அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்
Showing posts with label திருமண வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label திருமண வாழ்த்துக்கள். Show all posts

Sunday, January 13, 2019

tamilkadai.ca


கனேடியத் தமிழரின் மளிகைப் பொருட் கொள்வனவுக்கு இலகு வழி. வீட்டில் இருந்தவாறே உங்கள் பொருட் கொள்வனவை இணையத் தளம் மூலம் மேற்கொள்ள முடியும்.  January 14, 2019 முதல் சேவைகள் ஆரம்பம்.  பல கனேடிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் 1000 இக்கு மேற்பட்ட பொருட்களை நீங்கள் கொள்வனவு செய்ய முடியும்.  குளிருக்குள் அலைந்து திரியாமல், மிகவும் நியாயமான விலையில் மளிகைப் பொருட்களை  உங்கள் வீட்டு வாசலுக்கு வரவைக்கும் வசதி. பாதுகாப்பான பணம் செலுத்தும் முறை.

இணையத் தள முகவரி:  www.tamilkadai.ca
தொலைபேசியில் அழைக்க: 416-434-4440

உசன் மைந்தன் அஜந்தன் வெற்றிவேலுவின் மற்றுமொரு தொழில் முயற்சி. உசன் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு வழங்குவோம்.

அஜந்தனின் இந்தத் தொழில் முயற்சி வெற்றியளிக்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகிறது.


Online Shopping opportunity for Canadian Tamils.  Order your groceries from the comfort of your home.  No need to bundle up for shopping this Winter season. Over 1000 items from many leading Canadian producers.  Reasonable price and secure payment method.  Service starts on January 14, 2019.

Visit www.tamilkadai.ca
To order over the phone: 416-434-4440

Son of Usan Ajanthan Vettivelu's business venture.  Please support his new beginning.

United People Association of Usan in Canada congratulates Aju and wishing him success.


Thursday, August 9, 2018

பரத நாட்டிய அரங்கேற்றம்


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரதகலா வித்தகர், ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவிகளும், திரு திருமதி சிவகுமார் இளஞ்செல்வி தம்பதிகளின் மகள்களுமான  செல்விகள் அபிராமி சிவகுமார், வைஷ்ணவி சிவகுமார் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் சனிக்கிழமை, August 11, 2018 அன்று 5183 Sheppard Avenue E, Scarborough, Ontario, M1B 5Z5, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Chinese Cultural Center இல் இடம்பெற உள்ளது.

மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை சிற்றுண்டிகள் வழங்கப்படும்.  அரங்கேற்றம் சரியாக மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஸ்ரீமதி சியாமா தயாளன் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்.


செல்விகள் அபிராமி சிவகுமார், வைஷ்ணவி சிவகுமார் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெறவும், அவர் நடனத் துறையில் சிறந்து விளங்கவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.




Sunday, July 22, 2018

பரத நாட்டிய அரங்கேற்றம்

செல்வி சரண்யா உதயணன்


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரதகலா வித்தகர், ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி செல்வி சரண்யா உதயணனின் பரத நாட்டிய அரங்கேற்றம் சனிக்கிழமை, July 28, 2018 அன்று 1000 New Westminster Drive, Thornhill, Ontario, L4J 8G3, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் City Playhouse Theatre இல் மாலை 4:30 மணிக்கு இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஸ்ரீமதி சியாமா தயாளன் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்.

செல்வி சரண்யாவின் பாரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெறவும், அவர் நடனத் துறையில் சிறந்து விளங்கவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.


Bhaarati School of Indian Classical Dance proudly presents Arrangetram of Saranya Uthayanan, Disciple of Parathakalaa Viththakar, Srimathi Shiyama Thayaalan, on July 28th , 2018 at City Playhouse Theatre located at 1000 New Westminster Drive, Thornhill, Ontario, L4J 8TG3, Canada. Please take this as a personal invitation and bless her with your presence.

United People Association of Usan in Canada congratulates Saranya and wish her a very bright future.


Thursday, October 5, 2017

பிரணவி அரங்கேற்றம் - Live Stream

வருகின்ற சனிக்கிழமை, October 7, 2017 அன்று நடைபெற இருக்கும் செல்வி பிரணவி பிரபானந்தனின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை உலகெங்கும் இருந்து Live Stream மூலம் பார்த்து இரசிக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. Toronto, Canada நேரப்படி மாலை 5 மணி அளவில் Live Stream ஆரம்பிக்க உள்ளது. கீழுள்ள இணைப்புக்குச் செல்வதன் மூலம் இந்த நிகழ்வை நீங்கள் பார்க்கத் தவறாதீர்கள். 
 


Monday, October 2, 2017

பரதநாட்டிய அரங்கேற்றம்

பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி திருமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவிகள்  செல்வி Kashvie Shankar மற்றும் செல்வி Ashmie Shankar ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் October மாதம் 8 ஆம் திகதி, 2017 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று 50 Hallcrown Place, Toronto, Ontario, M2J 1P6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Armenian Youth Centre இல் மாலை 5:00 மணிக்கு இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு திருமதி சியாமா தயாளன் அவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.


இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.


Wednesday, July 9, 2014

திருமண வாழ்த்து......



 உசனைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் வைத்தியர் திரு திருமதி வேலுப்பிள்ளை பரமநாதன் ஜெகந்திராதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெதீசன் அவர்களுக்கும், பிரித்தானியா வாழ் திரு திருமதி ஸ்ரீரங்கநாதன் மீரா தம்பதிகளின் செல்வப்புதல்வி, மிலோனி கண்ணம்மா அவர்களுக்கும் உசன் முருகன் திருவருளால் பெரியோர் முன்னிலையில் இன்று  ஜூலை மாதம் 9 ம் திகதி புதன்கிழமை, திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது ,

கனடா Toronto வில் 5321 Finch Avenue East, Scarborough ON M1S 5W2,Canada என்ற முகவரியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய்பாபா மண்டபத்தில், இன் விவாக நிகழ்வு நடைபெற்றது ,
திருமண  வாழ்வியலில் இணைந்து கொண்ட புதுமண தம்பதிகளுக்கு ,
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் ,









Sunday, July 6, 2014

விவாக சுபமுகூர்த்த அழைப்பு

(To view the image in full screen click on it)

உசனைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் வைத்தியர் திரு திருமதி வேலுப்பிள்ளை பரமநாதன் ஜெகந்திராதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெதீசன் அவர்களுக்கும், பிரித்தானியா வாழ் திரு திருமதி ஸ்ரீரங்கநாதன் மீரா தம்பதிகளின் செல்வப்புதல்வி, மிலோனி கண்ணம்மா அவர்களுக்கும் உசன் முருகன் திருவருளால் பெரியோர் முன்னிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 9 ம் திகதி புதன்கிழமை, திருமண நிகழ்வு நடைபெற உள்ளது.

கனடா Toronto வில் 5321 Finch Avenue East, Scarborough ON M1S 5W2,Canada என்ற முகவரியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய்பாபா மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை வரும் சுப முகூர்த்த வேளையில் திருமண விழா நடைபெறவுள்ளது. அனைத்து உசன் மக்கள், உறவுகள் மற்றும் நண்பர்களையும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

அழைப்பவர்கள்:
திரு திருமதி வேலுப்பிள்ளை பரமநாதன் ஜெகந்திராதேவி 00447795140685
திரு திருமதி வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை 416-562-6244

தகவல்:
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்-கனடா.


Saturday, September 14, 2013

திருமண வாழ்த்துக்கள்

உசனைச்சேர்ந்த திரு திருமதி ,கணேஷகுமார். தயாவதி (வெற்றிவேலு) அவர்களின் மகள் செல்வி ,மாதுமை அவர்களுக்கும் . செல்வன் கோகுலன்
அவர்களுக்கு கனடா டொரோண்டோ வில் திருமண நிகழ்வு மிகசிறப்பாக நடைபெற்றது .





உசன் முருகன் அருள் பெற்று மணமக்கள் சீரும் சிறப்புடனும் வாழ கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துகிறது .


Monday, January 30, 2012

திருமண வாழ்த்துக்கள்


உசனை சேர்ந்த திரு திருமதி சின்னத்துரை தம்பதிகளின் புதல்வன் திருகரன் (திரு ) அவர்களுக்கும் ஏழாலையை சேர்ந்த திரு திருமதி தர்மராஜா அவர்களின் புத்திரி செல்வி தனுஜா அவர்களுக்கும் . ஜனவரி மாதம் 29 ம திகதி .
கனடா டொராண்டோவில் பெரியோர்கள் முன்னிலையில் திருமண வைபவம் இனிதே நடைபெற்றது .மணமக்கள் உசன் முருகபெருமான் அருளோடு சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறோம் .





Wednesday, September 28, 2011

மகிந்தன், சர்மிளா அவர்களின் திருமண வாழ்த்துக்கள்....

உசன மிருசுவிலை சேர்ந்த திரு,திருமதி. குணபாலசிங்கம் தம்பதிகளின் புதல்வன் மகிந்தன் அவர்களும் நுணாவில் மேற்கு நுணாவிலை சேர்ந்த திரு திருமதி. இரட்ணசிங்கம் தம்பதிகளின் புதல்வி சர்மிளா அவர்களும் 08-09-2011 அன்று திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்கள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் சார்பாகவும் உசன் வாழ் மக்கள் சார்பாகவும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்

அத்துடன் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளுடன் எமது ஸ்ரீ முருகன் விளையட்டு கழகத்தினர் படத்தில் நிற்பதை காணலாம்


Monday, September 12, 2011

திருமண வாழ்த்துகள்

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய நிர்ச்வாகசபை உறுப்பினரான திரு கிருஷ்ணபிள்ளை அவர்களின் புதல்வன் திருநிறை செல்வன் மகாத்மன் அவர்களுக்கும் , திரு திருமதி சிவராசா தம்பதியரின் புதல்வி திருநிறைச் செல்வி  
சோபிதா அவர்களுக்கும் .11 sep 2011 ஞாயிற்றுக்கிழமை Toronto Mirage Banquest Hall 
மண்டபத்தில் திருமண நிகழ்வு இனிதே நடந்தேறியது . மணமக்கள்  சீரும் சிறப்புடனும் வாழ உசன்கனடா  ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துகிறது.



Thursday, September 1, 2011

மகிந்தன்-ஜெயந்தினி அவர்களின் திருமண வாழ்த்துக்கள்....


உதயகிரி, வியாபாரி மூலை, பருத்தித்துறையை சேர்ந்த திரு,திருமதி இராமநாதன் தம்பதிகளின் புதல்வன் இ.மகிந்தன் அவர்களும் உசன், மிருசுவிலை சேர்ந்த திரு,திருமதி சிவகுரு தம்பதிகளின் புதல்வி சி.ஜெயந்தினி அவர்களும் 31-08-2011 அன்று திருமண பந்தத்தில் இணைந்தனர்.


அவர்கள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் சார்பாகவும் உசன் வாழ் மக்கள் சார்பாகவும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்



அத்துடன் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளுடன் எமது ஸ்ரீ முருகன் விளையட்டு கழகத்தினர் படத்தில் நிற்பதை காணலாம்

















Thursday, August 25, 2011

திருமண வாழ்த்துக்கள்


உசனைசேர்ந்த திரு. திருமதி சின்னதுரை அவர்களின் புதல்வி நிருபா அவர்களுக்கும் , திரு. திருமதி சுந்தலிங்கம் தம்பதிகளின் புதல்வன் சுதாகர் அவர்களுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ம் திகதி லண்டன் UK யில் திருமணம் இனிதே நடை பெற்றது. உசன் முருகன் துணை கொண்டு அனைத்துலக உசன் மக்கள் சார்பாகவும்,அனைத்து  உசன் அமைப்புகள் சார்பாகவும் எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கொறோம் .  


Thursday, July 14, 2011

காண்டீபன், சியாமினி ... திருமண வாழ்த்து

உசனை சேர்ந்த திரு திருமதி நடராசா தம்பதிகளின் புதல்வன் செல்வன்  காண்டீபன் (New York, USA தொடர்பாளர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ) அவர்களுக்கும் நுணாவில் திரு திருமதி யதகுலசிங்கம் தம்பதிகளின் புத்திரி செல்வி சியாமினி அவர்களுக்கும். உசன் முருகன் அருளால் இன்று 14 ஜுலை வியாழக்கிழமை இந்தியா கோயம்பேடு சென்னையில் உள்ள சென்னை Delux Hottel  ல் திருமாங்கல்யம் நடைபெற திருவருள் கூடிஉள்ளது . புது வாழ்க்கை தொடங்கும் புதுமண தம்பதியருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மற்றும் உசன் அமைப்புக்கள் சார்பாக எமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் .




Wednesday, July 13, 2011

காண்டீபன்-சியாமினி அவர்களின் திருமண வாழ்த்துக்கள்....


உசன், மிருசுவிலைச் சேர்ந்த திரு. திருமதி நடராசா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வன் செல்வன் காண்டீபன் அவர்களும் நுணாவில் மேற்க்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த திரு. திருமதி ச.யதுகுலசிங்கம் தம்பதிகளின் கனிஸ்ட புதல்வி செல்வி சியாமினி அவர்களும் இன்று 14-07-2011 சென்னையில் உள்ள CHENNAI DELUX HOTEL திருமண மண்டபத்தில் திருமணபந்தத்தில் இணைகின்றனர்.
அவர்கள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் சார்பாகவும், உசன் வாழ் மக்கள் சார்பாகவும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்.


Sunday, June 12, 2011

செந்தூரன், சுவர்ணா மணவாழ்க்கை ... வாழ்த்துக்கள்


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தொழில்நுட்ப நிர்வாகியும் உசன் திரு.திருமதி சிவானந்தன் (ஆனந்தன்) சாந்தினி தம்பதிகளின் ஏக புதல்வனுமான செல்வன் செந்தூரன் அவர்களுக்கும்.

கட்டப்பிராய் திரு.திருமதி அரியகுமார் இராஜேஸ்வரி தம்பதிகளின் புதல்வி செல்வி.சுவர்ணா அவர்களுக்கும். இன்று 12 ஜூன் 2011 அன்று கனடாவில்பெரியோர்களால் திருமண பதிவு  மிகவும்சிறப்பாகநடைபெற்றது.



Friday, June 3, 2011

செந்தூரன்-சுகாசினி அவர்களின் திருமண வாழ்த்துக்கள்....

உசன் மிருசுவிலை சேர்ந்த திரு.திருமதி. க.செல்லத்துரை தம்பதிகளின் ஏகபுத்திரன் திருநிறைச் செல்வன் செந்தூரன் அவர்களும் பெருங்குளம் வீதி கல்வயல், சாவகச்சேரியை சேர்ந்த திரு.திருமதி. இ.கிருஷ்ணசாமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரி திருநிறைச் செல்வி சுகாசினி அவர்களும் இன்று அதாவது 03-06-2011 அன்று திருமணபந்தத்தில் இணைகின்றனர்
அவர்கள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் சார்பாகவும் உசன் வாழ் மக்கள் சார்பாகவும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்.


அத்துடன் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளுடன் எமது ஸ்ரீ முருகன் விளையட்டு கழகத்தினர் படத்தில் நிற்பதை கணலாம்


Sunday, February 6, 2011

திருமண வாழ்த்துக்கள்


உசன் மிருசுவிலை சேர்ந்த திரு,திருமதி.அ.நடராஜபிள்ளை அவர்களின் புதல்வன் திருநிறைச் செல்வன் ஜதுர்ஸன் அவர்களும் மீசாலை வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த திருமதி.இராஜேஸ்வரி தியாகராஜா தம்பதிகளின் புதல்வி திருநிறைச் செல்வி சிவதீபம் அவர்களும் இன்று அதாவது 06-02-2011 அன்று திருமணபந்தத்தில் இணைகின்றனர் அவர்கள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் சார்பாகவும் உசன் வாழ் மக்கள் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்...நன்றி...




திருமண வாழ்த்துக்கள்.

 
உசனைசேர்ந்ததிரு. திருமதி. அரியரத்தினம்தம்பதிகளின் புதல்வன் நிதர்சன் அவர்களுக்கும் யாழ்ப்பாணம் கலட்டியை சேர்ந்த திரு. திருமதி குணரத்தினம்தம்பதிகளின் புதல்வி நிஷ்மதா அவர்களுக்கும்.  06 -02 -2011 ஞாயிற்றுக்கிழமை. யாழ்ப்பாணத்தில்  .உசன் முருகப்பெருமான் அருளால் திருமணம் இனிதே நடைபெற்றது திருமண வாழ்வில் இணையும் தம்பதியர்க்கு  கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் அனைத்துலக உசன் மக்களும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.வாழ்க பல்லாண்டு


Sunday, January 30, 2011

திருமண வாழ்த்துக்கள்

 
மல்லாகத்தைச் சேர்ந்த திரு,திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் புதல்வன் ஆதவன் அவர்களும் உசன் மிருசுவிலை சேர்ந்த திரு,திருமதி தயானந்தன்(பபி) அவர்களின் புதல்வி அம்பிகா அவர்களும் இன்று அதாவது 2011-01-30 அன்று திருமணபந்தத்தில் இணைகின்றனர் அவர்கள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் சார்பாகவும் உசன் வாழ் மக்கள் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்...நன்றி...