அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்
Showing posts with label உசன் கந்தசுவாமி கோவில். Show all posts
Showing posts with label உசன் கந்தசுவாமி கோவில். Show all posts

Friday, April 26, 2024

துயர் பகிர்வு - சிவஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள்

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், Brampton, ON, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள் அவர்கள் 26-04-2024 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் உசன் கந்தசாமி கோவில் பிரதம குருவாகவிருந்த காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி குருக்கள் - சங்கரி அம்மா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவஸ்ரீ முத்துக்குமாரசாமி ஐயர் ஐயாத்துரை குருக்கள் ஸ்ரீமதி சகுந்தலாதேவி (சந்திரி அம்மா) தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற சிவஸ்ரீ சிவசுந்தரசர்மா சுந்தரராச குருக்கள் மற்றும் ஸ்ரீமதி கல்யாணி அவர்களின் மருமகனும்,
ஸ்ரீமதி ஷர்மிளாவின் ஆருயிர்க் கணவரும்,
அபிஷா, அகஸ்தியா, அபூர்வா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பிரம்மஸ்ரீ அனந்த சர்மா, பிரம்மஸ்ரீ கோபி சர்மா, மற்றும் பிரம்மஸ்ரீ ஆதவன் சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை 8911 Woodbine Avenue, Markham, ON ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 29-04-2024 திங்கட்கிழமை காலை 11:30 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 4:00 மணியளவில் 1591 Elgin Mills East, Richmond Hill, ON இல் அமைந்துள்ள Elgin Mills Cemetery இல் தகனம் செய்யப்படும்.
அரிகரக் குருக்கள் அவர்களின் ஆன்மா இறைவன் திருப்பாதங்களைச் சேர உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Tuesday, May 15, 2018

உசன் கந்தசாமி கோவில்
வருடாந்த திருவிழா


உசன் கந்தசாமி கோவிலின் வருடாந்த திருவிழா நடைபெறும் விளம்பி வருடம், வைகாசி மாதம் 6ஆம் நாள், ஞாயிறுக்கிழமை (20-05-2018) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவுள்ளது.  தேர்த்திருவிழா 28-05-2018 அன்றும், தீர்த்தத் திருவிழா 29-05-2018 அன்றும் சிறப்பாக நடைபெற உள்ளது.

மேலதிக தகவல்கள் திருவிழா குறித்த பிரசுரத்தில் உள்ளது.




Sunday, February 18, 2018

108 கலசாபிஷேக ஸ்கந்த ஹோம பெருவிழா


உசன் கந்தசுவாமி கோவிலில் 108 கலசாபிஷேக ஸ்கந்த ஹோம பெருவிழா ஞாயிற்றுக்கிழமை, February 18, 2018 அன்று சிறப்பாக நடைபெற்றது.  உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குரு அருள்வாக்குச் சித்தர் குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகள் தலைமையில் பல சிவாச்சாரியார்கள் கலந்து சிறப்பித்தனர்.  இந்த நிகழ்விலிருந்து சில படங்கள்.

























Tuesday, March 1, 2016

உசன் கந்தசுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்

உசன் கந்தசுவாமி கோவிலில் அமைக்கப்பட்டுவரும் நூதன இராஜகோபுர அமைப்பு வேலைகளும் , ஆலய புனருத்தாரண வேலைகளும் நிறைவடயும் நிலையில் எதிர்வரும் பங்குனி மாதம் 14 ம் திகதி கிரிகை ஆரம்பமாகி  நடைபெற திருவருள் கூடியுள்ளது, 17 ம் திகதி  எண்ணை காப்பும் 18ம் திகதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று ,தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெறும், இந்த காலத்தில் உசன் முருகபெருமான் அடியார்கள் அனைவரும் வழிபாடுகளில் கலந்து எம்பெருமான் அருள் பெறுமாறு வேண்டுகிறோம் , ஆலய திருப்பணிக்கும் சிறப்பு மிக்க இராஜகோபுர திருப்பணிக்கும் வாரிவழங்கிய அனைத்துலகமக்களுக்கும் ,
சகலவழிகளிலும் உறுதுணையாய் நின்ற உசன் அடியார்களுக்கும் மனமார்ந்த நன்றியும் , எம் பெருமான் அருளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் .

நன்றி 
தர்மகர்த்தா 







Monday, October 12, 2015

உசன் முருகனின் "இராஜகோபுர " திருப்பணி ஆரம்பம்

உலகெங்கும் வாழும் உசன் கந்தசுவாமி அடியார்களே!
தெய்வீகம் சுரக்கும் யாழ்ப்பாண தென்மராட்சி பிரதேசத்தின் உசன் புண்ணிய பதியில் அருளாட்சி நல்கும் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தேவஸ்தானத்தின் பாலஸ்தாபன நிகழ்வுகள் நடைபெற்று இப்போது ஆலய புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயங்கர யுத்த சூழலிலும் உசன் கிராமத்துக்கும், மக்களுக்கும் பாதிப்புகளின்றிக் காப்பாற்றி, புலம் பெயர் தேசங்களிலும் உங்களைச் செல்வச் செழிப்போடு காத்தருளும் எம் பெருமான் முருகனுக்குத் தனிச் சிறப்பு மிகு இராஜகோபுரம் அமைக்கும் பணி நீண்ட காலமாகத் தடைப்பட்டு இருந்தது நீங்கள் யாவரும் அறிந்ததே. இப்பொழுது உசன் கிராமத்தில் தலை நிமிர்ந்து அருள்பாலிக்க எம்பெருமானின் அனுக்கிரகம் கைகூடி இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன், ஆலய புனருத்தாரண வேலைகளும், புது பொலிவூட்ட வர்ண பூச்சு வேலைகளும் நடைபெற்று வருகிறன. இந்தியாவிலிருந்து வரவளைக்கப்பட்ட தேர்ச்சி மிக்க ஆச்சாரியர்களால் திருப்பணி நடைபெற்று வருகின்றது.
உசன் முகனின் ஆசியுடன் வாழும் உங்களின் பங்களிப்பும் இந்த இராஜகோபுர பணியில் கலந்திட நீங்கள் விருப்பம் கொண்டால் தாராளாமாக இந்த திருப்பணியில் இணைந்து கொள்ள முடியும். உங்களின் கரங்களால் எந்த விதமான காணிக்கை செலுத்தினாலும் அது எம்பெருமானின் புனருத்தாரணப் பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

மிக வேகமாக நடைபெற்று வரும் திருப்பணி பூர்த்தியடைந்து எதிர்வரும் பங்குனி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற ஆசி கூடியுள்ளது. முருகனின் இராஜகோபுரம் உயர்வது போன்று உங்கள் வாழ்க்கையும் உயர எம்பெருமான் ஆசி உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறோம்.

மேலதிக விபரங்கள் தேவைப்படின் ஆலய தர்மகர்த்தாவைத் தொடர்புகொள்ளவும்.
திரு.கு.விமலதாஸ் -0094773474767
Commercial Bank A/C# 8600930636
Chvakachcheri Branch

கனடாவில் இருந்து இத் திருப்பணியில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ள முடியும். சேவைக் கட்டணமின்றி பணம் அனுப்ப ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு:
திருமதி சி.சாந்தினி -905-554-2014


Wednesday, April 8, 2015

உசன் கோவில் குருக்களுக்கு கனடாவில் மதிப்பளிப்பு

உசன் கந்தசுவாமி கோவிலில் பரம்பரையாக பூசை வழிபாடுகளை நடாத்திவரும் அந்தண குருக்கள் பரம்பரை வழியே வந்து .தற்போதைய பிரதம குருவாக பூசை வழிபாடுகளை நடாத்தி வரும் சிவ ஸ்ரீ இரத்தின கேதீஸ்வர குருக்கள் அவர்கள் கனடாவில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுவரும் வேளையில் , குருக்கள் ஆற்றிவரும் உசன் கிராமத்தின் சமூக,சமய ,கலாச்சார  சேவையை பாராட்டி , கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக  ,கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ,கடந்த ஏப்ரல் 4 ம் திகதி ,கனடா செல்வ சந்நிதி ஆலய மண்டபத்தில் ,மதிப்பளிப்பு நிகழ்வொன்றை நடத்தியிருந்தது ,
சங்கத்தின்  தலைவர் திரு. நகுலன் கனகசபை அவர்களின் தலைமையில் நடிபெற்ற நிகழ்வை செயலாளர் திரு.,சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்கள் தொகுத்து வழங்கினார் , நிகழ்வில் கேதீஸ்வர குருக்களின் சேவை தொடர்பாக ஆசிரியர் ,திரு ,ஸ்ரீகாந்தன் ,மற்றும் திரு ,இராமநாதன் ஆகியோர் உரை நிகழ்த்தினர் ,




குருக்கள் உசன் கிராமத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் ,என்றும் இப்போதைய நிலை எப்படி உள்ளது என்ற நிலையை தெளிவாக கூறியதுடன் உசன் கிராமத்தின் கட்டுப்பாடு எப்போதும் உசன் மக்களின் கைகளை விட்டு தவறி விடக்கூடாது என்ற நிலையை விளக்கி சொன்னார் .


தொடர்ந்து குருக்களுக்கு தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க  திரு ,ஒப்பிலாமணி விஜயகுலன் மாலை அணிவித்து மதிப்பளிக்க , திரு .சின்னதுரை சிவா அவர்கள் பாராட்டு கேடயம் வழங்கி கௌரவித்தார். இன் நிகழ்வில் பல உசன் மக்கள் கலந்து ஐயாவுடன்
கலந்துரையாடினார்கள் ,







மேலதிக படங்கள் எமது Facebook தளத்தில் :usanpeople  


Sunday, March 8, 2015

உசன் கந்தசாமி கோவில் பிரதம குருக்களை வரவேற்கிறோம்!

தனிப்பட்ட நோக்கமாக Toronto, கனடாவுக்கு வருகை தந்துள்ள உசன் கந்தசாமி கோவில் பிரதமகுருக்கள், அருள் வாக்குச் சித்தர் குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகளை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு வரவேற்கிறது.

உசன் கந்தசாமி கோவில் இன்றுவரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஒரு திருத்தலமாக விளங்குவதற்கு குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகளின் பங்கு மிக முக்கியமானது. வருடந்தோறும் நடைபெறும் ஸ்கந்த ஹோமம் இந்த வருடமும் February மாதம் 22 ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றதை இங்கே நினைவு கூரலாம். வருடாந்த மகோற்சவமும் முறை தவறாது சுவாமிகளின் வழிகாட்டலிலே சிறப்பாக நடைபெற்று வருவது உசன் மக்கள் மட்டுமல்ல அயற்கிராம மக்களும் செய்த பெரும் பாக்கியமே!

உசன் கிராமத்துக்கும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவுக்கும் பல சேவைகளைச் செய்துவரும் குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகள் நீண்ட ஆயுளோடு, நோயற்ற வாழ்வு வாழ உசன் முருகன் அருள் புரிய வேண்டுமென்று உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது. சுவாமிகள் Toronto வில் நிற்கும்போது சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேலேயுள்ள படத்திலே சுவாமிகள் தனது குடும்ப நண்பரான தர்மகுலன் (ரவி) கனகசபை அவர்களோடு காணப்படுகிறார்.


Saturday, February 28, 2015

உசன் கந்தசுவாமி கோவிலில் ஸ்கந்தஹோமம்


உசன் கந்தசுவாமி கோவிலில் வருடாந்தம் நடைபெறும் ஸ்கந்த ஹோமம் கடந்த 22 திகதி மிக சிறப்பாக நடைபெற்றது ,
கந்த சுவாமி கோவில் பிரதம குரு சிவா ஸ்ரீ கேதீஸ்வர குருக்களின் ஏற்றபட்டில் நடைபெற்ற இன் நிகழ்வை சிவா ஸ்ரீ சுந்தரேஸ்வர குருக்கள் தலைமையில் அந்தணர்களின் மந்திர ஒலி முழங்க முருகபெருமானுக்கு
ஸ்கந்தஹோமம் சிறப்பாக நடைபெற்றது .








படங்கள் : பவபிரிய சர்மா