அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, March 21, 2016

Usan Sports Club பூப்பந்தாட்ட வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2016 ஆம் ஆண்டுக்கான சுற்றுப் போட்டி March மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒவ்வவொரு நாட்டில் ஒழுங்கு செய்யப்படும் இந்தப் போட்டி இந்த வருடம் ஜேர்மனிய நகரமான Willich இல் இடம் பெற உள்ளது.

UK, Germany, Holland, Canada, Sweden, France, Denmark, USA, Norway, Switzerland, Australia மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர். கனடாவில் இருந்து 30 போட்டியாளர்கள் வரை கலந்துகொள்ள உள்ளனர். இவர்களில் Usan Sports Club ஐச் சேர்ந்த நான்கு வீரர்களும் போட்டியிட உள்ளனர். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் திரு. கனகசபை நகுலன், விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர்கள் திரு. இராசரத்தினம் உமாபதி, திரு. நவரத்தினம் சிவகுமார் மற்றும் பொருளாளர் பிரியலதா அவர்களின் மகன் செல்வன் கேதீஸ்வரன் விதுரன் ஆகியோரே வெற்றிவாகை சூடி வரவுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நடத்திவருகின்ற பூப்பந்தாட்டப் பயிற்சியில் நீங்களும் பயிற்சி பெற்று வரும் வருடங்களில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற முடியும்.

இந்தப் போட்டி தொடர்பான மேலதிக தகவல்களை www.wtbf.net என்ற இணையத் தளத்தில் அல்லது முகப்புப் புத்தகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
Photo Curtsey: eKuruvi


Thursday, March 17, 2016

மரண அறிவித்தல்.....

உசனை சேர்ந்த ஸ்ரீரஞ்சினி (பேரம்பலம் ஆசிரியர் மகள் ) அவர்களின் அன்பு மாமியார் திருமதி .நல்லதம்பி மனோன்மணி அவர்கள் கனடா மொன்றியலில் காலமானார் .
இவ் அறிவித்தலை உசன் வாழ் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் ,அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் .

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்



Saturday, March 12, 2016

உசனில் பங்குனி மாத "முழு நிலாநாள் கருத்தரங்கு"....

உசன் கிராம அபிவிருத்தி சங்கமும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் இணைந்து உசன் மக்களினதும் மற்றும் அயல் கிராமமக்களினதும் பயன் கருதி முழு நோன்மதி தினங்களிலே நடைபெற்றுவரும் தொடர் கருத்தரங்குகள் வரிசையில்  வரும் 22.03.2016 செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு உசன் இராமநாதன் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் "மாறிவரும் தமிழர் பாரம்பரிய பண்பாடு "எனும் தலைப்பில் தென்மராட்சிமண்ணை சேர்ந்தவரும் யாழ்பல்கலைக்கழக பௌதீகவியற்துறை பேராசிரியருமான உயர்திரு க.கந்தசாமி அவர்களால் கருத்துரை வளங்கப்படஉள்ளது..எனவே அனைத்து ஆர்வலர்களையும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.






Sunday, March 6, 2016

சிறப்பு மதிப்பளிப்பு

கடந்த January மாதம் நடைபெற்ற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் "உசன் உறவுகள் 2015" நிகழ்வில் ஒரு சிறப்பு மதிப்பளிப்பு இடம்பெற்றது. ஒன்றியத்தின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனது ஆத்மார்த்தமான ஆதரவை வழங்கி வரும் திரு. நல்லதம்பி பத்மநாதன் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இந்தச் சிறப்பு நிகழ்வை Total Debt Free Credit Solution ஐச் சேர்ந்த Certified Insolvency Counselor, இளங்கீரன் தங்கவேலாயுதம் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்.

ஒவ்வொரு கோடைகால ஒன்றுகூடலிலும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தனது தன்னலமற்ற சேவையினால் சுவைமிகு உணவைத் தயாரித்து வழங்குபவர் நல்லதம்பி பத்மநாதன் அவர்கள். BBQ விற்குத் தேவையான கோழிகளை வாங்கி, அவற்றைப் பதப்படுத்தி, நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு எடுத்துவந்து, அதை தரமான முறையிலே வேகவைத்து, நிகழ்வு தொடங்கி முடியும்வரை BBQ பகுதியிலேயே நின்று வயது வேறுபாடின்றி வந்திருக்கும் ஒவ்வொருவரையும் உபசரித்து மகிழும் இவரது சேவையைப் பார்த்து வியந்துபோன கீரன் அவர்கள் இந்தச் சேவையைப் பாராட்டியே ஆகவேண்டும் என்று எண்ணம் கொண்டார். ஒன்றியத்தை அணுகித் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இந்தப் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வை மிகவும் இரகசியமான முறையில் செயற்படுத்த வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுதலுக்கு மதிப்பளித்து, இந்தச் சிறப்பு மதிப்பளித்தல் நிகழ்வு கடந்த குளிர்கால ஒன்றுகூடலில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வை அங்கு வந்திருந்த அனைவரும் வாழ்த்தி வரவேற்றனர்.

தனது சேவையால் உசன் மக்களை மகிழவைத்துக்கொண்டிருக்கும் பத்மநாதன் அவர்களுக்கும், அவருக்கு தமது ஆதரவை வழங்கும் மனைவி மற்றும் மகளுக்கும், இந்தச் சேவையைப் பாராட்ட முன்வந்த கீரன் அவர்களுக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.


Wednesday, March 2, 2016

கனடா உசன் மக்கள் ஒன்றியம் விடுக்கும் அவசர அழைப்பு ....

அன்பான கனடா வாழ் உசன் மக்களே !
இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவத்துறை  மாணவியான வித்தியாவை  காப்பாற்ற அவசர உதவி கோருகிறோம் , 
அவருக்கு ஒத்தபரம்பரை இரத்த  மாதிரி உள்ளவர்களை கண்டுபிடிக்கவேண்டியுள்ளது 
நீங்கள் நன்கொடை வழங்க விரும்பாவிட்டாலும் உங்கள் மாதிரியை பரிசோதித்தால் பின்னர் அதை ஒத்த உங்கள் உறவினர்கள் யாரையாவது கண்டிபிடிப்பது இலகுவானது 
 கனடா வாழ் உசன் மக்களே உங்களுக்கு இந்த மனிதாபிமான பணியில்  இணைய விரும்பினால் 
,இந்த தளத்தில் இது தொடர்பான விபரங்களைபெறுவதுடன் , பதிவையும் செய்யலாம் .
https://www.blood.ca/en/stem-cell/donation-process
உங்களுக்கு அருகில் இருக்கும் நிலையத்துக்கு சென்றால் உங்களின் "உமிழ்நீர் '(எச்சில் ) மாதிரியை மட்டும் எடுப்பார்கள் , பின்னர் , தற்பொழுது உலகளவில் அவசர நிலையில் இருக்கும் வித்தியாவின் மாதிரியுடன் ஒப்பிட்டால் உங்களுக்கு அறியதருவார்கள் . இது மிகவும் இலகுவான நடைமுறை , உங்களுக்கு  எந்த பதிப்பும் ஏற்பட போவதில்லை , அது மட்டுமன்றி உங்களுக்கு எதிர்காலத்தில் எதாவது மற்று தேவைப்பட்டால் கூட மிக இலகுவில் உங்கள் மாதிரியை ஒத்த நபரை இந்த அமைப்பு ஏற்கனவே கண்டுபிடித்து வைத்திருக்கும் , 

உங்கள் மாதிரியை கொடுக்க  blood donation நிலையங்கள் நிரந்தரமாக இருக்கும் இடங்களை நாட முடியும் அதைவிட நடமாடும் சேவையாக நடைபெறவுள்ள இடங்களின் விபரம் .

The Church Of St. Patrick - Markham
5633 Highway #7, East
Markham | L3P 1B6
Next availability:
Mar 4, 2016


Hillcrest Mall
9350 Yonge St.
Richmond Hill | L4C 5G2
Next availability:
Mar 3, 2016

Cedarbrook Community Centre
91 East Park Blvd.
Scarborough | M1H 1C6
Next availability:
Mar 19, 2016


University Of Toronto - Scarborough Campus
1265 Military Trail
Scarborough | M1C 1A4
Next availability:
Mar 31, 2016



Tuesday, March 1, 2016

உசன் கந்தசுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்

உசன் கந்தசுவாமி கோவிலில் அமைக்கப்பட்டுவரும் நூதன இராஜகோபுர அமைப்பு வேலைகளும் , ஆலய புனருத்தாரண வேலைகளும் நிறைவடயும் நிலையில் எதிர்வரும் பங்குனி மாதம் 14 ம் திகதி கிரிகை ஆரம்பமாகி  நடைபெற திருவருள் கூடியுள்ளது, 17 ம் திகதி  எண்ணை காப்பும் 18ம் திகதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று ,தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெறும், இந்த காலத்தில் உசன் முருகபெருமான் அடியார்கள் அனைவரும் வழிபாடுகளில் கலந்து எம்பெருமான் அருள் பெறுமாறு வேண்டுகிறோம் , ஆலய திருப்பணிக்கும் சிறப்பு மிக்க இராஜகோபுர திருப்பணிக்கும் வாரிவழங்கிய அனைத்துலகமக்களுக்கும் ,
சகலவழிகளிலும் உறுதுணையாய் நின்ற உசன் அடியார்களுக்கும் மனமார்ந்த நன்றியும் , எம் பெருமான் அருளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் .

நன்றி 
தர்மகர்த்தா