அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்
Showing posts with label மரண அறிவித்தல். Show all posts
Showing posts with label மரண அறிவித்தல். Show all posts

Sunday, August 16, 2026

துயர் பகிர்வு - சின்னத்தம்பி இரட்ணசிங்கம்

உசனைப் பிறப்பிடமாகவும் முரசுமோட்டை, உரும்பிராய், பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி இரட்ணசிங்கம் அவர்கள் August 15, 2026 சனிக்கிழமையன்று இயற்கையெய்தினார்.

இவர் Chairman சின்னத்துரை அவர்களின் தம்பியாவார்.

அன்னார் அமரர்களான சின்னத்தம்பி - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

அமரர்களான கிருஷ்ணபிள்ளை - பவளரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அமரரான சத்தியந்திரா மற்றும் வினோதா, தர்மா (பேபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகிலன் (ஆளா), திலீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணா, மாதவன், அர்ஜவன், சீரோன், அபிஷரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமரர்களான இராஜசிங்கம், இராஜேஸ்வரி, பாலசிங்கம் (Chairman), பரமேஸ்வரி, புவனேஸ்வரி, குலசிங்கம் மற்றும் சோதீஸ்வரி, விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.

அமரர் இரட்ணசிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.



Thursday, August 13, 2026

துயர் பகிர்வு - சின்னத்துரை யோகேஸ்வரன்

உசனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை யோகேஸ்வரன் (குணா) அவர்கள் August 13, 2026, வியாழக்கிழமை அன்று இறைவனடியெய்தினார்.

அன்னார் அமரர்களான சின்னத்துரை - நவமணி தம்பதியரின் பாசமிகு புதல்வனும்,

அமரர் பொன்னையா மற்றும் வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

துஷானி, யதூபிகா, தாருகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேதீஸ்வரன் (சிவா), பவானி, முனீஸ்வரன் (ஈசன்), கருணாகரன் (கண்ணன்), கோமதி (மதி), திருகரன் (திரு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சிவச்செல்வி, அருணாசலம், நிர்மலாம்பிகை, கேமலதா, பார்த்தீபன், தனுஷா, வரதராஜன், லிங்கேஸ்வரன், காலஞ்சென்ற வசந்தராணி, மற்றும் செல்வராணி, மனோகரன் ஆகியோரின் மைத்துனரும்,

சிவரஞ்சன், தர்சன் ஆகியோரின் மாமனாரும்,

நஸ்விகா,அஸ்வித் ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் August 14, 2026, வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஈச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

கனடா
துஷானி (மகள்)
+1 289 544 0744
தாருகா (மகள்)
+1 437 606 6920
திருகரன் (சகோதரன்)
+1 416 568 1591
அகல்சன் (மருமகன்)
+1 437 329 7647

இலங்கை
யதூபிகா (மகள்)
+94 76 5383691
தர்சன் (மருமகன்)
+94 77 3131458
அருணாசலம் (மைத்துனர்)
+94 77 7251266
ஜெனீசன் (மருமகன்)
+94 76 8835438
அனோசன் (மருமகன்)
+94 77 4004151
வவா (மைத்துனர்)
+94 77 1679529
கேதீஸ்வரன் (சிவா, கனடா) (சகோதரன்)
+1 647 975 1524 (WhatsApp)
ஈசன் (சகோதரன், சுவிஸ்)
+41 76 455 8451
கண்ணன் (சகோதரன், கனடா)
+1 416 543 1461
கோமதி (மதி) (சகோதரி, கனடா)
+1 437 261 7234
சயன் (மருமகன்)
+33 601817568

சின்னத்துரை யோகேஸ்வரன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது. அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.



Friday, August 7, 2026

துயர் பகிர்வு - சிதம்பரப்பிள்ளை ஈசுரபாதம்

நாகர்கோவிலில் பிறந்தவரும் உசனில் வாழ்ந்தவரும் இறுதிக் காலத்தில் அவுஸ்திரேலியாவில் வசித்துவந்தவருமான சிதம்பரப்பிள்ளை ஈசுரபாதம் அவர்கள் அவுஸ்ரேலியாவில் இறைவனடிசேர்ந்தார் என்ற தகவலறிந்து வேதனைப்படுகிறோம்.

அன்னார் புவனேஸ்வரி (தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,

பகிரதன், பார்த்தீபன், பிரகலதா, புருசோத்மன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

மாணிக்கம் பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவஞானம் அவர்களின் அன்புச் சகோதரனும்,

அமரர் புஸ்பராசா, புஷ்பராணி, தயானந்தசோதி, அமரர் இராசநாயகம், கௌரி, சிவதாஸ் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியும் - கனடா பிரார்த்திக்கிறது. அதேவேளை அன்னாரின் பிரிவால் வேதனையுற்றிருக்கும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.



Tuesday, June 9, 2026

துயர் பகிர்வு - புவனேஸ்வரி சுந்தரம்பிள்ளை

சரசாலையைப் பிறப்பிடமாகவும் உசனை வசிப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான புவனேஸ்வரி சுந்தரம்பிள்ளை அவர்கள் தனது 90ஆவது வயதில் June 9, 2026 செவ்வாய்க்கிழமை அதிகாலை இறைவனடி எய்தினார்.

அன்னார் அமரர்களான சிவப்பிரகாசம் - நாகமுத்து தம்பதியரின் அன்புப் புதல்வியும்,

அமரர் சுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

வரதன், விமலன், மஞ்சுளா, கிரிதரன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும், வ

ிஜிதா, வினோதினி, ராஜயோகன், தேவகி, ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மித்திரன், அதிரா, ரிஷிபந், நிதாரா, ஆத்மீகா, கவிநயா ஆகியோரின் பேத்தியாரும்,

அமரர்கள் குமாரசாமி, சரஸ்வதி, ஜெயலட்சுமி, மகேந்திரன், சிவராஜா, மற்றும் ஸ்ரீனிவாசன், இராசமோகன், பாக்கியலட்சுமி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் June 11, 2026, வியாழக்கிழமை அன்று காலை 8 மணிக்கு 384 Finley Avenue, Ajax L1S 2E4 என்று முகவரியில் அமைந்திருக்கும் Ajax Crematorium and Visitation Center ல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அமரர் புவனேஸ்வரி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

அமரர் புவனேஸ்வரி அவர்களின் இறுதி நிகழ்வை இந்தத் தளத்தில் காணலாம்.
https://together.oneroomstreaming.com/ZVYNDA



Thursday, May 14, 2026

துயர் பகிர்வு - திருமதி கமலாதேவி தம்பிப்பிள்ளை

உசன் இராமநாதன் மகா வித்தியாலய ஓய்வு பெற்ற ஆசிரியர் கமலாதேவி தம்பிப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்த தகவல் எம்மையெல்லாம் ஆறாத் துயரத்தில் மூழ்க வைத்துள்ளது. கல்வியோடு நல்ல ஒழுக்கத்தையும் புகட்டிய இவரை உசன் மண் இழந்து தவிக்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் முருகனை வேண்டுகிறது. அதேவேளை அன்னாரின் இழப்பால் ஆறாத துயருற்றிருக்கும் குடுமபத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.


Tuesday, May 5, 2026

துயர் பகிர்வு
சிதம்பரப்பிள்ளை திலகநாதன்

தோற்றம்: Jauary 28,1943 மறைவு: May 3, 2026

தென்மராட்சி, உசனைப் பிறப்பிடமாகவும், 23 - 32nd. Lane, வெள்ளவத்தை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை திலகநாதன் (Retired Deputy General Manager, Finace & Planning, Bank of Ceylon (BA, MBA, FSMS) அவர்கள் இறைபதமடைந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னார் அமர்களாள முருகேசு சிதம்பரப்பிள்ளை - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

அமர்களான சந்திரசேகரம் - நல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

திருமதி மீனாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தில்லைநடேசு (Swisterland) அவர்களின் சகோதரரும்,

திலாணி (UK), திலீபன்(Australia) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

Dr. சபேசன் (UK), தயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திஷான், பிரம்மன், நீரஜா, தில்ஷயன், துவாரகேஸ் ஆகியோரின் பேரனாரும்,

சிவசாந்தி, அமர்ககளான கமலாசனி, தியாகராஜா, Dr. ராஜலக்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரது பூதவுடல் 23 - 32nd. Lane, வெள்ளவத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் May 6, 2026, புதன்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, May 10, 2026, ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3 மணியவில் நிசலசெவன, கல்கிஸ்சை பொது மையானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கண்ணிருடன் வேண்டுகிறோம்.

ஓம் சாந்தி , சாந்தி, சாந்தி.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு: +94777822456

அமரர் சிதம்பரப்பப்பிள்ளை திலகநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.



Sunday, May 3, 2026

துயர் பகிர்வு - சிவபாக்கியம் சுந்தரேசன்

உசனைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டத்தில் வாழ்ந்துவந்தவருமான சிவபாக்கியம் (பாக்கியம்) சுந்தரேசன் அவர்கள் May 3, 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் அமரர்களான சிதம்பரப்பிள்ளை சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மகளும்,

சுந்தரேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருஷ்ணா (UK), தனுஷா (Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமரர் சிவமலர், சிவராசா (சாவகச்சேரி), சிவலோகநாயகி (ஸ்கந்தபுரம்), அமரர் பாய்கியலக்குமி, விக்னேஸ்வரன் (மீசாலை), ஜெகதீஸ்வரன் (இத்தாலி), சிவராணி (இத்தாலி) ஆகியோரின் சகோதரியுமாவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

அமரர் சிவபாக்கியம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் இழப்பால் தவித்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.



Saturday, May 2, 2026

துயர் பகிர்வு - கண்மணி முத்துக்குமார்

உசனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கண்மணி முத்துக்குமார் அவர்கள் May 2, 2026, சனிக்கிழமை மாலை இறைவனடி எய்தினார்.

அன்னார் அமரர் முத்துக்குமாருவின் அன்பு மனைவியும்,,

மகாலக்குமி, அமரர் மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மதியாபரணம் (குணம்) அவர்களின் அன்பு மாமியும்,

அமரர்களான ஐயாத்துரை, பூரணம், இராசம்மா ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் May 3, 2026, ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

அமரர் கண்மணி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் இழப்பால் தவித்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.



துயர் பகிர்வு - விசுவலிங்கம் இராமலிங்கம்

உசனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் இராமலிங்கம் அவர்கள் May 2, 2026, சனிக்கிழமை காலை இறைவனடி எய்தினார்.

அன்னார் அமரர்களான விசுவலிங்கம் கண்ணாத்தா ஆகியோரின் பாசமிகு மகனும்,

அமரர்கள் முருகேசு சின்னம்மா ஆகியோரின் மருமகனும்,

அமரர் செல்லாச்சியின் அன்புக் கணவரும்,

அமரர் முருகானந்தன், முருகதாஸ் (ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யதுர்சன் (மாணவன், பேராதனை பல்கலைக்கழகம்), தனுசிகன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 3 மணியளவில் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தகவல்
மகன் மற்றும் பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளிற்கு
மகன் +94740554984
பேரன் +94742913681

அமரர் இராமலிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் இழப்பால் தவித்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.



Wednesday, April 29, 2026

துயர் பகிர்வு - சிவப்பிரகாசம் மகேந்திரன்

காலம்சென்றவர்களான சிவப்பிரகாசம் - நாகமுத்து தம்பதிகளின் அன்புமகனும்,

குமாரசாமி, சரஸ்வதி, புவனேஸ்வரி, ஸ்ரீனிவாசன், இராஜமோகன், அமரர் சிவராசா,பாக்கியலக்சுமி, அமரர் ஜெயலக்சுமி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதனுமான சிவப்பிரகாசம் மகேந்திரன் அவர்கள் இறைவனடி எய்திய தகவல் எமை எல்லாம் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Melbourne, Australia ல் வசித்துவந்தவாரான இவர் அண்மைக்காலமாக நொடிவாய்ப்பட்டிருந்தார்.

இவர் உசன் மக்களோடு நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் முருகனை வேண்டுகிறது. அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.



Friday, January 9, 2026

துயர் பகிர்வு - பொன்னையா ஜெயவிந்தன் (விந்தன்)

உசனைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும்கொண்ட பொன்னையா ஜெயவிந்தன் (விந்தன்) வியாழக்கிழமை, January 8, 2026 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற பொன்னையா நாகேசுவரி தம்பதிகளின் மகனும்,

காலம் சென்ற இணுவில் மேற்கு செட்டிவளவு இராமநாதன் கண்மனிஅம்மா தம்பதிகளின் மருமகனும்,

நிர்மலாவின் (மாலா) கணவரும்,

நியானி மற்றும் சனோயனின் அப்பாவும்,

மகிந்தன், கீதா மற்றும் காலம் சென்ற நிசந்தன், காந்தி ஆகியோரின் சகோதரரும் ஆவர்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் விபரம்

VISITATION:
Sunday, January 11, 2026 From 5:00 pm to 9:00 pm
Monday, January 12, 2026 From 12:00 pm to 2:00 pm

FUNERAL SERVICE:
Monday, January 12, 2026
From 2:00 pm to 4:00 pm

At:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, L3R 5G1, ON, Canada

CREMATION & WITNESSING:
Monday, January 12, 2026
From 4:30 pm to 5:00 pm
At
North Toronto Crematorium Inc.
2 Stalwart Industrial Drive
Gormley, L0H 1G0, ON, Canada

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்திக்கிறது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.



Sunday, November 23, 2025

துயர் பகிர்வு - துஷ்யந்தி மிகுந்தன்

உசனைப் பிறப்பிடமாகவும், 49/4 மணல்தறை லேன், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பொறியியல் பேராசிரியை திருமதி துஷ்யந்தி மிகுந்தன் அவர்கள் November 23, 2025 அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார் அமரர்களான பேரம்பலம் தெய்வானைப்பிள்ளை (தங்கமா ஆசிரியை) அவர்களின் அன்பு மகளும்,

பேராசிரியர் கு. மிகுந்தன் (விவசாய பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அரவிந்தன், ரகுவிந்தன், வினோவிந்தன், ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வைத்தியர் மிதுறிகா, (Registrar, NCTH), பொறியியலாளர் துமிலன் (மென்பொறியியலாளர் WSO2) , வைத்தியர் வக்சலன் (யாழ் வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திவாகரன் (SR Nephrology, கொழும்பு தேசிய வைத்தியசாலை), மாதங்கி (விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம்), வைத்தியர் யோகினி (சிறிவர்தனபுர வைத்தியசாலை) ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை திங்கட்கிழமை, November 24, 2025 அன்று பகல் 11 மணியளவில் அமரரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அஞ்சலிக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பிற்பகல் 1:30 இற்கு வைக்கப்பட்டு பின்னர் 3 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்
குடும்பத்தினர்.
+94718475539

அமரர் துஷ்யந்தி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது. அன்னாரின் கணவன், பிள்ளைகள், மருமக்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.



Friday, October 10, 2025

துயர் பகிர்வு - குகதாசன் சிவதாசன்

உசனைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் சிவதாசன் அவர்கள் வெள்ளிக்கிழமை, October 10, 2025 அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற குகதாசன் - சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற இராசதுரை - சிவயோகம் தம்பதியரின் மருமகனும்,

காலஞ்சென்ற சிவதாசன் லோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிலக்கசனின் பாசமிகு தந்தையும்,

கமலதாசஸ், காலஞ்சென்ற ஈசன் மற்றும் விமலதாஸ் ஆகியூரின் சகோதரனும்,

காலாவதி, சத்தியவதி, வதனி, செந்தமிழ்செல்வி, இரஞ்சிதமலர், காலஞ்சென்றவர்களான சாந்தநாயகி, இரத்தினேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை, October 12, 2025 காலை 7 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக 9 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

சிவபதமடைந்த சிவதாசன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது. அன்னாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.



Thursday, May 15, 2025

துயர் பகிர்வு - அருள்சோதி செல்வநாயகம்

உசனைச் சேர்ந்த திருமதி அருள்சோதி செல்வநாயகம் (சோதி aunty) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை, May 11, 2025 அன்று நித்திய இளைப்பாற்றியை அடைந்தார்.

முன்னைநாள் மிருசுவில் புகையிரத நிலைய அதிபர் காலஞ்சென்ற Joseph செல்வநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியான இவர் Tissa, காலஞ்சென்ற Dana மற்றும் Wigna ஆகியோரின் அன்புத் தாயாரும், Vasanthy, Anto ஆகியோரின் மதிப்புமிகு மாமியாரும் ஆவார்.

இவர் உசன் மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் முன்னாள் செயலாளராவார்.  இவருடைய காலத்திலேயே முதல்முறையாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் உசனுக்கான சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.  அத்தோடு பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முயற்சியாக உசனில் தையல் பயிற்சி நிலையம் நடாத்தப்பட்டதும் நினைவுகூரத்தக்கது. ஒரு முன்பள்ளி ஆசிரியரான இவர் தனது வீட்டிலேயே முன்பள்ளியை நடாத்தி பல குழந்தைளின் வாழ்வில் ஒளியேற்றினார்.

பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளோடு சுதந்திரமான, மகிழ்வான வாழ்க்கையை வாழ்ந்த இவர் இம்மண்ணிலிருந்து விடைபெற்று விண்ணுலகம் சென்றது எம்மையெல்லாம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அன்னாரின் ஆன்மா நித்திய இளைப்பாற்றியை அடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா  பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், மருமக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் விபரம்:

இறுதி மரியாதை செலுத்துதல்
வெள்ளிக்கிழமை, May 16, 2025 மாலை 5 மணி முதல் மாலை 9 மணிவரை
சனிக்கிழமை, May 17, 2025 காலை 8 மணி முதல் 9:30 மணி வரை
இடம்:
Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Court, Brampton, L6T 5G2, ON, Canada

இறுதி ஆராதனை
சனிக்கிழமை, May 17, 2025 காலை 10:30 மணி
Our Lady of the Airways Parish
7411 Darcel Avenue, Mississauga, L4T 2X5, ON, Canada

நல்லடக்கம்
Assumption Catholic Cemetary
6933 Tomken Road, Mississauga, L5T 1N4, ON, Canada

நினைவு விருந்து
JC's Grill House
1500 Matheson Blvd., Mississauga, L4W 3Z4, ON Canada

அன்னாரின் இறுதி நிகழ்வுகளைப் பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்.
https://app.funerallive.ca/funerals/BCVC-ArulsothiCecil-Selvanayagam-8032119629


Tuesday, January 28, 2025

துயர் பகிர்வு - யோகம்மா விநாசித்தம்பி


சாவகச்சேரி, டச்சு வீதி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா விநாசித்தம்பி அவர்கள் 25-01-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நாகம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு விநாசித்தம்பி (ஆசிரியர், உசன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பரமேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விஜிதா மற்றும் றெஜிதா (குணம், ஜெர்மனி), றெஜிக்குமார் (ராசன், கனடா), காலஞ்சென்ற சசிகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோபாலகிருஸ்ணன் (செல்வன், ஜெர்மனி), வாகினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபனா (ஜெர்மனி), அபினா (ஜெர்மனி), கிருத்திகன் (ஜெர்மனி), மிர்ஷிகா (கனடா), திலக்ஷிகா (கனடா), திலக்சன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
காலஞ்சென்ற முருகேசு, முத்துப்பிள்ளை மற்றும் சிவயோகநாதன், இராமநாதர், காலஞ்சென்ற சண்முகரத்தினம், தர்மராசரத்தினம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 29-01-2025 புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்று தகனக் கிரியைக்களுக்காக சாவகச்சரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்.
கார்த்திகேசு இராமநாதர்


Tuesday, October 22, 2024

துயர் பகிர்வு - சுவாமிநாதர் தங்கராஜா



உசனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் தங்கராஜா அவர்கள் திங்கட்கிழமை, October 21, 2024 அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற விசுவநாதர் சுவாமிநாதர், தெய்வானைப்பிள்ளை சுவாமிநாதர் (உசன்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை விநாசித்தம்பி, பொன்னம்மா விநாசித்தம்பி (சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி தங்கராஜா (தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
பரதன், லக்ஸ்மன், ஸ்ரீகணேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கரோல், சுமதி, ஷரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹஷீகா, ஜொனதன், ஆரன், டியா, லோகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, ராஜநாதன், சிவபாதசுந்தரம், புவனேஸ்வரி பேரம்பலம், மற்றும் மகேஸ்வரன் (கனடா), விமலேஸ்வரி கிட்னேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சிவகாமிப்பிள்ளை விநாசித்தம்பி, அமிர்தாம்பிகை ராஜநாதன், சரஸ்வதி சிவபாதசுந்தரம் மற்றும் கிருபாதேவி மகேஸ்வரன் (கனடா), கிட்னேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ராஜநாயகம், தர்மலிங்கம், சதாசிவம், ராமச்சந்திரன், ஜெயலக்ஸ்மி ராஜநாயகம், பவளரட்ணம் (பவளம்), ராமச்சந்திரன் மற்றும் தன்மவரதர் தம்பித்துரை (இலங்கை), ராஜேந்திரன், உமாதேவி தன்மவரதர் (ஜேர்மனி), புஸ்பரட்ணம் (புஸ்பா) தர்மலிங்கம் (பிரித்தானியா), தங்கரட்ணம் (ராணி) சதாசிவம் (இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரருமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Viewing Saturday, October 26, 2024 Between 2 p.m. and 6 p.m. Divinity Funeral Care 209 Kenton Road, Harrow HA3 0HD, UK Ritual Sunday, October 27, 2024 Between 8 a.m. and 10 a.m. Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Road, London NW7 1NB Cremation Sunday, October 27, 2024 Between 10 a.m. and 10:45 a.m. Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Road, London NW7 1NB Lunch Sunday, October 27, 2024 Between 11:30 a.m. and 3 p.m. Hendon Sports Centre (Youth & Community Centre) Algernon Road, London NW4 3TA
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரதன் (மகன்) - +447956496244
லக்ஸ்மன் (மகன்) - +447956430267
ஸ்ரீகணேஷ் (மகன்) - +447961206287
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.





Sunday, September 22, 2024

துயர் பகிர்வு - ஆர்த்தி சுகுணேஸ்வரன்


அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆர்த்தி சுகுணேஸ்வரன் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை, September 22, 2024 அன்று New York இல் காலமானார்.

இவர் சுகுணேஸ்வரன் - சுசீலாதேவி ஆகியோரின் பாசமிகு மகளும்,

பண்டிதர் சரவணமுத்து - சின்னத்தங்கம் மற்றும் ஆசிரியர் சின்னத்துரை - செல்லம்மா ஆகியோரின் அன்பான பேத்தியும்,

வைத்திய கலாநிதி அர்விந்தின் பரிவான சகோதரியும்,

Britta வின் மைத்துனியும்,

சரோஜினிதேவி - இராமநாதர் ஆகியோரின் பெறாமகளும்,

வைத்திய கலாநிதி கணேசானந்தன் - வைத்திய கலாநிதி  தமயந்தி ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் மறைவால் துவண்டுபோயிருக்கும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.

தகவல்

சரோஜினிதேவி - +1-416-606-6763
இராமநாதர் - +1-416-299-6763


Tuesday, May 7, 2024

துயர் பகிர்வு - செல்வி கமலேஸ்வரி வல்லிபுரம்

உசனைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வி கமலேஸ்வரி வல்லிபுரம் அவர்கள் செவ்வாய்க்கிழமை, May 7, 2024 அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் - வைரவிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சிவபாக்கியநாதன், சிவசுந்தரம், நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், இராசையா, அன்னபூரணம் மற்றும் தவமணி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமை, May 8, 2024 அன்று யாழ் பிரதான வீதியில் உள்ள White House மலர்ச்சாலையில் நடைபெற்று பிற்பகல் 2 மணிக்கு பூதவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மருமகன் சி. செல்வன்
மருமகன் சி. கேதீஸ்
+94 77 7834 603

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Thursday, April 4, 2024

துயர் பகிர்வு - பாக்கியதேவி (றாகினி) சிவபாதம்

உசனைப் பிறப்பிடமாகவும், Switzerland ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த றாகினி என்று அழைக்கப்படும் திருமதி பாக்கியதேவி சிவபாதம் அவர்கள் April 4, 2024 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - நல்லதங்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,

சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மல்லிகாதேவி (றஞ்சினி) மற்றும் ஜெயதேவன், நகுலாதேவி,  சத்தியதேவி,  ஜெயதீபா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டிலக்சி, சஹான் ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


Saturday, March 16, 2024

துயர் பகிர்வு - கந்தையா பேரம்பலம்

உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும், உசன் பற்றாளரும் ஆகிய மதிப்புக்குரிய க. பேரம்பலம் அவர்கள் March 16, 2024, சனிக்கிழமையன்று இயற்கையெய்தினார்.
அன்னார் முகமாலையைப் பிறப்பிடமாகவும், உசன் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.
"வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு" என்ற உசன் குறித்த முதலாவது நூலின் ஆசிரியரும் இவரே.
அன்னாரின் இறுதி நிகழ்வு March 17, 2024, ஞாயிறுக்கிழமை மாலை 3 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்செய்யப்படும்.
இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இறுதி நிகழ்வுகளை https://www.youtube.com/live/a6kHYz9eaZk?si=kBYOpj-VuXn6VMNL என்ற தளத்தில் நேரலையாகப் பார்த்து அஞ்சலி செலுத்தலாம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.