அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, February 12, 2011

வாழ்த்துகிறோம்.

 2009 ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய மாணவிகள் யாழ் மாவட்டத்தில் முதலாம் மற்றும் ஐந்தாம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். மிகவும் யுத்தம் நடந்த வேளையிலும் உசனில் இருந்தவாறே சிரமங்களுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில்  கல்விகற்று சாதனை படைத்த மாணவிகளை பாராட்டுகிறோம்.


செல்வி.தங்கவேல் உஸானி 3A சித்திகளை பெற்று தற்போது பரதேனிய பல்கலை கழகத்தில் கலை பிரிவில்
பட்டபடிப்பை தொடர்கின்றார்.

செல்வி.ரம்யா சிவராசா 3A  சித்திகளை பெற்று யாழ் பல்கலை கழகத்தில் சட்ட துறையில் பட்ட படிப்பை தொடர்கின்றார். இவர்களுக்கு அனைத்துலக வாழ் உசன் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.


Wednesday, February 9, 2011

உசன் மக்களுடன் ஒரு காணொளி (Video) உறவுப்பாலம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் முயற்சியில் உசனில் உருவாகிய தொடர்பாடல் & கணினி நிலையம் உசன் ஐக்கிய வாலிபர் சங்கத்தின் முயற்சியால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ திறப்புவிழா கனேடிய நேரம் February 12, 2011 சனிக்கிழமை மாலை 6 மணிக்குநடைபெறவுள்ளது. அன்றைய தினம் உசனில் நடைபெறும் திறப்புவிழாவை நேரடியாக காணொளி (Video) வாயிலாகக் கண்டுகளிப்பதுடன் உங்கள் உசன் உறவுகளுடன் நீங்களும் நேரடியாகக் காணொளி வாயிலாக உறவாடும் சந்தர்ப்பமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உசன் கிராமத்தின் முழு மக்களும் கலந்துகொளும் வகையில் இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளது. அன்றைய தினம் உசனில் இருக்கும் எமது அபிவிருத்திக் கட்டமைப்பு நிர்வாகிகளின் நேரடி உரையாடலும் இடம்பெறும். எமது உத்தியோக பூர்வ இணையத்தளமான http://www.usan.ca/ புதுப்பொலிவுடன் ஆரம்பித்து வைக்கப்படும் சிறப்பு நிகழ்வும் உண்டு. நீண்ட கால இடைவெளியின் பின்னர் உங்கள் உசன் உறவுகளை நேரில் கண்டு உங்கள் நினைவுகளை மீட்கும் வகையில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா செய்த முதல் உறவுப்பால முயற்சி இதுவாகும். எனவே கனடா வாழ் அனைத்து உசன் மக்களையும் இந்த நிகழ்வில் கலந்து உங்கள் உசன் உறவுகளை நேரில் கண்டு களிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். உங்கள் வரவுகளை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்த நிகழ்வைச் சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகிறோம். நிகழ்வு நடைபெறும் இடம்: 2543 Paharmacy Avenue (at Finch Avenue) (Daily Needs Plaza), Scarborough, ON Canada.


Tuesday, February 8, 2011

கோடைகால ஒன்றுகூடல்.2011


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் கோடைகால ஒன்றுகூடல் August 28, 2011 ஞாயிற்றுக்கிழமை Neilson Park இல் இடம்பெறும் என்பதனை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம். இந்த நாளை ஒன்றுகூடலுக்காக ஒதுக்கி அன்றைய தினத்தில் உங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
வெளிநாடுகளில் வசிக்கும் எங்கள் உறவுகளே இ...ந்த வருடம் கனடாவுக்கு வரும் எண்ணத்தோடிருந்தால் இந்தத் தினத்தில் இங்கு நிற்கக்கூடியதாக வாருங்கள். இதன் மூலம் உசன் மக்கள் அனைவரையும் ஒன்றாகச் சந்ததிக்கும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைகிறது. உங்கள் வருகையை எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
எங்கள் உறவுகளே, FaceBook இல் நீங்கள் usanpeople ஓடு Friends ஆக இருந்தால் Event Invitation ஒன்றைப் பெற்றிருப்பீர்கள். அதன் மூலம் உங்கள் வருகையை உறுதிப்படுத்துங்கள். usanpeople ஓடு Friends ஆக இல்லாதவர்கள் உடனடியாக இணைந்து கொள்ளுங்கள். FaceBook இல் இல்லாதவர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அன்னுப்பிவைப்பதன் மூலம் எங்களோடு தொடர்பில் இருக்கலாம்.
உறவுகளோடு கரம் கோர்த்து ஒன்றாகக் குதூகலிப்போம்!


Sunday, February 6, 2011

திருமண வாழ்த்துக்கள்


உசன் மிருசுவிலை சேர்ந்த திரு,திருமதி.அ.நடராஜபிள்ளை அவர்களின் புதல்வன் திருநிறைச் செல்வன் ஜதுர்ஸன் அவர்களும் மீசாலை வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த திருமதி.இராஜேஸ்வரி தியாகராஜா தம்பதிகளின் புதல்வி திருநிறைச் செல்வி சிவதீபம் அவர்களும் இன்று அதாவது 06-02-2011 அன்று திருமணபந்தத்தில் இணைகின்றனர் அவர்கள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் சார்பாகவும் உசன் வாழ் மக்கள் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்...நன்றி...




திருமண வாழ்த்துக்கள்.

 
உசனைசேர்ந்ததிரு. திருமதி. அரியரத்தினம்தம்பதிகளின் புதல்வன் நிதர்சன் அவர்களுக்கும் யாழ்ப்பாணம் கலட்டியை சேர்ந்த திரு. திருமதி குணரத்தினம்தம்பதிகளின் புதல்வி நிஷ்மதா அவர்களுக்கும்.  06 -02 -2011 ஞாயிற்றுக்கிழமை. யாழ்ப்பாணத்தில்  .உசன் முருகப்பெருமான் அருளால் திருமணம் இனிதே நடைபெற்றது திருமண வாழ்வில் இணையும் தம்பதியர்க்கு  கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் அனைத்துலக உசன் மக்களும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.வாழ்க பல்லாண்டு