அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, March 29, 2018

சர்வதேச பூப்பந்து போட்டியில் உசன் வீரர்கள் பங்கேற்பு

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நடாத்தப்படும் 6 வது  சர்வதேச பூப்பந்து போட்டி டென்மார்க் நாட்டில் மார்ச் 30/31 ம் திகதிகளில் நடைபெறவுள்ளநிலையில் கனடா நாட்டில் இருந்து 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள டென்மார்க் சென்றுள்ளனர்.

கனடா அணியில் உசன் மண்ணைச் சேர்ந்த 4 வீரர்கள் உள்ளடங்குகின்றனர். செல்வன் கோகுலன் சிவகுமார், திரு. உமாபதி இராசரத்தினம், திரு. சிவகுமார் நவரத்தினம், திரு. நகுலன் கனகசபை ஆகியோர் சர்வதேச பூப்பந்து போட்டியில் பங்குபற்ற டென்மார்க் சென்றுள்ளனர்.


இந்தப் போட்டியில் செல்வன் கோகுலன் சிவகுமார் பலதரப் போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளார். இவர் இந்தப் போட்டியில் மற்ற வீரர்களுக்குச் சவாலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் உசன் வீரர்கள்  பங்குபற்றுவது மிகவும் மகிழ்ச்சி.  வீரர்கள்  வெற்றி பெற வாழ்த்துவதுடன், டென்மார்க் வாழ் உசன் மக்கள் இயலுமானவரை சென்று எமது உசன் வீரர்களுக்கு உற்சாகம் வழங்குமாறு வேண்டுகிறோம்.




உசன் இராமநாதன் மகா வித்தியாலத்துக்குச் சிறந்த பெறுபேறு

நேற்றைய தினம் வெளியாகிய க.பொ.த சாதாரணதர பரீட்சையில் எமது பாடசாலையான உசன் இராமநாதன் மகாவித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு.

ந. விசாகன் 9A
அ. அபிதா 6A 2B 1C
ஸ்ரீ. ஜெந்தினி 6A 2B 1C
சி. கோவர்த்தனி 6A 1B 2C 
யோ. வைஷ்ணவி 5A 4B
செ. போல்டிஷான் 4A 2B 3C

நீண்ட கால இடைவெளிக்குப் பின் மாணவன் ந. விசாகன் மூலம் பாடசாலைக்கு 9 A பெறுபேறு கிடைத்துள்ளது. இவர் தரம் ஒன்று முதல் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்திலேயே கல்வி பயின்றுள்ளார்.
ந. விசாகன்
கொடிய போரின் காரணமாக உசன் மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பின் குறைவடைந்த மாணவர் தொகையினால் நீண்டகாலம் எமது படாசாலையின் பெறுபேறுகள் குறைவாகவே காணப்பட்டது. இருந்தும்
பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் அதீத அக்கறை, பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்பு, புலம்பெயர்ந்த பழையமாணவர்களின் ஊக்குவிப்புக்களினால் மீண்டும் எமது பாடசாலைக்குச் சிறந்த பெறுபேறு கிடைத்திருப்பது அனைவரின் முயறசிக்கும் கிடைத்த பலன்.

தொடர்ந்து எமது பாடசாலையில் கல்விபயின்று எமது ஊருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மனமகிழ் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

தொடர்ந்து வரும் வருடங்களில் இன்னும் சிறந்த பெறுபேறு கிடைக்க மாணவர்கள் உழைக்க வேண்டுகிறோம்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும், இம் மாணவர்களுக்குக்  கற்பித்த அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் பழைய மாணவர்கள் சங்கமும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றன.


Monday, March 26, 2018

வீரபத்திரர் கோயில் வர்ண வேலைகளின் பின்


அண்மையில் வீரபத்திரர் கோவிலுக்கு வண்ணம் தீட்டப்பட்டது.  இதற்குப் பலரும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

அனைத்து வழிகளிலும் உதவி வழங்கிய அனைத்து அடியார்களுக்கு ம் நன்றிகள். அனைவருக்கும் வீரபத்திரர் அருள் கிடைக்க வேண்டுகின்றேன்.
- பூசகர்












Tuesday, March 20, 2018

திருமதி சின்னத்துரை அன்னலட்சுமி (பரமேஸ்வரி)

 
 
உசனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை அன்னலட்சுமி (பரமேஸ்வரி) அவர்கள் 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் முருகனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை (பெரியதம்பி), செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, முத்துப்பிள்ளை ஆகியோரின் பெறாமகளும்,

சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

நிறஞ்சலா (நிறஞ்சி- லண்டன்), கிருபறாஜா (கிருபா- கனடா), கோகுலராஜ் (செந்தூரன்- லண்டன்), நிருபனா (நிரு- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராசா (லண்டன்), மனோன்மணி (இந்திரா- கனடா), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், மகேஸ்வரி, செல்வராசா மற்றும் தங்கராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சுதாகரன், பாலதர்சினி, காயத்ரி, சுதாகர், பார்த்தீபன், சகிலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விமலாம்பிகை (பேபி), தட்சணாமூர்த்தி, காலஞ்சென்றவர்களான கனகம்மா, விநாசித்தம்பி, சின்னம்மா, சிவகுரு, திருப்பதி, நல்லதம்பி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

நிகேதன், நிருத்திகா, நிவாசன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

அஸ்ணவி, லவீனா, லக்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல்  21-03-2018 புதன்கிழமை அன்று காலை கொழும்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 22-03-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து ஈச்சங்காட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சின்னத்துரை (கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94768559511

நிறஞ்சி (மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447846671023

கிருபா (மகன்) — கனடா
செல்லிடப்பேசி:    +16472233142

செந்தூரன் (மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447402352404

நிரு (மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447427666791

சிவராசா (சகோதரர்) — பிரித்தானியா
தொலைபேசி:    +442036016046

இந்திரா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி:    +16478368256
 
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது.

(இந்த அறிவித்தல் www.kallarai.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)


Sunday, March 18, 2018

உசன் பரமேஷ் அக்கா காலமானார்

உசன் மக்கள் அனைவராலும் பரமேஸ் அக்கா... என அன்போடு அழைக்கப்படும், உசனை  சேர்ந்த  திருமதி.சின்னத்துரை  பரமேஸ்வரி அவர்கள் உசனில் இறைபதம் அடைந்தார் . அன்னாரின் ஆத்மா உசன் முருகன் பாதங்களில் அமைதியடைய வேண்டுகிறோம் , மேலதிக தகவல் பின்னர் அறிய தரப்படும் , அன்னாரின் ஆதமசாந்தியடைய கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் பிரார்திக்கிறது
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்
தகவல்
மகன் கிருபாஸ் (கனடா -647-223-3142)
தங்கை -இந்திரா (கனடா 416-546-3329)