அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, March 17, 2014

விவாகத் திருநாள் வாழ்த்துக்கள்


உசன் "பண்டிதர் "திரு திருமதி சரவணமுத்து சின்னத்தங்கம் அவர்களின் பேரனும் திரு திருமதி. இராமநாதர் சரோஜினி அவர்களின் புதல்வனுமான செல்வன் ராஜீவ் அவர்களுக்கும், செல்வி அனுப்பிரியா அவர்களுக்கும் 16-03-2014 அன்று Toronto நகரிலே திருமண விழா சிறப்பாக நடைபெற்றது. திருமண வாழ்வியலில் இணைந்து கொண்ட திரு திருமதி ராஜீவ் அனுப்பிரியா தம்பதியினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாக இனிய திருமண வாழ்த்துக்கள்.

திருமண நிகழ்வின் காணொளி பதிவு ......

http://new.livestream.com/accounts/1729214/events/2837502





Saturday, March 8, 2014

திருமதி புனிதவதி பொன்னம்பலம் அவர்களின் இறுதிக் கிரியைகள்

காலஞ்சென்ற திருமதி புனிதவதி பொன்னம்பலம் அவர்களின் இறுதிக் கிரியைகளை இணையத்தள வாயிலாக நேரடி ஒளிபரப்புச் செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 03/09/2014 ஞாயிற்றுக் கிழமை Toronto நேரம் காலை 11 மணிமுதல் இந்த ஒளிபரப்பை https://m.ustream.tv/channel/chapel-ridge-funeral-home என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம் என்பதைக் குடும்பத்தினர் அறியத் தருகின்றனர்.


Thursday, March 6, 2014

திருமதி புனிதவதி பொன்னம்பலம்

யாழ். விசுவர் வளவு சரசாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், உசன் மிருசுவிலை வதிவிடமாகவும், தற்போது ரொரன்ரோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புனிதவதி பொன்னம்பலம் அவர்கள் 06-03-2014 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கமுத்து தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற பெரியதம்பி, கற்பகம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம்(ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தயா, நந்தா, செந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பாலகுமாரன், சுப்பிரமணியம், சனார்த்தனா, மகேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சாந்தநாயகி, நாகமுத்து சிவப்பிரகாசம், செல்லத்துரை, ஐயாத்துரை, மகேஸ்வரி கனகசபை, மற்றும் இராஜரட்ணம், பாலசிங்கம், சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr.பாலினி பொன்கோவன், தயன், தமிழினி, தக்‌ஷாயினி ஜெகன், தக்‌ஷானந், சுபானந், சுபாஷினி (Dr.)நிர்மலன், கஜானந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

திவ்வியா, தீபா, தீபிகன், காருண்ணியன், அக்சியா, அம்ரிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை, 08/03/2014 மாலை 5 மணி முதல் மாலை 9 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada என்ற முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறு நாள் ஞாயிற்றுக்கிழமை, 09/03/2014 காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை அதே முகவரியில் இறுதிக் கிரியைகள் நிகழ்த்தப்பட்டு, பின்னர் 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7 என்ற முகவரியில் அமைந்திருக்கும் St. John's Norway Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
செந்தா — கனடா+14164213326
நந்தா — கனடா+19052393441
பாலினி — இலங்கை+94773821563
தக்‌ஷா — கனடா+16478323481
தயன் — பிரித்தானியா+442086900872


Thursday, February 27, 2014

திரு. சிவசுப்பிரமணியம் பாலகுமாரன்

உசன் கந்தசாமி கோவில் முன்னாள் தர்மகர்த்தா திரு. திருஞானசோதி அவர்களின் மைத்துனர், சிவசுப்பிரமணியம் பாலகுமாரன் (Lawyer)அவர்கள் 23-02-2014, ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

இவர் யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டவர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் யோகம்மா(நல்லூர் மழவராயர் மாப்பாண முதலியார்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகதாஸ்(நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்னாள் தர்மகர்த்தா, மாப்பாண முதலியார்), மனோன்மணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனலோஜினி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

பாலினி, சகிலா, மனூஜா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, ஜெயலக்‌ஷ்மி, விக்னராஜா, மற்றும் வரலட்சுமி(கனடா), யோகலட்சுமி(கனடா), விஜயலட்சுமி(கனடா), இந்திரலட்சுமி(கனடா), சிவகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானகுமாரன்(Accountant), கிரிதரன்(Vimika Banquets), தினேஷ்வர்(MBA, CGA) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம், கருணநாதன், திருஞானசோதி, மற்றும் இராசம்மா(கனடா), தாக்‌ஷினி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), சிவநாதன்(கனடா), வாசுகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனஞ்ஜெயன், லவன், சுஸ்மித்தா, சமீத்தா, அம்ரித்தா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் புதன்கிழமை 26/02/2014, பி.ப 4 மணி முதல் மாலை 9:30 மணி வரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada இல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு, வியாழக்கிழமை 27/02/2014, மு.ப. 8 மணி முதல் மு.ப. 11 மணி வரை அதே மண்டபத்தில் கிரியைகள் நிகழ்த்தப்பட்டுப் பின்னர் Elgin Mills Cemetery,1591 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9, Canada இல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
வீடு - கனடா+14165510490
குமார் — கனடா+14166187294
கிரி — கனடா+14164283333
டினேஸ் — கனடா+16479635539


Sunday, February 23, 2014

உசன் பாலேந்திரன் காண்டீபன் பெற்ற அதி உயர் விருது

உசன் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், உசனைச் சேர்ந்த திரு. திருமதி பாலேந்திரன் புஸ்பா தம்பதிகளின் புதல்வனும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனுமாகிய திரு. பாலேந்திரன் காண்டீபன் அவர்கள் அவுஸ்திரேலிய அரசினால் வழங்கப்படும் இலங்கையின் சிறந்த நிர்வாக முகாமைத்துவத்துக்குரிய அதி உயர் விருதான "Australian Government Award for Excellence in Business Administration 2014" என்ற விருதைப் பெற்றுள்ளார்.


  

இலங்கையின் முன்னணி நிறுவனமாக விளங்கிவரும் மகாராஜா நிறுவனத்தின் ஊடகப்பிரிவின் (வானொலி/தொலைக்காட்சி) தமிழ், சிங்கள சேவைகளின் நிர்வாகப் பணிப்பாளராகச் செயலாற்றிவரும் காண்டீபன், அந்நிறுவனத்தின் ஊடக வளர்ச்சியில் பல திறமையான செயல் வடிவங்களைப் பெற்று கொடுத்து முன்னணி நிறுவனமாகத் தக்கவத்துள்ளார். அத்துடன் இலங்கையில் புகழ்பெற்ற தொலைக் காட்சி நிகழ்ச்சியான சக்தி TV யின் "மகா லட்சாதிபதி" நிகழ்ச்சியைத் தொகுத்துவளங்கி வருகிறார்.



திரு. பாலேந்திரன் காண்டீபன் பன்முகத் திறமை கொண்ட கலைஞன். தமிழ் நாட்டின் குமுதம் நிறுவனத்தின் "ஆஹா FM " வானொலியில் பணியாற்றித் தமிழக மக்களின் மனதில் நிறைந்த ஒரு ஒலிபரப்பாளன். அத்துடன் கொழும்பு தமிழ் அமைப்புகளில் நடைபெறும் மேடைப் பேச்சுக்கள், விவாத அரங்குகள், கலை நிகழ்வுகளில் இவரின் குரல் ஒலித்துவருகிறது.



உசனைச் சேர்ந்த பாலேந்திரன் காண்டீபன் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசனில் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு, அனுசரணையும் ஆலோசனையும் வழங்கி வருபவர். அது மட்டுமன்றி அண்மையில் உருவாக்கம் பெற்ற பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்துக்கு ஆரம்பக்கட்ட புத்தகக் கொள்வனவைப் பொறுப்பெடுத்துச் செயல்படுத்தியவர்.

காண்டீபன் பெற்ற இந்த விருது கண்டு உசன் மக்களாகிய நாம் பெருமை கொள்வதுடன், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாக எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.