Haran Viswanathan, son of Thevabalan Viswanathan and Sharogene Thevabalan (USAN) has successfully completed his Juris Doctor from University of Toronto (Faculty of Law). Haran also holds an undergraduate degree in Honours Bachelor of Arts in Psychology with Certificate in Ethics at York University.
Saturday, June 7, 2014
உசனில் இருந்து உருவாகினார் சட்டதரணி கரன் விஸ்வநாதன்
|
Senthuran S
|
|
Tuesday, June 3, 2014
உசன் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழா ஆரம்பம்
உசன் கந்த சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ திருவிழா
இன்று ஜூன் மாதம் 3 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது ,
கொடியேற்ற திருவிழா சிவ ஸ்ரீ சுந்தரேஸ்வரகுருக்கள் தலைமையில்
நடைபெற்றது , உசன் வாழ் மக்களுடன் அயல் கிராமமக்களும் , உசனை சேர்ந்த வெளியூர் வாழும் மக்களும் திருவிழாவில் கலந்திருந்தனர் ,
வழமை போன்று உசன் முருக பெருமானின் பத்து நாள் திருவிழா நடைபெறவுள்ளது .
இன்று ஜூன் மாதம் 3 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது ,
கொடியேற்ற திருவிழா சிவ ஸ்ரீ சுந்தரேஸ்வரகுருக்கள் தலைமையில்
நடைபெற்றது , உசன் வாழ் மக்களுடன் அயல் கிராமமக்களும் , உசனை சேர்ந்த வெளியூர் வாழும் மக்களும் திருவிழாவில் கலந்திருந்தனர் ,
வழமை போன்று உசன் முருக பெருமானின் பத்து நாள் திருவிழா நடைபெறவுள்ளது .
|
Anonymous
|
|
Monday, June 2, 2014
மிருசுவில் பங்கின் வணக்க மாதா வழிபாடு
எமது அயல் சகோதர ஊரான மிருசுவில் பங்கில் வணக்க மாதா வழிபாடும் பழையவாய்க்கால் வேளாங்கன்னி சிற்றாலய வெள்ளிவிழாவும்.May 2014.
மிருசுவில் பங்கில் வணக்க (மே) மாத – மரியன்னை இல்ல தரிசிப்பு – வழிபாடுகள் இம்முறை சிறப்பான முறையில் நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்பணி அ.ஜெ.அ.ஜெயறஞ்சன் அவர்களின் வழிநடத்தலில் ஆலய, வலய ரீதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு இல்லங்களுக்கும் மரியன்னை திருச்சொருபம் பவனியாக எடுத்துச்செல்லப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதி நாள் விழாவாகவும் புனித கன்னி மரியாள் எலிசபெத்தம்மாவை சந்தித்த திருநாளை முன்னிட்டும் 31-மே-2014 சனி மாலை 4:15 மணிக்கு புனித நீக்கொலார் ஆலய முன்றலில் இருந்து மிருசுவில்-பழையவாய்க்கால் வேளாங்கன்னி மரியன்னை சிற்றாலயத்திற்கு கச்சாய், அல்லாரை, கிளாலி, தவசிகுளம் மற்றும் மிருசுவில் பங்குமக்களினால் பவனியாக மரியன்னையின் கொடிகளுடனும் தங்கள் பங்குகளின் புனிதரின் கொடிகளுடனும் பவனியாக எடுத்துச்செல்லப்பட்டு பழையவாய்க்கால் வேளாங்கன்னி மரியன்னை சிற்றாலயத்தின் 25வது வெள்ளிவிழா - திருவிழா திருப்பலியில் இணைந்து மரியன்னைக்கு விழா எடுக்கப்பட்டது. திருநாள் திருப்பலி அருட்பணி மைக்கல் சௌந்தரநாயகம் அடிகளார் தலைமையில். அருட்பணி றவிறாஜ், அருட்பணி ஜஸ்ரின், அருட்பணி பாலேந்திரன் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி ஜெயறஞ்சன் அவர்களுடன் நடைபெற்றது திருப்பலியை தொடர்ந்து ஆலயத்தை சுற்றி தேவ அன்னை பவனி, முடிவில் மரியன்னை ஆசீர் வழங்கப்பட்டது.
|
Anonymous
|
|
Saturday, May 31, 2014
கனடா ஒன்றியத்தின் நிர்வாகசபை கூட்டம்
30 ம் திகதி டொராண்டோவில் நடைபெற்றது .
சங்கத்தின் தலைவர் கனகசபை நகுலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 2014 ம் ஆண்டுக்கான கனடா வாழ் உசன் மக்களின் கோடைகால
ஒன்றுகூடல் தொடர்பான விடையங்களும் ,அதற்கான ஏற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது .
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ம் திகதி டொரோண்டோ வில் உள்ள நீல்சன் பூங்காவில் இன் நிகழ்வு நடைபெறவுள்ளது ,
வழமை போன்று சிறுவர் ,பெரியோருக்கான பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகள் , மதிய ,மாலைநேர உணவுகள் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளது .
அதை விட கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் உசனில் இயங்கிவரும் பொது நூலகத்தின் எதிர்கால திட்டமிடல்கள் , ஆங்கில ,கணணி ,அறிவியல் வகுப்புகளை ஆரம்பித்தல் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது .
இது தொடர்பாக நிர்வாகசபை உறுப்பினர் நேரடியாக சென்று இந்த திட்டங்களை பரிசீலிப்பதாக முடிவெடுக்கப்பட்டது .
|
Anonymous
|
|
Subscribe to:
Posts (Atom)
.jpeg)








