கட்டப்பிராய் திரு.திருமதி அரியகுமார் இராஜேஸ்வரி தம்பதிகளின் புதல்வி செல்வி.சுவர்ணா அவர்களுக்கும். இன்று 12 ஜூன் 2011 அன்று கனடாவில்பெரியோர்களால் திருமண பதிவு மிகவும்சிறப்பாகநடைபெற்றது.
Sunday, June 12, 2011
செந்தூரன், சுவர்ணா மணவாழ்க்கை ... வாழ்த்துக்கள்
கட்டப்பிராய் திரு.திருமதி அரியகுமார் இராஜேஸ்வரி தம்பதிகளின் புதல்வி செல்வி.சுவர்ணா அவர்களுக்கும். இன்று 12 ஜூன் 2011 அன்று கனடாவில்பெரியோர்களால் திருமண பதிவு மிகவும்சிறப்பாகநடைபெற்றது.
|
Anonymous
|
|
Saturday, June 11, 2011
மிருசுவிலில் வீதி விபத்து, வடக்கு மிருசுவில் இளம் பெண் மரணம்
ஏ9 பிரதான வீதியில் மிருசுவில் சந்திக்குச் சமீபமாக நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணமான குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமானார்.மிருசுவில் வடக்கைச் சேர்ந்த யசோதரன் கெங்காதேவி (வயது 25) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.
ஏ9 பிரதான வீதியால் மிருசுவில் வடக்கை நோக்கி பிரஸ்தாபப் பெண் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
எதிரே கல் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் இன்னொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்படுகையிலேயே குறித்த இளம்பெண்ணுடன் மோதியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் மிருசுவில் வைத்தியசாலைக்கும் மிருசுவில் சந்திக்கும் இடையில் நிகழ்ந்துள்ளது.
தலையில் படுகாயமடைந்த குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது
.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனச் சாரதியை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளம் பெண் யுத்தத்தில் ஒரு கண்ணை இழந்தவராவார். அத்துடன் மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிருசுவில் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் வீதி விபத்துக்கள் குறித்து உசன் ஐக்கியவாலிபர் சங்கம். ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம் ஆகிய உறுப்பினர்கள் யாழ் போக்குவரத்து போலீசார் மற்றும் வீதி பெரும்தேருக்கள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
உசன் மிருசுவில் பகுதியில் வேக கட்டுப்பாடு ,மற்றும் வீதி ஒழுங்கை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
|
Anonymous
|
|
Monday, June 6, 2011
"வெற்றி நடை போடும் உசன் இணையத்தளம்"
கடந்த Feb 12, 2011 - May 29, 2011 வரையான 3 மாத காலப்பகுதியில் எமது உத்தியோகபூர்வ இணைய தளமான www. usan .ca ல் பெருமளவான நாடுகளில் இருந்து 75034 பக்கங்கள் பாவிக்கப்பட்டுள்ளன.இது எமது முயற்சிக்கு கிடைத்த பெரும் வரவேற்பாக கருதுகிறோம். நாம் பல சிரமங்களுக்கும் எதிர் கருத்துகளுக்குமிடையில் மேற்கொள்ளும் முயற்சிக்கு நாம் எதிர்பார்க்காத நாடுகளில் இருந்து கூட எமது தளத்தை உசன் மக்கள் பயன்படுத்துவது. எமக்கு மிகவும் மகிழ்ச்சிதருகிறது.கடந்த 3 மாத காலப்பகுதியில்
கனடா -3237 ஸ்வீடன் - 26
இலங்கை -1105 கட்டார் -29
மலேசியா -11 பின்லாந்து -36
இங்கிலாந்து -977 சிங்கப்பூர் -114
சுவிஸ் -566 நோர்வே -116
பிரான்ஸ் - 502 இந்தியா -122
அவுஸ்திரேலிய - 328 நெதர்லாந்த் - 20
டென்மார்க் - 292 பிரேசில் -08
அமெரிக்க -269 நியூசிலாந்து- 07
ஜெர்மனி -236 சவூதிஅரேபியா -06
இத்தாலி -154 கிரீஸ் -05
ஐக்கிய அரபு -05
ரஷ்யா -04
****** பதிவுசெய்யபடாத விண்கல இணைப்பு-41
ஆகிய முறையில் மக்கள் எமது தளத்தை பாவித்துள்ளனர். இதன் உத்தியோகபூர்வ பத்திரங்கள் Google நிறுவனத்தால் வழங்கபட்ட இணைப்பு கீழே உள்ளது அதில் ஒவ்வொரு நாட்டிலும் தொகுதி ரீதியாகவும் தரப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் கருத்துக்களை எமக்கு வழங்குவதன் மூலம் எமது ஊடக துறையினரை இன்னும் உற்சாக படுத்த முடியும் .
Google நிறுவனத்தின் பதிவை காண இங்கே அழுத்துங்கள்
It has been just over 3 months since usan.ca launched (February 12, 2011) and I would like to share some statistics on the reach the website has had in this short period.
It would not have been possible without support and help from the USAN committee, volunteers from Usan, Canada and other countries.
Click here for the statistics from February 12 to May 29th, 2011

Friday, June 3, 2011
"உசன் ஊடகத்தை" இலகுவாக்கும் முயற்சி
அண்மைக்காலமாக உசன் கிராமம் தொடர்பாக அனைத்துலக மக்களுக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு வரும். எமது ஊடக துறையானது இன்னும் இலகுவாக செய்திகளை பரிமாறிக்கொள்ளும் முறையில் செயல்படுத்தவுள்ளது. எதிர் வரும் நாட்களில் உங்களுக்கு எமது தளத்தில் இருந்து வரும் Email ஒன்றில் SUBSCRIBE தொடர்பான தகவல் தரப்படும் அதனை அனுமதியுங்கள். அதனை தொடர்ந்து எமது தளத்தில் பதிவேற்றப்படும் செய்திகள் உடனடியாக உங்கள் ஈமெயில் முகவரிக்கு வந்தடையும்.
உங்களுக்கும் உசன் செய்தியறிய ஆவலாக இருக்கிறதா? எங்களுடன் இணைந்து கொள்ள விரும்பினால் www.usan.ca எனும் தளத்தில் SUBSCRIBE என்னும் பகுதியில் உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.அனைத்துலக உசன் மக்களும் தரும் உற்சாகமும் பங்களிப்புமே எமது ஊடக துறையை இன்னும் வலுவடைய வைக்கும் "அனைவரும் ஒரே குடிலில் கீழ் அணியாவோம்" .
ஊடக பிரிவு
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்-கனடா
|
Anonymous
|
|
செந்தூரன்-சுகாசினி அவர்களின் திருமண வாழ்த்துக்கள்....
அத்துடன் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளுடன் எமது ஸ்ரீ முருகன் விளையட்டு கழகத்தினர் படத்தில் நிற்பதை கணலாம்
|
sanjayan usan
|
|
Subscribe to:
Posts (Atom)