அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, July 29, 2011

விளையாட்டில் முன்னணியில் உசன்

யாழ் மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற 100 M ஓட்டப் போட்டியில் உசன் இராமானாதன் மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும்  11 வயதுப் பிரிவைச் சேர்ந்த இரவீந்திர சர்மா - தவநந்தினி 2ம் இடத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் .




Wednesday, July 27, 2011

August இல் ஓர் ஒன்றுகூடல்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வின் வருடாந்தக் கோடைகால ஒன்றுகூடல் August 28, 2011, ஞாயிற்றுக் கிழமை Neilson Park (Scarborough, ON, Canada) இல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் BBQ உட்பட சிறப்பு உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. அத்தோடு சிறியவர்கள், இளையவர்கள் மற்றும் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடாத்தப்படும்.

இந்த நிகழ்வில் கலந்து மகிழ கனடா உட்பட உலகமெங்கும் பரந்து வாழும் உசன் மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயப் பழைய மாணவர்களையும், மற்றும் நலன் விரும்பிகளையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது. usanpeople எனும் FaceBook தளத்தில், EVENTS என்ற பகுதிக்குச் சென்று உங்கள் வரவைத் தெரியப்படுத்துங்கள்.

நீங்களும் வாருங்கள். உங்கள் உறவுகளையும் அழைத்து வாருங்கள்.
கூடிக் குதூகலித்திருக்க இந்த நாளைக் குறித்து வைத்திருங்கள்


Sunday, July 24, 2011

கனடாவில் ஒன்று கூடி ஒற்றுமையாய் கூழ் குடித்த உசன் மக்கள்





கனடா வாழ் உசன் மக்கள் ஒன்றிணைந்து இன்று திட்டமிட்டபடி Oshawa Lake view Park/Beach ல் குதூகலமாகப் பொழுதைக் களித்தனர். உசன் நினைவை மீட்க கூடிய வகையில் உணவுகளும், நிகழ்வுகளும் அமைந்திருந்தன . பெரியோர் முதல் சிறியோர் வரை குதுகலமாக இருந்தனர்.
ஆடிக்கூழ், ஒடியல் கூழ், கொத்துரொட்டி, தோசை ஆகிய உணவுகள் அங்கேயே தயாரித்துப் பரிமாறப்பட்டன. கூடவே பகோடா, mixer, வடை, தேநீர் என்று சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டன.
 வந்திருந்த உசன் மக்கள் அனைவரும் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்
உசன் மக்கள் ஒன்றிணைந்து Beach கரையில் சந்தித்தது இதுவே முதல் தடவை. இன்றைய நாள் பங்குபற்றிய மக்களுக்கு உற்சாகமும், சந்தோசமும் நிறைந்த நாளாக இருந்ததைக் காண முடிந்தது. வெப்பம் கூடிய இந்த நாளில் பலரும் ஏரி நீரில் குளித்து வெப்பத்தைத் தணித்துக்கொண்டனர்.

மேலதிக படங்களைக் காணக் கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்.
https://picasaweb.google.com/usanphotos/CanadaUsanPeopleAtBeach





சதீஸ்குமார் அஷ்மிகா வின் பிறந்தநாள் வாழ்த்து

உசனை சேர்ந்த திரு திருமதி. சதீஸ்குமார் கமலினி தம்பதிகளின் புதல்வி அஷ்மிகா தனது முதலாவது பிறந்தநாளை லண்டன் UK யில் உள்ள Sydenham School (Yong pup opposite ) Dartmouth Road ல் ஜூலை மாதம் 23 ம் திகதி மிக சிறப்பாக
கொண்டாடினார்.   அஷ்மிகா சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ அனைத்துலக உசன் மக்கள் சார்பாக 
வாழ்த்துகிறோம் .



Wednesday, July 20, 2011

எமது அயல்உறவுகளான கனடாவாழ் மிருசுவில் மக்களின் கோடைகால ஒன்றுகூடல்.


எமது அயல்உறவுகளான கனடாவாழ் மிருசுவில், புனித நீக்கிலார் தேவாலய பங்கு மக்களின் கோடைகால ஒன்றுகூடல், எதிர்வரும் யூலை மாதம் 24ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் 12மணி முதல், L'Amoreaux பூங்காவில் இடம்பெறவுள்ளது .


Monday, July 18, 2011

திருமதி பத்மராணி பத்மநாதன் அவர்களின் மரண அறிவித்தல்.....



மீசாலையைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும் தற்போது திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மராணி பத்மநாதன் அவர்கள் 19-02-2011, செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, இராசம்மா தம்பதியினரின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், பத்மநாதன்(ஒய்வுபெற்ற நில அளவையாளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுகந்தி(இலங்கை), சுகீதா(சுவீடன்), பத்மவேணி(இலங்கை), பத்மராஜினி(அமெரிக்கா), பத்மலோஜினி(கனடா), பத்மரமணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரவீந்திரன், சுதாகரன், ஜெகசீலன், உருத்திரன், குகன், ஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், றஜீவன், நிசாந்தி, லர்சனன், சுகர்னன், சிந்தியா, பிரவீன், ஆகாஷ், அபிஷா, அக்ஷயா, கவீனா, காவியா, உபனையா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தனிக்சிகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-07-2011 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருநெல்வேலியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுகந்தி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94214902279
சுகீதா(மகள்) — சுவீடன்
தொலைபேசி: +4692088836
பத்மவேணி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94212227686
பத்மராஜினி — கனடா
தொலைபேசி: +16148898473
பத்மலோஜினி(மகள்) — கனடா
தொலைபேசி: +19059975666
பத்மரமணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778617756


Saturday, July 16, 2011

Lake View Park/Beach சுற்றுலா - நாளை சந்திப்போம்!


கோடை காலத்தில் இன்னுமோர் நாளை ஒன்றாகக் களித்திருப்போம்!
வாருங்கள் நாளைய நாளுக்கு வண்ணங்கள் பூசுவோம்!
ஒன்றுகூடுவோம் Oshawa நகரில்.
காலை 10 மணி முதல் நீங்கள் விரும்பிய நேரம் வரை.
இடம்: Lake View Park.
நீங்கள் அங்கு வந்து சேர்வதற்கான வழி இதோ:

  1. Take 401 E toward Kingston   
  2. Take the exit toward Simcoe Street. The exit ramp ends at Bloor Street W. 
  3. Turn left onto Bloor St W
  4. Take the 1st right onto Simcoe St S (within a few meters).
  5. Continue to follow Simcoe St S to Lake View Park
  6. After Valley Drive, take a right on to the driveway to Lake View Park.
  7. Come to the East end of the park closer to the children water paly area to join your relatives and friends for a day full of fun.

(East of Jubilee Pavilion Banquet & Conference Center, closer to the lake).

Use the map below to get your personalized direction:



உங்களுக்கு மட்டும் இரகசியமாய் சொல்லுகிறோம்.........

உசன் மண் வாசனை கமழும் ஒடியல் கூழும் உண்டு.

மற்றுமோர் சிறப்பு உணவும் உங்களுக்காகாக் காத்திருக்கிறது.

நீங்களும் வாருங்கள்.  உறவுகளையும் அழைத்து வாருங்கள்.

நாளை சந்திப்போம்!

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Thursday, July 14, 2011

மரண அறிவித்தல் - திரு. நல்லதம்பி பாஸ்கரன்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா இன் செயற்பாட்டாளராக விளங்கும் திரு. நல்லதம்பி பத்மநாதன் (ரஞ்சினி) அவர்களின் இளைய சகோதரன் திரு. நல்லதம்பி பாஸ்கரன் அவர்கள் இன்று மொன்றியல், கனடாவில் காலமானார்.
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகளுக்கு:
விநாசித்தம்பி கருணானந்தன் (கருணி)
1-416-894-3353


பிறந்தநாள் வாழ்த்து - ஜதிகேசன் செல்லத்துரை

உசன் மக்களுக்கு நவீன தொழில் நுட்ப சேவைகளையும், கணினி அறிவையும் வழங்கிவரும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா இன் உசன் தொழில்நுட்ப இணைப்பாளர் செல்வன் ஜதிகேசன் செல்லத்துரை அவர்களின் பிறந்த நாள் இன்றாகும் (14-07-2011). இந்நாளில் ஜதி மேலும் அறிவும், செல்வமும் பெற்று ஊருக்கும், உலகுக்கும் சேவை வழங்கி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
உசன் ஐக்கிய வாலிபர் சங்கம் - ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம்






உசனுக்கு இன்னுமோர் "Engineer" உதயம்

உசன் இராமநாதன் மகாவித்தியாலய மாணவன் தனபாலசிங்கம் சிவசங்கர் அவர்கள் சிங்கப்பூரில் உள்ள National University of Singapore ல் MSc பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இதன் பட்டமளிப்பு விழா அண்மையில் Singapore ல் நடைபெற்றது. சிவசங்கரின் திறமை கண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயம் பெருமை கொள்வதுடன், உசனுக்கு இன்னுமோர் பொறியியலாளர் கிடைத்ததையிட்டு உசன் மக்கள் மகிழ்வடைகிறோம்.
சிவசங்கரின் முயற்சிக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மற்றும் உசன் அமைப்புக்கள் சார்பில் எமது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம். 
 அ.கஜீவன் 
 சிங்கப்பூர் இணைப்பாளர் 
 உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா  





திருமதி இரத்தினசிங்கம் சித்திறூபா அவர்களின் மரண அறிவித்தல்...


உசன், மிருசுவிலைச் சேர்ந்த நல்லதம்பி இரத்தினசிங்கம் (வடமாகண பிரதி அஞ்சல் மா அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியான இரத்தினசிங்கம் சித்திறூபா அவர்கள் இன்று (14-07-2011) காலமானார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் இல. 28, புதிய அத்தியடி வீதி, யாழ்பாணத்தில் அமைந்திருக்கும் அவர்களின் வீட்டில் நாளை 15-07-2011 அன்று நடைபெற்று, அன்னாரது பூதவுடல் யாழ்பாணம் இந்து மயானத்தில் நல் அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அத்துடன் அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம்.
தகவல்
தனபலசிங்கம் (சகோதரன்)
(கிராமசேவையாளர்)
0094-777110960



மகிந்தன், சர்மிளா .... வாழ்த்துக்கள்



உசன மிருசுவிலை சேர்ந்த திரு,திருமதி. குணபாலசிங்கம் தம்பதிகளின் புதல்வன் மகிந்தன் அவர்களும் நுணாவில் மேற்கு நுணாவிலை சேர்ந்த திரு திருமதி. இரட்ணசிங்கம் தம்பதிகளின் புதல்வி சர்மிளா அவர்களும் இன்று அதாவது 14-07-2011 அன்று விவாகப்பதிவினை மேற்கொள்கின்றனர்.



விவாகப்பதிவினை மேற்கொள்ளும் தம்பதிகள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் சார்பாகவும் உசன் வாழ் மக்கள் சார்பாகவும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்.







அத்துடன் விவாகப்பதிவினை மேற்கொள்ளும் தம்பதிகளுடன் எமது ஸ்ரீ முருகன் விளையட்டு கழகத்தினர் படத்தில் நிற்பதை கணலாம்


காண்டீபன், சியாமினி ... திருமண வாழ்த்து

உசனை சேர்ந்த திரு திருமதி நடராசா தம்பதிகளின் புதல்வன் செல்வன்  காண்டீபன் (New York, USA தொடர்பாளர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ) அவர்களுக்கும் நுணாவில் திரு திருமதி யதகுலசிங்கம் தம்பதிகளின் புத்திரி செல்வி சியாமினி அவர்களுக்கும். உசன் முருகன் அருளால் இன்று 14 ஜுலை வியாழக்கிழமை இந்தியா கோயம்பேடு சென்னையில் உள்ள சென்னை Delux Hottel  ல் திருமாங்கல்யம் நடைபெற திருவருள் கூடிஉள்ளது . புது வாழ்க்கை தொடங்கும் புதுமண தம்பதியருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மற்றும் உசன் அமைப்புக்கள் சார்பாக எமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் .




Wednesday, July 13, 2011

காண்டீபன்-சியாமினி அவர்களின் திருமண வாழ்த்துக்கள்....


உசன், மிருசுவிலைச் சேர்ந்த திரு. திருமதி நடராசா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வன் செல்வன் காண்டீபன் அவர்களும் நுணாவில் மேற்க்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த திரு. திருமதி ச.யதுகுலசிங்கம் தம்பதிகளின் கனிஸ்ட புதல்வி செல்வி சியாமினி அவர்களும் இன்று 14-07-2011 சென்னையில் உள்ள CHENNAI DELUX HOTEL திருமண மண்டபத்தில் திருமணபந்தத்தில் இணைகின்றனர்.
அவர்கள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் சார்பாகவும், உசன் வாழ் மக்கள் சார்பாகவும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்.


Saturday, July 9, 2011

அனைத்துல உசன்மக்களுக்கு! இவை பயனுள்ளதா????


கடந்த ஒருவருடகால கடும் முயற்சியில் கனடா ஒன்றியமும் உசன் வாலிபர்களும் இணைந்து முன்னெடுத்து இயங்கிவரும் எமது usan.ca எனும்  இணையதளமும் usanpeople எனும் Facebook தளமும்,அனைத்துலக உசன் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றே நம்புகிறோம்.இருப்பினும் பெருமளவுநேரத்தையும், செலவையும் எமது உறுப்பினர்களின் உழைப்பையும் தாண்டி உங்களிடம் வந்து சேரும் எமது சேவையானது
உசன் மக்களுக்கு தேவையற்ற செயல்பாடு என்ற ஒரு கருத்தும் பரிமாறப்பட்டு வருகிறது. எனவே இது குறித்த
ஒரு வாக்கெடுப்பை அனைத்துலக உசன் மக்களிடம் நடாத்தி அதில் கிடைக்கும் முடிவுடன் எதிர்காலத்தில் எமது பணியை தொடரலாம். அருகில் இருக்கும் கேள்விக்கு உங்கள் பதிலை தாருங்கள்.

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை எமக்கு அறியத்தாருங்கள்.
aju@usan.ca


Friday, July 8, 2011

நூல்கள் மற்றும் உடுப்புக்கள் சேர்த்தல்.

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட உசனில் அமையவிருக்கும் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்திற்கான நூல்கள் சேகரிப்பும், உசனில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கான உடுப்புகள் சேகரித்தலும் July 20, 2011 அன்றோடு நிறைவடைய இருக்கின்றன. சேகரிக்கப்பட்ட நூல்களையும், உடுப்புக்களையும் உசனுக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுவிட்டன.

இதுவரை தங்கள் பங்களிப்பை வழங்காதவர்கள் July 20, 2011 இற்கு முன்பாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் ஒன்றோடு தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பை வழங்கலாம்:
தயா 647-889-2944
பாஸ்கரன் 647-448-7434
அஜந் 416-833-2120

இதுவரை தங்கள் ஒத்துழைப்பை வழங்கியவர்களுக்கு எமது நன்றிகள்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Tuesday, July 5, 2011

Lake View Park/Beach சுற்றுலா திகதியில் மாற்றம்.

July 16, 2011 சனிக்கிழமை Oshawa, Ontario, Canada வில் அமைந்திருக்கும் Lake View Park/Beach இற்குச் சுற்றுலா செல்ல ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது July 17, 2011 ஞாயிற்றுக் கிழமை செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகிறோம். உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Saturday, July 2, 2011

செல்வி சு.திஷானா அவர்களின் முதலாவது பிறந்த தின வாழ்த்து....


உசன், மிருசுவிலைச் சேர்ந்த திரு./திருமதி சுபேஸ்.மேகலா தம்பதிகளின் ஏக புத்திரி செல்வி. சு.திஷானா தனது இரண்டாவது பிறந்த தினத்தை உசன், மிருசுவிலில் அமைந்திருக்கும் தனது இல்லத்தில் 03-07-2011 அன்று வெகு விமர்சையாகவும், மிகவும் பிரமாண்டமாகவும் கொண்டாடுகிறார்.

செல்வி. சு.திஷானா எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் திருவருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகத்தினர் சார்பாகவும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா சார்பாகவும், அனைத்துலக உசன் வாழ் மக்கள் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம். (சுபேஸ்-0094-776069640)




உசன் கந்த சுவாமி கோவிலில் பூங்காவன திருவிழா வரவு செலவு விபரம்


உசன் கந்த சுவாமி கோவிலில் 18-05-2011 அன்று நடை பெற்ற பூங்காவன திருவிழா இரவு நிகழ்ச்சிகளுக்காக நிதி உதவி செய்த எமது அனபான புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி கலந்த வணக்கம். இதனது வரவு செலவு விபரம் கீழே...


வரவு விபரம்
வா.சின்னத்துரை குடும்பம்(கனடா) -25000
ச.ஜீவகாந்தன்(இத்தாலி) -15000
சி.இராசகாந்தன்(இத்தாலி) -10000
செ.ஜெயதேவன்(நோர்வே) -10000
சு.சிவபாதசுந்தரம்(கனடா) -10000
க.யவநீதன்(பிரான்ஸ்) -10000
கா.பூங்கோதை(கனடா) -4000
அ.கஜீவன்(சிங்கப்பூர்) -5000
கி.நந்தகுமார்(அவுஸ்ரேலியா) -5000
ஆ.சிவராசா(லண்டன்) -5000
வெ.அஜந்தன்(கனடா) -10000
2010 ஆம் ஆண்டு பூங்காவன மீதி -28640
மொத்தவரவு -137640




செலவு விபரம்
இசைக்குழு -48000
மங்களவாத்தியம் -45000
மின்சாரம் -35000
பந்தல் -2500
கடைசெலவு -2215
ஆட்டோ,ஒலிபெருக்கி -1500
பொலிஸ் ரிப்போட் -1120
மொத்த செலவு -135335





மொத்த வரவு -137640
மொத்த செலவு -135335
மீதி -2305







மீதியாக உள்ள 2305 கொண்டு கோயிலுக்கு என ஒரு சில்வர் குடம் வாங்கிகொடுக்கப்பட்டது. அத்துடன் இந்த விபரத்தை உடனடியாக வெளியிட முடியமைக்கான காரணம் எல்லோரது பணமும் உடனடியாக கிடைக்கவில்லை. இவ் காலதாமத்திற்கு மனம்வருந்துகின்றோம். இவ் பண உதவிகளை செய்த புலம்பெயர் உறவுகளுக்கு நன்றிகள் அத்துடன் இவ்வாறான உதவிகள் எங்களுக்கு மேலும் தேவை.
நன்றி(பூங்காவன ஏற்பாட்டு குழு)










Friday, July 1, 2011

திரு.சின்னத்தம்பி தவரத்தினம் அவர்களின் மரண அறிவித்தல்



உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு.சின்னத்தம்பி தவரத்தினம் அவர்கள் 27-06-2011 அன்று காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் அறியத்தருவதோடு
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.