அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, February 23, 2018

உசனை சேர்ந்த செல்வி.லக்‌ஷி சசிகுமார் அவர்கள் காலமானார் ....

உசனை சேர்ந்த தாமோதரம்பிள்ளை மீரா (மீரா சசிக்குமார்) அவர்களின் மகள் செல்வி.லக்‌ஷி சசிகுமார் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
அன்னார், சசிகுமார்(நயினாதீவு), பக்தமீரா(உசன்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,லவ்சிகா அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த இளம் மகளின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் எமது அனுதாபங்கள் .செல்வி.லக்‌ஷி  யின் ஆத்மா சாந்தியடைய உசன் முருகனை பிரார்த்திக்கிறோம்

தகவல்
சசிக்குமார், பக்தமீரா
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/02/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: UKBB Spitalstrasse 33, 4056 Basel, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/02/2018, 03:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: UKBB Spitalstrasse 33, 4056 Basel, Switzerland
கிரியை
திகதி: புதன்கிழமை 28/02/2018, 10:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland 


Wednesday, February 21, 2018

"உசன் மண்ணின் மைந்தனின் திறமை உலகெல்லாம் பரவ ஒத்துழைப்போம்"


எமது பிறந்த ஊரான உசன் மண்ணுக்கும்   அபிவிருத்தி பணிகளுக்கும் மாணவர் கல்வி வளர்ச்சிக்கும்
கனடா வாழ் உசன் மக்களின் ஆணிவேராக இயங்கும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துக்கும்
நிதி உதவி வழங்கிவரும் சமூக ஆர்வலர் Dr.இந்திரன் ஆசிர்வாதம் அவர்களின் தயாரிப்பில் .வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை திரைப்படம் ஒன்று தயாராகியுள்ளது .
" ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல " என்னும் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார் , படத்துக்கு A.R .ரகுமான் அவர்களின் .சகோதரி  A.R .ரெஹானா அவர்கள் இசையமைத்துள்ளார் .
இந்த திரைப்படம் இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரும் நிலையில் சர்வதேச ரீதியில் தமிழர்கள் வாழும் இடங்களிலும் வெளியிடப்படவுள்ளது .
கனடாவில் வரும் சனி ஞாயிறு திங்களில் woodside  சினிமாவில் காண்பிக்கப்படவுள்ளது .
எமது உசன் ஊரை பூர்வீகமாக கொண்டு எமக்கு அதிகளவில் நிதியுதவி வழங்கி எமது உசன் ஊரை வளர்த்துவரும் Dr.இந்திரன் அவர்களின் இந்த திரைப்படம் வெற்றியடைய அனைத்துலக உசன் மக்களும் உங்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் இது .
உங்களுக்கு அருகில் திரையிடப்படும் இந்த திரைப்படத்தை அனைவரும் கண்டுகளித்து . திரைப்படத்தை வெற்றியடைய வைக்குமாறு கனடா உசன் மக்கள் ஒன்றியம் வேண்டி நிக்கிறது .
கனடா வாழ் உசன் மக்கள் உங்கள் தார்மீக நன்றி உணர்வை வெளிப்படுத்த திரைப்பட Ticket தொடர்புகளுக்கு
தலைவர் : திரு. பாஸ்கரன் சுப்பிரமணியம் அவர்களையே அல்லது Dr.இந்திரன் ஆசிர்வாதம் அவர்களையோ தொடர்பு கொள்ளலாம் .
எதிர்வரும் சனி ஞாயிறு திங்களில் woodside  சினிமாவில் கனடா வாழ் உசன் மக்கள் அனைவரையும் திரளாக வருமாறு வேண்டுகிறோம் .
"உசன் மண்ணின் மைந்தனின் திறமை உலகெல்லாம் பரவ ஒத்துழைப்போம்"

நன்றியுடன்
கனடா உசன் மக்கள் ஒன்றியம்  .




Sunday, February 18, 2018

உசன் இராமநாதன் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு

உசன் இராமநாதன் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு February 2, 2018, வெள்ளிக்கிழமை அன்று பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வைத்தியலிங்கம் இல்லம், நடேசன் இல்லம் மற்றும் சிற்றம்பலம் இல்லம் ஆகியவற்றுக்கிடையே போட்டிகள் இடம்பெற்றன.

வைத்தியலிங்கம் இல்லம் 324 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.  நடேசன் இல்லம் 303 புள்ளிகளையும், சிற்றம்பலம் இல்லம் 235 புள்ளிகளையும் பெற்று இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.


 அணிநடைப் போட்டியில் வைத்தியலிங்கம் இல்லம் முதலாம் இடத்தையும், நடேசன் இல்லம் இரண்டாம் இடத்தையும், சிற்றம்பலம் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.


ஆண்களுக்கான சிறந்த அஞ்சலோட்டக் குழுக்களில் வைத்தியலிங்கம் இல்லம் முதலாம் இடத்தையும், நடேசன் இல்லம் இரண்டாம் இடந்த்தையும் சிற்றம்பலம் இல்லம் மூன்றாம் இடைத்ததையும் பெற்றுக்கொண்டன.

பெண்களுக்கான சிறந்த அஞ்சலோட்டக் குழுக்களில் சிற்றம்பலம் இல்லமும், வைத்தியலிங்கள் இல்லமும் தலா 17 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டன.










இடம்பெற்ற போட்டிகளில் அதி சிறந்த வீரர்களாகப் (Champions) பின்வருவோர் வெற்றியீட்டினர்:


12 வயது ஆண்கள் - நடேசன் இல்லத்தைச் சேர்ந்த சி. சீராளன்
12 வயது பெண்கள் - வைத்தியலிங்கம் இல்லத்தைச் சேர்ந்த செ. சங்கவி

14 வயது ஆண்கள் - நடேசன் இல்லத்தைச் சேர்ந்த சி. சிந்துஜன்
14 வயது பெண்கள் - நடேசன் இல்லத்தைச் சேர்ந்த ப. வினோஜா

16 வயது ஆண்கள் - வைத்தியலிங்கம் இல்லத்தைச் சேர்ந்த சு. சந்தோஸ்
16 வயது பெண்கள் - சிற்றம்பலம் இல்லத்தைச் சேர்ந்த சி. பவித்திரா

18 வயது ஆண்கள் - வைத்தியலிங்கம் இல்லத்தைச் சேர்ந்த கு. லக்சன்
18 வயது பெண்கள் - வைத்தியலிங்கம் இல்லத்தைச் சேர்ந்த க. சாயித்தியா
18 வயது பெண்கள் - நடேசன் இல்லத்தைச் சேர்ந்த இ. தவநந்தினி

20 வயது ஆண்கள் - சிற்றம்பலம் இல்லத்தைச் சேர்ந்த சு. கீர்த்தனன்
20 வயது பெண்கள் - நடேசன் இல்லத்தைச் சேர்ந்த ம. கம்சினி

இந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு சிறப்பாக நடைபெற அதிபர் த. சோதிலிங்கம் அவர்கள் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் முன்னின்று நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்தது.  சுவேந்திரநாதன் அஜந்தகுமார் மற்றும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் நிதி உதவியோடு இந்த நிகழ்வு இடம்பெற்றது.





















நன்றி: தகவல் மற்றும் படங்கள் - கஜீவன்.




108 கலசாபிஷேக ஸ்கந்த ஹோம பெருவிழா


உசன் கந்தசுவாமி கோவிலில் 108 கலசாபிஷேக ஸ்கந்த ஹோம பெருவிழா ஞாயிற்றுக்கிழமை, February 18, 2018 அன்று சிறப்பாக நடைபெற்றது.  உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குரு அருள்வாக்குச் சித்தர் குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகள் தலைமையில் பல சிவாச்சாரியார்கள் கலந்து சிறப்பித்தனர்.  இந்த நிகழ்விலிருந்து சில படங்கள்.