அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, June 12, 2013

"உசன் பண்டிதர் பொதுநூலக" பணி ஆரம்பம்


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ,உசன் எதிர்கால சந்ததியின்  அறிவியல் நலனுக்காய் முன்னெடுத்துவரும் பொதுநூலகம் அமைக்கும் புனரமைப்பு  பணி ஆரம்பமாகியுள்ளது .
இராணுவ பாவனையில் இருந்த பண்டிதர் சரவணமுத்து அவர்களின் வீடு
சிவ ஸ்ரீ கேதீஸ்வர குருக்களால் பெற்றுகொடுக்கப்பட்டத்தை தொடர்ந்து .
இராணுவ நிர்வாகத்தின் சில வேண்டுகோள்களும் முடிவடைந்த நிலையில் .
முழுமையான  "உசன் பண்டிதர் பொதுநூலக நிர்வாக சபையின் கட்டுப்பாட்டின் கீழ் நேற்றைய தினம் கட்டிடத்தை புனரமைக்கும் பணி எமது நிர்வாகத்தினரால் தொடங்கப்பட்டுள்ளது .

 பொது நூலக நிர்வாகசபை , மற்றும் உசன் இளையவர்களினால் முன்னெடுக்கப்படும் புனரமைப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது.
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்
திரு .பத்மன் சரவணமுத்து அவர்கள் நேரடியாக உசனில் நின்று பணியை கண்காணித்து ஒழுங்கமைத்து வருகிறார்.
எமது சங்கத்திலிருந்த மிகசிறிய நிதி தொகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சிக்கு தொடர்ந்து நிதியுதவி மற்றும் புத்தகங்கள் தளபாடங்கள் பத்திரிக்கை ,சஞ்சிகை ,நாவல் போன்றவற்றுக்கான ஆதரவு
தேவைப்படுகிறது .
அனைத்துலகிலும் வாழும் உசன் மக்களே ...
 இந்த அறிவியல் பணிக்கு உங்கள் பங்களிப்பை நாடி நிக்கிறோம்.
உசனுக்கு கிடைக்கபெற்ற இந்த நல்ல உதவியை சரியான முறையில் நெறிப்படுத்த அனைவரின் பங்களிப்பையும் வேண்டுகிறோம்.

உங்களின் ஒவ்வொரு சிறிய உதவியும் உசன் வாழ் எதிகால சந்ததிக்கு பெரும் விருட்சமாக அமையும்.

தொடர்புகளுக்கு ; 94777174446,0776108420,94776578032
             கனடா -பாஸ்கரன் :0016474487434

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்






Sunday, June 9, 2013

உசனைச் சென்றடைந்த அவுஸ்திரேலிய உதவி

உசன் இராமநாதன் மகாவித்தியாலய நிர்வாகம்  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவிடம் விடுத்த உதவி குறித்து எமது தளத்தில் பிரசுரித்து உதவி கோரினோம்.
அனைத்துலக உசன் மக்களும் மௌனமாய் இருந்த நேரம்
 அவுஸ்திரேலியா வாழ் உசன் பாடசாலை பழைய மாணவர்கள்
சிலர் ஒன்றிணைந்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மூலம் பாடசாலைக்கு அவசரமாகத்
தேவையான Photocopy இயந்திரத்தை வாங்கத் தேவையான உதவியை வழங்க முன்வந்தனர் .
பாடசாலை அதிபர், உசன் பண்டிதர் சரவணமுத்து பொதுநூலக நிர்வாகசபை மற்றும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழக உறுப்பினர்கள் 
 ஒன்றிணைந்து அவுஸ்திரேலியாவில் இருந்து கிடைத்த பணத்தின் மூலம் வாங்கப்பட்ட Photocopy இயந்திரம் உசன் பாடசாலையைச் சென்றடைந்தது.
இந்த உதவி நடவடிக்கை சிறப்பாக நடைபெற நிதியுதவி  புரிந்த அவுஸ்திரேலியா வாழ் உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களான
திரு. நந்தகுமார் கிருஷ்ணமூர்த்தி 
திரு. முகுந்தன் கிருஷ்ணமூர்த்தி 
திரு. ஜெயந்தன் கிருஷ்ணமூர்த்தி 
திரு. சுவேந்தி சிவபாதம் 
திரு. மனோஜ் நடராஜா
திரு. புருசோத்தமன் ஈஸ்வரபாதம் 
திரு. ஜோசெப் சூசைதாசன் 
திரு. உமா நாகேந்திரம் (வடக்குமிருசுவில்)
திரு. சிவதாஸ் மாணிக்கம் 
திரு. சங்கர் தனபாலசிங்கம் 
ஆகியோருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாகவும், பாடசாலை மாணவர்கள் மற்றும் நிர்வாகம் சார்பாகவும், உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலக நிர்வாகசபை சார்பாகவும்,உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழக உறுப்பினர்கள் சார்பாகவும்   எமது மனமார்ந்த நன்றிகள்.
உசன் பாடசாலையின் தேவையினை அறிந்து எமக்கு தெரியப்படுத்தி இறுதிவரை நிறைவேற்ற பணியாற்றிய திரு. பிரபா அரியரத்தினம் அவர்களுக்கும் நன்றிகள். 


அதுமட்டுமன்றி இந்த நிதிசேகரிப்பை முழுமையாகப் பொறுப்பெடுத்து வெற்றிகரமாக நிறைவேற்ற எம்முடன் உழைத்த திரு. ஜெயந்தன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு எமது சிறப்பான பாராட்டுக்களும் நன்றிகளும்.
நாம் மேலும் தொடர இருக்கும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து பங்களிப்பு வழங்க முன்வந்துள்ள அவுஸ்திரேலியா வாழ் அனைத்து உசன் உறவுகளுக்கும் மீண்டும் எமது நன்றிகள். 


"உங்கள் ஒத்துழைப்பே உசனுக்கு வலுச்சேர்க்கும்"

    நன்றியுடன் 
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா 



Wednesday, June 5, 2013

உங்களோடு நாங்கள்...........



மதிப்புக்குரிய உசன் மக்களே!

"பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" இதுவரை இயங்க ஆரம்பிக்காமல் இருப்பது குறித்தும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா குறித்தும் முகநூல் பக்கமொன்றில் எழுதப்பட்டிருப்பது, ஒன்றியத்தின் செயலாளர் என்ற வகையில் எனது கவனத்துக்குக் கொண்டுரப்பட்டுள்ளது. பொதுத் தளமொன்றில் எழுதுவதற்கு முன்னால் எழுதப்படும் விடயம் குறித்து சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்பு கொண்டு விபரம் சேகரிக்க வேண்டும் என்ற ஊடக தர்மம் கூடத் தெரியாத, முகத்தை மறைக்கும் ஒருவரின் கருத்துக்குப் பதில் எழுதும் அவசியம் ஒன்றியத்திற்கு இல்லை. ஆனால் இந்த ஆக்கம் மக்களைக் குழப்பும் ஒரு நோக்கத்தோடு எழுதப்பட்டிருப்பதுபோல் கருதப்படுவதால் மக்களுக்கு விளக்கமளிக்கும் கடமை ஒன்றியத்துக்கு இருக்கிறது.

"பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" இதுவரை இயங்க ஆரம்பிக்காமல் இருப்பதற்கான மூலகாரணம் நிதிப் பற்றாக்குறையே தவிர நிர்வாகத்தினதோ அன்றி ஒன்றியத்தினதோ "கையாலாகத்தனம்" அல்ல. நிதி சேகரிப்பு முயற்சிகள் நடந்துகொடிருக்கின்றன. நாங்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக செயற்பட முடியவில்லை என்பதில் எங்களுக்கும் கவலைதான். இந்த முயற்சிக்கு நிதி தந்து உதவக்கூடியவர்களை ஒன்றியத்தோடு தொடர்பு கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.

குருக்கள் வீட்டினை மீட்டுத்தரவில்லையென ஒன்றியத்தினர் முன்னர் கூறியதாக எழுதப்பட்டிருப்பது முற்றிலும் தவறானது. ஒன்றியத்திற்கும் மதிப்புக்குரிய குருக்கள் அவர்களுக்குமிடையே இருக்கும் நல்லுறவைக் குலைக்கும் நோக்கோடு இப்படி எழுதப்பட்டுள்ளது என்றே இதை நாம் பார்க்கிறோம்.

தெரிவு செய்யப்பட்ட போசகர்களும், நிர்வாகமும் என்ன செய்கிறது என்று கேட்கப்படிருக்கிறது. அவர்கள் தங்கள் பங்கைச் செவனே செய்துகொண்டிருக்கிறார்கள். கிடைக்கும் சொற்ப நேரத்திலும் ஊரின் வளர்ச்சியில் அக்கறையோடு ஈடுபடும் இவர்களுக்கு ஒன்றியம் இந்த நேரத்தில் பகிரங்கமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறது. ஒன்றியமும் மௌனமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலக முயற்சியில் அக்கறையுள்ள அனேகமாநோருக்கும் ஒன்றியம் என்ன செய்கிறது என்று நன்றாகவே தெரியும். ஒன்றியத்துக்கும், அதனைச் சார்ந்தோருக்கும் அவதூறு விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு என்ன சொல்லியும் பயனில்லை.

வெற்றி அஜந்தன் பணம் அனுப்பியிருப்பதாக எழுதப்பட்டிருப்பது நகைப்புக்கிடமானது. அது அவரின் தனிப்பட்ட பணம் அல்ல. மதிப்புக்குரிய வெற்றிவேலு அஜந்தன் ஒன்றியத்தின் பொருளாளர் என்ற முறையிலேயே அந்தப் பணத்தை அனுப்பிவைத்தார். அஜந்தனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, அவரை இந்த முயற்சிகளில் இருந்து விலகச் செய்து ஊரின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டதாகவே நாம் கருதுகிறோம். இதனை ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதால் அந்தச் சூரியன் மறைந்து போவதில்லை.

இந்த ஒன்றியம் கனடா வாழ் உசன் மக்களால் தெரிவு செய்யப்பட்டு கனடா அரசில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. வருடா வருடம் இந்த ஒன்றியத்தின் வரவு செலவு விபரங்கள் அரசுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒன்றியத்தின் நிர்வாக சபையே அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றது. இந்த நிலையில் அஜந்தன் அடுத்தவர்களின் மூளையைச் சலவை செய்து, பணம் தேவை என்றவுடன் அனுப்பி வைக்கிறார் என்று எழுதியிருப்பது மிகவும் தவறான ஒரு விடயம். இது ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பவர்களை மூளை இல்லாதவர்கள் என்று கூறிக் கேவலப்படுத்தும் ஒரு நடவடிக்கை.

உசன் சரவணமுத்து நூலக நிர்வாகத்தினர் மற்றும் போசகர்களுடன் தொடர்பு கொண்டு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை என்ற பொருள்பட எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் இந்த முடிவுக்கு வர என்ன காரணம் என்று எமக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மூலமாகவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது அன்பான உசன் மக்களே,
நாம் எம்மால் முடிந்தவரை உங்களின் ஒத்துழைப்போடு உசனின் வளர்ச்சிக்கு முயற்சிப்போம். நீங்களும் இப்படியான குழப்பவாதிகளுக்கு இடமளியாமல், தகவல்களைச் சரியான இடங்களில் இருந்து பெற்று, உசனின் வளர்ச்சிக்கு உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

உங்கள் உண்மையுள்ள,
சுப்பிரமணியம் பாஸ்கரன்
செயலாளர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Monday, May 13, 2013

உசன் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழா 2013


உசன் கந்த சுவாமி கோவிலின் வருடாந்த திருவிழா எதிர்வரும்  15.5.2013 புதன்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது .
தேர் திருவிழா 23.05.2013 வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளது .
ஆலயத்தால் வெளியிடப்பட்ட  மஹோற்சப விஞ்ஞாபனம்
விபரம்


Saturday, May 11, 2013

"உசன் பாடசாலைக்கு கிடைத்தது " Photo copy Machine "

உசன் இராமநாதன் மஹா வித்தியாலய நிர்வாகம் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்திடம் விடுத்திருந்த அவசர தேவைகள் குறித்த விபரம் அனைத்துலக உசன் பாடசாலை பழைய மாணவர்களிடம் எமது ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தோம் .ஆனால்
 அனைவரும் மௌனம் சாதித்தே  வந்தனர்
இருப்பினும் கனடா தவிர்ந்த வெளிநாட்டில் வாழும் உசன் பாடசாலை பழைய மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து ஒரே வழிநடத்தலில்  பாடசாலைக்கு உதவ முன்வருவதாக கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்துக்கு தெரிவித்து . ஒரு வார காலத்துக்குள் பாடசாலைக்கு தேவையான  Photo copy Machine க்கு உரிய
பெறுமதி இலங்கை ரூபா 150 000 உசனில் உள்ள அபிவிருத்தி கட்டமைப்பின்
பொதுவான கணக்கிலக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு
பாடசாலை நிர்வாகம் ஊடாக இயந்திரம் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .
இந்த முயற்சிக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துக்கு முன்வந்து ஊக்கம் தந்து உழைத்தவர்கள் மற்றும் பங்களிப்பு செய்த பழைய மாணவர்கள் குறித்த மேலதிக விபரங்கள் மிக விரைவில் வெளியடப்படும் .

"ஒன்றிணைந்தால் எமது பாடசாலையை மீண்டும் பழைய நிலைக்கு
     உயர்த்த முடியும் "