அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, December 30, 2014

திரு. கந்தையா தங்கவேலாயுதம்

உசனைச் சேர்ந்த ரோஹிணி (வெற்றிவேலு) இளங்கீரன் அவர்களின் மாமனாரான யாழ் அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தங்கவேலாயுதம் அவர்கள் 30-12-2014 அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்ற கந்தையா சின்னம்மா அவர்களின் அன்பு மகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

குகனேஸ்வரி, சிவனேஸ்வரி, ஐங்கரன், பிரபாகரன், கிருபாகரன், இளங்கீரன் (Debt Free Credit Solution) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சங்கீதா, கேதுராணி, ரோகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவநீதன், ஜெனனி, மேனன், ரம்பா, நிலானி, அபிநயா, அஸ்வினி, அஸ்வின், ஆரூஷன், மதுஷனா , தியானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

திபிஷனின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளுகிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்
ஐங்கரன் (மகன்) - + 94 77340 5974
பிரபாகரன் (மகன்) - + 44 750748 2799
இளங்கீரன் (மகன்) - + 416-834-7227


Monday, December 22, 2014

உசன் உறவுகள் 2014

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வழங்கும் வருடாந்த நிகழ்வான "உசன் உறவுகள் 2014" January 17, 2015, சனிக்கிழமை அன்று இடம்பெற இருக்கிறது என்ற தகவலை மகிழ்வோடு அறியத் தருகிறோம். கனடா,Scarborough நகரில் Middlefield Road மற்றும் McNicol Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் இந்த நிகழ்வு இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்போடு அழைக்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.

இம்முறை இந்த நிகழ்வை இளையவர்களை முன்னிறுத்தி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய முகங்கள் நிகழ்வுக்கு புது மெருகேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழமையை விட்டு வெளியே வந்து மாற்றங்களோடு இந்த நிகழ்வை நடத்த இளையவர்களின் ஆலோசனைகளோடு அவர்களின் உற்சாகமான பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. உங்களின் வளத்தை இந்த நிகழ்வுக்கு வழங்க ஒன்றியத்தின் செயலாளரோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

"உசன் உறவுகள் 2014" நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்பும் நிறுவனங்களும், தனி நபர்களும் கூட ஒன்றியத்தின் செயலாளரோடு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். இந்த நிகழ்வில் இடம்பெற இருக்கும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளைப் பொறுப்பெடுக்க முன்வருமாறு அங்கத்தவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

உழைத்துக் களைத்த உடலுக்கும், உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் இந்த நிகழ்வைச் சிறப்பாக்க வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா



"Usan Uravukal 2014"

The annual event hosted by United People Association of Usan in Canada, "Usan Uravukal 2014", will be held on Saturday, January 17, 2015. This event will be held at Baba Banquet Hall closer to Middlefield Road and McNicol Avenue intersection in Scarborough, Canada.

All are cordially invited to attend this event and have lot of fun.

This year we are encouraging our younger generation to be part of this event. Please provide your ideas and suggestions to the Secretary of the Association. We are seeking your leadership and other talents which definitely make this event a huge success for all ages.

We are looking for Sponsors as well. Organizations, Business owners and individuals who wish to sponsor this event please contact the Secretary of United People Association of Usan in Canada via secretary@usan.ca.

Once again we invite you all to attend "Usan Uravukal 2014" and meet with your fellow citizens.

Thank you.

United People Association of Usan in Canada.


Monday, December 15, 2014

உசன் சந்தியில் பேருந்து தரிப்பிடம்

நீண்ட காலமாக கண்டி வீதி உசன் சந்தியில் பேருந்து தரிப்பிடம் இல்லாத நிலையில் கொட்டும் மழையிலும், வெய்யிலிலும் மக்கள் படும் அசௌகரியங்களைக் கண்டு, உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் உசன் சந்தியில் பேருந்து தரிப்பிடம் அமைக்கும் திட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இந்தச் செயற்திட்டத்தை உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் இ.போ.ச. நடாத்துனருமான அமரர் திரு.க.வெற்றிவேலு அவர்களின் நினைவாக நிறைவேற்ற அன்னாரின் குடும்பத்தினர் முன்வந்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவை அணுகி இந்த செயற்திட்டத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா, உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தினரோடு தொடர்புகொண்டு தமது ஒத்துழைப்பைத் தெரிவித்தனர்.

இந்தப் பேருந்து தரிப்பிடத்தை அமைப்பதற்கான சட்டரீதியான அனுமதி உரிய திணைக்களங்களில் இருந்து கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அதற்கான ஆரம்ப கட்டுமாணப் பணி 15/12/20104 அன்று உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகத் தலைவர் திரு. ரூபன் தலைமையில் சுப நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சமய ரீதியான சடங்கைத் தொடர்ந்து அமரின் சகோதரான திரு.க. கனகரத்தினம் அவர்கள் அடிக்கல்லை நாட்டிவைத்தார். தொடர்ந்து கழகத் தலைவர் திரு. ரூபன் மற்றும் உறுப்பினர் திரு. பகீரதன் ஆகியோரும் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இந்த நல்ல செயற்திட்டத்தை நிறைவேற்ற முன் வந்த அமரர் திரு. க. வெற்றிவேலு குடும்பத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றிகளைத் தெரிவித்து நிற்கிறது. இந்தச் செயற்திட்டத்தை முன்னெடுக்கும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்துக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது.


Friday, December 5, 2014

திருமதி றோஸ் அரியமலர் தனபாலசிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்


யாழ்,உசன் மிருசுவிலை பிறப்பிடமாகவும் ,வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் ,கனடாவில் வசித்து வந்தவருமான
திருமதி ,றோஸ் அரியமலர் தனபாலசிங்கம் அவர்கள் 29-11-2014
சனிக்கிழமை வ்கானடாவில் காலமானார் .
அன்னார் காலம் சென்ற கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
காலம் சென்ற டேவிட் தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்
ஜெயந்தினி,காலம்  சென்ற அரியபாலன்,டெனிஸ்,ஜேம்ஸ் ,பெற்றி,
ஆகியோரின் அன்புத்தாயாரும்
ஜோன் செல்வராசா (மாஸ்டர் உசன் ) காலம் சென்ற லில்லி நேசமலர் ஆகியோரின் சகோதரியும் ஆவர் ,
அன்னாரின் திருவுடல் கனடாவில்  5-12-2014 வெள்ளிகிழமை மாலை 5 மணிமுதல் 9 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada  பார்வைக்கு வைக்கப்பட்டு ,
பின்னர் அன்னாரின் சொந்த ஊரான உசனுக்கு எடுத்து செல்லப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர்
வட்டுக்கோட்டையில் நல்லடக்கம் செய்யப்படும் ,
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம் .
தகவல்
டெனிஸ் — கனடா
செல்லிடப்பேசி:+19059151043
ஜேம்ஸ் — கனடா
தொலைபேசி:+14163994802
பெற்றி — கனடா
தொலைபேசி:+14166637417


Wednesday, November 19, 2014

மரண அறிவித்தல்
திருமதி ஜெயலக்ஷ்மி குழந்தைவேலு

உசனைப் பிறப்பிடமாகக் கொண்ட காசிப்பிள்ளை அவர்களின் மகள் ஜெயலக்ஷ்மி அவர்கள் புதன் கிழமை, November 19, 2014 அன்று மட்டுவில் இலங்கையில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற குழந்தைவேலு (Ayurvedic Physician) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தாமோதரம்பிள்ளை, நவரத்தினம், அழகரத்தினம், பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,

வியஜலஷ்மி (Land Officer, Government Secretariat, Jaffna; Former CO, மிருசுவில் Farm), கமலாம்பிகை (Former Agriculture Instructor), பத்மநாதன் (Former Agriculture Assistant, Sugar Factory, Amparai), பத்மாவதி (Administrative Officer, Government Secretariat, Jaffna), கமலநாதன் (Ayurvedic Physician) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரதேவா (Business Owner), மாலினி (Medical Recording Officer) ஆகியோரின் மதிப்புக்குரிய மாமியும்,

ரவீந்திரகுமார், கஜனி, பத்மகுமார், சாகித்யன், குருஷோத்மன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வியாழக்கிழமை, November 20, 2014 அன்று மட்டுவில், இலங்கையில் நடைபெற்று பூதவுடல் காளி கோவிலடி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
சாந்தினி சிவானந்தன் (மருமகள், கனடா) - +1-905-554-2014


Saturday, November 15, 2014

மரண அறிவித்தல்
திரு. தியாகராஜா வெற்றிவேலு

(இளைப்பாறிய கணித ஆசிரியர்- வத்தேகம, விடத்தற்பளை)
தோற்றம் : 4 June 1932 — மறைவு : 11 November 2014
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும், கொடிகாமத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா வெற்றிவேலு அவர்கள் 11-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் உருக்குமணி தம்பதிகளின் அன்பு மூத்த மருகனும்,

தயாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

லோஜனி(கனடா), சுதாகரன் (கனடா), சுபாஜனி (கனடா), எழிலினி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி, சண்முகநாதன், மற்றும் பரமேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, அரியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாநந்தன் (JBN Auto Sale-கனடா), ராஜலட்சுமி (கனடா), பாலசிங்கம் (லண்டன்), சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, செல்லம்மா, சோமசுந்தரம், அரியரத்தினம், மற்றும் புனிதநாயகி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜஸ்மினா, பிரவீனா, நிவேதனா, திவிஷா, கேஷிகா, மிரேஸ், ஹரீஸ், செலீனா, அபிநாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
இலங்கை - +94215685496
சுபாஜனி — கனடா - +14168504169
லோஜனி — கனடா - +16475479435


Tuesday, November 11, 2014

மரண அறிவித்தல் - தியாகராசா வெற்றிவேலு

உசனைச் சேர்ந்த திரு. தியாகராசா வெற்றிவேலு (முன்னை நாள் ஆசிரியர்) அவர்கள் 11-11-2014 அன்று உசனில் இறைபதம் எய்தினார்.

அன்னார் தயாவதியின் அன்புக் கணவரும்,

லோஜனி, சுதாகரன், சுபாஜனி, எழிலினி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

தகவல்:
லோஜனி +1-416-830-0473
சுபாஜனி +1-416-850-4169


Thursday, November 6, 2014

மரண அறிவித்தல் - திருமதி தெய்வானைப்பிள்ளை தம்பு

உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வானைப்பிள்ளை தம்பு அவர்கள் 06-11-2014 அன்று வியாழக் கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,

செங்கமலத்தின் சகோதரியும்,

குணமணி மற்றும் காலஞ்சென்றவர்களான குணரத்தினம், துரைராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புவனேஸ்வரி, சரஸ்வதி மற்றும் காலஞ்சென்ற இளையதம்பி ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07-11-2014 அன்று வெள்ளிக் கிழமை பி. ப. 2 மணி அளவில் அவரது இலத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக ஈச்சங்காடு மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
இளையதம்பி நகுலன்
+1-416-559-1260


Tuesday, October 28, 2014

சுவிஸ் Luzern நகரில் "பரததர்சனம்"

சுவிட்சர்லாந்து நாட்டில் Luzern நகரில் வசித்துவரும் தமிழ் மாணவர்களுக்குக் கடந்த பல ஆண்டுகளாகப் பரதநாட்டியக் கலையைக் கற்பித்து, சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பல தமிழ் கலை நிகழ்வுகளுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் "பரததர்சன" நடனக் கல்லூரியின் 10 வது ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடும் முகமாக, பரததர்சன நடனாலய மாணவர்களும், ஆசிரியரும், பெற்றோரும் இணைந்து வழங்கும் "பரததர்சனம்" பரதநாட்டிய நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ம் திகதி நடைபெறவுள்ளது.


Luzern நகரில் அமைந்துள்ள Pfarrei St, Karli Spital Strasse-91, 6004 Luzern இல் பிற்பகல் 1 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும். "பரததர்சன" நடனக் கல்லூரியின் அதிபர் திருமதி.காயத்திரி திஷாந்தன் அவர்களின் வழிகாட்டலில் பரத நாட்டிய திறமையால் "கவிப்பேரரசு" வைரமுத்து அவர்களின் பாராட்டைப் பெற்ற மாணவிகள் இணைந்து வழங்கும் பரததர்சனம் நிகழ்வு பரதநாட்டிய ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் நடனத்திறமையை வெளிக்கொணரும் இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து மாணவர்களுக்கு உற்சாகம் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
தொடர்புகளுக்கு: 0762957116  /  0763654821


Sunday, October 26, 2014

மரண அறிவித்தல் - வீரசிங்கம் குழந்தைவேலு



உசனைப் பிறப்பிடமாகக் கொண்ட காசிப்பிள்ளை அவர்களின் மருமகன் மட்டுவிலைச் சேர்ந்த வீரசிங்கம் குழந்தைவேலு (Ayurvedic Physician) அவர்கள் சனிக்கிழமை, October 25, 2014 அன்று மட்டுவில், இலங்கையில் காலமானார்.

அன்னார் ஜெயலக்ஷ்மியின் அன்புக் கணவரும்,

வியஜலஷ்மி (Land Officer, Government Secretariat, Jaffna), கமலாம்பிகை (Former Agriculture Instructor), பத்மநாதன் (Former Agriculture Assistant, Sugar Factory, Amparai), பத்மாவதி (Administrative Officer, Government Secretariat, Jaffna), கமலநாதன் (Ayurvedic Physician) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

சந்திரதேவா (Business Owner), மாலினி (Medical Recording Officer) ஆகியோரின் மதிப்புக்குரிய மாமானாரும்,

ரவீந்திரகுமார், கஜனி, பத்மகுமார், சாகித்யன், குருஷோத்மன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை, October 26, 2014 அன்று மட்டுவில், இலங்கையில் நடைபெற்று பூதவுடல் காளி கோவிலடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
சாந்தினி சிவானந்தன் (மருமகள், கனடா) - +1-905-554-2014


Monday, October 13, 2014

சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

இறை பதம் எய்திய சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகளை October 15, 2014 புதன் கிழமை அன்று Toronto, Canada நேரப்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை கீழுள்ள இணைப்பில் நேரடியாகக் காணலாம்.

Click here

Or browse to the link below:
http://m.ustream.tv/channel/chapel-ridge-funeral-home


Sunday, October 12, 2014

மரண அறிவித்தல் - திரு. சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை

திருத்தப்பட்ட செய்தி

இலங்கை தென்மராட்சி உசனைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டு தற்போது Scarborough, Ontario, கனடாவில் வசித்து வந்தவருமான சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை (ஆச்சியாவளவு சிதம்பரப்பிள்ளை) அவர்கள் இன்று October 12, 2014, ஞாயிற்றுக் கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான கந்தையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற நாகமுத்து (கச்சாய்), கந்தையா (உசன்), தம்பையா (உசன், வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், இராஜேஸ்வரி (ராணி, France), ஜெகதீஸ்வரி (ஈஸ்வரி, Denmark), ஜெகதீஸ்வரன் (பெரியாம்பி, Canada), யோகநாதன் (சின்னாம்பி, Germany), தயாபரன் (தயா, Canada), உதயகுமாரன் (உதயன், London), யோகேஸ்வரி (யோகேஸ், France), தயாளினி (தயாளி, Canada), வரதகுமாரன் (வரதன், Canada) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

கனகரத்தினம் France (சரசாலை), கந்தசாமி Denmark (எருவன்), கமலாம்பிகை Canada (நீர்வேலி), பீட்ரா Germany, புஸ்பராணி Canada (தேவி, குப்பிழான்), சத்தியா London (காரைநகர்), தனேந்திரன் (இலங்கை), உதயகுமார் Canada (கோவிலாகண்டி), உஷாம்பிகை Canada (வல்வெட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும், யவநீதன் (France), யதுகுலன் (London), யசோதரன் (France), துவாரகன் (Denmark), டெனிஷா (Denmark), துளசிகா (Denmark), சிந்துஜன் (Canada), சிந்துஜா (Canada), சரணியா (Canada), யான் (Germany), யானா (Germany), யவனா (Canada), யசிதா (Canada), யனனன் (Canada), ஆர்த்தி (London), மயூரா (London), வினுஜா (இலங்கை), யனோஷன் (இலங்கை), கிரிஷாலினி (இலங்கை), சுலக்ஷன் (France), கஜனன் (Canada), கஜிதா (Canada), வர்சா (Canada), ஆதி (Canada) ஆகியோரின் அன்புப் பேரனும், ஹரிஷா (Denmark) அவர்களின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூத உடல் 14-10-2014 செவ்வாய் கிழமை பிற்பகல் 5 மணிமுதல் இரவு 9 மணி வரை 8911 Woobine Avenue Markham, Ontario L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Homeஇல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மீன்டும் மறுநாள் 15-10-2014 அன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை அதே மண்டபத்தில் ஈமக்கிரிகைகள் நடைபெற்று பின்னர் 1591 Elgin Mills Road East Richmond Hill, Ontario L4S 1M9 இல் உள்ள Elgin Mills Cemetaryக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நண்பகல் 12மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளும்படி உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.
இராஜேஸ்வரி (ராணி, France): +33-9502-42407
ஜெகதீஸ்வரி (ஈஸ்வரி, Denmark)
ஜெகதீஸ்வரன் (பெரியாம்பி, கனடா): +1-416-321-6158
யோகநாதன் (சின்னாம்பி, Germany): +49-4282-3733
தயாபரன் (தயா, கனடா): +1-647-889-2944
உதயகுமாரன் (உதயன், UK): +44-208-5182007
தயாளினி (தயாளி, கனடா): +1-647-567-7959
வரதகுமாரன் (வரதன், கனடா): +1-647-567-7959

அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Thursday, October 2, 2014

உசனில் இடம்பெற்ற வாணி விழாக்கள்

முப்பெருந்தேவிகளையும் சிறப்பாக வழிபடும் நேரமிது. கல்வியில் சிறந்து விளங்க வேண்டிக் கலைமகளுக்கு விழாவெடுத்து வணங்குவோம். இம்முறை உசனில் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்திலும், ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக மைதானத்திலும் வாணி விழாக்கள் சிறப்பாக இடம்பெற்றன. இந்த விழாக்களில் இருந்து சில புகைப் படங்களைப் பகிர்ந்துகொள்கிறோம்.

பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்தில்
ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக மைதானத்தில்


Sunday, September 21, 2014

உற்சாகமாக ஆரம்பமாகிய உசன் மக்களின் "பூப்பந்து பயிற்சி "


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் அடுத்த முயற்சியாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலான பூப்பந்து (Badminton) பயிற்சி கடந்தவாரம் ஆரம்பமாகியது. Scarborough நகரில் Markham Road மற்றும் Elson Street சந்திக்கருகில் 18 Coxworth Ave, Markham என்ற முகவரியில் உள்ள Parkland Public School ல் ஆரம்பமாகிய பயற்சியில் சிறுவர்கள், பெரியோர்கள், இளையவர்கள் என பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அனுமதி பெற்ற பயிற்சியாளர்கள் சிறந்த முறையில் உடல் பயிற்சியுடன், பூபந்து பயிற்சியும் வழங்கினர். மிக குறைந்த கட்டணத்துடன் உசன் மக்களுக்கு வழங்கும் சேவையாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் இன்னும் 15 இடங்கள் உள்ளன. எதிர்வரும் வாரத்துக்கிடையில் உசன் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் ஏனையவர்களும் இந்தப் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். எனவே நீங்களும் இந்த சந்தர்ப்பத்தை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் .


ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் மாலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறும் இந்தப் பயிற்சி நெறியில் 6 வயதுக்கு மேற்பட்ட யாரும் வயது வேறுபாடின்றிப் பங்குபற்ற முடியும்.
இடம்: Parkland Public School
18 Coxworth Ave, Markham, ON, Canada.
பதிவுகளுக்கு:
1. சிவா நவரத்தினம் (விளையாட்டு துறை நிர்வாகி - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்-கனடா): 416-908-6919
2. உமா இராஜரத்தினம் (பூபந்து பயிற்சி நிர்வாகம் - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா): 647-869-2441






Monday, September 15, 2014

கனடா ஒன்றியம் வழங்கும் "பூப்பந்து பயிற்சி"

கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் தனது அடுத்த கட்ட சேவையாக கனடா வாழ் உசன் மக்கள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கு , பூப்பந்து (Badminton ) பயிற்சி நெறி சேவையை வழங்கவுள்ளது ,
கனடா வாழ் உசன் மக்களின் இளம் சமுதாயத்தினரின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் முகமாகவும் , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் விளையாட்டு துறையை  வளர்க்கும் முகமாகவும் , உடல் உள ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திறமைமிக்க அங்கீகாரம்  பெற்ற பயிட்சியாளர்கள் மூலம் இந்த வகுப்புக்கள் நடைபெறவுள்ளது .
ஒவொரு வரமும் செவ்வாய்கிழமைகளில்  மாலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறும் இந்த பயிற்சி நெறியில் ,  6 வயதுக்கு மேற்பட்ட யாரும் வயது வேறுபாடின்றி பங்குபற்ற முடியும் .
இடம் : Parkland Public School 
               18 Coxworth ave, Markham 
                 L3S-3B8
              Markham road and Eloson    சந்திப்பில் 
இது ஒரு முதல் கட்டமே வேறு இடத்தில் உறுப்பினர்கள் சேருமிடத்தில் இடம் விரிவுபடுத்தப்படும் ,
இந்த இடத்தில் வெறும் 30 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு எனவே உங்கள் பெயர்களை எதிர்வரும் 19 ம் திகதி வெள்ளிகிழமைக்கு முன்பாக பதிவு செய்யவும் ,
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உடல் உள நலத்துடன் பயிற்சி பெற சந்தர்ப்பத்தை தவற விடாமல் விரைவாக அழைத்து உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள் ,
 வருடம் தோறும் போட்டி நடத்தப்பட்டு கேடையங்கள் வழங்கப்படும் ,தகுதி பெறும் வெற்றியாளர்களுக்கு எதிர்வரும் 2015 ம் ஆண்டு 
லண்டனில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழர் பூபந்து போட்டியில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் பெற்று கொடுக்கப்படும் . உங்கள் ஆதரவும் பங்களிப்பும் எமது முயற்சிக்கு உந்து சக்தியாக அமையும் .

பதிவுகளுக்கு :

1.  சிவா நவரத்தினம் :416-908-6919
(விளையாட்டு துறை நிர்வாகி - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்-கனடா  )

 2. உமா இராஜரத்தினம் -647-869-2441
   (பூபந்து பயிற்சி நிர்வாகம்  - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா  )      

3. பாஸ்கரன் சுப்பிரமணியம் -647-448-7434
    (செயலாளர்  - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா  )        


Thursday, September 4, 2014

சிறப்பாக நடைபெற்ற கனடா வாழ் உசன் மக்கள் ஒன்றுகூடல் 2014


கனடா வாழ் உசன் மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வழங்கும் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 2014 மிகச் சிறப்பாக நடைபெற்றது . சங்கத்தின் தலைவர் கனகசபை நகுலன் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில், உசன் மக்களுக்காகத் தமது வீட்டை உவந்தளித்த, பண்டிதர் சரவணமுத்து அவர்களின் மகள், திரு. திருமதி சுசீலாதேவி சுகுணேஸ்வரன் அவர்களும், திருமதி சின்னத்தங்கம் சரவணமுத்து அவர்களும் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.



அதைத் தொடர்ந்து தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் அறிக்கை, பொருளாளர் கணக்கறிக்கை ஆகியன பொதுச்சபைக்கு வழங்கப்பட்டன.
பிரதம விருந்தினர் உரை வழங்கிய திருமதி சுசீலாதேவி சுகுணேஸ்வரன் அவர்கள் உசன் அபிவிருத்திக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய முன்வந்ததுடன் கனடா வாழ் இளம் சமுதாயத்துக்கு தனது அனுபவத்துடனான அறிவுரை வழங்கினார். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் பொருளாளர் பிரியலதா கேதீஸ்வரனிடம் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத் தேவைகளுக்காக நன்கொடையையும் அவர் வழங்கினார்.



அதைத் தொடந்து வழமை போன்று மதிய உணவு, BBQ, குளையல் சோறு, சிற்றுண்டிகள், மாலை உணவாகக் கொத்து ரொட்டி என்பனவும் பரிமாறப்பட்டன. சிறுவர் மற்றும் பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றன. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், அதிஸ்ட சீட்டிழுப்பில் வெற்றி பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவாக சங்கத்தின் எதிர்கால திட்டங்களை மக்களுக்கு அறிவித்ததுடன் அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் நாடப்பட்டது.

இந்த நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற அனுசரணை வழங்கியவர்கள்:
Royal Brokerage - சிவா கந்தையா
White Hourse Travels -மகேந்திரன்
Video Maruthy-வேல் கிருபா
JBN Auto Sales-கருணா விநாசித்தம்பி
Vijayaruban Oppilamani-Usan
Pathmakanthan Saravanamuthu - உபதலைவர் - உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்