அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, November 23, 2025

துயர் பகிர்வு - துஷ்யந்தி மிகுந்தன்

உசனைப் பிறப்பிடமாகவும், 49/4 மணல்தறை லேன், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பொறியியல் பேராசிரியை திருமதி துஷ்யந்தி மிகுந்தன் அவர்கள் November 23, 2025 அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார் அமரர்களான பேரம்பலம் தெய்வானைப்பிள்ளை (தங்கமா ஆசிரியை) அவர்களின் அன்பு மகளும்,

பேராசிரியர் கு. மிகுந்தன் (விவசாய பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அரவிந்தன், ரகுவிந்தன், வினோவிந்தன், ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வைத்தியர் மிதுறிகா, (Registrar, NCTH), பொறியியலாளர் துமிலன் (மென்பொறியியலாளர் WSO2) , வைத்தியர் வக்சலன் (யாழ் வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திவாகரன் (SR Nephrology, கொழும்பு தேசிய வைத்தியசாலை), மாதங்கி (விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம்), வைத்தியர் யோகினி (சிறிவர்தனபுர வைத்தியசாலை) ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை திங்கட்கிழமை, November 24, 2025 அன்று பகல் 11 மணியளவில் அமரரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அஞ்சலிக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பிற்பகல் 1:30 இற்கு வைக்கப்பட்டு பின்னர் 3 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்
குடும்பத்தினர்.
+94718475539

அமரர் துஷ்யந்தி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது. அன்னாரின் கணவன், பிள்ளைகள், மருமக்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.



Friday, October 10, 2025

துயர் பகிர்வு - குகதாசன் சிவதாசன்

உசனைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் சிவதாசன் அவர்கள் வெள்ளிக்கிழமை, October 10, 2025 அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற குகதாசன் - சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற இராசதுரை - சிவயோகம் தம்பதியரின் மருமகனும்,

காலஞ்சென்ற சிவதாசன் லோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிலக்கசனின் பாசமிகு தந்தையும்,

கமலதாசஸ், காலஞ்சென்ற ஈசன் மற்றும் விமலதாஸ் ஆகியூரின் சகோதரனும்,

காலாவதி, சத்தியவதி, வதனி, செந்தமிழ்செல்வி, இரஞ்சிதமலர், காலஞ்சென்றவர்களான சாந்தநாயகி, இரத்தினேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை, October 12, 2025 காலை 7 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக 9 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

சிவபதமடைந்த சிவதாசன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது. அன்னாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.



Monday, September 29, 2025

சந்திப்போம், வாருங்கள்!

25 வருட காலப் பயணம்.
செய்தவை பல.
இன்னும் செய்ய வேண்டியவை ஏராளம்.
இதுவரை சேர்ந்தே பயணித்தோம்.
இனியும் அப்படியே.

உங்கள் பங்களிப்பைக் கொண்டாடும் தருணமிது.
தவறவிடாது வந்துவிடுங்கள்.
மண்டபத்தை நிறைத்து வரலாறு படைக்க வாருங்கள்!
கூடி மகிழ்ந்து குதூகலிக்க வாருங்கள்!
முத்தமிழையும் சுவைக்க முந்தியடித்து வாருங்கள்!

Saturday, December 20, 2025

J&J Buroak Banquet Hall
50 Anderson Avenue, Markham, L6E 1A5
(Closest intersection Markham Road and Buroak Avenue)

சரியாக மாலை 6 மணிக்கு.

25 வருட காலச் சேவையை இனிதே கொண்டாடுவோம்!

நன்றி!

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Tuesday, September 16, 2025

சந்திப்போமா?

உசன் கதை பேசி, உறவுகளுடன் சிரித்து மகிழ மீண்டும் ஒரு சந்தர்ப்பம்!

மார்க்கழிக் குளிரில் மனது மயக்கும் இன்னிசை கானங்களுடன் ஊர் உணவு உண்டு , உறவுகளைக் கண்டுகளிக்க வாருங்கள்!.

ஆடலும், பாடலும், அணிசேர் நடனங்களும் மொத்தமாய் மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்திட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

உங்கள் வருகை எங்கள் ஊர் பெருமை பேசட்டும்!

கனடா வாழ் உசன் மக்களை அன்புடன் அழைக்கிறோம்! ஊருக்காக ஒன்றுபடுவோம்.!

விபரங்கள் விரைவில்.....

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா



Saturday, May 31, 2025


அன்பார்ந்த கனடா வாழ் உசன் மக்களே!

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் பொதுக்கூட்டம் June 29, 2025, ஞாயிற்றுக்கிழமை அன்று 1555 Neilson Road, Scarborough, M1B 5Z7, ON, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Neilson Park ல் நடைபெறவுள்ள கோடைகால ஒன்றுகூடலில் இடம்பெறவுள்ளது. மாதாந்த மற்றும் வருடாந்த அங்கத்துவப் பணம் செலுத்தும் உறுப்பினர்கள் இந்தப் பதிவை அழைப்பாகவேற்றுப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  அங்கத்தவரல்லாத ஏனைய உசன் மக்களையும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்குகொள்ளுமாறு அழைக்கிறோம். மிகக்குறைவான உசன் மக்களே தற்போது அங்கத்தவர்களாக உள்ளனர் என்பது கவலைக்குரியது. அனைவரையும் அங்கத்தவராகுமாறு அன்போடு வேண்டுகிறோம்.  அங்கத்துவக் காலம் July 1 ஆம் திகதியிலிருந்து  அடுத்த வருடம் June 30 ஆம் திகதிவரை என்பதைக் கவனத்தில்கொள்ளவும். 

தற்போதைய நிர்வாகசபையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கான புதிய நிர்வாகசபை இந்தப் பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ளது.

கனடாவாழ் உசன் மக்களின் மகிழ்ச்சிக்கும், உசன் மண்ணின் வளர்ச்சிக்கும் உழைக்கக்கூடிய, சமூக சேவையில் ஆர்வமுள்ள அனைவரையும் புதிய நிர்வாகசபையில் இணைந்து முன்னேற்றகரமான மாற்றத்தைக் கொண்டுவர முன்வருமாறு வேண்டுகிறோம். குறிப்பாக இளைய தலைமுறையினரை ஊக்குவித்து அழைத்துவருமாறு பெரியவர்களை வேண்டுகிறோம்.

இந்த நிர்வாகசபை 11 உறுப்பினர்ககளைக் கொண்டது. நிர்வாகசபையில் உள்வாங்கப்படுவதற்கும், வாக்களிப்பதற்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவில் குறைந்தபட்சம் கடந்த ஒரு வருடமாவது அங்கத்தவராக இருக்கவேண்டும்.

புதிய நிர்வாகசபைக்குப் பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்க விரும்பும் உறுப்பினர்கள் யாப்புக்கு அமைவாக 11 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகப் பெயர்ப் பட்டியலைத் தயார்செய்து சமர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம்.  அந்தப் பட்டியலை secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்குப் பொதுக்கூட்டத்துக்கு முன்பே அனுப்பிவைத்தால் அதனைப் பகிரங்கப்பத்த முடியும்.  ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களின் பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்கப்படுமிடத்து உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிக வாக்குகள் பெறும் குழு தெரிவு செய்யப்படும்.

மேலும் Usan Foundation எமது கிராமத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் Usan Foundation இன் ஓரங்கமாகவிருந்து எமது கிராமத்தின் முன்னேற்றத்துக்கு உதவி வருகிறது. எனவே புதிய நிர்வாக சபையில் இணையவிரும்புகிறவர்கள் Usan Foundation உடன் சேர்ந்து செயற்படக்கூடியவர்களாக இருப்பது விரும்பத்தக்கது. 

பொதுக்கூட்டம் பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகும்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வளர்ச்சிக்கு உங்கள் அனைவரினதும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். உங்கள் ஆலோசனைகளை secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.  அல்லது தற்போதைய நிவாகசபை உறுப்பினர் ஒருவரிடம் தெரிவிக்கலாம்.

பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் இடம்பெறும்.  ஊரோடும், உறவுகளோடும், நண்பர்களோடும் ஒன்றாகக் கூடி மகிழ்ந்திருக்க வாருங்கள். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் கோடைகால ஒன்றுகூடலில் சங்கமிப்போம்!

நன்றி.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா