அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, January 31, 2014

செல்வி .ஒமேரா மேகநாதன் வழங்கிய நடனம்

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் டொராண்டோவில் நடாத்தும் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வான" உசன் உறவுகள் 2012"
நிகழ்வில் செல்வி .ஒமேரா மேகநாதன் வழங்கிய கணேஷ வந்தனம்
நடன நிகழ்வு



Tuesday, January 28, 2014

கனடாவில் நடைபெற்ற "உசன் உறவுகள் " நிகழ்வு

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்படும் வருடாந்த உசன் மக்களின் குளிர்கால ஒன்று கூடல் , டொரோண்டோ வில் உள்ள
Baba Banquet Hall மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது .
சங்கத்தின் தலைவர் .திரு .கனகசபை நகுலன் தலைமையில் நிகழ்வு தொடங்கியது , நிகழ்வை செயலாளர் திரு .சுப்ரமணியம் பாஸ்கரன் தொகுத்து வழங்கினார் .
வழமை போன்று கனடா வாழ்உசன்  இளம் சமுதாயத்தின் கலை நிகழ்ச்சிகளும் , உசனில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொது நூலக திறப்புவிழா வீடியோ காட்சிகளும் , வெண் திரையில் காண்பிக்கப்பட்டது ,
இன் நிகழ்வில் பொது நூலகத்தின் நடவடிக்கை வெற்றி பெற்ற விடயம் குறித்து மக்களுக்கு தெளிவாக கூறப்பட்டது , உசனில் நடைபெற்ற நூலக திறப்பு விழாவில் , நடாத்தப்பட்ட  உரை அனைத்து கனடா வாழ் மக்கள் மத்தியிலும் நம்பிக்கை ஊட்டியது .
அத்துடன் ஒத்துளைப்பு வழங்கிய அனைத்து உசன் உணர்வாளர்களுக்கும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது .
இயந்திர வாழ்க்கையில் நாளந்த பொழுதை கழித்து வரும் மக்களுக்கு இவ்வாறான நிகழ்வு அவர்களை மீண்டு உசன் மண்ணின் நினைவுகளை மீட்ட உதவியததாக பலராலும் கூறப்பட்டது .
  ருசியான இராப்போசன விருந்துடன் நிகழ்வு இனிதே  நிறைவு பெற்றது .
மேலதிக படங்கள் எமது Facebook தளத்தில்



















Monday, January 20, 2014

"உசன் பொது நூலக திறப்பு விழா "

உசனில் கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் உசன் மக்களும் மற்றும் அனைத்துலக உசன் மக்களும் இணைந்து உருவாக்கி வந்த
"பண்டிதர்" சரவணமுத்து பொது நூலகம் கடந்த ஜனவரி மாதம் 3 ம் திகதி
முறைப்படி திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது .
உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குருக்கள் சிவ  ஸ்ரீ கேதீஸ்வர குருக்களும் ,மிருசுவில் கத்தோலிக்க மத குருவும் இணைந்து உசன் மக்கள் முன்னிலையில் ஆரம்பித்து வைத்தனர் ,
நூலக நிர்வாகசபை தலைவர் திருமதி.மீரா தேவரஞ்சன் தலைமையில் நடந்த விழாவினை ஆலோசகர் திரு .மு.க.சிவானந்தம் அவர்கள் தொகுத்து வழங்கினார் . அதை தொடர்ந்து வரவேற்பு உரையினை வைத்தியர் .திரு .ஐ.ஜெபனாமகநேஷன் அவர்களும் அதனை தொடர்ந்து கருத்துரைகளும் நடைபெற்றன .இன் நிகழ்வில் உசன் பண்டிதர் சரவணமுத்து அவர்களின் நினைவு பேருரையை பண்டிதர் திரு சிவபிரகாசம் அவர்கள் வழங்கியிருந்தார் .

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பான பல்கலைகழக பிரதம நூலகர் திருமதி .ஸ்ரீகாந்தலட்சுமி  அருளானந்தம் அவர்கள் கலந்து சிறப்புரை வழங்கியிருந்தார் . நிகழ்வில் கலந்து கொண்ட மக்களின் பார்வைக்கு நூலக புத்தகங்கள் காட்சிபடுத்தபட்டன .
இந்த நூலகம்  அமைக்க ஆணிவேராக இருந்து செயல்பட்ட அமேரிக்கா வாழ் திருமதி ,சின்னத்தங்கம் சரவணமுத்து (பண்டிதர் அம்மா ) அவர்களுக்கு அனைவரின் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது .
நூலக அமைப்பின் செயலாளர் திரு.ச .ஜதிகேசனின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்று , நூலக செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது .







Friday, January 17, 2014

ஒன்றாகக் கூடி மகிழ்ந்திருப்போம்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடந்தோறும் நடாத்தும் "உசன் உறவுகள்" நிகழ்வுக்கு இன்னும் இருப்பது 24 மணித் துளிகளே. Scarborough, கனடாவில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. மனதுக்கு இனிமை தரும் கலை நிகழ்வுகளோடு, அறுசுவை உணவும் வழங்கப்படும்.

சிறப்பு நிகழ்வாக பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத் திறப்பு விழாவின் தொகுப்பும் தற்போதைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி காணொளி மூலம் ஒளிபரப்பப்படும். உசன் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்த இந்த நிகழ்வினை நீங்களும் கண்டுகளிக்க இந்த நிகழ்வுக்கு வருமாறு அனைவரும் அழைக்கப்படுகிறீர்கள்.

நாளை அனைவரும் ஒன்றாகக் கூடி மகிழ்ந்திருப்போம்.