அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, October 15, 2011

உசன் இராமநாதன் மத்திய மகா வித்தியாலய
கணினி - நூலகம்


மேற்படி நிலையத்தின் கோலாகலத் திறப்பு விழா October மாதம் 7 ஆம் திகதி சிறப்பாக இடம்பெற்றது. இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம், மற்றும் இலண்டனில் வசிக்கும் பழைய மாணவன் வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் குடும்பத்தினரின் நிதி உதவியோடு இந்த நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை உசன் கிராமத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவரும், வட மாகாண முன்னைநாள் பிரதம வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி க. மாணிக்கம் அவர்கள் திறந்து வைத்தார்கள். முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். பாடசாலை மாணவிகள் தேவாரம் இசைக்க, ஆசிரியர்கள் உசன் கிராமப் பாடலைப் பாடினர்.
திறப்பு விழா தொடர்பான புகைப் படங்களைக் கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம்.
https://picasaweb.google.com/usanphotos/OpeningCeremonyUsanComputerTrainingCenter


Sunday, October 2, 2011

கணினி - நூலக நிலையம் திறப்பு விழா


உசன் இராமநாதன் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக ஒரு கணினி - நூலக நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் மற்றும் உசனைச் சேர்ந்த வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்புடன் இந்த வேலைத் திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

ஊரெழுவைச் சேர்ந்த திரு. சண்முகநாதன் அவர்களின் தலைமையில் கட்டிட வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. கணினி சம்பந்ததப்பட்ட வேலைகள் அனைத்தும் பதுளையைச் சேர்ந்த திரு. காண்டீபன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையம் October 7 ஆம் திகதி திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்தத் திறப்பு விழா சிறப்புற நடக்கவும், தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா மற்றும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் ஆகியன உசன் மக்களோடு சேர்ந்து தமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறன. இந்த நிலையத்தை அமைக்க உதவிய வைத்திய கலாநிதி பரமநாதன் குடும்பத்தினருக்கும், இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு இந்த வேலைத் திட்டம் சிறப்பாக நிறைவுற உதவிய திரு. சண்முகநாதன் மற்றும் திரு. காண்டீபன் ஆகியோருக்கும் எமது அன்பு கலந்த நன்றிகள்.


Opening Ceremony of Computer & Library Center

A new Computer & Library Center has been setup for Usan Ramanaathan Maththiya Makaa Vithtiyaalayam.

This project was jointly funded by London SKTA Trust and Dr. Veluppillai Paramanathan's family.

Building project was lead by Mr. Shanmuganathan, Urelu and IT assistance for installation of computers was lead by Mr Khandeeban, Badulla.

The centre is scheduled to be opened on October 7, 2011 and will be fully functionable afterwards.


United People Association of Usan in Canada and Usan Sri Murukan Sports Club along with all Usan citizens wishes the very best on this specail occassion. Also our gratitudes go to London SKTA Trust and Dr. Paramanathan family for their valuable and timely contribution. We also thank Mr. Sanmukanathan & Mr. Kandeepan for their hard work successfully completing this specail project.