அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, January 30, 2012

திருமண வாழ்த்துக்கள்


உசனை சேர்ந்த திரு திருமதி சின்னத்துரை தம்பதிகளின் புதல்வன் திருகரன் (திரு ) அவர்களுக்கும் ஏழாலையை சேர்ந்த திரு திருமதி தர்மராஜா அவர்களின் புத்திரி செல்வி தனுஜா அவர்களுக்கும் . ஜனவரி மாதம் 29 ம திகதி .
கனடா டொராண்டோவில் பெரியோர்கள் முன்னிலையில் திருமண வைபவம் இனிதே நடைபெற்றது .மணமக்கள் உசன் முருகபெருமான் அருளோடு சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறோம் .





கருத்து கணிப்பு

உசன் இராமநாதன் மஹா வித்தியாலய கிழக்கு  வீதி மதில் புனரமைப்பு நடைபெற்று வருகிறது .இம் முயற்சி கனடா வாழ் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களினால் நிதி உதவி வழங்கி நடைபெற்று வரும் வேளையில் . இம் முயற்சியால் நீண்ட காலமாக இப்பகுதியில் வியாபார நிலையமைத்து வரும் சங்கக்கடைக்கு உரிய பாதை மூடப்படுள்ளது . இதனால் மாணவர்கள் பாதிப்பதுடன் பரம்பரையாக  அதில் வியாபாரம் செய்யும்
 திரு மனோ அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார் .இது குறித்து அந்த பகுதியில் மாணவர்கள் நலன் கருதி ஒரு பதை அமைக்கும் வேண்டுகோள்;விடுக்கப்பட்டும்
அது நிராகரிக்கப்பட்ட நிலையில் . இது குறித்து அனைத்துலக உசன் வாழ் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்படுகிறது .
உங்கள் கருத்துகளின் அடிப்படையில்
நீண்ட காலமாக மாணவர்களுக்கு வசதியாக அமைந்த சங்கக்கடை பாதை மூடுவதா ???? இல்லை பரம்பரையாக சேவை  செய்துவரும் கடைக்கு பாதை அமைப்பதா ??? உங்கள் வாக்கை பதியுங்கள் ...
 www.usan.ca 


Saturday, January 28, 2012

மரண அறிவித்தல்

உசனைச் சேர்ந்த திரு.வல்லிபுரம் வேலுப்பிள்ளை அவர்கள் ஜனவரி மாதம்    26 ம்   திகதி கனடாவில் காலமானார். அன்னார் காலம் சென்ற வல்லிபுரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகனும் காலம் சென்ற சரவணமுத்து நாகமுத்து தம்பதிகளின் மருமகனும், உசன் நல்லதங்கத்தின் அன்புக் கணவரும் , திருஞானம் (சுவிஸ்), பரம்சோதி(கனடா), சிவகரன் (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும் சொர்ணேஸ்வரி ,சரோஜினிதேவி, நளாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் ஜனவரி மாதம் 28 ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் 9  மணிவரை 4164 Shepperd  Ave  E  ல் அமைந்துள்ள Ogden Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 10  மணி முதல் 12  மணிவரை அதே இடத்தில் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று 12 .30 மணியளவில் 256 Kingston Road  ல் அமைந்துள்ள St.Johns Norway Cemetery and Crematorium ல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை ஏற்கும்படி உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல் 
மகன்மார்:
சிவஞானம் (சுவிஸ்) 0041616929631
பரம்சோதி 647 -202 -0974 
சிவகரன்: 416-841- 9247



Friday, January 27, 2012

மரண அறிவித்தல்

 உசனை வதிவிடமாகவும்சாவகச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகவும் கொண்ட 
திரு வல்லிபுரம் வேலுப்பிள்ளை (கோவிலடி )அவர்கள் இரவு Toronto கனடா வில் காலாமானார் .
அன்னார திருஞானம் பரம்சோதி மற்றும் வீடு விற்பனை முகவர் சிவகரன் அவர்களின் அன்பு தந்தையாரும் ஆவர் ..........
மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும் ...
அன்னாரினின் மறைவினால் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த துயர் கொள்கிறோம் .........
இவ் அவசர அறிவித்தலை அனைவரும் ஏற்குமாறு வேண்டுகிறோம் ..
தகவல் ...
மகன்மார் 
பரம்சோதி 
சிவகரன் ----416-841-9247


Thursday, January 26, 2012

உசன் உறவுகள் கலை நிகழ்வு

கனடா வாழ்  உசன் மக்களினால் வருடம் தோறும் நடத்தப்படும் உசன் உறவுகள்
நிகழ்வின் 2011 ம் ஆண்டுக்கான நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
இன் நிகழ்வில் கனடா வாழ் உசன் இளம் சமுதாயத்தின் கலை நிகழ்ச்சிகள் 
சிறப்பாக நடை பெற்றன . இன் நிகழ்வின் படத்தொகுப்பை 
இத்தளத்தில் காணலாம்.
படப்பிடிப்பு : நகுலன் இளையதம்பி






மேலதிக படங்கள்:https://picasaweb.google.com/usanphotos/2011#slideshow/5701774082500533074


Sunday, January 22, 2012

கனடாவில் நடைபெற்ற உசன் "மூத்தோர் மதிப்பளிப்பு" நிகழ்வு

உசனில் வாழ்ந்து வளர்ந்து தற்போது கனடாவில் வசித்துவரும் "உசன் மூத்தோர்களை " இளையவர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு உசன் கனடா ஐக்கியமக்கள் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த December மாதம் 17 ம் திகதி உசன் உறவுகள் நிகழ்வில் நடைபெற்றது.
உசன் கிராமத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த பெரியவர்களை கௌரவபடுத்தும் முகமாக இன் நிகழ்வு நடைபெற்றது . இவர்களை பொன்னாடை போர்த்தி மதிப்பளித்ததுடன்.இளைய சமுதாய பேரக்குழந்தைகள் தமது மூத்தோர் பற்றிய கருத்துகளையும் வாழ்த்துகளையும் அவர்களின் சேவைகள் பற்றியும் கருத்துகளை பரிமாறினார். 
இன் நிகழ்வின் சில காட்சிப்பதிவுகள் இங்கே :

படங்கள் :நகுலன் இளையதம்பி 




மேலதிக படங்கள் இங்கே :
https://picasaweb.google.com/usanphotos/hGJXRH


Thursday, January 19, 2012

கனடாவில் "சியாமா தயாளனின்" மாணவிகள் முன்னிலையில்

உசன் உறவுகள் 2005  நிகழ்வில்  -சியாமா தயாளன்..
கனடாவில் TVI நிறுவனத்தால் நடத்தப்பட்ட" நடனத்தாரகை "(The Next Dance Stars )
போட்டி நிகழ்ச்சி மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது .இதில் கனடா வாழ் பெருமளவு மாணவிகள் கலந்து போட்டியிட்டனர். 
இறுதிப்போட்டியில் நடனத்தாரகையாக முதலாமிடத்தை மதும்தா பாஸ்கரனும், இரண்டாம் இடத்தை கீர்த்தனா கதிர்காமநாதனும் பெற்றுக்கொண்டனர் .
இருவரும் "பாரதி இந்திய சாஸ்திரிய நடனக்கல்லூரி "ஆசிரியை திருமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவிகள் ஆவர். . 
திருமதி சியாமா தயாளன் உசனைப் பூர்விகமாகக் கொண்டவர்  என்பதுடன் உசன் உறவுகள் நிகழ்வுக்கு நடன நிகழ்ச்சிகள் வழங்கிப் பாராட்டுகள் பெற்றுள்ளார்.
திருமதி சியாமா தயாளன் அவர்களின் முயற்சிக்கும் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் அனைத்துலக உசன் மக்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் கலைப் பணி தொடர எமது வாழ்த்துக்கள் .


செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரன் அவர்களை "வாழ்த்துகிறோம்"


உசனைச் சேர்ந்த திரு. திருமதி நவரத்தினம் உமாமகேஸ்வரி தம்பதிகளின் பேத்தியும், கனடாவில் வசிக்கும்  திரு. திருமதி மதீஸ்வரன் ரஜனி தம்பதிகளின் புதல்வியுமான செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரன் அவர்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரி January மாதம் 20 ம் திகதி வெள்ளிக்கிழமை Toronto (Canada) ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.  
திருமதி கமலா சண்முகலிங்கத்தின் மாணவியான செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரன் வாய்ப்பாட்டு ஆசிரியர் தரம் பயின்றதுடன், வயலின், பரதநாட்டியம் ஆகிய கலைகளிலும் சிறந்து விளங்குகிறார். புலம் பெயர் நாட்டில் எமது பாரம்பரிய கலைகளைப் பயில்வதிலும், வளர்ப்பதிலும், உசனைச் சேர்ந்த இளம்தலைமுறை ஆர்வம் கொள்வது பெருமை தருகிறது. 
செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரன் "உசன் உறவுகள்-2011 " நிகழ்வில் இசை, நடன நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
நடக்க இருக்கும் இந்த நிகழ்வில் இசை ஆர்வலர்களையும், உசன் உறவுகளையும் கலந்துகொண்டு பிரதிஷ்னிக்கு உற்சாகம் வழங்குமாறு வேண்டுவதுடன், இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் 
உசன் முருகன் ஆசிகிடைக்கவும் வேண்டுகிறோம்.