அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, July 28, 2015

கனடா ஒன்றியத்தின் நிர்வாகசபை கூட்டமும் ,மனிதநேய பணியாளர்களின் சந்திப்பும்



கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் ஒழுங்கமைப்பு கூட்டமும் .சமூக ஆர்வலர்கள் சந்திப்பும் கடந்த வாரம் மார்க்கம் நகரில் நடை  பெற்றது
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 16 ம் திகதி நடைபெறப்போகும் கனடா வாழ் உசன் மக்களும் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களும் கலந்து சிறப்பிக்கப்போகும் இந்த நிகழ்வை  மேலும் சிறப்பாக நடத்தக்கூடிய செயல் திட்டங்கள் குறித்து நிர்வாகசபை உறுப்பினர்கள் கலந்துரையாடியதுடன் ,
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் செயல்பாட்டுக்கு லண்டன் ல் இருந்து அனுசரணை மற்றும் ஆலோசனை வழங்கி எமக்கு பல உதவிகளை செய்த சமூக ஆர்வலரும் இங்கிலாந்தின் மனித நேய அமைப்பின் மூத்த உறுப்பினருமான சட்டத்தரணி .திரு .சதானந்தன் அவர்களை கௌரவித்தும் நன்றி தெரிவித்தும் கூட்டம் நடத்தப்பட்டது ,
தொடர்ந்து உசன் மக்களுக்கும் உசன் கிராமத்தை  அண்டிய பகுதி மக்களுக்குமான மனித நேய பணிகளை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துடன் இணைந்து நடத்தும் இணக்கப்பாடும் ஏற்பட்டுள்ளது .
தொடரும் சில மதங்களில் இந்த மனித நேய பணிகளை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆரம்பிக்கவுள்ளது ,
இந்த பணிகளுக்கு உதவி புரியும் லண்டன் வாழ் சட்டத்தரணி திரு.சதானந்தன் அவர்களுக்கு எமது சிறப்பு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .










Wednesday, July 15, 2015

செல்வன் சுஜீவன் அவர்கள் இறைபதம் அடைந்தார் ........

உசனை சேர்ந்த காலம்சென்ற திரு,திருமதி,சுப்பிரமணியம் (போலீஸ் மணியம் ) அவர்களின் பேரனும் , காலம்சென்ற திரு,ராதாகிருஷ்ணன் திருமதி சுதா தம்பதிகளின் மகனுமான செல்வன் சுஜீவன் அவர்கள் , சுகவீனம் காரணமாக நேற்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்  , அன்னாரின் பிரிவால் துயரும் குடும்த்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் செல்வன் சுஜீவனின்  ஆத்மசாந்தியடைய உசன் முருகனை பிரார்த்திக்கிறோம் .
இவ்வறிவித்தலை உசன் மக்களும் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம்.
தகவல்
ஸ்ரீ -மாமன் (கனடா)    001647-292-1265  / 0019052946397



Tuesday, June 23, 2015

கனடா வாழ் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு!

எதிர்வரும் ஆடி மாதம் முதலாம் திகதி, புதன் கிழமை, காலை 10.30 மணியில் இருந்து மாலை 7 மணிவரை, 73, Thorncliffe Park Dr, Toronto, M4H 1C4 (Near: Thorncliffe Park Dr & Overlea Blvd) இல் இருக்கும் E.T.Seton park இல் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. அதற்கு விடத்தற்பளை மக்கள், விடத்தற்பளைக் கமலாசனி மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், மற்றும் விடத்தற்பளையின் அயல் கிராம உறவினர்கள், நண்பர்கள், விடத்தற்பளை நலன் விரும்பிகள் அனைவரையும் வருகை தந்து நிகழ்வினைச் சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறது விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா.

இந்த நிகழ்வில் உசன் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் நடராஜா உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார். விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடாவின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து ஆதரவு வழங்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறது. இந்த வருடாந்த நிகழ்வு சிறப்புற நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Thursday, June 4, 2015

விரைவில் பூரண சுகமடையப் பிரார்த்திக்கிறோம்

உசன் வீதி - கண்டி வீதிக்கு அருகாமையில் உள்ள தொடருந்து கடவையில் கடந்த புதன் கிழமை அன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்தில் ஈருளுயில் சென்றுகொண்டிருந்த ஜெபனாமகணேசன் யதுர்சன் மோதுண்டுள்ளார். படுகாயமடைந்த இவர் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யதுர்சன் உசன், கிராம வளர்ச்சியில் அதிக ஈடுபாடுகொண்ட வைத்திய கலாநிதி ஐயாத்துரை ஜெபனாமகணேசன் அவர்களின் மகன் ஆவார்.

ஜெபனாமகணேசன் யதுர்சன் விரைவில் பூரண சுகமடைய உசன் முருகனைப் பிரார்த்திக்கிறோம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா