அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்
Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

Monday, February 4, 2013

உசன் மாணவி மிதுரிகா இந்தோனேசிய பயணம்

உசனை சேர்ந்த திரு.திருமதி.க.பேரம்பலம் அவர்களின் பேத்தி செல்வி மிதுரிகா அவர்கள்.ஆசியமட்ட பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றுவதற்காக இந்தோனேஷியாவுக்கு பயணமாகவுள்ளனர்.
 மிதுரிகா மிகுந்தன் 
2012ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ்மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி உயிரியல் பிரிவு மாணவியான உசனை  சேர்ந்த  மிதுரிகா மிகுந்தன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சிவசுப்பிரமணியம் பவித்திரன் ஆகியோரே ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்வதற்காக செல்லவுள்ளனர்.

இலங்கையிலிருந்து இவர்களுடன் மேலும் சில மாணவர்கள் போட்டியில் பங்கு பற்றுவதற்காக இந்தோனேஷியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாணவர்கள் இந்த மாதம் கல்வி அமைச்சினால் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இரண்டு வார காலம் அங்கு அவர்கள் போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் மிதுகா வெற்றி பெறவும்.சிறப்பாக போட்டியிடவும் 
அனைத்துலக உசன் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம். 


Sunday, July 24, 2011

கனடாவில் ஒன்று கூடி ஒற்றுமையாய் கூழ் குடித்த உசன் மக்கள்





கனடா வாழ் உசன் மக்கள் ஒன்றிணைந்து இன்று திட்டமிட்டபடி Oshawa Lake view Park/Beach ல் குதூகலமாகப் பொழுதைக் களித்தனர். உசன் நினைவை மீட்க கூடிய வகையில் உணவுகளும், நிகழ்வுகளும் அமைந்திருந்தன . பெரியோர் முதல் சிறியோர் வரை குதுகலமாக இருந்தனர்.
ஆடிக்கூழ், ஒடியல் கூழ், கொத்துரொட்டி, தோசை ஆகிய உணவுகள் அங்கேயே தயாரித்துப் பரிமாறப்பட்டன. கூடவே பகோடா, mixer, வடை, தேநீர் என்று சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டன.
 வந்திருந்த உசன் மக்கள் அனைவரும் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்
உசன் மக்கள் ஒன்றிணைந்து Beach கரையில் சந்தித்தது இதுவே முதல் தடவை. இன்றைய நாள் பங்குபற்றிய மக்களுக்கு உற்சாகமும், சந்தோசமும் நிறைந்த நாளாக இருந்ததைக் காண முடிந்தது. வெப்பம் கூடிய இந்த நாளில் பலரும் ஏரி நீரில் குளித்து வெப்பத்தைத் தணித்துக்கொண்டனர்.

மேலதிக படங்களைக் காணக் கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்.
https://picasaweb.google.com/usanphotos/CanadaUsanPeopleAtBeach





Saturday, July 16, 2011

Lake View Park/Beach சுற்றுலா - நாளை சந்திப்போம்!


கோடை காலத்தில் இன்னுமோர் நாளை ஒன்றாகக் களித்திருப்போம்!
வாருங்கள் நாளைய நாளுக்கு வண்ணங்கள் பூசுவோம்!
ஒன்றுகூடுவோம் Oshawa நகரில்.
காலை 10 மணி முதல் நீங்கள் விரும்பிய நேரம் வரை.
இடம்: Lake View Park.
நீங்கள் அங்கு வந்து சேர்வதற்கான வழி இதோ:

  1. Take 401 E toward Kingston   
  2. Take the exit toward Simcoe Street. The exit ramp ends at Bloor Street W. 
  3. Turn left onto Bloor St W
  4. Take the 1st right onto Simcoe St S (within a few meters).
  5. Continue to follow Simcoe St S to Lake View Park
  6. After Valley Drive, take a right on to the driveway to Lake View Park.
  7. Come to the East end of the park closer to the children water paly area to join your relatives and friends for a day full of fun.

(East of Jubilee Pavilion Banquet & Conference Center, closer to the lake).

Use the map below to get your personalized direction:



உங்களுக்கு மட்டும் இரகசியமாய் சொல்லுகிறோம்.........

உசன் மண் வாசனை கமழும் ஒடியல் கூழும் உண்டு.

மற்றுமோர் சிறப்பு உணவும் உங்களுக்காகாக் காத்திருக்கிறது.

நீங்களும் வாருங்கள்.  உறவுகளையும் அழைத்து வாருங்கள்.

நாளை சந்திப்போம்!

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Thursday, September 9, 2010

Centre Island Summer Trip 2010

உசன் மக்கள் ஒன்றியம் கனடா தனது அங்கத்தவர்களை September 6 ம் திகதி Toronto Centerl Island க்கு அழைத்து சென்றது.அங்கு சிறுவர்களுக்கான விளையாட்டுகளும் கனடிய விமான சாகசநிகழ்வும் நடைபெற்றது.சிறுவர்களும் பெரியோர்களும் இந்த சுற்றுலாவில் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டனர். இன் நிகழ்வின் மேலதிக  புகைப்படமும் வீடியோ காட்சியும் எமது Facebook தளத்தில் பார்வையிடலாம்.
http://www.facebook.com/usanpeople?v=photos#!/album.php?aid=36878&id=100001219521044





Sunday, August 29, 2010

Centre Island Summer Trip 2010

உசன் மக்கள் ஒன்றியம்- கனடா தனது அங்கத்தவ சிறுவர்களை செப்டெம்பர் 6 ம்திகதி கனடா வின்n CENTERAL ISLAND க்கு இலவசமாக அழைத்து செல்ல விரும்புகிறது கனேடிய விமான படையினரின் விமான சாகச நிகழ்வுகளும் நடைபெறுவதனால் சிறுவர்கள் அதையும் பார்த்து ரசிக்கும் முகமாக இந்த நாள் தெரிவு செய்யபட்டுள்ளது . இந்த தகவலை உங்கள் உசன் உறவுகளுக்கும தெரியப்படுத்துங்கள் .


பதிவுகளுக்கு

AJANTH - 416 -833 -2120  - பாஸ்கரன் 6474487434