செல்வராசா அவர்களினூடாக பங்களிக்க முடியும்.

இந்த உதவியை October மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பாக வழங்குமாறு வேண்டுகிறோம்.



ஆசிரியர், கவிஞர் நந்தினி அவர்களுக்கு இந்த நேரத்திலே உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.





Friday, January 31, 2020

மிக சிறப்பாக நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டி -2020

 உசன் இராமநாதன் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி பாடசாலை மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது . பாரம்பரிய இன்னிய வாத்திய குழுமத்தின் வரவேற்புடன் நிகழ்வு ஆரம்பமானது.
பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற போட்டியில் அதிகளவு மக்களும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டு வீரர்களுக்கு உற்சாகம் வழங்கினான்ர்கள் .
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய தலைவரும் பாடசாலையின் பழைய மாணவனுமான திரு.சுப்ரமணியம் பாஸ்கரன் நேரடியாக கலந்து கொண்டார் .
அவுஸ்டேலியாவிலிருந்து வருகை தந்திருந்த பழைய மாணவன் திரு.ஜெயந்தன் கௌரவ விருந்தினராக கலந்து விளையாட்டு போட்டியை சிறப்பித்திருந்தார்.
இந்த விளையாட்டு போட்டி நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது
மனமார்ந்த நன்றிகள்