முருகப்பெருமான் அடியார்களே எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் திருவருளால் நிகழும் கர வருடம் சித்திரை 25-ம் நாள் (08-05-2011) ஞாயிற்றுக்கிழமை பகல் 10-00 மணிக்கு கொடியேற்ற வைபவத்துடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிறது.
அத்துடன் திருவிழா காலங்களில்க் காலை 10-00 மணிக்கு திருவிழா பூஜை ஆரம்பமாகி காலை 11.00 மணிக்கு சுவாமி எழுந்தருளல் நடைபெறும் அதே போன்று மாலை 7.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகி இரவு 8.00 மணிக்கு சுவாமி எழுந்தருளல் நடைபெறும்
அதே போன்று 16.05.2011 தேர் உற்சவமானது நடை பெறும் அன்று முருகப்பெருமான் காலை 10.30 மணிக்கு தேருக்கு எழுந்தருளல் வைபவம் இடம்பெறும்.
தீர்த்த உற்சவம் 17.05.2011 அன்று காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிக்கு கொடியிறக்க வைபவம் நடைபெறும் என்பதனை எல்லாம் வல்ல முருகப்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.