அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, October 11, 2010

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகசபை கூடியது

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கடந்த October 10 ஆம் திகதி உசன் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், அது குறித்து கனடா வாழ் உசன் மக்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாகசபையைக் கூடி ஆலோசித்தது. Toronro நகரில் உள்ள Krisco நிறுவனத்தில் மாலை 6 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் நகுலன் கனகசபை அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உசனில் அவசர அபிவிருத்தி பணி தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தபட்டது .




அதன் முதல் கட்டமாக உசன் மக்களுடனான தொடர்பாடலை அதிகரிக்கும் வகையிலும், உசன் மக்களுக்கு கணணி  (IT ) தொடர்பான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் ஒரு செயல் திட்டம் உருவக்குவாதாக முடிவு எடுக்கபட்டது.


Sunday, October 10, 2010

உசனில் ஒரு புதியதிருப்பம்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா -உசன் மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக உசன் கிராமத்தில் ஒரு Internet தொடர்பாடல் நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.அங்கு கணணி பயிற்சி வகுப்புகளும். PhotoCopy , Internet ,Fax ,Scaning போன்ற சேவைகளையும் உசன் மக்களுக்கு கிடைக்ககூடிய முறையில். இந்த நிலையம் அமைக்க பட்டு வருகிறது. உசன் வாலிபர் சங்கத்தின் முயற்சிலும் , கனடா மக்கள் ஒன்றியத்தின் வழிகாட்டலிலும் இந்த நிலையம் மிக விரைவில் இயங்க இருக்கிறது என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றோம் இந்த முயற்சிக்கு உங்களின் பூரண ஆதரவையும் .கருத்துகளையும் வரவேற்கிறோம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா
உசன் ஐக்கிய வாலிபர் சங்கம்
 


Wednesday, October 6, 2010

கனடா மக்கள் ஒன்றியத்தின் நிதி உசன் வாலிபர் சங்கத்திடம் கையளிப்பு:

உசன் வாலிபர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உசனுக்கான புனரமைப்பு பணியின் முதல் கட்டமாக ஈச்சங்காடு மயானத்தின் தகனமேடை அமைக்கும் பணி நிறைவடைந்தது யாவரும் அறிந்ததே.தொடர்ந்து மேலும் பல அபிவிருத்தி பணிகள் உசனில் அவசரமாக நிறைவேற்ற வேண்டிஉள்ளதால்.
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் முதல் கட்டமாக அவசர நிதியாக ரூபா 1 லட்சம் நிர்வாகசபை அங்கத்தவர்கள் மூலம் சேகரித்து. உசன் வலிபர்சங்கதிற்கு அனுப்பிவைக்கபட்டது. அந்த பணம் முறைப்படி உசன் கந்தசாமி கோவில் தர்மகர்த்தாவும் சமூகஆர்வலருமாகிய திரு.கு.விமலதாஸ் அவர்களால் உசன் வலிபர்சங்கத்தின் தலைவர் ரூபன் செயலாளர் அ.பிரபாகரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
இதன் மூலம் நிதி பற்றாக்குறை காரணமாக இடை நிறுத்தப்பட்ட மயான புனரமைப்பு தொடர இருக்கிறது.இந்த அவசர நிதி சேகரிப்பில் முழுமனதோடு பங்களிப்பு செய்த நிர்வாகசபை அங்கத்தவர்களுக்கு.மனமார்ந்த நன்றிகள்.தொடர்ந்தும் பல செயல்பாடுகளை கனடா மக்கள் ஒன்றியமும் உசன் வாலிபர் சங்கமும் இணைந்து செய்யவுள்ளது .எனவே உங்கள் அரிய பங்களிப்பை மனமுவந்து செய்யுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறோம் .
 படத்தில்.
திரு கு விமலதாஸ் அவர்களிடம் இருந்து றுபன் மற்றும் பிரபா பணம் பெறுவதையும் அருகில்  துரைசிங்கம் துவாரகன், மகிந்தன் குணபாலசிங்கம் ஆகியோர் நிற்பதையும் காணலாம் .
(செய்தி தொடர்பு : சஞ்சயன்-உசன் )


Saturday, October 2, 2010

விளையாட்டில் சாதனை படைக்கும் யாழ்ப்பாணம்


தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் வட மாகாண பாடசாலை வீரர்களுக்கு மேலும் இரண்டு தங்கம், ஒரு வெண்கலம் மற்றும் 2 வர்ண விருதுகள் நேற்றுக் கிடைத்துள்ளது. தேசிய பாடசாலைகளுக்கிடையிலான தட களப் போட்டிகள் கடந்த புதன்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்ப மானது.
இதில் நேற்று நடைபெற்ற 17 வயது ஆண்கள் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி வீரர் ஏ.யஹானி றொசான் 3.35 மீற்றர் உயரம் பாய்ந்து முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார்.இதன் மூலம் அளவெட்டி அருணோதயா கல்லூரி தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் இவ் வருடம் மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றது.

அத்துடன் வெள்ளிப் பதக்கம் ஒன்றும் பெற்றுள்ளது. இதேவேளை நேற்று நடை பெற்ற தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி வீரர் வி.ஹரிகரன் 36.90 மீற்றர் தூரம் எறிந்து முதலாம் இடத்தைப் பிடித்துத் தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் இவரின் சிறந்த வெளிப்படுத்தலுக்கு வர்ண விருதும் வழங்கப்பட்டது. இதனை விட நேற்று நடைபெற்ற 17 வயதுப் பெண்கள் பிரிவு குண்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய வீராங்கனை ஆர்.தர்´கா 9.37 மீற்றர் தூரம் எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கல விருதை வென்றார்.
அத்துடன் 19 வயது ஆண்கள் பிரிவு 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரி வீரர் ஜோ.எரிக் பிரதாப் வர்ண விருது பெற்றார்.இதன் மூலம் தேசிய மட்ட தடகளப் போட் டிகளில் வட மாகாண வீர வீராங்கனைகள் நேற்று வரை 5 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் மற்றும் 2 வர்ண விருதுகளை வென்றுள்ளனர்.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமான அமைப்பாகியது

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரதமமந்திரி தெரிவுசெய்யப்பட்டதுடன் அமைச்சரவையினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் 2010 செப்ரம்பர் 29ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 1ம்நாள்வரையான மூன்றுதினங்கள் கூடி அவ்அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரியினையும் தெரிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன.

நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள்சபைக்கு அருகாமையிலுள்ள பிளாசா ஹோட்டலில் ஒன்றுகூடியுள்ள பிரதிநிதிகளுடன் பரீஸ், இலண்டன் மாநகரங்களில் உள்ள பிரதிநிதிகளும் தொலைக்காட்சி தொடர்பாடல் தொழிநுட்பத்தினூடான இணைந்தனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உரமாகிப்போன உயிர்களுக்கு மௌனாஞ்சலி செலுத்துவதுடன் அமர்வுகள் ஆரம்பமாகியது. ஐக்கிய அமெரிக்க நாட்டு முன்னைநாள் சட்டமா அதிபர் திரு.றாம்ஸி கிளார்க், மலேசிய பினாங் மாநில பிரதி முதலமைச்சர் பேராசிரியர். இராமசாமி, மனித உரிமைகள் மற்றும் முரண்பாடுகள் தீர்வு ஆகியவற்றிற்கான சர்வதேச விற்பன்னரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கான ஆலோசகரும் கொலம்பியா பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான கற்கை மையத்தின் வருகைதரும் கல்விமானுமான பேராசிரியர் எல்.பிலிப், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் வாசிங்டன் சட்டக்கல்லூரி UNROW மனித உரிமைகள் சார்ந்த சட்டமுறை நிவாரண நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.அலி பெய்டவுன் ஆகியோரின் உரைகளுடன் அமர்வு ஆரம்பமாகியது.
இவ் UNROW மனித உரிமைகள் சார்ந்த சட்டமுறை நிவாரண அமைப்பு சிறீலங்காவில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையிடம் அண்மையில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப அமர்வினைத் தொடர்ந்து முன்மொழியப்பட்ட மாதிரி அரசியல் யாப்பினை அங்கீகரிப்பதற்கு முன்னான விவாதம் என்ற சவால்மிக்க செயற்பாடு ஆரம்பமாகியது. இவ்விவாதத்தினைத் தொடர்ந்து மரபுசார்ந்த பாராளுமன்றக் கட்டமைப்பு இவ்அரசுக்கு உகந்ததெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவராக பிரதமமந்திரி செயற்படுவார் எனவும் பாராளுமன்றம் தீர்மானித்தது. அவருக்கு உதவியாக மூன்று பிரதிப் பிரதம மந்திரிப் பதவிகளும் வேறு ஏழு அமைச்சர் பதவிகளும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றம் இரண்டு அவைகளினைக் கொண்டதாக இருக்கும். இது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்ட பாராளுமன்றத்தினையும், செனற் எனப்படும் நியமன அங்கத்தவர்களினைக் கொண்ட ஆலோசனைச் சபையினையும் கொண்டிருக்கும். அவசியமான வேளைகளில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களினை மீள் அழைப்பதற்கான பொறிமுறையினை பாராளுமன்றம் கோவைப்படுத்தும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கனடாவினைச் சேர்ந்த திரு.பொன் பால்றாஜன் அவர்களினை பாராளுமன்ற சபாநாயகராகவும் சுவிற்சலாந்து நாட்டினைச் சேர்ந்த செல்வி. சுகன்யா புத்திரசிகாமணி அவர்களை பிரதி சபாநாயகராகவும் ஏகமனதாக தெரிவு செய்தது.
திரு.விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம மந்திரியாக பாராளுமன்றத்தினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.