அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, September 26, 2013

அரங்கேறியது உசனில் ஊற்றெடுத்த சங்கீத சாரல் .....

 உசனைசேர்ந்த திரு, திருமதி நவரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் பேத்தியும்
திரு திருமதி மதீஸ்வரன் ரஜனி அவர்களின் மகளும்மாகிய  செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரனின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் September மாதம் 21 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு, சனிக்கிழமை அன்று Toronto, கனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .பிரபல்யம் வாய்ந்த  Armenian Youth Centre கலையரங்கில் சங்கீத அரங்கேற்றம் ஆரம்பமானபொது 
அரங்கு நிறைந்த ரசிகர்கர்களும் சங்கீத வித்துவான்கள், கலை உலக வித்துவான்கள் , மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களின் முன்னிலையில் 
செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரனின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் அனைவரையும் இசை வெள்ளத்தில் ஆழ்த்தியது ....
உசனைச்சேர்ந்த இளம் மாணவி புலம்பெயர் தேசத்தில் முறைப்படி சங்கீதம் பயின்று முதல் முறை அரங்கேற்றம் செய்யும் வரை சென்ற பெருமை செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரனின் அவர்களையே சாரும் ... 
 இவரின் குரல் வளமும் தமிழ் உச்சரிப்பும் இசை உணர்வும் அரங்கை பூரிக்க வைத்தது .இவரின் தாயார் உசனில் உருவான சங்கீத மேதை ரஜனி நவரட்ணம் ஆவார் தன்னை போன்றே தனது மகளையும் புலம் பெயர் தேசத்தில் உருவாக்கி உசன் மண்ணுக்கு பெருமை சேர்த்தமைக்கு ,திரு,திருமதி .மதீஸ்வரன் ரஜனிஅவர்களுக்கு உசன் மக்கள் சார்பாக எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் 

செல்வி பிரதிஷ்னி அவர்கள் ஓம் ஸ்ரீ சக்ர கான சபா அதிபர், சங்கீத பூஷணம், ஸ்ரீமதி கமலாதேவி சண்முகலிங்கம் அவர்களிடம் பல வருடங்களாக முறையாக சங்கீதம் கற்று வருகின்றார் செல்வி பிரதிஷ்னி. சங்கீதம் கற்று வரும் காலங்களில் பல சிறப்பு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடந்தோறும் நிகழ்த்தும் "உசன் உறவுகள்" நிகழ்வில் இவரின் சங்கீதத் திறமையைக் கண்டு பலரும் பாராட்டினர். Toronto இல் உள்ள ஆலயங்களிலும் இவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
செல்வி பிரதிஷ்னி அவர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களையும் ,தொடர்ந்து சங்கீத பணி தொடர உசன் முருகனையும் வேண்டி நிக்கிறது .....
உசன் இளம் தலைமுறை முன்னேற்றம் கண்டு நாம் பெருமை கொள்கிறோம் 


Monday, September 16, 2013

கனடாவில் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பு

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அனைத்துலக உசன் மக்களையும் அரவணைத்து உசனில் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளில் ஒன்றான உசனில் பொது நூலகம் அமைக்கும் பணியின் இறுதிக்கட்ட முடிவுகள் குறித்த கருத்துப் பரிமாறல் சந்திப்பு ஒன்று September மாதம் 15 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு அன்று கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் நடைபெற்றது.





இந்தச் சந்திப்பில் உசன் அபிவிருத்திக்கு முன்னின்று பங்களிப்பு வழங்கும் உசன் உறவுகள் கலந்திருந்தனர் . பண்டிதர் சரவணமுத்து நூலகத்திற்குத் தமது வீட்டை உவந்தளித்த திரு. திருமதி. சுகுணேஸ் சுசீலா தம்பதிகள் அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் முக்கியமான விடையங்களாக:
  • உசனில் உருவாக்கப்பட்ட அமைப்பைச் சட்டப்படி பதிவு செய்தல்
  • நீண்ட காலம் நூலகத்தை நிர்வகிக்கத் தேவையான நிதி விடயம்
  • உசன் சிறுவர்களுக்கு ஆங்கில அறிவைப் புகட்டக் கூடிய திட்டங்கள்
  • உசன் கிராமத்தின் பொது விடையங்கள்
போன்றவை தொடர்பான கருத்து பரிமாறல் இடம்பெற்றது.

பொது நூலகத்தை விரைவில் முழு நூலகமாக அமைக்கத் தமது முழுப் பங்களிப்பையும் திரு. திருமதி. சுகுணேஸ் சுசீலா அவர்கள் வழங்கியதுடன், அடிப்படைச் செலவுகளுக்காக $1000.00 (SL Rs.125000.00) நிதியுதவியையும் வழங்கியிருந்தனர்.

இந்த விசேட சந்திப்பில் எமது நிர்வாகசபை உறுப்பினர்களுடன் உசன் அபிவிருத்திக்கு எம்மோடு முன்னின்று உதவிகள் வழங்கிவரும் திரு. வெற்றிவேலு பிரபானந்தன், திரு. நல்லதம்பி கனகலிங்கம் (ராசா) ஆகியோருடன் பின்னர் Dr. இந்திரன் ஆசிர்வாதம் அவர்களும் இணைந்திருந்து பல ஆலோசனைகளையும் வழங்கினர்.

நூலகம் அமைக்கும் பணியின் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் மிக விரைவில் உசனில் பொது நூலகம் முழுமையாக அமையவுள்ளது. இதற்கு அனைத்துலக உசன் மக்களின் ஆதரவையும் வேண்டி நிக்கிறோம்.




Saturday, September 14, 2013

திருமண வாழ்த்துக்கள்

உசனைச்சேர்ந்த திரு திருமதி ,கணேஷகுமார். தயாவதி (வெற்றிவேலு) அவர்களின் மகள் செல்வி ,மாதுமை அவர்களுக்கும் . செல்வன் கோகுலன்
அவர்களுக்கு கனடா டொரோண்டோ வில் திருமண நிகழ்வு மிகசிறப்பாக நடைபெற்றது .





உசன் முருகன் அருள் பெற்று மணமக்கள் சீரும் சிறப்புடனும் வாழ கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துகிறது .


Thursday, September 12, 2013

உசன் ஒன்றியத்தின் புதிய நிர்வாகசபை

கனடா உசன் ஐக்கிய  ஒன்றியத்தின் புதிய நிர்வாகசபையை கனடா வாழ் உசன் மக்கள் தெரிவு செய்ததை தொடர்ந்து . எதிர் கால பணி குறித்தும்
புதிய நிர்வாகசபை பொறுப்பு உறுப்பினர்களை தெரிவு செய்யும் முதல் கூட்டம் டொரோண்டோ வில் நடைபெற்றது.
நிர்வாகசபையின் இணைந்து கொண்ட புதிய உறுப்பினர்களை வரவேற்று அவர்களுக்கு நிர்வாகம் நிர்வாகம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது .
ஒன்றியத்தின் புதிய பொறுப்பாளர்களாக .....

தலைவர்: கனகசபை நகுலன் 

உபதலைவர்: சரவணமுத்து பத்மகாந்தன் 
செயலாளர்: சுப்பிரமணியம் பாஸ்கரன் 

உபசெயலாளர்: கனகசுந்தரம் அச்சுதன்


பொருளாளர்: பிரியலதா சற்குணநாதன்
 உபபொருளாளர்: வெற்றிவேலு அஜந்தன் 


நிர்வாகசபை உறுப்பினர்கள்:
ஒப்பிலாமணி விஜயரூபன் 
சிதம்பரப்பிள்ளை தயாபரன் ,நவரத்தினம் சிவகுமார் 

இராசரத்தினம் உமாபதி
சாந்தினி சிவானந்தன் 

உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலக திட்டப் பொறுப்பாளர்: சாந்தினி சிவானந்தன்

 ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர் . 
தலைவர் நகுலன் அவர்கள் தொடர்ந்து இந்த சங்கத்தை புதிய உத்வேகத்துடன் நகர்த்தி செல்ல உள்ளதாகவும் அதற்கு புதிதாய் இணைத்த இளைய சமுதாயம் தனக்கு துணையாய் நிற்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்ததுடன் .
உசன் கிராமத்தை அபிவிருத்தி செய்ய அணைத்து நாடுகளில் இருக்கும் உசன் மக்களையும் இணைக்கும் முயற்சியை தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.


Tuesday, September 10, 2013

பரதநாட்டிய அரங்கேற்றம்

பாரதி இந்திய சாஸ்திரிய நடனப்பள்ளி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி திருமதி. சியாமா தயாளன் அவர்களின் மாணவி செல்வி ஒமீரா மேகநாதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் September மாதம் 14 ஆம் திகதி, 2013 ஆம் ஆண்டு சனிக்கிழமை அன்று 5183 Sheppard Avenue E, Scarborough, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Chinese Cultural Centre இல் மாலை 5:30 மணிக்கு இடம்பெற உள்ளது.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் குளிர்கால ஒன்றுகூடலான "உசன் உறவுகள்" நிகழ்வொன்றில் செல்வி ஒமீராவின் நடன நிகழ்வு பலரையும் கவர்ந்ததை இங்கே நினைவு கொள்ளலாம். திருமதி சியாமா தயாளனின் நடன நிகழ்வும் முன்னைய "உசன் உறவுகள்" நிகழ்வில் இடம்பெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற திருமதி சின்னத்தங்கம் சரவணமுத்து அவர்களின் நூல் வெளியீட்டு விழாவிலும் திருமதி சியாமா அவர்கள் பங்களித்திருந்தார்கள்.

செல்வி ஒமீராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. திருமதி சியாமா தயாளன் அவர்களின் கலைப் பணி தொடரவும் அது வாழ்த்தி நிற்கிறது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு செல்வி ஒமீராவின் பெற்றோரும், அவரின் ஆசிரியர் திருமதி சியாமா தயாளன் அவர்களும் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றனர்.


Thursday, September 5, 2013

வாய்ப்பாட்டு அரங்கேற்றம்.

திரு திருமதி மதீஸ்வரன் அவர்களின் மகளும், காலஞ்சென்ற திரு நவரத்தினம், திருமதி உமாமகேஸ்வரி நவரத்தினம் அவர்களின் பேத்தியுமாகிய செல்வி பிரதிஷ்னி மதீஸ்வரனின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் September மாதம் 21 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு, சனிக்கிழமை அன்று Toronto, கனடாவில் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வு 50 Hallcrown Place, Toronto என்ற முகவரியில் அமைந்துள்ள Armenian Youth Centre கலையரங்கில் இடம்பெறும். மாலை 5:30 மணிக்கு இந்தச் சிறப்பு அரங்கேற்றம் இடம்பெற உள்ளது.

ஓம் ஸ்ரீ சக்ர கான சபா அதிபர், சங்கீத பூஷணம், ஸ்ரீமதி கமலாதேவி சண்முகலிங்கம் அவர்களிடம் பல வருடங்களாக முறையாக சங்கீதம் கற்று வருகின்றார் செல்வி பிரதிஷ்னி. சங்கீதம் கற்று வரும் காலங்களில் பல சிறப்பு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடந்தோறும் நிகழ்த்தும் "உசன் உறவுகள்" நிகழ்வில் இவரின் சங்கீதத் திறமையைக் கண்டு பலரும் பாராட்டினர். Toronto இல் உள்ள ஆலயங்களிலும் இவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

செல்வி பிரதிஷ்னியின் இந்த அரங்கேற்றத்தில் கலந்து சிறப்பிக்க வருமாறு அவரின் பெற்றோர், அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள். தனிப்பட்ட அழைப்பிதழ்கள் வழங்கப்படாத நிலையில் இந்த அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிப்பதோடு செல்வி பிரதிஷ்னியின் இசை வெள்ளத்தில் மூழ்க வருமாறு பெற்றோர் கேட்டுக்கொள்கிறார்கள்.

இளம் தலைமுறைக் கலைஞர் ஒருவரின் இந்த அரங்கேற்றத்தில் கலந்துகொண்டு அவருக்கு உற்சாகமூட்டுவதோடு, உங்களின் வாழ்த்துக்களையும் தெரிவிக்கவேண்டுமென உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறது. செல்வி பிரதிஷ்னியின் இந்த அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் இவரின் கலைப் பயணம் வெற்றிகரமாகத் தொடர உசன் முருகனைப் பிரார்த்தித்துக் கொள்கிறது.