கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் மற்றும் உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகத்தினரின் ஒன்றுபட்ட பெரும் முயற்சியால் வெளிநாட்டு வாழ் உறவுகளை இணைக்கும் முகமாக உசனில் ஒரு தொடர்பாடல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது அதற்கு உசன் கனடா வாழ் மக்களால் கனடாவில் இருந்து சில பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது அப்பொருட்களை கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு எமது கழக உறுப்பினர்கள் அத் தொடர்பாடல் நிலையத்தில் இறக்குவதை படத்தில் காணலாம்.
படங்கள் http://www.facebook.com/album.php?aid=16452&id=100001757805974
Monday, December 20, 2010
Friday, December 17, 2010
உசனுக்கு தொலைபேசி சேவை
Sri Lanka Telecom நிறுவனத்துடன் இணைந்து உசனில் அமைந்துள்ள வீடுகளுக்கான நேரடியான தொலைபேசி இணைப்புக்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை, உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் & உசன் ஐக்கிய வாலிபர் சங்கம் செய்துள்ளனர். இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு உசனில் இயங்கிவரும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் & உசன் ஐக்கிய வாலிபர் சங்கத்துடனோ அல்லது கனடாவில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடவுடனோ தொடர்பு கொள்ளுங்கள். எமது கிராமத்தின் மற்றுமோர் வளர்ச்சி கண்டு மகிழ்வு கொள்வோம். இந்த மகிழ்ச்சியான செய்தியை உலகெங்கும் பரப்புங்கள்.
|
Anonymous
|
|
Friday, December 10, 2010
மரண அறிவித்தல்
உசன் மிருசுவிலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் நாகலிங்கம் அவர்கள் 08-12-2010 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வைரவன் பாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,நாகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும், ஜெகதாஸ்(லண்டன்), குமுதா(சுதா), உதயதர்சினி(உதயா), பாலதாஸ், மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துஷி(லண்டன்), ராஜகுமார்(பிரான்ஸ்), கந்தசாமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,நவரட்ணம், அன்னலட்சுமி, சிவசுப்பிரமணியம், குணபாலசிங்கம்(ஜோ்மனி), புஸ்பராணி(லண்டன்), சத்தியபாமா, ரகுவரன்(ஜோ்மனி), அமர்தராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,ஆவார். அன்னாரின் இறுதிசடங்கு 09-12-2010 வியாழக்கிழமை அன்று உசன் மிருசுவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, 2.00 மணியளவில் உசன் தெற்கு இந்துமயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக புதவுடல் எடுத்துச்செல்லப்படும். அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு உசன்மக்கள் ஒன்றியம்கனடாதனதுஆழ்ந்தஅனுதாபங்களைதெரிவிப்பதுடன் .அன்னாரின் ஆத்மசாந்திக்காக வேண்டுகிறோம். தகவல் மகன் -
ஜெகதாஸ் UK தொலைபேசி: +442082048552 செல்லிடப்பேசி: +447944446028
ஜெகதாஸ் UK தொலைபேசி: +442082048552 செல்லிடப்பேசி: +447944446028
|
Anonymous
|
|
Monday, December 6, 2010
மரண அறிவித்தல்
தும்பளையைப் பிறப்பிடமாகவும் கெற்பேலியை நிரந்தர வசிப்பிடமாகவும் விடத்தற்பளையை தற்காலிக வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி இலட்சுமிப் பிள்ளை சோமசுந்தரம் நேற்று (06.12.2010) திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதியினரின்அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் சோமசுந்தரத்தின் (முன்னாள் முகாமையாளர், தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூ. சங்கம்) அன்புமனைவியும் சிவகுமார் (கனடா), ஜெயக்குமார் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் சுதர்சினி (கனடா), சிவசோதி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் சதுஷ், லதுஷா, நிதுஷ், ஜெனுஸ், ஜெசோ ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் தம் பிப்பிள்ளை இராசேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனக சிங்கம் சிவயோகம், தம்பிப்பிள்ளை பத்மநாதன், தம்பிப் பிள்ளை பரஞ்சோதி ஆகியோரின் சகோதரியும் சிவநேசன் (டென்மார்க்), சிவனேஸ்வரி (ஆசிரியை, யா/மிருசுவில் அ.த.க. பாடசாலை), ஞானேஸ்வரன் (கனடா), கேதீஸ்வரன் (அமெரிக்கா) ஆகியோரின் பெரியம்மாவும் பாமினி (லண் டன்), நிருஜா (ஆசிரியை, யா/வடமராட்சி மத்திய மகளிர் கல் லூரி), தர்சன் (ஜேர்மனி), கீர்த்தனா (ஜேர்மனி) ஆகியோ ரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.
தகவல்
மகன் ஜெயக்குமார் தொடர்பு இல. 0779753318, 0776264272
தகவல்
மகன் ஜெயக்குமார் தொடர்பு இல. 0779753318, 0776264272
|
Anonymous
|
|
Wednesday, December 1, 2010
பாலேந்திரன் காண்டீபனுக்கு வாழ்த்துக்கள்
உசனைசேர்ந்த பாலேந்திரன் புஸ்பராணி (அட்லஸ் பாலா ) தம்பதிகளின் புதல்வன் காண்டீபன் Australia Victoriya University யில் சர்வதேச வர்த்தகத்துறையில் முதுமாணி பட்டபடிப்பை நிறைவுசெய்துள்ளார்.இவர் தனது கல்வியைஇலங்கை ,இந்திய,மலேசிய ஆகிய நாடுகளில் கடும் இடையூறுகளுக்கு மத்தியிலும் மேற்கொண்டார் .காண்டீபன் கல்வியில் மட்டுமன்றி கலைத்துறையிலும்விளையாட்டிலும் மிகவும் திறமையானவர் . இலங்கையில் இளைய சூரியன் எனும் பெயரில் சூரியன் FM வானொலியிலும் , இந்தியாவின் ஆஹா FM வானொலியிலும் , இலங்கை சக்தி FM ஆகிய வானொலிகளில் சிறப்பாக பணியாற்றியவர் . பல இன்னல்களுக்கு மத்தியிலும் முன்னேறிய காண்டீபன் தற்போது ஆஸ்திரேலியா சென்று தனது பட்டத்தை பெற்றிருப்பது . எமக்கு மகிழ்ச்சிதருகிறது .உசன் மண்ணில் வாழ்ந்த , உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவன் காண்டீபனுக்கு உசன் மக்கள் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.அத்துடன் உசன் மக்கள் ஒன்றியம் கனடா தனது அன்பு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
|
Anonymous
|
|
Subscribe to:
Comments (Atom)




