அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, February 26, 2012

"உசன் உறவுகளின் உற்ற நண்பன் "உங்கள் ஜெயக்குமார்


கனடாவில் இது வருமான வரி பத்திரங்களை பூர்த்தி செய்யும் காலம் .நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை சட்டப்படி அரசிடம் இருந்து மீளப்பெறும் சூட்சுமங்களை கற்றறிந்த வல்லவர் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர் இப்பொழுது கனடாவில் Mississauga , Brampton  நகர உசன் மக்களுக்காக சிறப்பு சேவை வழங்க முன்வந்துள்ளார் . சிறப்பு கட்டணம் , விரிவான விளக்கங்களுடன் கூடிய முதலீடுகள் , சட்ட நுணுக்கங்கள் , உங்கள் பிள்ளைகளின் எதிர்கால கல்வியின் காப்பு என பலதுறை சேவைகளை 
ஒரே இடத்தில் ஒரே நபரிடம் பெரும் அரிய வாய்ப்பு..... எங்கள் தேவைகளை 
எங்கள் உறவுகள் மூலமே தீர்ப்போம் ........ ஒருமுறை அழைத்து பேசிப்பாருங்கள்  
"உசன் உறவுகளின் உற்ற நண்பன் "

உங்கள் ஜெயக்குமார்  
416-831-4824



Monday, January 30, 2012

திருமண வாழ்த்துக்கள்


உசனை சேர்ந்த திரு திருமதி சின்னத்துரை தம்பதிகளின் புதல்வன் திருகரன் (திரு ) அவர்களுக்கும் ஏழாலையை சேர்ந்த திரு திருமதி தர்மராஜா அவர்களின் புத்திரி செல்வி தனுஜா அவர்களுக்கும் . ஜனவரி மாதம் 29 ம திகதி .
கனடா டொராண்டோவில் பெரியோர்கள் முன்னிலையில் திருமண வைபவம் இனிதே நடைபெற்றது .மணமக்கள் உசன் முருகபெருமான் அருளோடு சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறோம் .





கருத்து கணிப்பு

உசன் இராமநாதன் மஹா வித்தியாலய கிழக்கு  வீதி மதில் புனரமைப்பு நடைபெற்று வருகிறது .இம் முயற்சி கனடா வாழ் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களினால் நிதி உதவி வழங்கி நடைபெற்று வரும் வேளையில் . இம் முயற்சியால் நீண்ட காலமாக இப்பகுதியில் வியாபார நிலையமைத்து வரும் சங்கக்கடைக்கு உரிய பாதை மூடப்படுள்ளது . இதனால் மாணவர்கள் பாதிப்பதுடன் பரம்பரையாக  அதில் வியாபாரம் செய்யும்
 திரு மனோ அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார் .இது குறித்து அந்த பகுதியில் மாணவர்கள் நலன் கருதி ஒரு பதை அமைக்கும் வேண்டுகோள்;விடுக்கப்பட்டும்
அது நிராகரிக்கப்பட்ட நிலையில் . இது குறித்து அனைத்துலக உசன் வாழ் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்படுகிறது .
உங்கள் கருத்துகளின் அடிப்படையில்
நீண்ட காலமாக மாணவர்களுக்கு வசதியாக அமைந்த சங்கக்கடை பாதை மூடுவதா ???? இல்லை பரம்பரையாக சேவை  செய்துவரும் கடைக்கு பாதை அமைப்பதா ??? உங்கள் வாக்கை பதியுங்கள் ...
 www.usan.ca 


Saturday, January 28, 2012

மரண அறிவித்தல்

உசனைச் சேர்ந்த திரு.வல்லிபுரம் வேலுப்பிள்ளை அவர்கள் ஜனவரி மாதம்    26 ம்   திகதி கனடாவில் காலமானார். அன்னார் காலம் சென்ற வல்லிபுரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகனும் காலம் சென்ற சரவணமுத்து நாகமுத்து தம்பதிகளின் மருமகனும், உசன் நல்லதங்கத்தின் அன்புக் கணவரும் , திருஞானம் (சுவிஸ்), பரம்சோதி(கனடா), சிவகரன் (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும் சொர்ணேஸ்வரி ,சரோஜினிதேவி, நளாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் ஜனவரி மாதம் 28 ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் 9  மணிவரை 4164 Shepperd  Ave  E  ல் அமைந்துள்ள Ogden Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 10  மணி முதல் 12  மணிவரை அதே இடத்தில் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று 12 .30 மணியளவில் 256 Kingston Road  ல் அமைந்துள்ள St.Johns Norway Cemetery and Crematorium ல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை ஏற்கும்படி உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல் 
மகன்மார்:
சிவஞானம் (சுவிஸ்) 0041616929631
பரம்சோதி 647 -202 -0974 
சிவகரன்: 416-841- 9247