அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, October 4, 2009

திருமதி பொன்னையா செல்லாச்சி அவர்களின் மரண அறிவித்தல்

உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா செல்லாச்சி அவர்கள் 04.10.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற வாரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற பொன்னையாவின் அன்புமனைவியும்,
காலஞ்சென்ற நாகமுத்து, சரவணமுத்து, தெய்வானைப்பிள்ளை, வாலுப்பிள்ளை, காலஞ்சென்ற பொன்னம்மா(ஆசிரியை) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
பரமேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற புவனேஸ்வரி, மற்றும் பத்மநாதன்(கனடா), பாலகெளரி, பற்குணசீலன்(மணியம் களஞ்சியம் - கொடிகாமம்), புஸ்பகுமார்(ஜேர்மனி), பவநந்தி, அன்பரசி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
திருச்செல்வம்((பிரான்ஸ்), செல்வராஜா(வவுனியா), வசந்தக்குமாரி(கனடா), கதிர்காமநாதன், இன்பமலர், மல்லிகாதேவி, யோகேஸ்வரன், நாகராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புமாமியாரும்,

ஜெயமுகன்(டென்மார்க்), கேசவன்(இத்தாலி), பவித்ரா(பிரான்ஸ்), கஜீறதன், செந்தூரன், ஜெயந்தூரன், மயூறன், திவாகர், தினேஸ்(கனடா), செந்தில், எழில், யதுசிகா, யதுகோபன், யதுசரன், செந்தூரிகா, அஜந்திகா(ஜேர்மனி), டினோஜன்,, நிறோஜன், சுதட்ஷா, விதுஷா, திரிஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தொடர்புகளுக்கு

பத்மநாதன் — கனடா
14167557465 +14167557465


Friday, October 2, 2009

திரு.விநாசித்தம்பி நடராசா(துரை) அவர்களின் மரணஅறிவித்தல்

உசனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.விநாசித்தம்பி நடராசா (இளைப்பாறிய விவசாய விஸ்தரிப்பு சேவையாளர்) அவர்கள்,01 /10 /2009 அன்று உசனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி- சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும் கனகேஸ்வரி, கனகலிங்கம் (சிவலி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ் சென்ற பரமேஸ்வரியின் அன்புக் கணவரும் வசந்தி, சுகந்தி, ஜெயந்தி (சுவிஸ்), சுமதி (லண்டன்), லஜன், காண்டீபன் (U.S.A), கடாட்சன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் அமிர்தலிங்கம், சிவபாலன் (சுவிஸ்), சந்திரசேகர் (லண்டன்), கஜேந்தினி (ஆசிரியை, யா/கோண்டாவில்C.C.T.M.S) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.


 தகவல்: லஜன் (அண்ணா) சிவலி. உசன், மிருசுவில்.


Monday, September 14, 2009

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தளர்த்த ஆளுநர் இணக்கம் தெரிவிப்பு

யாழ் குடாநாட்டில் பாதுகாப்புத் தேவைகளுக்காக ஏற்னவே மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பொதுமக்களது வசதி கருதி நீக்குவது, தளர்த்துவது மற்றும் குறைப்பது குறித்து வடமாகாண ஆளுனர் மேஜர் ஜீ.ஏ.சந்திரசிறியுடனான சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற ஆளுனருடனான சந்திப்பின்போது, யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ், டக்ளஸ் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக 79 கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதனன்று யாழ் நூலகக் கட்டிடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, தீவகப் பகுதி உட்பட யாழ் பிரதேச மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவற்றில் சில முக்கிய விடயங்கள் பற்றி, விரைவில் யாழ் கடற்படை கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலின் பிரகாரம், குடாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ள பொதுமக்களின் கோரிக்கைகள்
*கச்சாய் துறைமுக வீதியிலுள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பாவனைக்காகத் திறத்தல்
*கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள கச்சாய் பாதையோர முட்கம்பிகளை அகற்றல்.
*உசன் - கெற்பேலி வீதியை மக்கள் போக்குவரத்திற்காகத் திறத்தல்
*உசன் இராமநாதன் கல்லூரிக்குரிய காணியை விடுவித்தல்,

கரம்பகம், எழுதுமட்டுவாழ், ஒட்டுவெளி, நாகர்கோவில், மருதங்கேணி ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிகள் உடன் அகற்றப்பட்டு மக்களை மீள்குடியேற்றுதல்

என்பனவற்றுக்குகான இணக்கம் காணப்பட்டது .


Monday, November 17, 2008

உசனுக்கோர் "நாவல்லர்" பண்டிதர் திரு.சி.சரவணமுத்து


உசனில் பிறந்து உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விபயின்று ஆசிரிய பணியையும் மேற்கொண்ட பண்டிதர்  திரு.சி. சரவணமுத்து அவர்கள் சாவகச்சேரி டிறிபேக் ,சண்டிலிப்பாய்,ஹெரனை.களுவாஞ்சிகுடி கொழும்பு .போன்ற இடங்களின் கல்வி கற்பித்து பின் தான் கல்விகற்ற உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஆசிரிய பணி செய்யும்  வாய்ப்பை பெற்றார்.  உசன் பாடசாலையில் நீண்டகாலம் பணியாற்றி இளைப்பாறினார்.
  இவர் கல்வித்துறையில் பண்டிதர்,வித்துவான்,சைவப்புலவர் என்னும் மூன்று பட்டங்களை பெற்றுக்கொண்டார்.அது போல்  இல்வாழ்க்கையிலும் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார். கடமையில் கண்ணியமாகவும் நேர்மையாகவும் வாழ்ந்தவர் பண்டிதர் சி சரவணமுத்து அவர்கள்.
                                                           தற்போது ஐக்கிய அமெரிக்காவில் தனது இளைய மகளின் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் இவருக்கு. இவரிடம் கல்விபயின்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவரின் மகத்தான சேவையை பாராட்டி 2008 ம் ஆண்டு. கனடாவில் நடந்த குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வில்.
உசனுக்கோர் "நாவல்லர்"  என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.
 இன் நிகழ்வில் இவரிடம் கல்விபயின்று பட்டதாரியான திருமதி .பு.விஜயகுமாரி
சிறப்புரை வழங்க .வைத்திய கலாநிதி Dr .இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
                                                             பண்டிதர் சி சரவணமுத்து அவர்கள் நீடூடிகாலம்
சீரும் சிறப்புடனும் வாழ  உலகில் வாழும் அவரிடம் கல்விபயின்ற  அனைத்து மாணவர்களும் வாழ்த்துகின்றனர்.


Wednesday, March 26, 2008

உசன் படை நிலைகள் மீது புலிகள் பீரங்கி தாக்குதல்

உசன் படை நிலைகள் மீது புலிகள் பீரங்கி தாக்குதல்
இன்று இரவு எழுது மட்டுவாள் உசன் சிங்கள இராணுவ படை நிலைகள் மீது புலிகள் ஏவிய எறிகனைகள் வீழந்து வெடித்துள்ளன.
இவ் தகவலை படை நிலைகளிற்குள்அருகில் உள்ள சிலர் கலகத்திற்கு
தெரிவித்துள்ளனர்.அவா்கள் மேலும் கூறியாவது தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய கனரக பீராங்கி எறிகணைகள் படையினரின் முகாம் மற்றும் இராணுவநிலைகள் மீது விழுந்ததாகவும். இதனால் அங்கிருந்த மக்களும் படையினரும் வேறிடங்களுக்கு நகர்ந்ததாகவும் தெரிவிக்கபடுகிறது.