அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, May 5, 2011

புதுக்குளம் கண்ணகை அம்பாள் வரலாறு



உசன் கிராம மக்களுக்கு சக்தியாக விளங்கும் கண்ணகை அம்பாள் ஆலயம் உசன்,விடத்தற்பளை,கரம்பகம், ஆகிய முன்று கிராமங்களுக்கும் மத்தியில் அமைந்து எல்லா மக்களுக்கும் அருள் பாலித்துக் கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. புதுக்குளத்து கண்ணகை அம்பாளுக்கு மூன்று கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தவறாது பூசைகள் செய்து வருகிறார்கள். அம்பாள் ஆலயம் செங்கல்லால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டடமாக இருந்தது. ஆலயத்தை புதுப்பிக்க வேண்டிய நிலையைக் கருத்திற்கொண்டு உலகெங்கும் வாழும் உசன் மக்கள் ஒன்று சேர்ந்து நிதி சேகரித்து டாக்டர் மாணிக்கம் ஐயா அவர்களின் மேற்பார்வையில் அம்பாள் ஆலயம் 1999ம் ஆண்டளவில் பொளிகல்லால் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.






Tuesday, May 3, 2011

3ஆவது பிறந்ததின வாழ்த்துக்கள்...........

உசன் மிருசுவிலை சேர்ந்த திரு,திருமதி. காஞ்சீவன்.கன்னிகா தம்பதிகளின் புதல்வி செல்வி கதுரிகா இன்று அதாவது 03-05-2011 அன்று தனது மூன்றாவது பிறந்த நாளை உசனில் அமைந்திருக்கும் தனது வீட்டில் கொண்டாடுகிறர்.
செல்வி கதுரிகா எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் திருவருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகத்தினர் சார்பாகவும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா சார்பாகவும், அனைத்துலக உசன் வாழ் மக்கள் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம். (பா.காஞ்சீவன்-0094-779591269)


Monday, May 2, 2011

கனேடிய அரசியலில் ஈழத்தமிழர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

கனேடிய அரசியல் வரலாற்றில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால்  ஈழ தமிழர்கள் தமது இருப்பை உறுதிபடுத்தியிருக்கின்றனர். அந்த வகையில் இன்று நடைபெறும் கனடாவின் 41 வது பாராளுமன்ற தேர்தலானது ஈழதமிழர்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாக அமைகின்றது. எமது இனம் அளிக்கப்பட்டபோது
எமது உறவுகள் வீதில் நின்றபோதும். தமது உயிர்களை மாய்த்து உலகின் திசையை திருப்பிய போதும் கண்டுகொள்ளாத உலகம் எம்மை திரும்பி
பார்க்கும் காலம் இது. கனேடிய உறவுகள் பெரும் வீதியில் போராடியபோது
ஆதரவு தந்த ஒரே ஒரு அரசியல்வாதி NDP jac leton மட்டுமே
அவரின் பாதையில் பயணிக்கும் இளம் தலைமுறை அரசியல் போராளி
ராதிகா சிற்சபெசனும்.


நடைமுறை ஆட்சியில் இருக்கும் கன்செவ்டிவேவ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராகவன் அவர்களும் வெற்றி பெற உசன் கனடா மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துகளை  தெரிவித்துகொள்கிறது.


கனடா வாழ் உசன் மக்களுக்கு



இன்று கனடாவின் 41 வது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. உசன் கிராமத்தில் வாழ்ந்த நாங்கள் இன்று கனேடிய தேசியநீரோட்டத்தில் இணைந்து. எமது வாழ்வியலை நகர்த்தி செல்லும் இந்த வேளையில் . எமது இருப்பையும் எமது உரிமையையும் உபயோகிக்கும் காலமிது
அந்த வகையில் உங்கள் கனேடிய  உரிமையை சரியான முறையில் பயன்படுத்தி எமது இனத்திக்கும் எமது உறவுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் வாக்குகளை செலுத்துங்கள். தயவு செய்து உங்கள் கனேடிய
தேசிய உரிமையை பயன்படுத்துங்கள். தீர்த்தல் வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


Sunday, May 1, 2011

மரண அறிவித்தல்

திரு.செல்லப்பா மகேஸ்வரன் அவர்களின் மரணஅறிவித்தல்.

உசனைசேர்ந்த திருமதி.வைத்திலிங்கம் லிங்காவதி  அவர்களின். மைத்துனரும்  ஷீலா பிரபா அவர்களின் சித்தப்பாவுமான
திரு.செல்லப்பா மகேஸ்வரன் அவர்கள் கனடாவில் காலமானார்.
அன்னாரின் பூதவுடல் 01 மே மாதம் ஞாயிற்றுக்கிழமை  மாலை 5 மணி முதல்
9 மணிவரை warden and Shepperd சந்திப்பில் உள்ள Hightlarnd இறுதியில்லத்தில்
பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.
இவறிவித்தலை உசன் மக்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுகொள்ளுகின்றோம்.

தகவல் :
மகன் : பிரதீபன் 4168793715 -ஜாந்து 4165781924