உங்களை இழந்துவிட்டோம் என்பது பொய்யாகிவிடாதா என்று ஏங்குகிறோம்
மனதை ஆற்றுப்படுத்த முடியாமல் தவிக்கிறோம்
இன்னும் சிலகாலமாவது எங்களோடு இருந்திருக்கலாமோ என்று அங்கலாய்க்கிறோம்
நீங்கள் உசன் மண்ணுக்காய் செய்த சேவைகளை எண்ணி மகிழ்ந்து நிற்கிறோம்
பொருளாளராகவிருந்து கடமையுணர்வோடு கட்டுப்பாடாக எங்களை வழிநடத்தினீர்களே! எப்படி மறப்போம்?
நீங்கள் காட்டிய பாதையில்தானே நாங்கள் இன்றும் நடக்கிறோம்
இன்று எங்களை அழைத்துச் செல்ல நீங்கள் இல்லாமல் தவிக்கிறோமே!
நேர்மைக்கு உதாரணமாகவிருந்தீர்களே!
உண்மையை மட்டுமே உரக்கச் சொன்ன உங்கள் குரல்
இன்று ஓங்கி ஒலிக்காமல் இருப்பதேனோ?
உங்கள் பிரசன்னம் இல்லாமல் உசன் நிகழ்வுகள் களையிழந்து போகப்போகிறதே!
என்றோ ஒருநாள் எங்களை விட்டுப் பிரிவீர்கள் என்பது தெரிந்திருந்தும்
இப்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறோம்!
காலம்தான் எங்கள் கண்ணீரை ஆற்றவேண்டும்
போய்வாருங்கள் எங்கள் மதிப்புக்குரியவரே!
உங்கள் ஆன்மா நிச்சயம் சாந்தியடையும்!
அன்னாரின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்!
நிர்வாக சபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
இறுதி மரியாதை
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, L3R 5G1, On. Canada
சனிக்கிழமை, October 17, 2026
மாலை 5 மணி முதல் 9 மணி வரை
ஞாயிறுக்கிழமை, October 18, 2026
காலை 7 மணி முதல் 8 மணிவரை
கிரியை
காலை 8 மணி முதல் 10 மணி வரை
தகனம்
North Toronto Crematorium
2 Stalwart Industrial Drive, Gormley, L0H 1G0, On. Canada
ஞாயிறுக்கிழமை, October 18, 2026
காலை 10:30 மணி

