அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, November 23, 2011

கனடா - மிருசுவில் புனித நீக்கிலார் பங்குமக்கள் ஒன்றுகூடல்

கனடா வாழ் மிருசுவில் புனித நீக்கிலார் பங்கு மக்களின் வருடாந்த பெருநாள் மற்றும் குளிர்கால ஒன்று கூடல்
எதிர்வரும் December மாதம் 10 ஆம் திகதி, சனிக்கிழமை 2559 Kingston Road, (Midland & Kingstion), Scarborough வில் நடைபெறவுள்ளது.
மிருசுவில் மக்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற அயல் உறவுகளான உசன் மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

Mirusuvil - Canadians invite you and your family members to the Annual St.Nicholas Church Feast Mass 2011 on Saturday, December 10, 2011 at St.Theresa Parish, Shrine of the Little flower Catholic Church, located at 2559 Kingston Road, (Midland & Kingstion), in Scarborough.

The Holy Rosary will begin at 6.00 p.m. followed by Mass. Dinner and perfomances will take place at J & J Best Western Banquet Hall, which is located at 1468 Victoria Park Ave (O'Conner Dr. & Victoria Park Ave).

For those of you who wish to perform at this event, please notify Vasanthan Ilanganayagam at 416 720 4771 or Jansly Marianayagam at 416 898 7830, with the details of the performances by the end of November 30, 2011.

We cordially invite you and your family members to come and join us on this special day, and receive the blessings of our beloved St. Nicholas.

WE LOOK FORWARD TO SEEING YOU ALL!

Thank you.

Jansly Marianayagam (Event Coordinator)
416 898 7830


Monday, November 21, 2011

கனடா உசன் மக்களின் .....பதிவு

கனடா வாழ் உசன் மக்கள் கோடை காலத்தின்போது ஊர் நினைவுகளோடு ஒன்று கூடிக் கூழ் குடித்தனர். அந்த நிகழ்வின் பதிவு.......





Monday, November 7, 2011

துரையப்பா ஜெயறட்ணம் அவர்களின் மரண அறிவித்தல்

உசனை சேர்ந்த திருமதி ரஞ்சி வெற்றிவேலு அவர்களினதும் சகோதரனும் கிளாலி வீதி, எழுதுமட்டுவாழைப் சேர்ந்த திரு திருமதி துரையப்பா (உடையார் ,விதானையார் )அவர்களின் மகனும் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டரும், திடீர் மரண விசாரணை அதிகாரியும், அகில இலங்கை சமாதான நீதிவானும், சென். ஜோண்ஸ் அம்புலன்சின் மாகாண நிறைவேற்று உத்தியோகத்தரும், அகல் பாதுகாப்பு நிறைவேற்று அதிகாரியுமான துரையப்பா ஜெயறட்ணம் நேற்று (06-11-2011) ஞாயிற்றுக்கிழமை காலமானர்.

அன்னார் இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், அகல்யா(ஜேர்மனி), சுகன்யா (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்றவர்களான லீலாவதி சோதிமலர் மற்றும் புஷ்பமலர் காலஞ்சென்ற நாகேஸ்வரி மற்றும் இந்திரானி, இறஞ்சிதமலர்- உசன் கனடா) தவறட்ணம் (உப அஞ்சலகம்-எழுதுமட்டுவாழ்) மகேஸ்வரி (சுவிஸ்), திரவியறட்ணம் (அஞ்சலகம்-பளை) நந்தினி (இத்தாலி), டெய்சிறாணி (கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரரும், நவறட்ணராஜா (ஜேர்மணி), ரகுநாதன் சுவிஸ் ஆகியோரின் அன்பு மாமனும் சயந்தன், செளமியா, சாயித்தியா, ரபீஷன், சாருஜா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.


                    தகவல் : சகோதரிகள்
                    திருமதி :ரஞ்சி வெற்றிவேலு (கனடா )-647-367-0263
                    சூட்டி நவரத்தினம் (Brampton -Canada)


Saturday, October 15, 2011

உசன் இராமநாதன் மத்திய மகா வித்தியாலய
கணினி - நூலகம்


மேற்படி நிலையத்தின் கோலாகலத் திறப்பு விழா October மாதம் 7 ஆம் திகதி சிறப்பாக இடம்பெற்றது. இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம், மற்றும் இலண்டனில் வசிக்கும் பழைய மாணவன் வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் குடும்பத்தினரின் நிதி உதவியோடு இந்த நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை உசன் கிராமத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவரும், வட மாகாண முன்னைநாள் பிரதம வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி க. மாணிக்கம் அவர்கள் திறந்து வைத்தார்கள். முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். பாடசாலை மாணவிகள் தேவாரம் இசைக்க, ஆசிரியர்கள் உசன் கிராமப் பாடலைப் பாடினர்.
திறப்பு விழா தொடர்பான புகைப் படங்களைக் கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம்.
https://picasaweb.google.com/usanphotos/OpeningCeremonyUsanComputerTrainingCenter


Sunday, October 2, 2011

கணினி - நூலக நிலையம் திறப்பு விழா


உசன் இராமநாதன் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக ஒரு கணினி - நூலக நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் மற்றும் உசனைச் சேர்ந்த வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை பரமநாதன் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்புடன் இந்த வேலைத் திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

ஊரெழுவைச் சேர்ந்த திரு. சண்முகநாதன் அவர்களின் தலைமையில் கட்டிட வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. கணினி சம்பந்ததப்பட்ட வேலைகள் அனைத்தும் பதுளையைச் சேர்ந்த திரு. காண்டீபன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையம் October 7 ஆம் திகதி திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்தத் திறப்பு விழா சிறப்புற நடக்கவும், தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா மற்றும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் ஆகியன உசன் மக்களோடு சேர்ந்து தமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறன. இந்த நிலையத்தை அமைக்க உதவிய வைத்திய கலாநிதி பரமநாதன் குடும்பத்தினருக்கும், இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு இந்த வேலைத் திட்டம் சிறப்பாக நிறைவுற உதவிய திரு. சண்முகநாதன் மற்றும் திரு. காண்டீபன் ஆகியோருக்கும் எமது அன்பு கலந்த நன்றிகள்.


Opening Ceremony of Computer & Library Center

A new Computer & Library Center has been setup for Usan Ramanaathan Maththiya Makaa Vithtiyaalayam.

This project was jointly funded by London SKTA Trust and Dr. Veluppillai Paramanathan's family.

Building project was lead by Mr. Shanmuganathan, Urelu and IT assistance for installation of computers was lead by Mr Khandeeban, Badulla.

The centre is scheduled to be opened on October 7, 2011 and will be fully functionable afterwards.


United People Association of Usan in Canada and Usan Sri Murukan Sports Club along with all Usan citizens wishes the very best on this specail occassion. Also our gratitudes go to London SKTA Trust and Dr. Paramanathan family for their valuable and timely contribution. We also thank Mr. Sanmukanathan & Mr. Kandeepan for their hard work successfully completing this specail project.