அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, January 28, 2015

திரு. சிதம்பரப்பிள்ளை கந்தசாமி

உசனைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி (சிதம்பரப்பிள்ளை) அவர்களின் அன்புக் கணவர் சிதம்பரப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 27-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று டென்மார்க்கில் சிவபதம் அடைந்தார்.

இவர் யாழ். தென்மராட்சி வரணி குடமியனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

துவாரகன், துளசிஹா (டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வானைப்பிள்ளை, குமாரசாமி, கனகரத்தினம், இராசமலர் (இலங்கை), கமலாம்பிகை, பீட்ரா, புஸ்பராணி, சத்தியா, உஷாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டெனிஷா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஹரிஷா அவர்களின் அன்புப் பேரனும்,

வேலாயுதம், யோகேஸ்வரி, சிவனேஸ்வரி, ஞானவடிவேல், இராசேஸ்வரி (ராணி), ஜெகதீஸ்வரன் (பெரியாம்பி), யோகநாதன் (சின்னாம்பி), தயாபரன் (தயா), உதயகுமாரன் (உதயன்)), யோகேஸ்வரி (யோகேஸ்), தயாளினி (தயாளி), வரதகுமாரன் (வரதன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுஷா, மதன், முகுந்தன், அகிலன், மோகனன், லிகிர்தன், சுபா, யவநீதன், யதுகுலன், யசோதரன், வினுஜா, ஜனோஷன், கிருஷாலினி, சுலக்‌ஷன், கஜனன், கஜிதா ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

சுபாஷினி, சுமதா, சிவறூபன், முரளீதரன், வேல்வேந்தன், நிஷாலினி, சர்மிலன், லக்‌ஷனா, சிந்துஜன், சிந்துயா, சரணியா, ஜான், ஜானா, யவனா, யசிதா, யனகன், ஆர்த்தி, மயூரா, வர்ஷா, ஆதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகரத்தினம், உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் Vestre Kirkegård, Viborgvej 47A, 8210 Aarhus V, Denmark என்ற முகவரியில் ஞாயிற்றுக்கிழமை 01/02/2015, மு.ப 9:30 மணிக்கு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
துவாரகன் — டென்மார்க்: +4541916035


Sunday, January 18, 2015

மறக்க முடியா உசன் உறவுகள்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மகிழ்வோடு வழங்கிய "உசன் உறவுகள் 2014" மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. திரு. திருமதி முனீஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். ஆடல், பாடல், மாய வித்தை, வேடிக்கை நிகழ்ச்சிகள் என்று இந்த நிகழ்வு களைகட்டி இருந்தது. கூடவே அறுசுவை உணவையும் வந்திருந்தோர் உண்டு மகிழ்ந்தனர்.

ஒன்றியத்தின் தலைவர் கனகசபை நகுலன் அவர்கள் பார்வையாளர்களை அன்போடு வரவேற்றார். திருமதி மகாரஞ்சிதம் கணேஷன் தேவாரம் பாடி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
செல்விகள் பிரவீணா, மீனுசா, ஜனனி ஆகியோர் கனடிய தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்தை இசைத்து அவையோரை மகிழ்வித்தனர்.
South Asian Music Academy of Ontario அதிபர், இசைக் கலை மணி திருமதி குலநாயகி விவேகானந்தன் அவர்களின் மாணவிகள் சாரங்கா தயாளன் மற்றும் கனிஷா உதயகுமார் இருவரும் துதிப் பாடல்கள் பாடி வந்திருந்தோரை மகிழ்ச்சிப்படுத்தினர். இவர்கள் இருவரும் தமிழ் இசைக் கலா மன்றம் நடாத்தும் முதல் ஆண்டுப் பரீட்சையில் அதி விசேட சித்தி பெற்றவர்கள். சாரங்கா தயாளன் முன்னாள் அதிபர் திரு. பதஞ்சலி அவர்களின் பூட்டியாவார்.


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர் திருமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி மதுமிதா பாஸ்கரனின் நடனம் எல்லோரையும் கவர்ந்தது. 2011 ஆம் ஆண்டு TVI தொலைக் காட்சி நிறுவனத்தால் நடாத்தப்பட்ட நடனத் தாரகை நிகழ்வில் மதுமிதா முதல் இடத்தைப் பெற்று "நாட்டியத் தாரகை" என்ற கௌரவத்தைப் பெற்றுக்கொண்டவர்.

நிஷோ பத்மநாதன், யவீன் சுப்பிரமணியம், பிரதீஸ் சுப்பிரமணியம், திருமதி ரஞ்சி வெற்றிவேலு, ஆரணி சிவநாதன் ஆகியோரின் திரையிசைப் பாடல்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.
விதுரன் கேதீஸ்வரன் மகாகவி பாரதியார் பற்றி உரையாற்றி நிகழ்ச்சிக்குச் சிறப்பூட்டினர். சிறுவர்கள், இளையவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகியோருக்கான வேடிக்கைப் போட்டி நிகழ்ச்சிகளை ஜனனி, அபிரா ஆகியோர் சிறப்பாக நடத்தினர்.
இந்தப் போட்டி நிகழ்ச்சிகளில் அனைவரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்ட மாய வித்தை நிகழ்ச்சி வயது வேறுபாடின்றி அனைவரையும் கவர்ந்தது.
Royal Brokers Corporation அதிபர் சிவா கந்தையா மற்றும் Mortgage Alliance Authority ரகு புவனகாந்தன், ஒன்றியத்தின் பொருளாளர் திருமதி பிரியலதா சற்குணநாதன், திருமதி சரோஜினி இராமநாதர், திரு. ஒப்பிலாமணி விஜயரூபன், திருமதி சரோஜினி தேவபாலன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கினார்கள்.

ஒன்றியத்தின் செயலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் வந்திருந்தவர்களுக்கும், அனுசரணை வழங்கியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இது ஒன்றியத்தின் 15 ஆவது ஆண்டு என்பதை நினைவுபடுத்திய அவர் ஒன்றியத்தின் ஆரம்ப கால நிர்வாகசபைக்கும் நன்றியைத் தெரிவித்தார். அதி காலை 1 மணியளவில் நிகழ்ச்சி இன்னிதே நிறைவெய்தியது.


Thursday, January 15, 2015

"உசன் உறவுகள் 2014" / "Usan Uravukal 2014"

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமையுடன் வழங்கும் "உசன் உறவுகள் 2014" நிகழ்வுக்கு இன்னும் இருப்பது ஒரு முழு நாள் மட்டுமே. நிகழ்வுக்கு வருபவர்களை மகிழ்ச்சிப்படுத்தவென இந்த வருட நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முற்றுமுழுதாகப் பார்வையாளர்களைக் கவரக் கூடிய நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. குதூகலத்துக்குக் குறை இருக்காது. அத்தோடு அறு சுவை உணவும் பரிமாறப்பட உள்ளது.

நிகழ்ச்சி இடம்பெற இருக்கும் Scarborough நகரின் காலநிலையும் மிகவும் சாதகமாக உள்ளது. மழையோ, பனி மழையோ இல்லை. மலை நேர சராசரி வெப்பநிலையாக - 6 degree Celsius இருக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வீச இருக்கும் காற்றின் வேகமும் மணிக்கு 15 KM என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடாது அனைவரையும் மாலை 7 மணிக்கு முன் மண்டபத்தை வந்தடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கூடிக் குதூகலிக்கக் குளிர் காலத்தில் ஒரு நாள் சனிக்கிழமை, January 17, 2015.

வாருங்கள், களைத்துப்போய் இருக்கும் உள்ளத்துக்குக் களிப்பூட்ட வாருங்கள்!

ஊரையும், உறவுகளையும் ஒன்றாகச் சந்திக்க உற்சாகமாக வாருங்கள்!!

செயலாளர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.


________________________________________________________________________
"Usan Uravukal 2014"


We still have only one full day to the annual event "Usan Uravukal 2014", proudly presented by United People Association of Usan in Canada.

This event will not be the same as in the past. Programs have been modified to entertain all the audience. You will be disappointed if you don't attend this event. It will be a new beginning.

You will also be treated with array of delicious food served in buffet style and snacks.

The weather forecast is fantastic on Saturday, January 17, 2015 in Scarborough where the event will be held. No rain or snow. The average temperature of that evening will be only 6 degree Celsius below zero. The wind is also calm, 15 KM per hour. What else you want? Just dress up and show up.

The event is scheduled to start at 7 p.m.. Kindly arrive at the venue well before 7 p.m. to catch a better seat. Don't be disappointed by arriving late.

Meet and mingle with your relatives, friends and citizens of Usan!!

Come and have lot of fun!!

See you there!!!

Secretary
United People Association of Usan in Canada.


Monday, January 12, 2015

திருமதி மயில்வாகனம் மகேஸ்வரி அவர்களின் மறைவுச் செய்தி


உசனைப் பிறப்பிடமாகவும், விடத்தற்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மயில்வாகனம் மகேஸ்வரி அவர்கள் 10.01.2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

மல்லிகாதேவி, மாயாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான உசனைச் சேர்ந்த கதிர்காமநாதன், கந்திப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நித்தியானந்தசோதி(வவா, உசன்), மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டினேஷ் (கனடா), டியானி, சாரஞ்சன் ஆகியோரின் பேத்தியும்,

அஷ்ணி அவர்களின் பாசமிகு பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் விடத்தற்பளையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, சம்பாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
டினேஷ் (பேரன், கனடா) +1 647 993 0457
தொடர்புகளுக்கு:
நித்தியானந்தசோதி (வவா) +94 77 712 5429
   +94 77 606 2306
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது .


Friday, January 2, 2015

திரு.சு.இராஜகோபாலசிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்


கரம்பகம் மிருசுவிலை பிறப்பிடமாகவும் இத்தாலியில் வசித்து வந்தவருமான திரு.சுப்பிரமணியம் .இராஜகோபாலசிங்கம் (கோபால்) அவர்கள் , நேற்று கரம்பகத்தில் காலமனார் .
அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் புதல்வன் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம் .

தகவல் :
பாலேந்திரன் பூமா (தங்கை கனடா) -0014167507272
எழில்வாணி (மருமகள் )  -0014162835658


Thursday, January 1, 2015

அமரர் துரைசிங்கம் நடராசலிங்கம்

உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணி புரிந்த துரைசிங்கம் நடராசலிங்கம் அவர்கள் 21/11/2014 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டார். இவர் எழுதுமட்டுவாளைச் சேர்ந்த அமரர் துரைசிங்கம் தம்பதியினரின் மூத்த மகனாவார்.

மாணவனாக இருந்த காலத்திலேயே இவர் கல்வித் துறையில் சிறந்து விளங்கினார். சாதாரணமாக அமைதியாகக் காணப்படும் இவர் சக மாணவர்களுக்கு உதவுவதில் அக்கறை காட்டினார். குடும்பத்தில் மூத்தவரான இவர் தனது சகோதரர்களையும், சகோதரிகளையும் நல்ல முறையிலே நெறிப்படுத்தினார்.

ஒரு ஆளுமை மிக்க, திறமையான ஆசிரியராக இவர் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றியதை சக ஆசிரியர்களும், மாணவர்களும் நன்கு அறிவர். கண்டிப்பான ஓர் ஆசிரியராக இருந்தாலும் மாணவர்களோடு அன்போடு பழகுவார். தமிழ் மொழியில் மட்டுமல்ல ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார்.

அமரர் துரைசிங்கம் நடராசலிங்கம் அவர்களுக்கு எமது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து நிற்கிறோம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா