உசன் தங்கம்மா டீச்சர் அவர்களின் இறுதி கிரிகை நிகழ்வின் சில நிமிடம்
Saturday, June 2, 2012
Wednesday, May 30, 2012
"மலரஞ்சலி" நிகழ்வு
இறைபதம் எய்திய உசன் இராமநாதன் மகாவித்தியாலய இளைப்பாறிய ஆசிரியை திருமதி தெய்வானைப்பிள்ளை பேரம்பலம் (தங்கம்மா teacher) அவர்களை நினைவுகூருமுகமாக உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களினால் மலரஞ்சலியும் தொடர்ந்து இரங்கல் கூட்டமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம்: Daily Needs Plaza மண்டபம். 2543 Pharmacy Avenue, Scarborough.
காலம்: ஞாயிற்றுக்கிழமை, June 3, 2012 மாலை 5:30 மணி.
ஆசிரியரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அயலூர் மக்கள் அனைவரையும்
சமூக முன்னேற்றத்தில் பங்கெடுத்து இன்று எம்மைவிட்டுப் பிரிந்துவிட்ட ஆசிரியைக்கு மரியாதை செலுத்த வருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அன்போடு கேட்டுக்கொள்கிறார்கள்.
தொடர்புகளுக்கு:
கமலாதேவி ஸ்கந்தகுமார் - 905-566-0910
சரவணமுத்து பத்மகாந்தன் - 647-219-2027
தகவல் : உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா
இடம்: Daily Needs Plaza மண்டபம். 2543 Pharmacy Avenue, Scarborough.
காலம்: ஞாயிற்றுக்கிழமை, June 3, 2012 மாலை 5:30 மணி.
ஆசிரியரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அயலூர் மக்கள் அனைவரையும்
சமூக முன்னேற்றத்தில் பங்கெடுத்து இன்று எம்மைவிட்டுப் பிரிந்துவிட்ட ஆசிரியைக்கு மரியாதை செலுத்த வருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அன்போடு கேட்டுக்கொள்கிறார்கள்.
தொடர்புகளுக்கு:
கமலாதேவி ஸ்கந்தகுமார் - 905-566-0910
சரவணமுத்து பத்மகாந்தன் - 647-219-2027
தகவல் : உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா
|
Anonymous
|
|
Tuesday, May 29, 2012
"தங்கம்மா டீச்சர்" உசன் முருகன் பாதடி சேர்ந்தார்
உசனைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டவரும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய ஓய்வு பெற்ற ஆசிரியருமான திருமதி தெய்வானைப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் நேற்று (28.05.2012) திங்கட்கிழமை உசன் முருகன் பாதடி சேர்ந்தார் .
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம், வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும், பேரம்பலத்தின் (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்) அன்பு மனைவியும், கலாநிதி துஷ்யந்தி, (விவசாய பீடம், யாழ். பல்கலைக்கழகம்), அரவிந்தன் (மருந்தாளர், யாழ். போதனா வைத்தியசாலை), ரகுவிந்தன் (சுவிஸ்), வினோவிந்தன் (வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயும், பேராசிரியர் மிகுந்தன் (விவசாய பீடம், யாழ். பல்கலைக்கழகம்), சோமினா (ஆசிரியர், முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), ரேணுகா (சுவிஸ்), கமலவேணி ஆகியோரின் அன்பு மாமியும், மிதுறிகா, துமிலன், வக்ஷலன், கேசவி, ஆரபி, ரங்கீத், விகாஷ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (30.05.2012) புதன்கிழமை பி.ப. 2.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் பிரிவினால் துயரும் குடும்பத்தினருக்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாகவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கின்றோம் . அன்னாரின் ஆத்மா உசன் முருகன் பாதடி அமைய வேண்டுகிறோம்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்- கனடா
|
Anonymous
|
|
Thursday, May 24, 2012
திருமண வாழ்த்துக்கள் ...
ஆசிவாதம் வீதி உசனை சேர்ந்த தில்லை சரவணமுத்து அவர்களின் பேரனும் திரு திருமதி முருகேசு ,நிதி தம்பதிகளின் புதல்வனும் ஹட்டார் நாட்டில் வசித்து வருபவருமான .செல்வன் முரளி அவர்களுக்கும் .
கரவெட்டி திடல் புளியம் போக்கனையைசேர்ந்த திரு திருமதி பேரம்பலம் தம்பதிகளின் புதல்வி பவானி அவர்களுக்கும் மே மாதம் 16 ம் திகதி பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது .
புதுமணத்தம்பதிகள் சீரும் சிறப்புடனும் வாழ . கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் அனைத்துலக உசன் மக்களும் வாழ்த்துகின்றனர் /.......
|
Anonymous
|
|
திருமண வாழ்த்துக்கள் ...
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தொழில்நுட்ப நிர்வாகியும் உசன் திரு.திருமதி சிவானந்தன் (ஆனந்தன்) சாந்தினி தம்பதிகளின் ஏக புதல்வனுமான செல்வன் செந்தூரன் அவர்களுக்கும்.
கட்டப்பிராய் திரு.திருமதி அரியகுமார் இராஜேஸ்வரி தம்பதிகளின் புதல்வி செல்வி.சுவர்ணா அவர்களுக்கும். மே மாதம் 21ம் திகதி கனடா டொரோண்டோ நகரில் பெரியோர்களால் மணவாழ்க்கை இணைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. புது வாழ்வில் புதுப்பொலிவுடன் இணையும் புதுமண தம்பதிகளை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் அனைத்துலக உசன் மக்களும் வாழ்த்துகின்றனர். திரு திருமதி செந்தூரன் சுவர்ணா தம்பதிகள் சகல செல்வங்களும் பெற்று வாழ உசன் முருக பெருமான் அருள் புரிவாராக ......
|
Anonymous
|
|
Subscribe to:
Posts (Atom)





