அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்
Showing posts with label உசன் பொது நூலகம். Show all posts
Showing posts with label உசன் பொது நூலகம். Show all posts

Monday, November 30, 2020

"பாவிசை" சிறுவர் பாடல் தொகுதி வழங்கலுக்கு Rs. 40,000.00 அனுசரணை


கவிஞர் நந்தினி அவர்களின்  "பாவிசை" சிறுவர் பாடல் தொகுதியை உசன் இராமநாதன் மகாவித்தியாலய மாணவர்களுக்கு வழங்குவதற்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா Rs.40,000.00 அனுசரணை வழங்கியுள்ளது.  ஒன்றியத்தின் வேண்டுகோளை ஏற்று இந்த அனுசரணையில் பங்கெடுத்துகொண்டோர்:
1. திருமதி. சரோஜினி இராமநாதர் - $50.00
2. சின்னத்துரை குடும்பம் - $100.00
3. சரவணமுத்து குடும்பம் - $140.00

இந்த நிதி உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்தினூடாக வழங்கப்பட்டது. பங்களிப்புச் செய்தோருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.

நிதி உதவி வழங்கல் நிகழ்வின் சில ஒளிப்படங்களை இங்கே காணலாம்.








Thursday, October 29, 2020

நவராத்திரி நிகழ்வு


உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்தில் வருடம்தோறும் நடைபெற்றுவரும் நவராத்திரி நிகழ்வு இவ்வருடம் நூலக தலைவர் திரு கனகரத்தினம் தலைமையில் கடந்த சனிக்கிழமை, October 24, 2020 அன்று நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

நூலக நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும், மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு  பூசையை உசன் கந்தசுவாமி கோவில் பிரதமகுரு, அருள்வாக்குச் சித்தர் கேதீஸ்வரக்குருக்கள் சிறப்பாக நடாத்திவைத்தார். அதனைத்தொடர்ந்து நூலகத்தில் வயலின் பயிலும் மாணவர்கள் அவர்களுடைய ஆசிரியரான திருமதி சிவகுமார் அவர்களின் நெறிப்படுத்தலில் வயலின் கச்சேரி ஒன்றினை நடத்தினர் அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவேறின.















Tuesday, October 20, 2020

"பாவிசை" சிறுவர் பாடல் தொகுதி


உசனைச் சேர்ந்த ஆசிரியர், கவிஞர் நந்தினி ஜென்சன் றொனால்ட் அவர்களின் படைப்பாக வெளிவருகிறது "பாவிசை" சிறுவர் பாடல் தொகுதி.  தரம் ஒன்று முதல் தரம் 5 வரை கல்வி பயிலும் மாணவர்களை மனதில் நிறுத்தி இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடலூடான கல்வி என்னும் முறையில் இளவயது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்நூலிலே சிறுவர் பாடல்கள் இருபத்தியிரண்டுடன், சுற்றாடல் பாடத்திட்டத்தின் 16 அலகுகளுக்கும் அலகுக்கு ஒரு பாடல் என்ற அடிப்படையில் 16 பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறுவர் பாடல் தொகுதிக்கு தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த. கிருபாகரன் அவர்கள் ஆசியுரை வழங்கியுள்ளார்.


இந்தப் புத்தகத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அதன் ஆசிரியர் திருமதி நந்தினி உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்தினூடாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் அனுசரணையை வேண்டி நிற்கிறார். இந்த நூலைப் பணம் கொடுத்து வாங்க முடியாத மாணவர்களுக்கு அனுசரணை மூலம் இந்த நூலை வழங்கி அந்த மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதே ஆசிரியரின் நோக்கமாக உள்ளது.

இந்த நல்ல நோக்கத்திற்கு உதவ விரும்பும் புலம் பெயர் நலன் விரும்பிகள் ஒன்றியத்தின் செயலாளர் விஜயகுமாரி புஷ்பராஜாவையோ அன்றி தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரனையோ தொடர்புகொண்டு தமது பங்களிப்பை வழங்க முடியும். உசனில் தமது பங்களிப்பை வழங்க விரும்புவோர் உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலக இணைப்பாளர் சரவணை செல்வராசா அவர்களினூடாக பங்களிக்க முடியும்.

இந்த உதவியை October மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பாக வழங்குமாறு வேண்டுகிறோம்.



ஆசிரியர், கவிஞர் நந்தினி அவர்களுக்கு இந்த நேரத்திலே உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.





Wednesday, July 1, 2020

இடர்கால உதவித் திட்டத்தில் பங்கெடுத்தோருக்கு நன்றி


உசனில் மேற்கொள்ளப்பட்ட இடர் கால துயர் துடைப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் ரூ.1,28,000.00 உம்,  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ரூ.4,16,000.00 உம் நிதியாகச் சேர்த்தன.  இதில் உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் சேர்த்த நிதி கற்பிணிப் பெண்களுக்கும், அவர்களுடைய 5 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கும் சத்துணவு வழங்குவதற்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சேர்த்த நிதி, வருமானம் குறைந்த 177 குடும்பங்களைச் சேர்ந்த 576 குடும்ப உறுப்பினர்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக உறுதிச் சீட்டாக (voucher) வழங்கப்பட்டது.

இந்தத் உதவித் திட்டத்தில் பங்கெடுத்து நிதி வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.  தேவையறிந்து வழங்கப்பட்ட இந்த உதவி பயனாளிகளின் வாழ்வில் ஒரு மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கும்.

இந்த நிதி சேகரிப்புக்குப் பங்களித்தோர் விபரம்:

அச்சுதன் கனகசுந்தரம்

$100.00

பாஸ்கரன் சுப்பிரமணியம்

$100.00

ஜெகதீஸ்வரன் சிதம்பரம்பிள்ளை

$25.00

ஜெயசங்கர் இரங்கநாதன்

$100.00

பரம்சோதி வேலுப்பிள்ளை

$100.00

பிரபானந்தன் வெற்றிவேலு

$500.00

சஞ்சிகா சுபேசன்

$100.00

சரவணமுத்து குடும்பம்

$208.72

சரோஜினி தேவபாலன்

$50.00

சாந்தினி சிவானந்தன்

$100.00

சிவகுமார் நவரத்தினம்

$200.00

தயாபரன் சித்தம்பரப்பிள்ளை

$100.00

திசீவன் நவரத்தினம்

$50.00

வரதகுமார் சிதம்பரம்பிள்ளை

$100.00

வேனுசன் யோகராசா

$100.00

விஜயகுமாரி புஷ்பராஜா

$100.00

ரஜனி மதீஸ்வரன்

$100.00

செமிலா பிரகலாதன்

$100.00

சின்னத்துரை குடும்பம்

$300.00

திருமதி பொன்னம்பலம் நினைவாக

$100.00

புஸ்பராணி சிவபாதம்

ரூ.16,000.00

கணேசானந்தன் சரவணமுத்து

ரூ.50,000.00



கேதீஸ்வர சர்மா

ரூ.10,000.00

சரவணா ஐயா

ரூ.10,000.00

சோ. ஸ்ரீகாந்தன்

ரூ.10,000.00

. ஜெபநாமகனேசன்

ரூ.10,000.00

. ஜெயராஜா

ரூ.10,000.00

சே. சஞ்சயன்

ரூ.10,000.00

மீரா தேவரஞ்சன்

ரூ.10,000.00

இந்துஜா சாரங்கன்

ரூ.10,000.00

பே. அரவிந்தன்

ரூ.10,000.00

சு. சற்குருநாதன்

ரூ.10,000.00

கு. கமலதாசன்

ரூ.7,000.00

சு. அருடப்பிரகாசம்

ரூ.5,000.00

து. ரேஜன்

ரூ.5,000.00

பொ. கனகரத்தினம்

ரூ.5,000.00

. செல்வராசா

ரூ.5,000.00

முருகேசு

ரூ.1,000.00


நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Sunday, April 19, 2020

இடர்கால உதவி - மேலதிக தகவல்


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் இடர்கால உதவி நிதி சேகரிப்பு முன்பே அறிவித்தபடி April 18, 2020 ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்துள்ளது. எதிர்பார்த்த தொகையைவிட அதிகமாகவே நிதி கிடைத்துள்ளது மகிழ்ச்சியைத் தருகின்றது. அதே நேரம் உசனிலும் கணிசமான நிதி சேகரிக்கப்படுள்ளது. ஒன்றியத்தின் வேண்டுதலையேற்று பங்களிப்புச் செய்த அனைவருக்கும் மிகவும் நன்றி.
உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூல்நிலையம், உசனில் இயங்கும் ஏனைய சேவை அமைப்புகளோடு இனணந்து இந்த இடர்கால உதவி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர் ஆகியோர் வழங்கும் பெயர்ப் பட்டியல்களிலிருந்து பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக 3 பேர் கொண்ட குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டதும் கனடாவிலும், உசன் மண்ணிலும் சேகரிக்கப்பட்ட நிதி உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படும்.
மேலதிக விபரங்கள் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளப்படும்.
நன்றி.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா



Sunday, April 12, 2020

இடர் கால உதவி


உலகம் முழுவதையும் உலுக்கி வரும் Covid-19 நுண் கிருமி (வைரஸ்) இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இதன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  இதன் காரணமாக நாளாந்தம் வேலை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியானவர்களுக்கு அரசாங்கம் உதவிகளைச் செய்து வந்தாலும் அந்த உதவிகள் அவர்களுக்குப் போதியதாக இல்லை.  சமுர்த்தி உதவி மற்றும் உதவிகள் எதுவும் கிடைக்காத தொழிலாளர்களும் உள்ளனர்.  இவர்களுக்கு உதவும் வகையில் சில தொண்டு நிறுவனங்களும், ஊர் அமைப்புகளும், புலம் பெயர்ந்து வாழும் உறவுகளும் நிதி சேகரித்து உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றன.

அந்த வகையிலே இப்படியான உதவியை வழங்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  அந்த வேண்டுகோளை ஏற்று உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் ஊடாக உதவிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உசன் மற்றும் அயற்கிராம மக்களுக்கு இந்த உதவி சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  இதுவரை உதவிகள் எதுவும் கிடைக்காத பயனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  கிராம சேவகர், பொது சுகாதார உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த செயற்பாட்டை இரவிசங்கர் இரங்கநாதன், சரவணை செல்வராசா மற்றும் வைத்திய கலாநிதி ஜெபநாமகணேசன், ஆகியோர் முன்னின்று நிர்வகிப்பார்கள்.

இந்த இடர் கால உதவிக்கு நிதியுதவி வழங்க விரும்புவோர் ஒன்றியத்தின் தலைவர் பாஸ்கரன், செயலாளர் விஜயகுமாரி மற்றும் பொருளாளர் பத்மகாந்தன் ஆகியோருடன் தொடர்புகொண்டு உங்கள் பங்களிப்பை வழங்குமாறு வேண்டுகிறோம். நிதி உதவியை pathman.s1@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு e-Transfer மூலம் அனுப்பிவைக்கவும். இந்த e-Transfer இற்குரிய password ஐ அதே மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட அனுப்பி வைக்கவும்.  e-Transfer மூலம் நிதி அனுப்ப முடியாதவர்களிடமிருந்து நேரடியாக நிதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்வரும் சனிக்கிழமை, April 18, 2020 அன்றுவரை சேரும் நிதி, உதவிக்காக அனுப்பி வைக்கப்படும்.

நன்றி.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.


Monday, November 20, 2017

உசன் அபிவிருத்தி நிதி சேகரிப்பு - இன்றைய நிலைமை

பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் உட்பட உசன் அபிவிருத்திக்காக உசன் சனசமூக நிலையமும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் நிதி சேகரித்து வருவது குறித்து அறிவித்து உசன் மக்களின் பங்களிப்பைக் கேட்டிருந்தோம்.  Rs.50,00,000.00 ஐ இலக்காகக் கொண்டு இந்த நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  உங்கள் பலரின் பங்களிப்புடன் இந்த நிதி சேகரிப்பு அண்ணளவாக அரைவாசி இலக்கை அண்மித்துக்கொண்டிருக்கிறது என்ற தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.  குறித்த இலக்கை அடைய இன்னும் பங்களிப்புத் தேவைப்படுகிறது.  இந்த நேரத்திலே உசன் சனசமூக நிலையம் உங்களின் உதவியை நாடி எழுதிய கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறோம்.  உசன் சனசமூக நிலையத்தோடு தொடர்பு கொண்டு உங்கள் நிதி உதவியை வழங்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

நன்றி.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Please click on the image to enlarge it.


Tuesday, October 3, 2017

உசன் அபிவிருத்திக்கான நிதி சேகரிப்பு



அன்பார்ந்த உசன் மக்களே!

ஒரு கிராமத்தின் பெருமை அதன் வளர்ச்சியில் தங்கியுள்ளது.  அந்த வளர்ச்சி கிராமத்தின் கட்டுமாணத்தில் தங்கியுள்ளது.  பாடசாலை, கோவில், கடைகள், வீதிகள்,  போக்குவரத்து போன்றவற்றோடு வாசிகசாலை அல்லது நூலகம் என்பதும் கிராம வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

இதனை அடிப்படையாக வைத்து உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு ஆரம்பிக்கப்பட்ட நூலக வேலைகள் 2014 ஆம் ஆண்டு தை மாதம் "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" என்ற பெயருடன் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.  அமரர் பண்டிதர் சரவணமுத்து அவர்களின் மக்கள் சுசீலாதேவி சுகுணேஸ்வரன் அவர்கள் தனது வீட்டை நூலகத்துக்காக வழங்கியிருந்தார்.  இந்த நூலகத்தைச் சிறப்பாக நடத்துவதற்காகப் பலரும் நூல்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தனர். பின்னர் மின்னிணைப்பு, இணையத் தொடர்பு என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.  நூலகத்தைச் சரிவர நடத்தவும், அது அமைந்துள்ள வீட்டைப் பராமரிக்கவும் என  உசன் சனசமூக நிலையம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் இந்த நூலகம் பதிவு செய்யப்பட்டது.  கூடவே இரு பணியாளர்களும் அமர்த்தப்பட்டனர்.

இவற்றுக்கான செலவு மாதமொன்றுக்கு CDN $300.00 ஆக இருக்கிறது.  இதன் மிகப் பெரும் பகுதியை குறிப்பிட்ட கனடா வாழ் உசன் மக்கள் வருடந்தோறும் வழங்கி வந்தனர்.  தொடர்ந்தும் இந்தச் செலவை அவர்கள் மேல் சுமத்துவது நாகரீகமாகாது என்ற நிலையில் இந்தச் செலவுக்கான வருமானத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.  அதனடிப்படையில் உசன் சனசமூக நிலைய நிர்வாகத்தினரின் ஆலோசனைக்கிணங்க மாதம் CDN $300.00 வட்டியாக வரக்கூடிய பணத்தைச் சேகரித்து நிரந்தர வைப்பிலிடுவது என முடிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில் தனியே நூலகச் செலவுக்காகப் பணத்தைச் சேகரிக்காமல் எதிர்கால உசன் அபிவிருத்திக்குமாகப் பணத்தைச் சேகரிப்பது சிறந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 

இதனடிப்படையில் CDN $50,000.00 ஐ இலக்காகக் கொண்டு நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  பலரும் முன்வந்து தமது பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.  இந்த நிதி சேகரிப்பின் முதற்கட்டமாக Rs. 1,000,000.00 (அண்ணளவாக CDN $10,000.00) சேகரிக்கப்பட்டு உசன் சனசமூக நிலையத்திடம் கடந்த சனிக்கிழமை அன்று  கையளிக்கப்டுள்ளது.  இலக்கை எட்டுவதற்கான மிகுதி பணத்தை அனைத்துலக வாழ் உசன் மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.  கூடிய விரைவில் இந்த இலக்கை எட்டவேண்டிய தேவை உள்ளதால் உங்கள் பங்களிப்பை உடனடியாக எதிர்பார்க்கிறோம்.

இந்த நிதி சேகரிப்புக்குப் பொறுப்பாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பில் பத்மகாந்தன் சரவணமுத்து அவர்கள் நியமிக்கப்பட்டுளார்.  அவரோடு pathman.s1@hotmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +1-647-219-2027 என்ற செல்லிடப்பேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு உங்களின் பங்கைளிப்பை வழங்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு வேண்டி நிற்கிறது.  மேலதிகமாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் பாஸ்கரன் சுப்பிரமணியம் அவர்களோடு president@usan.ca என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +1-647-448-7434 என்ற செல்லிடப்பேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.  இந்த இரண்டு இலக்கங்களிலும் Viber அல்லது WhatsApp மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியும். 

உங்களின் பங்களிப்புக்கு பற்றுச் சீட்டு வழங்கப்படும்.  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா Ontario மாகாணத்தில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் வாழ் அன்பார்ந்த உசன் மக்களே தேவையறிந்து இந்த உதவியைச் செய்ய முன் வருமாறு உசன் சனசமூக நிலையம் மற்றும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஆகியன கேட்டுக்கொள்கின்றன.



Thursday, August 27, 2015

உசனில் "ஆசீர்வாதம்" அனைவர்க்கும் ஆங்கில அறிவு..... ஆரம்பம்

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் அடுத்த செயல் திட்டமாக உசன் கிராமத்து மக்களுக்கும் அதன் அயல் கிராம மக்களுக்கும் அடிப்படை ஆங்கில அறிவை வளர்க்கும் செயல் திட்டம் வரும் செப்டம்பர் 1 ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.. இந்த இலவச பயிற்சி நெறியில் வயது வேறுபாடின்றி யாவரும் கலந்து பயன் பெறமுடியும்.இந்த திட்டம் குறித்த வடிவம் ......விருப்பமானவர்கள் உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலத்தை தொடர்புகொள்ளவும் ,
இடம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது ..பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 

"ஆசீர்வாதம்" அனைவர்க்கும் ஆங்கில அறிவு........பயிற்சி நெறி திட்டம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
உசனிலும் அதன் சுற்று கிராமங்களிலும் உள்ள மக்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை வளர்க்கும் திட்டம், பாடத்திட்டம் தவிர்த்து ஆங்கில பேச்சு திறன்,எழுத்து திறன்,உரையாடல் ஆகிய துறைகளை இலகு ஆங்கில முறை மூலம் அனைவர்க்கும் பயிற்ருவிக்கும் நோக்கம் கொண்ட இந்த முயற்சி ..

நோக்கம்  
---------------------------
1. உசன் மக்கள் அனைவர்க்கும் அடிப்படை ஆங்கில அறிவை வளர்த்தல்
2.இலவசமாக கற்பித்தல்
3.நவீன ஆங்கில கற்பித்தல் முறையை அறிமுகபடுத்தல்
4.இலகு முறை ஆங்கில கல்வியை ஊக்குவித்தல் .
5.ஆங்கில அறிவு போட்டிகளை நடாத்தி ஊக்குவித்தல்
6.வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து உசன் கிராமமக்களுக்கு ஊக்குவிப்பு சலுககைகளை பெற்றுகொடுத்தல்
7. வகுப்பு தவிர்ந்த , நவீன video, documentry,cartoone, dvd, movies, discovery
 போன்ற அறிவியல் உலகை இலவசமாக காண்பித்தல்


செயல்திட்டம்
---------------------------
1. உசன் பொதுநூலக நிர்வாகசபை நிர்வகிக்கும்
2. பொறுப்பாக திரு.ரொனால்ட் அவர்கள் கடமையாற்றுவார் ,
3. ஆசிரியராக செல்வி.பா.தண்மதி பொறுப்பு வகிப்பார்
4. வாரத்தில் 3 நாட்டகள் 1.1/2 மணி நேரம் வகுப்பு இயங்கும்
5. தற்காலிகமாக உசன் அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இயங்கும்

நிதி நிர்வாகம்
--------------------------
1. மாதாந்த ஆசிரியர் கொடுப்பனவு 5000 ரூபாய்
2. நவீன Multimedia உபகரணம் தேவை
3. எதிர் காலத்தில் இது வெற்றிகரமாக நடை பெற்றால் பண்டிதர் பொது நூலக வளாகத்தில் சிறிய கட்டிடம் அமைத்தல் .
4. இந்த நிதி பொறுப்புகள் யாவும் அமரர் ஆசீர்வாதம் அவர்களின் நினைவாக
நன்கொடையாக
(வைத்தியர் திரு இந்திரன் ஆசீர்வாதம் அவர்கள்  கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் ஊடாக வழங்குவார் )_
5.  கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் இதனை வழிநடாத்தும் பொறுப்பாக திரு.அஜந்தன் வெற்றிவேலு கடமையாற்றுவார்
6. இந்த முயற்சியில் பங்கேற்றக நன்கொடை வழங்க ,அறிவுரை , மேலதிக திட்டங்களை ஊக்குவிக்க அனைவர்க்கும் சந்தர்ப்பம் உண்டு
7. எந்த விதமான இலாப நோக்க செயல்பாடுகளும் இத் திட்டத்தில் இடம் பெற அனுமதி இல்லை

கட்டுப்பாடு
-------------------
1. உசன் மற்றும் அயல்கிராம மாணவர்கள் , பொதுமக்கள் என வயது வேறுபாடின்றி பலன் பெறலாம்
2. கட்டாயம் உசன் பொது நூலக அங்கத்தவராக இணைய வேண்டும்
3. வகுப்புகளுக்கு ஒழுங்காக வரவேண்டும்,
4. திட்டத்தை தவறான முறையிலோ,உதாசீனமாகவோ , கேளிக்கையாகவோ,
மற்றவரை குழப்பும் வகையிலோ செயல்பட்டால் ..நிர்வாகசபை அவர்களை வெளியேற்ற முழு உரிமையும் உண்டு.
5. நிர்வாகசபையின் கட்டுப்பாட்டுக்கு அமைவாக இருக்க வேண்டும்

6. வகுப்பில் அனைவரும் ஒரே தகுதியாக கணிக்கப்படும் 


Wednesday, August 5, 2015

கனடா உசன் ஒன்றிய அனுசரணையில் உசனில் இலவச WiFi -Tablet சேவை ஆரம்பம்


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் உசன் கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் பொது நூலகத்தை நவீன முறையில் தரமுயர்த்தும் நோக்கில் .இன்றைய தினம் உசன் கிராம மக்களுக்கு இலவச Internet WiFi சேவை ஆரம்பித்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .அத்துடன் இலகுவாக பொத்தகங்களை வாசிக்க கூடியதாக "I book" சலுகை வழங்கும் முகமாகவும் சிறுவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்ககூடிய வகையில் .
Ipad /Tablet சேவையும் இன்று தொடங்கியுள்ளது .
இந்த வசதியை பொது நூலக அங்கத்தவர்கள் இலவசமாக பயன்படுத்தமுடியும் ஒரு கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் இவாறான சேவை முதன் முதலில் உசன் மக்களால் தொடங்கப்பட்டுள்ளது .
இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது கிராமத்து சிறுவர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது . முதலில் 5 Tablet உடன் ஆரம்பிக்கப்பட இந்த முயற்சி இன்னும் விரிவாக்கம் அடைய புலம் பெயர் வாழ் உசன் மக்களின் உதவியை வேண்டி நிக்கிறோம் .










Monday, January 20, 2014

"உசன் பொது நூலக திறப்பு விழா "

உசனில் கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் உசன் மக்களும் மற்றும் அனைத்துலக உசன் மக்களும் இணைந்து உருவாக்கி வந்த
"பண்டிதர்" சரவணமுத்து பொது நூலகம் கடந்த ஜனவரி மாதம் 3 ம் திகதி
முறைப்படி திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது .
உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குருக்கள் சிவ  ஸ்ரீ கேதீஸ்வர குருக்களும் ,மிருசுவில் கத்தோலிக்க மத குருவும் இணைந்து உசன் மக்கள் முன்னிலையில் ஆரம்பித்து வைத்தனர் ,
நூலக நிர்வாகசபை தலைவர் திருமதி.மீரா தேவரஞ்சன் தலைமையில் நடந்த விழாவினை ஆலோசகர் திரு .மு.க.சிவானந்தம் அவர்கள் தொகுத்து வழங்கினார் . அதை தொடர்ந்து வரவேற்பு உரையினை வைத்தியர் .திரு .ஐ.ஜெபனாமகநேஷன் அவர்களும் அதனை தொடர்ந்து கருத்துரைகளும் நடைபெற்றன .இன் நிகழ்வில் உசன் பண்டிதர் சரவணமுத்து அவர்களின் நினைவு பேருரையை பண்டிதர் திரு சிவபிரகாசம் அவர்கள் வழங்கியிருந்தார் .

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பான பல்கலைகழக பிரதம நூலகர் திருமதி .ஸ்ரீகாந்தலட்சுமி  அருளானந்தம் அவர்கள் கலந்து சிறப்புரை வழங்கியிருந்தார் . நிகழ்வில் கலந்து கொண்ட மக்களின் பார்வைக்கு நூலக புத்தகங்கள் காட்சிபடுத்தபட்டன .
இந்த நூலகம்  அமைக்க ஆணிவேராக இருந்து செயல்பட்ட அமேரிக்கா வாழ் திருமதி ,சின்னத்தங்கம் சரவணமுத்து (பண்டிதர் அம்மா ) அவர்களுக்கு அனைவரின் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது .
நூலக அமைப்பின் செயலாளர் திரு.ச .ஜதிகேசனின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்று , நூலக செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது .







Sunday, December 29, 2013

பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத் திறப்பு விழா

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மற்றும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக உசன் மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத் திட்டம் முதற்கட்ட முடிவை எட்டியுள்ள நிலையில் அதன் திறப்பு விழாவிற்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது.

January மாதம் 3 ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு வெள்ளிக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு வைபவரீதியாக இந்த நூலகம் திறந்து வைக்கப்படும்.

நூலக நிர்வாகக் குழுத் தலைவர் திருமதி மீரா தேவரஞ்சன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. நூலக நிவாகக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான மு. க. சிவானந்தம் அவர்கள் இந்த நிகழ்வை வழிநடத்துவார். உசன் கந்தசாமி கோவில் பிரதம குரு பிரம்ம ஸ்ரீ இ. கேதீஸ்வரக் குருக்கள், உசன் செபமாலைதாசர் மாகாண இல்லத்தின் மாகாணத் தலைவர் வணபிதா கொட்வின் நைல்ஸ் (Godwin Niles) ஆகியோரின் ஆசி உரையுடன் இந்த விழா ஆரம்பமாகும். நூலக நிவாகக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி ஐ. ஜெபநாமகணேசன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்துவார். உசன் இராமநாதன் மகா வித்தியாலய அதிபர் திரு. த. சோதிலிங்கம், உசன் ஐக்கியநாணய சங்கச் செயலாளர் திரு. தி. வல்லிபுரம், உசன் கிராம அபிவிருத்திச் சங்க உப தலைவர் திரு. கா. செல்வராசா, உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக ஆலோசகர் திரு. ஆ. ஜென்சன் றொனால்ட், உசன் இந்து மா மன்றத் தலைவர் திரு. கு. கமலதாஸ், உசன் பிரதேச ஆயுள்வேத வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய கலாநிதி க. றெஜிதா ஆகியோர் இந்த விழாவில் கருத்துரை வழங்க உள்ளார்கள்.

பண்டிதர் சரவணமுத்து நினைவுப் பேருரையை உசன் இராமநாதன் மகா வித்தியாலய உப அதிபர் க. சிவப்பிரகாசம் அவர்கள் நிகழ்த்துவார்கள்.

யாழ் பல்கலைக் கழக பிரதம நூலகர் திருமதி ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் சிறப்புரை ஆற்றுவார்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் க. நகுலன் அவர்கள் இந்த நிகழ்வில் மதிப்புரை நிகழ்த்துவார்.

நூலக நிர்வாகக் குழுவின் செயலாளர் செ. ஜதிகேசன் அவர்கள் நன்றியுரையை நிகழ்த்துவார்.

இந்தத் திறப்பு விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


Wednesday, November 13, 2013

நூலக உத்தியோகத்தர்கள் தெரிவாகினர் ....

உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்துக்கான வேலைவாய்ப்புக்கு
கிடைத்த விண்ணப்பங்களில் ,தெரிவுசெய்யப்பட சில விண்ணப்பதாரர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேர்வு நிலை உறுப்பினர்கள் முன்னிலையில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது ,
அதில் கல்வித்தகமை,திறமை ஆகியவற்றுடன் ,
குடும்பபொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ,அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் முகமாக ,
உசனைசேர்ந்த செல்வி .முருகேசம்பிள்ளை கௌரி அவர்கள் ,நூலக உத்தியோகத்தராகவும் ,திரு.சிவலிங்கம் அவர்கள் நிலைய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தராகவும்  நிர்வாகசபையால் ,ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர் ,


Thursday, October 3, 2013

உசனில் உருவாக்கி வரும் நூலகம் ......


அனைத்துலக உசன் மக்களையும் இணைத்து யாழ் மாவட்டத்தில் அனைத்து வளங்களும் உள்ள சிறந்த கிராமமாக உசனை மாற்றும் முயற்சியில் இறங்கிய கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் பிரதான பணியான நூலகம அமைக்கும் முயற்சியில் ,
கனடா ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினரும் ,உசன் நூலக ஒருங்கிணைப்பாளரும் ஆகிய திருமதி ,சி.சாந்தினி நவரத்தினம் அவர்கள் நேரடியாக உசனுக்கு சென்று , உசன் நிர்வாகசபை உறுப்பினர்களுடன்
மேலதிக நடவடிக்கை குறித்து கந்துரையாடி  நடவடிக்கைகளையும் நேரடியாக பார்வையிட்டு வந்துள்ளார் .

இராணுவ பாவனையிலிருந்த நூலகத்துக்குரிய வீட்டை உசன் நிர்வாக உறுப்பினர்கள் மீள் திருத்த வேலை செய்து வருகின்றனர் ,
நூலக கட்டிடத்தின் உள்ளக உள்ளக தோற்றமே இது .......