கண்டி வீதி - உசன் சந்தியில் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பயணிகள் பேருந்துக்காகக் காத்திருந்த நிலைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் பயணிகள் நிழல் குடை இல்லாதிருந்த குறையை நிவர்த்தி செய்ய உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகம் முன்வந்தது. அவர்களது செயற்திட்டத்துக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஊடாக அனுசரணை வழங்க முன்நாள் நடத்துனர், அமரர் வெற்றிவேலு அவர்களின் குடும்பத்தினர் உறுதி அளித்தனர்.
நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிழல் குடை பயணிகளுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. தற்போதைய அரசியல் நிலையில் பல சிரமங்களுக்கு மத்தியில் உரியவர்களிடமிருந்து அனுமதி பெற்று அமைக்கப்படுள்ள இந்தப் பயணிகள் நிழல் குடை 12.04.2015 ஞாயிற்றுகிழமை காலை 9:30 மணிக்கு பயணிகள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட உள்ளது. இந்தத் திறப்பு விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு மக்கள் அனைவரையும் உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகம் அழைத்துள்ளது. இந்த முன்மாதிரியான நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வேண்டுகோள் விடுக்கின்றது.
இந்தப் பயணிகள் நிழல் குடைத் திட்டம் நிறைவுபெற அனுசரணை வழங்கிய அமரர் வெற்றிவேலு குடும்பத்தினருக்கும், திட்டத்தைச் செயற்படுத்தி முடித்துள்ள உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகத்துக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நன்றியைத் தெரிவிக்கிறது.
Friday, April 10, 2015
Wednesday, April 8, 2015
உசன் கோவில் குருக்களுக்கு கனடாவில் மதிப்பளிப்பு
உசன் கந்தசுவாமி கோவிலில் பரம்பரையாக பூசை வழிபாடுகளை நடாத்திவரும் அந்தண குருக்கள் பரம்பரை வழியே வந்து .தற்போதைய பிரதம குருவாக பூசை வழிபாடுகளை நடாத்தி வரும் சிவ ஸ்ரீ இரத்தின கேதீஸ்வர குருக்கள் அவர்கள் கனடாவில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுவரும் வேளையில் , குருக்கள் ஆற்றிவரும் உசன் கிராமத்தின் சமூக,சமய ,கலாச்சார சேவையை பாராட்டி , கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக ,கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ,கடந்த ஏப்ரல் 4 ம் திகதி ,கனடா செல்வ சந்நிதி ஆலய மண்டபத்தில் ,மதிப்பளிப்பு நிகழ்வொன்றை நடத்தியிருந்தது ,
சங்கத்தின் தலைவர் திரு. நகுலன் கனகசபை அவர்களின் தலைமையில் நடிபெற்ற நிகழ்வை செயலாளர் திரு.,சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்கள் தொகுத்து வழங்கினார் , நிகழ்வில் கேதீஸ்வர குருக்களின் சேவை தொடர்பாக ஆசிரியர் ,திரு ,ஸ்ரீகாந்தன் ,மற்றும் திரு ,இராமநாதன் ஆகியோர் உரை நிகழ்த்தினர் ,
குருக்கள் உசன் கிராமத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் ,என்றும் இப்போதைய நிலை எப்படி உள்ளது என்ற நிலையை தெளிவாக கூறியதுடன் உசன் கிராமத்தின் கட்டுப்பாடு எப்போதும் உசன் மக்களின் கைகளை விட்டு தவறி விடக்கூடாது என்ற நிலையை விளக்கி சொன்னார் .
தொடர்ந்து குருக்களுக்கு தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க திரு ,ஒப்பிலாமணி விஜயகுலன் மாலை அணிவித்து மதிப்பளிக்க , திரு .சின்னதுரை சிவா அவர்கள் பாராட்டு கேடயம் வழங்கி கௌரவித்தார். இன் நிகழ்வில் பல உசன் மக்கள் கலந்து ஐயாவுடன்
கலந்துரையாடினார்கள் ,
மேலதிக படங்கள் எமது Facebook தளத்தில் :usanpeople

|
Anonymous
|
|
Saturday, April 4, 2015
உசனில் நடைபெற்ற போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி வெற்றி
உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகத்தினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்த இறுதி போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணிஜினரும் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியினரும் மோதி கொண்டனர் விறு விறுப்பாக நடந்த இப் போட்டியிலே ஆவரங்கால் இந்து இளைஞர் அணியினர் 3:2 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர் இவர்களுக்கு உரிய வெற்றி கேடயம் மைதான திறப்பு விழாவன்று வழங்கப்படும்
உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகம்
உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகம்
|
Anonymous
|
|
Friday, April 3, 2015
உசனில் அனுமதியின்றி வேம்பு தறித்தவர் கைது
யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் சட்டவிரோதமாக வேப்பமரமொன்றை தறித்த இருவரை நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க என்.பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடத்துக்கு சென்ற சுற்றுச்சூழல் பொலிஸார் இருவரை கைதுசெய்;து விசாரணை செய்தபோது கிராம சேவையாளரிடம் அனுமதி பெறாமல் தறித்தமை தெரியவந்துள்ளது.
|
Anonymous
|
|
Thursday, April 2, 2015
உசனில் நடைபெறும் இறுதிசுற்று போட்டி
உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் 55 ம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்படுகின்ற கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி 02.04.2015 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு கழக மைதானத்தில் நடைபெறும். இப் போட்டியில் பல களங்களைக் கண்ட ஆவரங்கால் இந்து இளைஞர் விழையாட்டுக்கழக அணியும், உடுப்பிட்டி நவஜீவன் விழையாட்டுக் கழக அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தப் போட்டியைச் சிறந்த முறையில் ஒழுங்கமைத்து வரும் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கு எமது வாழ்த்துக்கள்
|
Anonymous
|
|
Subscribe to:
Posts (Atom)